மூன்று உள் உலக்கை - காளை
இது காளை புள்ளத்தாச்சியை கொண்டள்ளதும் அதை உறுதிபடுத்திய உலக்கையையும் கொண்ட மூவுலக்கை ஒழுங்கு. கீழ்கண்டவாரு இருந்தால் இவ்வொழுங்கை அறியலாம்.
- முதலில் இறங்குமுக போக்கு இருக்கனும்
- இரண்டாவதாக பெரிய கருப்பு உடல் தோன்றனும்
- மூன்றாவதாக சிறிய வெள்ளை உடல் தோன்றனும். இது கருப்பு உடலுக்குள் அடங்குவதாக இருக்கனும். (புள்ளத்தாச்சி ஒழுங்கு)
- நான்காவதா காளை புள்ளத்தாச்சி ஒழுங்கை உறுதிபடுத்தும் விதமாக அடுத்த நாள் வெள்ளை உடல் தோன்றனும்.
- சொல்லப்போனா இது காளை புள்ளத்தாச்சியை உறுதிப்படுத்தும் ஒழுங்கு.
- புள்ளத்தாச்சி வெள்ளை உடலை விட கருப்பு உடல் மிக நீளமாக இருந்தால் சிறப்பு.
- நெடிய இறங்கு முகம் இருந்து இந்த ஒழுங்கு தோன்றினால் போக்கு மாற்றம் ஏற்பட்டு விட்டதாக அடித்துக்கூறலாம்.
காளை ஒழுங்கு மாதிரி தான் இதுவும். இது கரடி புள்ளத்தாச்சியை
- முதலில் சந்தை ஏறுமுகமாக இருக்கவேண்டும்.
- இரண்டாவதாக பெரிய வெள்ளை உடல் தோன்ற வேண்டும்
- மூன்றாவதாக சின்ன கருப்பு உடல் தோன்றனும் வெள்ளை உடல் இதை முழுவதுமாக விழுங்குமாறு இருக்க வேண்டும் (கரடி புள்ளத்தாச்சி)
- நான்காவதாக அடுத்த நாள் கரடி புள்ளத்தாச்சியை உறுதிபடுத்தும் விதம் கருப்பு உடல் தோன்ற வேண்டும்.
- சொல்லப்போனா இது கரடி புள்ளத்தாச்சியை உறுதிப்படுத்தும் ஒழுங்கு.
- புள்ளத்தாச்சி கருப்பு உடலை விட வெள்ளை உடல் மிக நீளமாக இருந்தால் சிறப்பு.
- நெடிய ஏறு முகம் இருந்து இந்த ஒழுங்கு தோன்றினால் போக்கு மாற்றம் ஏற்பட்டு விட்டதாக அடித்துக்கூறலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக