வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



செவ்வாய், டிசம்பர் 26, 2006

Airtel ன் சொதப்பல் ஆரம்பம்


Airtel நிறுவனம் நிமிடத்துக்கு 7.9 cents க்கு அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு தொலைபேச ஒரு திட்டதை அறிவித்து அமெரிக்காவின் Calling Card சந்தையில் நுழைந்தது. இத்திட்டம் NRI மக்கள் மத்தியில் Airtel க்கு நல்ல அறிமுகத்தை தந்தது. அதற்கு இன்னொரு காரணம் Signup க்கும் முதல் recharge க்கும் இரட்டிப்பு மதிப்பு கொடுத்தது. அதாவது $50 வாங்கினால் அதன் மதிப்பு $100 ஆக Airtel நிறுவனத்தால் இரட்டிப்பு செய்யப்பட்டது. இந்த சலுகை குறிப்பிட்ட நாட்கள் வரைதான். சனவரி 7 க்குள் signup செய்ய வேண்டும். registration க்கு இரட்டிப்பு மதிப்பு கொடுக்கிறது. சனவரி 15 & 30 வரை தான் இந்த சலுகை, விபரங்களுக்கு https://www.airtelcallhome.com/ics/ என்ற அவர்கள் இணைய முகவரியை பார்க்கவும்.

இதனால் நிமிடத்துக்கு 12.9 cents வாங்கிய Reliance ன் Calling Card சரியாக அடி வாங்க வேண்டியது Airtel ன் மா மாபெரும் தவறால் தப்பிவிட்டது. வாடிக்கையாளர் சேவை என்பது இந்தியாவில் இல்லாமல் இருக்கலாம், இல்லாமலே பெரிய அளவில் வளராலாம். ஆனால் அமெரிக்காவில் இது நடப்பது கடினம் என்பது Airtel க்கு புரியவில்லையே என்ன செய்வது??

இது நாள் வரை Airtel ன் வாடிக்கையாளர் சேவையை போல் ஒரு மகா மோசமான சேவையை நான் அமெரிக்காவில் பார்த்ததில்லை. சரியாக சொல்ல வேண்டுமென்றால் வாடிக்கையாளர் சேவையே கிடையாது. எப்போது வாடிக்கையாளர் சேவை எண்ணை அழைத்தாலும் அது 'busy' ஆகவே இருக்கும். அவர்களின் வலைதளமும் மோசம், ஏதாவது update செய்யனும் என்றால் 5 நிமிடம் கழித்து Error வந்து நிற்கும். ஆரம்பத்திலேயே இந்த மாதிரி என்றால் ????

Airtel ன் அதிரடி நுழைவால் ஆடிப்போன Reliance சுதாகரித்துக் கொண்டு விலையை குறைத்துவிட்டது. இப்போ நிமிடத்துக்கு 7.9 cents தான். அதுவுமில்லாமல் recharge/new registration க்கு இரட்டிப்பு மதிப்பு கொடுக்கிறது. சனவரி 15 & 30 வரை தான் இந்த சலுகை விபரங்களுக்கு relianceindiacall.com என்ற அவர்கள் இணைய முகவரியை பார்க்கவும்.

Airtel வருகையால் என்னைப்போன்றவர்களுக்கு நன்மை.

குறிப்பு : இந்த 2 நிறுவனங்களின் calling card தவிர மேலும் பல நிறுவனங்கள் 7.9 cents க்கு calling card கொடுக்கின்றன. ஆனால் reliance நிறைய வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.
https://www.reliablecalling.com/ நிமிடத்துக்கு 6.9 cents, www.pingo.com நிமிடத்துக்கு 7.6 cents

வாழ்க போட்டி! வளர்க வாடிக்கையாளர் நலன் !!.

வெள்ளி, டிசம்பர் 15, 2006

Positive Attitude

அவருகிட்ட வாழ்க்கையில் எல்லாத்தையும் "Positive" வா எடுத்துக்கனும்ன்னு சொன்னது தப்பா போச்சு.

ஏன்?

HIV-AIDS சோதனை பண்ணியதன் முடிவு "Positive" வா வரலைன்னு கவலையா இருக்கார்.

திங்கள், டிசம்பர் 04, 2006

விவசாயிகளுக்கு எதிராக ஆளும் கம்யூனிஸ்ட் வர்க்கம்.

பொதுவாக விவசாய நிலங்களை ஆக்ரமித்து/அபகரித்து பெரிய ஆலைகளை கட்டும் போது கம்யூனிஸ்ட்கள் அதை எதிர்த்து போராடுவார்கள், முதலாளித்துவம் ஒழிக என்பார்கள். இங்க நிலைமை தலை கீழ். இந்திய கம்யூனிஸ்டின் கோட்டையான மேற்கு வங்கத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் ஆலைக்கு ஆதரவாக செயல்பட திரிணாமுல் காங்கிரஸ் அதை எதிர்த்து விவசாயிகளுக்காக போராடுகிறது. கம்யூனிஸ்ட்டுக்கு எதிராக கம்யூனிஸ்ட் பாணி போராட்டம்.
ஆளும் வர்க்கம் என்று வரும்போது கம்யூனிஸ்ட் மற்றும் எல்லோரும் ஒன்று தான் போல.

இது தொடர்பான செய்தி இங்கே.

டாடா கார் ஆலைக்கு எதிர்ப்பு: கிராமத்தினர் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு

சிங்குர் (மேற்குவங்கம்), டிச. 3: டாடா நிறுவனத்தின் சிறிய கார் தயாரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் மீது போலீஸார் ரப்பர் குண்டுகள் நிரப்பிய துப்பாக்கியால் சுட்டதில் 5 பேர் காயமடைந்தனர்.

மேற்குவங்க மாநிலம் சிங்குர் பகுதியில் ஜாய்மொல்லா கிராமத்தில் டாடா சிறிய கார் தயாரிப்பு ஆலைக்காக நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாய நிலத்தில் ஆலையைத் தொடங்குவதால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி திரிணமூல் காங்கிரஸ் தலைமையில் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆலைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் சனிக்கிழமை முள்வேலி அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது கிராம மக்கள் சிலர் போலீஸார் மீது கற்களை வீசினர். அவர்களைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். இதில் 5 பேர் காயமடைந்தனர். இதனால் பதற்றம் அதிகமாகி மேலும் பலர் அங்கு வரத்தொடங்கினர். இதனால் நிலைமையைக் கட்டுப்படுத்த போலீஸார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வெடித்தனர், ரப்பர் குண்டு நிரப்பப்பட்ட துப்பாக்கியால் சுட்டனர்.

போலீஸார் தங்களின் வீடுகளுக்குள் புகுந்து அடித்ததாகவும், வைக்கோல் போருக்கு தீ வைத்ததாகவும் கிராமத்தினர் சிலர் கூறினர். டிஐஜி தலைமையில் பெரும் போலீஸ் படை அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளது.