மூன்று இடைவெளி என்ற இது உருவாக நான்கு உலக்கைகள் தேவை. காளைன்னா மேல மேல மேல கரடின்னா கீழ கீழ கீழ .
மூன்று இடைவெளி - கரடி
இடைவெளியுள்ள படி மாதிரி இது இருக்கும். இதை எப்படி அறிவது?
- முதலில் ஏறுமுக போக்கு இருக்கனும்
- இரண்டாவதாக வெள்ளை உடல் தோன்றனும்.
- மூன்றாவதாக முன்பு தோன்றிய வெள்ளை உடலுக்கு மேல் இடைவெளி விட்டு வெள்ளை உடல் தொடங்கனும்.
- நான்காவதாக மேல் உள்ளது போல் மேலும் இரு உலக்கைகளின் வெள்ளை நிற உடல்கள் அதற்கு முந்தைய உடலுக்கு மேல் இடைவெளி விட்டு தொடங்கனும். (படத்தை பாருங்க புரியும்)
இது புகழ்பெற்ற ஒழுங்கு அல்ல என்றாலும் இவ்வொழுங்கு ஏற்பட்டால் அதை புறக்கணிக்கக்கூடாது.
இதை எப்படி வணிகர்கள் பார்க்கறாங்க?
ஏறுமுகம் காளையின் கட்டுப்பாட்டில் சந்தை உள்ளதை தெரிவிக்கிறது. உலக்கைகள் மூன்று நாள்கள் மேல் இடைவெளியில் செல்வது காளை தறி கெட்டு ஓடுவதை குறிக்கிறது. தறிகெட்டு ஓடியதால் காளை களைப்படைந்து வலிமை இழந்து கரடி கட்டுப்பாட்டை எடுக்க வழிவிடுகிறது. இதனால் போக்கு மாற்றம் ஏற்படுகிறது.
மூன்று இடைவெளி - காளை
இடைவெளியுள்ள படி மாதிரி இது இருக்கும். இதை எப்படி அறிவது?
- முதலில் இறங்குமுக போக்கு இருக்கனும்
- இரண்டாவதாக கருப்பு உடல் தோன்றனும். முதல் இரு உடல்களுக்கு நிறம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் கருப்பா இருந்தா சிறப்பு.
- மூன்றாவதாக முன்பு தோன்றிய கருப்பு உடலுக்கு கீழ் இடைவெளி விட்டு அடுத்த கருப்பு உடல் தொடங்கனும்.
- நான்காவதாக மேல் உள்ளது போல் மேலும் இரு உலக்கைகளின் கருப்பு நிற உடல்கள் அதற்கு முந்தைய உடலுக்கு கீழ் இடைவெளி விட்டு தொடங்கனும். (படத்தை பாருங்க புரியும்)
சிலர் தொடர்ச்சியா மூன்று இடைவெளி இருக்கனும் என்று அவசியமில்லை ஏறு முகத்தில் இருந்தால் போதும் என்கிறார்கள்.
இது புகழ்பெற்ற ஒழுங்கு அல்ல என்றாலும் இவ்வொழுங்கு ஏற்பட்டால் அதை புறக்கணிக்கக்கூடாது.
மூன்றாவதா ஏற்பட்ட இடைவெளி நிரப்பப்பட்டால் போக்கு மாற்றம் நடைபெறுகிறது என கணிக்கலாம்.
இதை எப்படி வணிகர்கள் பார்க்கறாங்க?
இறங்கு முகம் கரடியின் கட்டுப்பாட்டில் சந்தை உள்ளதை தெரிவிக்கிறது. உலக்கைகள் மூன்று நாள்கள் கீழ் இடைவெளியில் இறங்குவது கரடி அதலபாதாளத்தை நோக்கி விரைவாக செல்வதை குறிக்கிறது. அவ்ளோ பெருத்த உடம்ப வச்சிக்கிட்டு விரைவா போனதால் கரடி களைப்படைந்து வலிமை இழந்து காளை கட்டுப்பாட்டை எடுக்க வழிவிடுகிறது. இதனால் போக்கு மாற்றம் ஏற்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக