இரட்டை உலக்கை ஒழுங்கான கரடி விழுங்கி ஒழுங்கில் வாங்குபவர்களை விட விற்பவர்கள் மிக அதிகரித்து காணப்படுவர். இந்த ஒழுங்கில் முதல் நாள் சிறிய வெள்ளை\பச்சை நிற உடலும் அடுத்த நாள் கருப்பு\சிவப்பு நிற உடல் அதை மறைப்பது (விழுங்குவது) போல் இருக்கும். இது ஏறுமுக போக்கிலேயே ஏற்படும். முதல் நாளின் தொடக்கத்தை விட அடுத்த நாளின் தொடக்கம் மிக அதிகமாக இருக்கும் ஆனால் முதல் நாளின் முடிவை விட அடுத்த நாளின் முடிவு மிக கீழாக இருக்கும்.
சமிக்கையை அதிகப்படுத்தும் சில காரணிகள்
- நிறைய இடத்தில் கரடி விழுங்கி தோன்றினாலும் தெளிவான ஏறு முகத்தில் தோன்றினால் போக்கு மாற்ற வாய்ப்பு அதிகம்.
- இரு சிறு உடல்கள் கூட கரடி விழுங்கியை உருவாக்கும் ஆனால் உடல்களின் நீளம் அதிகமிருப்பது சிறப்பு
- இரண்டாவது தோன்றும் கருப்பு\சிகப்பு நிற உடலின் நீளம் முன்னதை விட மிகப்பெரிதாக இருப்பது சிறப்பு.
- கரடி விழுங்கியின் கருப்பு\சிவப்பு நிற உடல் நாளில் அதிகளவு வாங்கல் விற்றல் நடந்திருந்தால் போக்கு மாற்ற வாய்ப்பு அதிகம்.
- பங்கு சந்தை நிலையான போக்கில் இல்லாமல் மேலும் கீழும் போவதுமாக இருந்தால் கரடி விழுங்கியை அவ்வளவாக நம்பமுடியாது.
கீழுள்ள மாதிரி மூன்று உலக்கையை வைத்தும் சிலர் கரடி விழுங்கியை சொல்கின்றனர். இதில் எனக்கு உடன்பாடில்லை. கரடி விழுங்கி என்பது ஈர் உலக்கை தான் மூவுலக்கை அல்ல,
ஏன்னா சிறிய பச்சை உலக்கையை அடுத்து வரும் இரு சிவப்பு உலக்கைகளும் சேர்ந்து விழுங்கி விட்டதாம்.
இறங்கு முகத்தில் தோன்றும் கரடி விழுங்கி சிறப்பானது விலை மேலும் கீழே போகும் என்பதை உணர்த்துவது.
வெறும் ஒழுங்கை மட்டும் வைத்து பங்கின் போக்கை கணிக்காமல் ஆதரவு- தடை, ஃபிபனாச்சி மற்றும் சில காட்டிகள் உடன் பயன்படுத்தனும். இவற்றை விளக்கமா ஒழுக்குகளுக்கு அப்புறம் சொல்கிறேன்.
எது தெரியுமா மிக சக்தி வாய்ந்த கரடி விழுங்கி ? இறங்கு முகத்தில் விலை திருத்தம் ஏற்பட்டு விலை சிறிது ஏறுகிறது. தடை கோட்டை தாண்டாமல் அங்கு கரடி விழுங்கி ஏற்படுவது ஆகும். அது ஆதரவு கோட்டை உடைத்து கீழே செல்லும். 10% மட்டும் விலை ஏறினால்\குறைந்தால் அதை திருத்தம் எனலாம்.
மேலுள்ள படத்தை பார்த்தால் இறங்கு முகம் சிறிய திருத்தை சந்நித்து பின் கரடி விழுங்கி ஏற்பட்டு மீண்டும் இறங்கு முகத்தை தொடருவதை காணலாம்.
2 கருத்துகள்:
கரடி விழுங்கியா இல்லை விழுங்கும் கரடியா?
அப்படியே மொழி பெயர்ப்பதால் பொருள் மாறி விடுகிறது ....
விழுங்கி தான் இங்கு முதன்மை, அதனால் ஓர்மை கருதி கரடி விழுங்கி என்றேன். விழுங்கும் கரடியும் இதற்கு நல்லாதான் இருக்கு. கருத்துக்களை கூறுங்கள், பின்பு மாற்றுவோம்.
கருத்துரையிடுக