இரட்டை உலக்கை ஒழுங்கான இது ஏறுமுக போக்கிலேயே ஏற்படும்.
- முதல் நாள் பெரிய வெள்ளை உடலும் அடுத்த நாள் சிறிய கருப்பு உடலும் தோன்றும்.
- இந்த சிறிய கருப்பு உடல் வெள்ளை உடலுக்குள் முற்றிலும் அடங்குவதாக இருக்கும்.
- முதல் நாளுக்கு முந்தைய நாளும் வெள்ளை உடல் தோன்றி ஏறு முக போக்கை காட்டும். இந்த ஒழுங்கு உடனடியாக ஏறு முக போக்கு முடிவுக்கு வருவதை குறிக்கும்.
முதல் நாள் இருக்கும் வெள்ளை உடல் ஏறு முக போக்கு தொடர்வதை காட்டுகிறது. அடுத்த நாள் உடல் முதல் நாள் உடலில் இருந்து வெளிவருவது போல் இருக்கும். பொதுவாக இதன் நிறம் கருப்பாக இருக்கும் ஆனால் எப்போதும் அப்படி இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மெழுகுவர்த்தியின் அளவு & அதன் இடத்தை பொருத்து போக்கு மாற்றத்தின் வீரியம் இருக்கும். பெரிய வெள்ளை உடலும் அதற்கு அடுத்த நாள் கருப்பு உடலும் தோன்றுவது ஏறு முக போக்கு முடிவுக்கு வருவதன் அறிகுறியாகும். மேற்கத்திய “உள் நாள்” என்பது உடலும் அதன் குச்சிகளும் முந்தைய நாளின் உடலுக்குள் அடங்குவதாகும் ஆனால் இதில் உடல் மட்டுமே முந்தைய நாளின் உடலுக்குள் அடங்கும்.
சமிக்கையை அதிகப்படுத்தும் செயல்கள்.
- கருப்பு மற்றும் வெள்ளை உடல்கள் பெரிதாக இருந்தால் போக்கு மாற்றம் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம்.
- கருப்பு உடல் அளவு, வெள்ளை உடல் அளவுக்கு மிக அருகில் இருந்தால் அதாவது முந்தைய நாள் தொடக்கத்துக்கு அருகில் அடுத்த நாளின் முடிவு இருந்தால் கருப்பு உடலின் அளவு எவ்வளவாக இருந்தாலும் போக்கு மாற்றம் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம்.
போக்கு மாற்றம் நடைபெறுமென்று நினைக்கவைக்கும் காரணி
ஏறுமுக போக்கிற்கு பின் தோன்றும் பெரிய வெள்ளை உடலுக்கு பின் கரடி (கருப்பு உடல்) தோன்றி முந்தைய நாள் முடிவை விட குறைவான விலையில் அன்றைய நாளின் தொடக்கத்தை ஆரம்பிக்கும். இதனால் நெடுக்கர்கள் கவலை கொண்டு பங்குகளை விற்று லாபத்தை எடுக்க முயல்வார்கள். இதனால் அன்றைய நாளின் பங்கின் முடிவு விலை தொடக்கத்தை விட குறைந்து காணப்படும். முடிவு விலை குறைந்து காணப்படுவதால் காளைகள் கவலை கொள்ளும். போக்கு பாதிப்படைந்துள்ளது நன்கு தெரிகிறது. சிறிய கருப்பு உடல் போக்கு மாறுகிறது என்பதை அனைவருக்கும் உணர்த்துகிறது. குறுக்கர்களின் விற்பனையாலும் நெடுக்கர்கள் லாபத்தை எடுக்க பங்கை விற்பதாலும் வர்த்தக அளவு அதிகரித்து காணப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக