இரட்டை உலக்கை ஒழுங்கான கார்முகில் காளை ஒழுங்கான துளைக்கு மாற்றான கரடி ஒழுங்காகும். இது தெளிவான ஏறு முக போக்கிலேயே ஏற்படும். முதல் நாள் வெள்ளை உடலும் அடுத்த நாள் கருப்பு உடலும் ஏற்படும். முதல் நாள் முடிவை விட நன்கு இடைவெளி விட்டு மேலாக அதாவது அதிக விலையில் தொடக்கம் இருக்கும். முந்தைய நாள் வெள்ளை உடலுக்கு பாதிக்கு (50%) மேல் வந்து விலை முடியும். அதாவது முந்தைய நாளின் தொடக்கத்துக்கு அருகில் என கொள்ளலாம் ஆனால் முந்தைய நாளின் தொடக்கத்தை அடுத்த நாளின் முடிவு தொடாது.
கார்முகில் ஒழுங்கு தோன்றியதுக்கு அடுத்த நாள் கருப்பு\சிவப்பு உலக்கை தோன்றினாலே கார்முகில் ஒழுங்கு உறுதிபடுத்தப்படும் இல்லையென்றால் அது போங்கு காட்டுதுன்னு பொருள்.
மேலும் கார்முகிலின் உடம்பு வெள்ளை\பச்சை, கருப்பு\சிவப்பாக இருக்கும், குச்சி மிகச்சிறியதாக அல்லது இல்லாமல் கூட இருக்கும். இப்படி குச்சி இல்லாமல் இரு உடம்புகளும் இருந்தால் விலை குறைவு உறுதியானது என அறியலாம்.
சமிக்கையை அதிகப்படுத்தும் செயல்கள்.
* முந்தைய நாள் (வெள்ளை உடல்) விட அதிக இடைவெளி விட்டு அடுத்த நாள் (கருப்பு உடல்) விலை தொடக்கம் இருந்தால் போக்கு மாறுவதற்கான வாய்ப்பு அதிகம்.
* வெள்ளை& கருப்பு உடலின் நீளம் மிக அதிகமாக இருந்தால் போக்கு மாறுவதற்கான வாய்ப்பு மிக அதிகம்.
*வெள்ளை உடலின் முழு உயரத்துக்கு அருகில் கருப்பு உடலின் உடல் இருந்தால் போக்கு மாறுவதற்கான வாய்ப்பு மிக அதிகம். (வெள்ளை உடலை கருப்பு உடல் தாண்டக்கூடாது)
* கடைசி இரு நாள்களிலும் அதிக வாங்கல் விற்றல் நடந்திருந்தால் போக்கு மாறுவதற்கான வாய்ப்பு அதிகம்.
போக்கு மாற்றம் நடைபெறும் என்று நினைக்க வைக்கும் செயல் என்ன?
ஏறுமுக போக்கு என்றால் அது காளை கட்டுப்பாட்டில் உள்ளது என்பது அறிந்ததே. அடுத்த நாள் தொடங்கியதும் காளைகள் மேலும் முன்னேறும் அதனால் விலை கூடும் ஆனால் கரடிகள் உள்நழைந்ததும் விலை சரிந்து அந்நாளின் விலை முடிவை ஏறுமுக போக்கில் பங்கு இருந்தாலும் குறைத்துவிடும். கரடி செல்வாக்கு தொடர்ந்தால் அடுத்த நாளும் விலை முடிவு குறைந்து காணப்படும் (கருப்பு\சிவப்பு உலக்கை). இது ஏறுமுக போக்கை முடித்து வைக்கும் போக்கு மாற்றம் ஏற்பட அதிக வாய்ப்பு என அறியலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக