வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



வியாழன், நவம்பர் 19, 2020

ஏன் எந்தக் கட்சியும் எதனுடைய பீ டீமும் அல்ல & பீகார் தேர்தல் அலசல்

2020 அக்டோபர் நவம்பரில் நடந்த பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய சனநாயக கூட்டணி (தேசகூ) வாங்கியது 125, மாகாகாத்பந்தன் வாங்கியது 110 . ஓவைசியின் முசல்மீன் வாங்கியது 5, மாயாவதியின் பகுசனும் பாசுவானின் லோக் சன சக்தியும் வாங்கியது தலா 1, கட்சி சார்பற்றவர் 1. 

சதவீத கணக்கில் முசல்மீன் 1.24% வாக்குகளும், பகுசன் 1.49% வாக்குகளும், சன சக்தி 5.66% வாக்குகளும் பெற்றன.  லோக் சன சக்தி 134 தொகுதிகளிலும் முசல்மீன் 20 தொகுதிகளிலும் பகுசன் 80 தொகுதிகளிலும் போட்டியிட்டன.  

மகாகாத்பந்தன் தோற்றதிற்கு ஓவைசியின் முசல்மீன்கட்சி முசுலிம் வாக்குகளை பிரித்ததும் பகுசன் சமாச் பட்டியல் இனத்தவரின் வாக்குகளை பிரித்ததும் தான் காரணமென்றும் அவை பாசகவின் பீ டீமென்றும் இங்கு பாசகவை எதிர்ப்பவர்களும் திமுக அல்லக்கைகளும் அலறுவது தவறு. 

நமக்கும் சிறிது அரசியல் தெரியுமென்பதால் அது ஏன் தவறு எனப் பார்ப்போம்.

சாகையில் போன முறை இராட்ரிய சனதாதள சாவித்திரி தேவி சுனில் குமாரை 12,113 வேறுபாட்டில் வென்றார். இம்முறை அதற்கு பழிவாங்கும் விதமாக கட்சி சார்பற்ற சுனில் குமார் சிங் சாவித்திரி தேவியை 625 வாக்கு வேறுபாட்டில் வென்றுள்ளார்.  நோட்டா 6,520. இது பழங்குடிகளும் பட்டியல் இன மக்களும் மிக அதிகமாக உள்ள தொகுதி சுனில் குமார் ராசுபுத்.  இவர் கட்சியில் பல ஆண்டுகள் இருந்தும் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் போட்டியிட்ட போட்டி வேட்பாளர் இல்லை. இது அலசலுக்கு தேவையில்லை ஆனால் கட்சி சார்பற்றவர் வெற்றி என்பதால் ஈர்க்கப்பட்டு படித்ததை பகிர்கிறேன்.

இரு கூட்டணியிலும் மோசமான வெற்றி தோல்வி விகிதத்தை பெற்ற காங்கிரசே மாகாகாத்பந்தனை கவிழ்த்தது எனலாம். லாலு பிரசாத்தின் மகன் நாற்காலி கனவை கலைத்ததில் முழுமையான பங்கு காங்கிரசுக்கே உண்டு. 70 தொகுதிகளை வாங்கி அதில் 19இல் மட்டுமே வெற்றி, 30% கூட இல்லை. காங்கிரசு தலைவர் சுற்றுலாவுக்கு போவது போல் சில முறை தான் பரப்புரைக்கு வந்தார் என்கிறார்கள். அரசியலில் கடும் உழைப்பு இல்லாமல் வெற்றி கிடைக்குமா? கோவிட்டை கையாண்டது, வேலைவாய்ப்பு இல்லாதது, ஆட்சியாளர்களுக்கு என்ற எதிரான மனநிலை இருந்ததால் தாம்பாழத்தட்டில் வெற்றலை பாக்கோட வெற்றியை வைத்து மக்கள் கொடுப்பார்கள், நோகாமல் வாங்கிக்கலாம் என்று காங்கி தலைமை எண்ணிவிட்டது போலும். வெற்றியை ருசிக்க நல்ல உழைப்பு வேண்டாமா? லட்டு மாதிரியான வாய்ப்பை தவற விட்டுட்டாங்க. கூட்டணியில் ஒருத்தர் இருவர் மட்டும் உழைத்தால் போதுமா? கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சி என்ற முறையில் காங்கிரசின் பரப்புரை பெரிதாக இருந்திருக்க வேண்டும். ஆனா பல மாநிலங்களில் கடந்த 6 ஆண்டுகளாக பல தோல்விகள் பெற்றிருந்தும், அப்படி ஏதும் நடக்கவில்லை, தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை. காங்கி ஆட்சியை பிடிக்க சிறந்த அரசியல் உத்தி வகுப்பாளரும் அதை செயல்படுத்தும் தலைவராக ராகுல் இருக்க வேண்டும். இங்கு ஏதாவது ஒன்று தவறுகிறதா அல்ல இரண்டுமா என்பது தெரியவில்லை. முருகனை நம்பியோர் கை விடப்படார் என்பது போல் காங்கை நம்பியோர் கை விடப்படுவோர் என்பது புதிய வாசகம்.

பாசக வளர்வதற்கு ஓவைசி மாதிரியான ஆட்கள் தேவை, ஓவைசி வளர்வதற்கு பாசக தேவை. ஓவைசியின் வாக்கு வங்கியை ஆட்டைய போடும் வாய்ப்பு காங்கிரசுக்கு தான் உள்ளது, பாசகவுக்கு இல்லை.  ஓவைசி குடும்பம் சில கல்விக்கூடங்களை ஐதரபாத்தில் நடத்துகிறது. ஆனால் இது வரை அதன் மேல் வருமான வரித்துறை, சிபிஐ, அமுலாக்கத்துறை என்று  எந்த நடவடிக்கையும் இல்லை என்பதை வைத்தே பாசகவுக்கும் ஓவைசிக்கும் உள்ள நட்பு இல்லைன்னா நல்ல புரிதல் இருந்திருக்குமென நாம் ஊகிக்கலாம். அரசியல் ஆட்டத்தில் கில்லாடியான அமித், ஓர் உத்தியாக ஓவைசி மகாகாத்பந்தனில் சேருவதை தடுத்திருக்கலாம். மறுக்க முடியாது.

பகுசனுக்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கு பீகாரில் இல்லை,

இப்ப தேசிய சனநாயக கூட்டணிக்கு வாங்க.

லோக் சன சக்தி பட்டியல் இன மக்களிடம் குறிப்பிடத்தக்க செல்வாக்கு உள்ள கட்சி. அது வரை தேசகியிலிருந்த  லோக் சன சக்தி இத்தேர்தலில் தேசகூயை எதிர்த்து போட்டியிட்டது. ஆனால் டெல்லியில் பாடம் போட்டதுக்குப்பின் பாசகவை எதிர்த்து போட்டியில்லை ஆனால் ஐக்கிய சனதா தளத்தை  எதிர்த்து மட்டும் போட்டி என்றது. அதுக்கு காரணம் நாளுக்கு நாள் அழிந்து  கொண்டிருந்த சன சக்தியானது ஐக்கிய சனதா தளத்தை எதிர்த்தால் மட்டுமே புத்துயர் பெற முடியும் என்ற நிலை. ஏனென்றால் சன சக்தியின் வாக்கு வங்கியில் கை வைப்பது ஐக்கிய சனதா தளம். மேலும் ஐ.சனதா தளத்லிருந்தே சன சக்தி பிரிந்து வந்து உருவாகியது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

இதனால தான் ஐக்கிய சனதா தளமானது பாசகவை விட  அதிக தொகுதிகளில் போட்டியிட்டாலும் பாசகவை விட குறைவான தொகுதிகளிலேயே வெற்றி பெற்றது. ஐக்கிய சனதா தளம்  115 இடங்களில் போட்டியிட்டு 43 இடங்களிலும், பாசக 110 இடங்களில் போட்டியிட்டு  74 இடங்களிலும் வென்றது. இராச்டிரிய சனதா தளம் 144 இடங்களில் போட்டியிட்டு  75 இடங்களிலும் வென்றது. 

தேர்தலில் ஆளும் கூட்டணியும் வலுவான எதிர் கட்சி கூட்டணியும் பல கணக்குகளைப் போடும் உத்திகளை வகுக்கும். இரு கூட்டமணியும் மோசம் தான். அது அப்ப எந்த அளவு மோசம் என்ற அளவு மட்டுமே நம்மளவில் மாறுபடும்.  அதே போல் கூட்டணியில் இல்லாத கட்சிகளும் சில பல கணக்குகளைப் போடும். மதிமுகவை உடைத்து திமுக கொத்து கொத்தாக மதிமுகவினரை தன்னில் சேர்த்துக்கொண்டதும் தேர்தலின் போது சில தொகுதிகளில் மட்டும் 200-2000 வாக்குகளை கொண்ட பல காளான் கட்சிகளை தன் கூட்டணியில் இணைத்துக்கொளவதும் ஓர் உத்தி தான். அதனால ஒரு கட்சியை எதிர் கட்சியின் பி டீம் என்பது வெல்ல முடியாதவர்களின் ஆதங்கம் அங்கலாய்ப்பு மட்டுமல்லாமல் அந்த சிறு கட்சியின் செல்வாக்கை நம்பகத்தன்மையை குழைக்கும் உதவும் ஓர் உத்தி என மட்டுமே பார்க்கலாம். 

இதிலிருந்து தெரிவது தேசகூயே அதிக பாதிப்பை அடைந்தது காரணம் லோக் சன சக்தி தனித்து போட்டியிட்டதால். ஒப்பீட்டளவில் மகாகாத்பந்தனுக்கு  ஓவைசி, பகுசனால் ஏற்பட்ட பாதிப்பு குறைவு, காங்கியாலயே மாகாகாத்பந்தன் வீழ்ந்தது.

வெள்ளி, ஏப்ரல் 10, 2020

தூய தமிழ் பெயர் ஆண் குழந்தைகளுக்கு

அகவன் – Akavan – singer
அகில் – Akil (a fragrant tree like Santhanam from Sangam)
அண்டிரன் – Andiran (one of the 7 great vallals – was known as ஆய்)
அதிகன் – Athikan – Sangam Tamil Name
அதியன் – Athiyan – Sangam Tamil name
அதியமான் – Athiyaman
அந்துவன் – Anthuvan
அமர் – Amar – the word means tranquil, desire, strife
அமல்  – Amal – means செழிப்பு, fullness (occurs many times in Sangam poems)
அருமன் – Aruman – A leader mentioned in a Natrinai poem
அருள் – Arul
அருள்மொழி – Arulmozhi
அவியன் – Aviyan, name of a small region king
அழகன் – Azhakan
அழிசி – Azhisi
அறிவன் – Arivan
அன்பன் – Anpan
அன்பு – Anbu
அன்னி, Anni – A small-region king in Natrinai
ஆதன் – Athan (name for Chera kings, occurs in Ainkurunuru)
இனியன் – Iniyan
இருங்கோ – Irungo
இளஞ்சென்னி – Ilanchenni
இளன் – Ilan (young, youth)
இளங்கீரன் – Ilankeeran
இளங்கோ – Ilango
இளங்கோவன் – Ilangovan
இளம்பிறை – Ilampirai
இளம்வழுதி – Ilamvazhuthi
இளமாறன் – Ilamaran
உசிதன் – Usithan (name for king Pandiyan Nedumaran – உசி means கூர்மை, sharp, smart)
உதியன் – Uthiyan (name of a king)
எவ்வி – Evvi, A small region king who was very charitable
ஓரி – Ori
கடலன் – Kadalan (Kadalanār is the name of a Sangam poet)
கதிரவன் – Kathiravan
கதிர் – Kathir
கதிர்ச்செல்வன் – Kathirselvan
கபிலன் – Kapilan
கந்தன் – Kanthan
கயிலன் – Kayilan – comes from the word கயில், which means perfection – occurs only twice in Sangam literature. Ainkurunuru 62, and Paripadal 12
கலின் – Kalin – comes from கலி which means flourishing
கவின் – Kavin
கனி – Kani
காரி – Kari
கிள்ளிவளவன் – Killivalavan
கீரன் – Keeran
கோடன் – Kodan
கோமான் – Koman
சாரல் – Saaral
சால் – Saal  (நிறைவு, nobility)
சால்பு – Salbu (wisdom, nobility)
சாலன் – Saalan (comes from the word சால் which means நிறைவு)
சுகிர் – Sukir (to polish)
செங்குட்டுவன் – Senguttuvan
சேந்தன் – Senthan (son of Azhisi, a small region king)
சென்னி – Senni
செந்தில் – Senthil
செம்பியன் – Chempiyan
செம்மல் – Chemmal – பண்பு, culture, தலைமை, leadership
செழியன் – Chezhian
செல்வன் – Selvan
சேந்தன் – Chenthan
சேரன் – Cheran
சேரமான் – Cheraman
சோழன் – Chozhan
கோமான் – Koman
தமிழன் – Thamizhan
தமிழ்செல்வன் – Tamilselvan
தித்தன் – Thithan
திரையன் – Thiraiyan
தென்னன் – Thennan (meaning தென்னவன், which is used in Sangam poetry while referring Pandiyan kings)
நன்னன் – Nannan (small region king)
நிகண்டன் – Nikandan (name of a Sangam poet)
நிகரன் – Nikaran
பேகன் – Pehan
நக்கீரன் – Nakeeran
நவிர் – Navir – top, peak
நவின் – Navin – to learn, to desire
நளின் – Nalin – comes from the நளி which means close, abundance, pride
நள்ளி- Nalli – A small region king
நன்னன் – Nannan – A small region king
நவில் – Navil – to desire, be abundant, to sound, to learn
நிகரன் – Nikaran – comes from the word நிகர் which means ஒளி, சிறப்பு, resemble, fame, etc.
நிமிரன் – Nimiran
நிவன் – Nivan (உயர்ந்த)
நெதி – Nethi – Wealth (rare word, Natrinai 16)
பகலோன் – Pakalon. கதிரவன், sun – this is a precious word used only once in the entire Sangam literature -in Akananuru 201
பதுமன் – Pathuman (Two poets who wrote in Kurunthokai have this name)
பண்ணன் – Pannan – A small region king
பாண்டியன் – Pandiyan
பாணன் – Panan – bard, also name of a small region king
பரணன் – Paranan
பரிதி – Paruthi, கதிரவன், sun
பாரி – Pari
பிட்டன் – Pittan – A small region king
புகழ் – Pukazh
புகழன் – Pukazhan
பூங்குன்றன் – Poonkundran
பெருங்கோ – Perunko
போத்தன் – Pothan (Sangam poet Pothanār)
மகிழ்நன் – Makizhnan
மதியன் – Mathiyan
மணி – Mani
மன்னன் – Mannan
மள்ளன் – Mallan
மாறன் – Maran
முரளி – Murali – it is a ancient Tamil word which went into Sanskrit
மூரியன் – Mooriyan, comes from மூரி – Pride, strength
நக்கீரன் – Nakkeeran
நன்னன் – Nannan
நம்பி – Nampi
நவிரன் – Naviran, from the root word நவிர் which means top
நவிர் – Navir, means top
நலங்கிள்ளி – Nalankilli
நவில் – Navil means declare, utter, sing
நவிலன் – Navilan
நன்னன் – Nannan
நிகரன் – Nikaran – comes from the word நிகர் which means ஒளி (Kurunthokai 311)
நெடுஞ்செழியன் – Nedunchezhian
நெடுமாறன் – Nedumaran
மகிழ்நன் – Makizhnan
மாயோன் – Mayon
முகில் – Mukil
முகிலன் – Mukilan
முருகன் – Murukan
மூவன் – Moovan
வல்லவன் – Vallavan
வழுதி – Vazhuthi
வளர்பிறை – Valarpirai
வளவன் – Valavan
வள்ளுவன் – Valluvan
வாணன் – Vanan
வியன் – Viyan, meaning pride, large (பெருமை, பெரிய)
வீயன் – Veeyan (வீய – of flowers)
வினயன் – Vinayan (from வினை meaning work)
வேந்தன் – Venthan

தூய தமிழ் பெண் குழந்தைகள் பெயர்

அகிலா – Akila – comes from the fragrant wood akil from ancient Tamil
அகை – Akai – எழுதல், மலர், to rise, flower, flourish
அச்சிரா – Achira – from the அச்சிரம், meaning cold season
அரண்யா – Aranya – from the word அரண் (palace, fort)
அரிவை – Arivai (Young girl, like the word Mangai)
அணி – Ani – அழகு
அணிமலர் – Animalar, beautiful flower (from Akananuru)
அதிரல் – jasmine
அதிரா – Athira – அதிரல் – jasmine
அங்கவை  – Angavai – பாரி மன்னன் மகள்
அங்கை – Angai – beautiful hands
அமரா – Amara – from ancient Tamil அமர் which means fitting, perfect, desire, strife
அமலா – Amala – (from அமலை that means செழிப்பு in ancient Tamil)
அமலி – – Amali – (from அமலை that means செழிப்பு in ancient Tamil)
அமலை – Amalai -(means செழிப்பு in ancient Tamil)
அம்மணி – Ammani – means beautiful gem – அம் means beautiful, மணி means gem
அயினி – Ayini (food, rice – like ‘food’ in Annapoorani)
அரலை – Aralai (Sangam Tamil word for அரளி flower)
அரும்பு – Arumbu – bud, மொட்டு
அருமை – Arumai
அலர் – Alar – to blossom
அலரி – Alari – flower
அன்னம் – Annam
அனிச்சா – Anicha – from அனிச்சம் பூ, a delicate flower
அறலி  – Arali – water –  from the word அறல்
அன்பு – Anbu
அழகி – Azhaki
அல்லி – Alli
அவிரா – Avira – comes from அவிர் which means bright
அவினி – Avini (name from Sangam Tamil), also means that which cannot be separated
ஆண்டாள்
இசை – Isai
இதழா  – Ithazha – comes from இதழ், petal
இனியா – Iniya
இனிமை – Inimai
இன்சுவை – Insuvai
இன்தமிழ் – Inthamizh
இன்பா – Inba
இன்னிசை – Innisai
இளநிலா – Ilanila
இளவேனில் – Ilavenil
இழையினி – Izhaiyini (the word இழை means jewel in Sangam Tamil)
ஈரநிலா – Eeranila
உசிதா  –   Usitha – உசி means  கூர்மை, sharp, smart
உவகை – Uvakai – happiness
எமி – Emi means தனிமை – a word from Sangam Tamil, it is a popular name in Japanese as well
எழில் – Ezhil
எழிலி – Ezhili – மேகம்
ஓவியா – Oviya
ஐது – Aithu (delicate, beautiful)
ஐயை – Aiyai – a princess, daughter of Chozha king Thithan
கண்ணகி – Kannahi
கண்ணம்மா- Kannamma
கண்மணி – Kanmani
கனலி  – Kanali ( கனலி  means sun)
கனிமொழி – Kanimozhi
கமனி  – Kamani – comes from the Sangam Tamil word கமம், which means fullness
கமழ்மலர் – Kamazhmalar
கயல் – Kayal – Carp fish, which is shaped like big eyes
கயல்கண்ணி – Kayalkanni
கயல்விழி – Kayalvizhi
கயில் – perfection (occurs only twice in Sangam poems – Ainkurunuru 72, and Paripadal 12)
கல்வி – Kalvi
கலா – Kala – comes from Kalai for art (the word went into Sanskrit)
கலினி – Kalini – comes from கலி which means flourishing
கலை – Kalai
கலைச்செல்வி – Kalaiselvi
கவிகை – கையை கவிழ்த்து கொடுத்தல், generous giving
கவினி – Kavini – beautiful
கார்க்குழலி – Karkuzhali
காயா – Kaya – This is a dark purple flower
காந்தள் – Kanthal
காமரி – Kamari – The word காமர் means அழகு. It is different from the northern lanugage word காம (love)
கிம்புரி – Kimpuri (ornamental ring)
குந்தவி – Kunthavi
குறிஞ்சி – Kurinji – kurinji flower
குல்லை – Kullai – Thulasi
குவளை – Kuvalai – water lily
குழல்மொழி – Kuzhalmozhi
கொன்றை – Kondrai – golden yellow flowers from a large tree
கோதை – Kothai
கோமகள் – Komakal (princess)
சாலினி – Salini from சால் meaning சிறந்த – In Maduraikanchi, சாலினி means a lady who has received god.
சிதரா – Sithara – comes for the word சிதர் which means raindrops and honey bee
சீர்த்தி – Seerthi means fame
சுடர்ஒளி – Sudaroli
சுனை – Sunai
செல்வி – Selvi
செவ்வி – Sevvi – perfection, beauty
ததரா – Thathara – Comes from ததர் meaning அடர்ந்த
தமிழ்செல்வி – Thamilselvi
தமிழ்மகள் – Thamilmakal
தமிழினி – Thamilini
தளி – Thali – raindrops
தளிர் – Thalir – tender leaf
தாமரை – Thamarai
தாரணா – Tharana (from the root word தார் – garland)
தாரணி – Tharani – மலர் மாலை, garland (தார் – garland, அணி – beautiful)
தாழை – Thaazhai
தாளினி – Thalini (a kind of medicinal tree)
தில்லை – Thillai – a kind of tree
துகிரா – Thukira – from  துகிர் – coral, red
தென்றல்  – Thendral
தேன்மொழி – Thenmozhi
நச்சினி –  Nachini – விரும்பப்படுபவள், liked one
நந்தியா – Nanthiya – comes from நந்தி which means to flourish
நந்தினி – – Nanthini – comes from நந்தி – to flourish
நல்லினி – Nallini – Name of a Chera queen
நறுமலர் – Narumalar
நறுமுகை  – Narumukai – beautiful flower bud
நறுமுகிழ் – Narumukizh – fragrant flower bud
நறுமை – Narumai – goodness, fragrance
நறுவீ – Naruvi, fragrant flower – வீ is பூ in Sangam Tamil
நளி – Nali – to be close, dense
நளினா – Nalina
நளினி – Nalini – comes from நளி meaning close, one who is close
நனி – Nani – means abundance
நன்முகை – Nanmudai – means beautiful bud, Akananuru 223
நன்மொழி – Nanmozhi
நவிரா – Navira, comes from the Sangam word நவிர், which means top, mountain
நித்திலா – Nithila – முத்து, pearls – from நித்திலம்
நிரல்யா – Niralya – நிரல் means orderly or perfect
நிலா – Nila
நிலானி – Nilani (from the root word நிலா)
நிறைமதி – Niraimathi
நீள்விழி – Neelvizhi
பவளம் – Pavalam
பசுமை – Pasumai
பன்மலர் – Panmalar
பனிமலர் – Panimalar
பாவை – Pavai
புகழினி – Pukazhini
புன்னகை – Punnakai
பூங்குழலி – Poonkuzhali
பூங்கொடி – Poonkodi (word from Sangam Tamil)
பூவை – காயா மலர் (a variety of dark blue flowers)
பைது – Paithu – means பசுமை, green, land, county
பைம்பொழில் – Paimpozhil
பொருநை – Porunai
பொற்கொடி – Porkodi
பொன்மணி – Ponmani
பொன்னி – Ponni
பொய்கை – Poykai
மகிழ்ச்சி – Makizhchi
மதி – Mathi – means நிலா
மதுகை – Mathukai – means strength
மதை – Mathai – means வனப்பு, beauty
மஞ்ஞை – Magnai – old Tamil word for peacock
மஞ்சு – Manju – மேகம், clouds
மஞ்சுளா – Manjula – from the word மஞ்சு
மங்கை – Mangai
மணிமலர் – Manimalar
மணிமொழி- Manimozhi -மணி meant sapphire in Sangam poems. This word is from the book ஐந்திணை ஐம்பது – பதினெண் கீழ்கணக்கு நூல்
மதுகை – Mathukai – it means strength, வலிமை
மயிலி – Mayili – from மயில் – In Hawaii where I live, Mai’li is a very fashionable name – they pronounce it Mayili
மலரவள் – Malaraval
மலர் – Malar
மலர்க்கொடி – Malarkodi
மலர்பொய்கை – Malarpoykai
மலர்மகள் – Malarmakal
மலர்விழி – Malarvizhi
மாதரி – Mathari – meaning ‘beautiful’ from the pure Sangam Tamil word – மாதர் (nothing to do with the word மாதர் which means women that is from Sanskrit)
மாயா – Maya – one that does not perish, அழியாதது – மாய் means that which perishes.  This word occurs a lot in Sangam Tamil.  There is also the Sanskrit ‘Maya’ which means illusion, which is a totally different word.
மாரி – means rain – a word from Sangam Tamil
மாலா – Mala, one is not dull or confused. மால் means confusion, being dull.  This word occurs in Sangam tamil. There is also the Sanskrit ‘Mala’ which means garland.  This word for garland occurs in both Tamil and Sanskrit, and scholars differ in their opinions about the origin.
மாலிமி – Malimi, means youthful
மின்னல் – lightning
மின்னொளி – Minnoli
மீனா – Meena – (from மீன் (fish) – a word thought to be from Sanskrit, in the past. Scholars have now identified it as a pure Tamil word)
முகை – Mukai (flower bud)
முல்லை – Mullai
முல்லைசெல்வி – Mullaiselvi
முளரி – Mulari means தாமரை
மெல்லியள் – Melliyal
மென்மலர் – Menmalar
மென்மை – Menmai
மென்மலர் – Menmalar (comes from Akananuru)
மென்மொழி – Menmozhi (comes from an ஐங்குறுநூறு poem)
யாழினி – Yazhini from the musical instrument யாழ்
வள்ளி – Valli (benevolence, bangles)
வளர்நிலா – Valarnila
வளர்பிறை – Valarpirai
வளர்மதி – Valarmathi
வாய்மை – Vaaymai
வீயா – Veeya (unspoilt, perfect)
வெண்ணிலா – Vennila
வெண்பா – Venpa
வேல்விழி – Velvizhi
வைனி  – Vaini from  வை which means sharp


https://puretamilbabynames.wordpress.com/pure-tamil-baby-names-for-girls/ இல் இருந்து எடுத்தது. Options