இறங்கு முக போக்கிலேயே தோன்றும் மூவுலக்கை ஒழுங்கான இது ஏறு முக போக்கின் (காளை) தொடக்கம் ஆகும். இது மூன்று உலக்கைகளை வைத்து கட்டமைக்கப்படும் ஒழுங்காகும்.
- காலையில் விண்மீனில் முதல் உடல் நீண்ட கருப்பாகும்.
- இரண்டாவது உடல் முதல் உடலிருந்து நன்கு இடைவெளி விட்டு கீழாக தோன்றும். இது சிறியதாகவும் முதல் நாள் உடலை தொடாமல் விண்மீன் போல் இருக்கும். இச்சிறிய உடல் முதலீட்டாளர்கள் வாங்குவதா விற்பதா என்ற குழப்பமான மனநிலையில் உள்ளதை உணர்த்துகிறது.
- மூன்றாவது நாள் உடல் வெள்ளை நிறத்துடன் முதல் நாளின் முடிவை விட சற்று அதிகமாக முடிந்திருக்கும்.
மூன்றாவது நாள் உடல் முதல் நாள் உடலின் பாதியை தொடும் அளவு இருந்தால் போக்கு மாற்றம் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம், பாதிக்கும் மேல் எந்தளவு நீளமானதாக உள்ளதோ அது ஏற்படப்போகும் போக்கு மாற்றத்தின் வலிமையை குறிக்கும்.
முதல் நாள் உடலும் மூன்றாம் நாள் உடலும் நீளமானதாக இருந்தாலோ விண்மீனின் (இரண்டாம் நாள்) உடல் சிறிதாக குழப்பமான மனநிலையை எதிரொளித்தாலோ இரண்டாம் நாள் உடல் முதல் & மூன்றாம் நாளை தொடாமல் இடைவெளியுடன் இருந்தாலோ போக்கு மாற்றம் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம்.
இரண்டாவது நாள் தோன்றும் உடலின் நிறம் எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம் ஆனால் வெள்ளையாக இருப்பது சிறப்பு.
சமிக்கையை அதிகப்படுத்தும் செயல்கள்.
போக்கு மாற்றம் நடைபெறும் என நினைக்க காரணம்.
தெளிவான இறங்கு முக போக்கில் பெரும் விற்றல் நடந்த நாளின் இறுதி கட்டத்தில் காளைகள் உள்நுழையும். முதல் நாளின் முடிவை விட அதிக இடைவெளிவிட்டு கீழ் தொடங்கும் இரண்டாம் நாளின் சிறிய உடல் முதலீட்டாளர்களின் குழப்பமான மனநிலையை காட்டும். மூன்றாம் நாள் கரடிகள் நம்பிக்கையிழந்து காளைகள் செல்வாக்கு பெற்று இரண்டாம் நாளின் தொடக்கம்\முடிவை விட அதிக மேல் இடைவெளியில் தொடங்கி ஓடும்.
இரண்டாவது நாள் தோன்றும் உடலின் நிறம் எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம் ஆனால் வெள்ளையாக இருப்பது சிறப்பு.
சமிக்கையை அதிகப்படுத்தும் செயல்கள்.
- தெளிவான இறங்கு முகத்தில் காலையில் விண்மீன் தோன்ற வேண்டும்.
- முதல் நாள் கருப்பு உடலும் மூன்றாம் நாளின் வெள்ளை உடலும் நீளமாக இருப்பது சாலச்சிறந்தது.
- முதல் நாளுக்கும் இரண்டாம் நாளுக்குமான இடைவெளி அதிகமாக இருப்பது சிறப்பு.
- முதல் நாள் கருப்பு உடலின் நீளத்திற்கு அருகிலோ அல்லது அதை விட நீளமாக மூன்றாம் நாளின் வெள்ளை உடலின் நீளம் இருந்தால் போக்கு மாற்றம் ஏற்பட அதிக வாய்ப்புண்டு.
- முதல் நாளும் மூன்றாம் நாளும் அதிக வாங்கல் விற்றல் நடுந்திருக்க வேண்டும்.
போக்கு மாற்றம் நடைபெறும் என நினைக்க காரணம்.
தெளிவான இறங்கு முக போக்கில் பெரும் விற்றல் நடந்த நாளின் இறுதி கட்டத்தில் காளைகள் உள்நுழையும். முதல் நாளின் முடிவை விட அதிக இடைவெளிவிட்டு கீழ் தொடங்கும் இரண்டாம் நாளின் சிறிய உடல் முதலீட்டாளர்களின் குழப்பமான மனநிலையை காட்டும். மூன்றாம் நாள் கரடிகள் நம்பிக்கையிழந்து காளைகள் செல்வாக்கு பெற்று இரண்டாம் நாளின் தொடக்கம்\முடிவை விட அதிக மேல் இடைவெளியில் தொடங்கி ஓடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக