வணக்கம்
வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?
புதன், ஜூலை 03, 2019
விழும் விண்மீன் ( Shooting star)
விழும் விண்மீன்
ஒற்றை உலக்கை ஒழுங்கான இது தொங்கும் மனிதனை போன்ற கரடி ஒழுங்காகும். ஏறு முக போக்கின் உச்சியில் ஏற்படும் இதன் உடல் சிறிதாக இருக்கும். இதற்கு கீழ் குச்சி இருக்காது இருந்தாலும் மிகச்சிறியதாக இருக்கும். உடலை விட குறைந்தது இரு மடங்கு கீழ் குச்சியின் நீளம் இருக்கும். பார்க்க விண்மீன் கீழே விழுவது போல் இருக்கும். முதல் நாள் உடலை விட விழும் விண்மீனின் உடல் உயரத்தில் இருக்கும் அதாவது இரண்டுக்கும் இடைவெளி இருக்கும். விழும் விண்மீனின் நாளுக்கு அடுத்த நாள் உடல் கருப்பாக\சிவப்பாக இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் விண்மீன் நாளுக்கும் அடுத்த நாளுக்கும் (இறங்கு முக போக்கு) ஆன இடைவெளி அதிகமாக இருக்கவேண்டும், முடிவும் முதல் நாளை விட குறைவாக இருக்க வேண்டும்.
இதுக்கும் தலைகீழ் சுத்தியலுக்கும் என்ன வேறுபாடு? இரண்டும் தோற்றத்தில் ஒன்றே ஆனால் தலைகீழ் சுத்தியல் இறங்கு முகத்தில் தோன்றும் இது ஏறு முகத்தில் தோன்றும். தோன்றும் இடத்தை பொருத்து பெயர்.
சமிக்கையை அதிகப்படுத்தும் செயல்கள்.
* மேல் குச்சியின் நீளம் அதிமாக இருக்கவேண்டும்.
* முதல் நாளுக்கும் மீன் நாளுக்குமான இடைவெளி அதிமாக இருக்க வேண்டும்.
* மீன் நாளின் முடிவை விட அடுத்த நாளின் தொடக்கம் குறைவாக இருக்கவேண்டும்.
* அதிக வாங்கல் விற்றல் மீன் நாளில் நடந்திருந்தால் அடுத்த நாள் மாற்றம் நடக்க வாய்ப்பு மிக அதிகம்.
போக்கு மாற்றம் நடைபெறுமென்று நினைக்க காரணம்.
ஏறுமுக போக்கின் போது முந்தின நாளுக்கும் இந்நாளுக்குமான இடைவெளி அதிகரித்து பங்கின் விலை அதிகமாக தொடங்கி ஓடி புதிய உச்சத்தை தொடும். காளையின் கட்டுப்பாடில் விலை இருக்கும். ஆனால் அன்றைய நாள் முடிவதற்குள் கரடி உள்நுழைந்து விலையை வர்த்தக வீச்சின் அளவை புதிய கட்டத்துக்கு குறைத்து விடும். இது சிறிய உடலை தோற்றுவிக்கும். மேற்கத்திய குச்சி வரைபடத்தை அலசினால் காளைகள் இன்னும் கட்டுப்பாட்டில் பங்கை வைத்திருப்பதாக தோன்றும். ஆனால் நீண்ட மேல் குச்சி பங்கை விற்பவர்கள் அதிகரித்தை காட்டும். எனினும் மேல்குச்சி விற்பவர்கள் அதிகரித்ததை காட்டுகிறது. காளைகள் விலையை நாளின் முடிவில் தொடக்க விலையை விட குறையவிடாமல் பார்த்துக்கொண்டாலும் பங்கை விற்பவர்கள் அதிகமானது தெரிகிறது. அடுத்த நாள் பங்கின் தொடக்கம் குறைந்து இருந்தாலோ கருப்பு மெலுகுவர்த்தி ஏற்பட்டாலோ விற்பது அதிகரித்து உள்ளது என்பதை உறுதிபடுத்தலாம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக