மூன்று வழிமுறை ஒழுங்கு போல இந்த ஒழுங்கில் ஐந்து உலக்கைகள் பங்கு பெறும். பார்க்க இரண்டும் ஒன்று போல தோன்றும் , இவ்விரண்டுக்கும் நுண்ணிய வேறுபாடு உண்டு.
உறுதியான பாய் - காளை
இது அரிதாக தோன்றும் சிக்கலான ஆனால் நம்பிக்கையுள்ள ஒழுங்கு. இதை எப்படி அறிவது?
- முதலில் ஏறுமுக போக்கு இருக்க வேண்டும்.
- அடுத்ததாக நீளமான வெள்ளை நிறமுடைய உடல் தோன்றவேண்டும்
- வெள்ளை உடலுக்கு மேல் இடைவெளி விட்டு சிறிய கருப்பு உடல் தோன்ற வேண்டும்
- அக்கருப்பு உடலைத்தொடர்ந்து இரு கருப்பு உடல்கள் தோன்றனும். கருப்பு உடலின் தொடக்கமும் முடிவும் அதற்கு முந்தைய கருப்பு உடலின் தொடக்கம், முடிவுக்கு கீழ் இருக்க வேண்டும்.
- மூன்று கருப்பு உடல்களுக்கு அடுத்து நீளமான வெள்ளை உடல் தோன்ற வேண்டும்.
- இந்த வெள்ளை உடலின் தொடக்கம் முதலில் தோன்றிய வெள்ளை உடலின் தொடக்கம் மற்றும் முடிவை விட அதிகமாக இருக்க வேண்டும். இது மூன்று கருப்பு உடல்களையும் விழுங்குவதாக இருக்க வேண்டும். (படம் பார்க்க)
காளைகள் கட்டுப்பாட்டில் சந்தை இருப்பதை நீளமான வெள்ளை உடல் தெரிவிக்கிறது. அதற்கு அடுத்த நாள் காளை விலையை உயர்த்தி இடைவெளியுடன் தொடங்கும் ஆனால் காளையை கரடி அமுக்கிவிட்டு, மெதுவாக மூன்று நாள்கள் தொடர்ச்சியாக கரடிகள் விலையை குறைக்கும். மூன்று நாள்கள் முயன்றும் வெள்ளை உடலின் தொடக்கத்தை எட்ட முடியாதது கரடியின் வலிமையின்மையை காட்டுகிறது. பின்பு காளை சீற்றம் கொண்டு மூன்று நாள்கள் உருவான கருப்பு உடல்களை விழுங்கும் அளவுக்கு பெரிதாக எழும். இது கரடிகள் போக்கு மாற்றம் ஏற்பட செய்த முயற்சி தோல்வியடைந்ததை காட்டுகிறது.
உறுதியான பாய் - கரடி
இது அரிதாக தோன்றும் சிக்கலான ஆனால் நம்பிக்கையுள்ள ஒழுங்கு. இதை எப்படி அறிவது?
- முதலில் இறங்கு முக போக்கு இருக்க வேண்டும்.
- அடுத்ததாக நீளமான கருப்பு நிறமுடைய உடல் தோன்றவேண்டும்.
- கருப்பு உடலுக்கு இடைவெளி விட்டு கீழே சிறிய வெள்ளை உடல் தொடங்க வேண்டும்.
- மேலும் இரு சிறிய வெள்ளை உடல்கள் தோன்ற வேண்டும். இவற்றின் முடிவு முந்தைய நாள் உடலின் முடிவை விட அதிகமாக இருக்கவேண்டும்.
- இந்த வெள்ளை உடல்களின் முடிவு முதல் நாள் கருப்பு உடலின் தொடக்கத்தை எட்டாமல் இருக்க வேண்டும்.
- வெள்ளை உடல்களுக்கு பின் தோன்றும் நீளமான கருப்பு உடல் முதலில் தோன்றிய கருப்பு உடலின் முடிவுக்கு கீழாக முடியும்.
ஏன் இந்த ஒழுங்கு கரடி ஓட்டத்தை தொடரும் என்று நினைக்கறாங்க?
கரடிகள் கட்டுப்பாட்டில் சந்தை இருப்பதை நீளமான கருப்பு உடல் தெரிவிக்கிறது. அதற்கு அடுத்த நாள் கரடி விலையை மேலும் குறைத்து கீழ் இடைவெளியுடன் தொடங்கும் ஆனால் கரடியை காளை அமுக்கிவிட்டு, காளைகள் மெதுவாக மூன்று நாள்கள் தொடர்ச்சியாக விலையை அதிகரிக்கும். மூன்று நாள்கள் முயன்றும் கருப்பு உடலின் தொடக்கத்தை எட்ட முடியாதது காளையின் வலிமையின்மையை காட்டுகிறது. பின்பு கரடி சீற்றம் கொண்டு மூன்று நாள்கள் காளைகள் உருவாக்கிய விலை ஏற்றத்தை முறியடித்து இதற்கு முன் தோன்றிய கரடியின் முடிவை விட கீழாக முடியும். இது காளைகள் போக்கு மாற்றம் ஏற்பட செய்த முயற்சி தோல்வியடைந்ததை காட்டுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக