ஒற்றைத்தடி ஒழுங்கான தலைகீழ் சுத்தியல் இறங்கு முக போக்கிலேயே ஏற்படும். தலைகீழ் சுத்தியலில் சிறிய உடலும் மேலே நீளமான குச்சியும் இருக்கும். உடலை விட குறைந்தது இரு மடங்கு மேல் குச்சியின் நீளம் இருக்கும். இதன் நிறம் முக்கியமில்லை என்றாலும் கருப்பு மெழுவர்த்தியை விட வெள்ளை மெழுவர்த்தி இருந்தால் காளை ஓட்டத்திற்கு அதிக வாய்ப்பு. அடுத்த நாள் வெள்ளை மெழுவர்த்தி இருப்பது சுத்தியலின் சமிக்கையை உறுதிபடுத்தும்.
சமிக்கையை அதிகப்படுத்தும் செயல்கள்.
* உடலின் கீழுள்ள குச்சியின் நீளம் மிக அதிகமாக இருந்தால் அடுத்த நாள் மாற்றம் நடக்க வாய்ப்பு மிக அதிகம்.
* முந்தின நாள் விலை முடிவை விட அதிக கீழ் இடைவெளியில் இன்றைய நாள் தொடங்கி முடிந்தால் அடுத்த நாள் போக்கு திரும்பி விலை அதிகமாக வாய்ப்புண்டு.
* அதிக வாங்கல் விற்றல் நடந்திருந்தால் அடுத்த நாள் மாற்றம் நடக்க வாய்ப்பு மிக அதிகம்.
* தலைகீழ் சுத்தியல் ஏற்பட்ட பின் அடுத்த நாள் தொடக்கம் முந்தின நாள் முடிவை விட அதிகமாக இருக்கவேண்டும்.
ஏன் இந்த ஒழுங்கு வேலை செய்யும் என்று நினைக்கிறார்கள்?
சந்தையானது கீழ் உந்தந்தில் இருந்தால் கரடி செல்வாக்கு உள்ளதாக பொருள். அப்போது பங்கானது அதிக விலையில் (முந்தைய நாள் முடிவை விட) தொடங்கி அதிக விலையில் வர்த்தகம் நடக்கும். அதன் காரணமாக காளைகள் உள்நுழைந்து விட்டதை அறியலாம் ஆனால் காளை தன் வலுவை கட்டுப்பாட்டில் வைக்க முடியாமல் தடுமாறும். அப்போது விற்பவர்களால் பங்கின் விலை வீழ்ந்து அதன் வீச்சின் குறை(கீழ்) விலையை எட்டுவார்கள். இதனால் கரடியின் செல்வாக்கு இன்னும் உள்ளது என்று அறியலாம். ஆனால் அடுத்த நாள் காளை நுழைந்து கரடியின் சிறு எதிர்ப்பை மீறி விலையை அதிகரிக்கும். (வெள்ளை மெழுவர்த்தி). அடுத்த நாள் விலை கீழே இறங்காமல் வலுவாக இருந்தால் தலைகீழ் சுத்தியல் சமிக்கை உறுதியானதாக பொருள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக