இரட்டைத்தடி ஒழுங்கான இது போக்கு மாற்றத்தை குறிப்பிடும் ஒழுங்காகும். முதல் நாள் பெரிய கருப்பு உடலும் அடுத்த நாள் சிறிய வெள்ளை உடலும் தோன்றும். இந்த சிறிய வெள்ளை உடல் கருப்பு உடலுக்குள் முற்றிலும் அடங்குவதாக இருக்கும். இந்த ஒழுங்கு உடனடியாக இறங்கு முக போக்கு முடிவுக்கு வருவதை குறிக்கும்.
சமிக்கையை அதிகப்படுத்தும் செயல்கள்.
* கருப்பு மற்றும் வெள்ளை உடல்கள் பெரிதாக இருந்தால் போக்கு மாற்றம் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம்.
* வெள்ளை உடல் அளவு கருப்பு உடல் அளவுக்கு மிக அருகில் இருந்தால் அதாவது முந்தைய நாள் தொடக்கத்துக்கு அருகில் அடுத்த நாளின் முடிவு இருந்தால் வெள்ளை உடலின் அளவு எவ்வளவாக இருந்தாலும் போக்கு மாற்றம் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம்.
ஏன் போக்கு மாற்றம் நடைபெறுமென்று நினைக்கறாங்க?
விற்பவர்கள் அதிகம் சந்தையில் உள்ளதால் இறங்கு முக போக்கு தொடர்கிறது இதன் பின் காளை உள்நுழைந்து அடுத்த நாள் தொடக்க விலையை முந்தைய நாளின் முடிவை விட அதிகமாக வைக்கும். இதனால் குறுக்கர்கள் கவலையடைந்து நட்டத்தை குறைப்பதற்காக பங்குகளை வாங்கத்தொடங்குவர். இதனால் பங்கின் விலை அதிகரித்து அன்றைய நாளில் அதிகமாக முடியும் (வெள்ளை உடல்). இது குறு விற்பனையாளர்களுக்கு போக்கு மாறுகிறது என்பதை உணர்த்தும். குறுக்கர்கள் (short sellers) நிறைய விற்பதால் வழக்கத்தை விட பங்கின் வாங்கல் விற்றல் அதிகமாக இருக்கும். இரண்டாம் நாள் டோஜி தோன்றினால் அது “புள்ளத்தாச்சி குறியீடு” எனப்படும். அது போக்கு மாற்றம் ஏற்படுமா என்ற ஐயத்தை ஏற்படுத்தும்.
காளை புள்ளத்தாச்சிக்கும் காளை விழுங்கிக்கும் உள்ள வேறுபாட்டை அறிக. இவை இரண்டும் இது அதுவா, அது இதுவா என குழப்பிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக