இது மூவுலக்கை காளை ஒழுங்காகும். வரிசையா மூன்று நாள்கள் வெள்ளை உடல் தோன்றும். எல்லா காளை ஒழுங்கைப்போலவே இது இறங்கு முக போக்கில் தோன்றும். இது அரிதாகவே தோன்றும் ஒழுங்கு.
ஏன் வெள்ளை படை வீரன் என்றால் விலை ஏற்றத்தை காட்டும் வெள்ளை நிறத்துக்காக வெள்ளைக்காரன உசத்தி பேசனும் என்பதற்காக அல்ல.
எப்படி இவ்வொழுங்கு அமையும்?
- இறங்க முக போக்கு இருக்கனும் அதன் கடைசி உலக்கையின் உடலின் நிறம் வெள்ளையாக இருக்கும் இதை முதல் உடல் என்போம்..
- அடுத்த நாளின் உடலும் வெள்ளையாக இருக்க வேண்டும். இந்த உடலின் விலை தொடக்கமும் முடிவும் முந்தைய நாள் உடலின் விலை தொடக்கம் & முடிவை விட அதிகமாக இருக்க வேண்டும்.
- அதேபோல் மூன்றாம் நாளின் (மூன்றாவது வெள்ளை உடல்) உடலின் விலை தொடக்கமும் முடிவும் முந்தைய நாள் உடலின் விலை தொடக்கம் & முடிவை விட அதிகமாக இருக்க வேண்டும்.
- பொதுவாக இரண்டாம் மூன்றாம் நாள்களின் உடல்கள் முந்தை உடலின் மையப்பகுதியில் இருந்து தொடங்கும்.
சமிக்கையை அதிகப்படுத்தும் செயல்கள்
- முதல் நாள் உடலை விட பெரிதாக (நீளமாக) இரண்டாம் நாள் உடல் இருக்க வேண்டும்
- இரண்டாம் நாள் உடலும் மூன்றாம் நாள் உடலும் கிட்டத்தட்ட ஒரே நீளத்தில் இருக்க வேண்டும்.
- குச்சிகள் மிக சிறிதாகவோ இல்லாமலோ இருக்க வேண்டும்
- தெளிவான இறங்கு முக போக்கில் இந்த ஒழுங்கு தோன்ற வேண்டும்.
- உடல்களின் நீளம் அதிகமாக இருப்பது இதன் வீரியத்தை காட்டும் அறிகுறி.
- வாங்கல் விற்றல் அதிகமாக நடந்திருக்க வேண்டும்.
ஒழுங்கைப்பற்றிய சில குறிப்புகள்
** மூன்றாம் நாள் உடலின் நீளம் மற்ற இரு நாள்களை விட சிறிதாக இருந்தால் தவிர்ப்பது நலம்.
** இறங்கு முகத்தில் வெள்ளை உடலுக்கு பதிலாக கருப்பு உடல் (மூன்று காகங்கள்) தோன்றினால் விலை மேலும் அதல பாதாளத்திற்கு போகும் என்பதற்கான அறிகுறியாகும்.
** நெடிய இறங்கு முக போக்கின் பின் மூன்று வெள்ளை படை வீரர்கள் தோன்றுவது சில மாதங்கள் பங்கை வைத்திருந்து விற்பவர்களுக்கு ஏற்றது.
ஏன் இந்த ஒழுங்கு வேலைசெய்யுமென்று நினைக்கிறார்கள்?
நெடிய இறங்கு முக போக்கின் போது கரடிகள் சோர்வடைந்து காளைகள் வீரியத்துடன் விலையை முன்னேற்றும். தொடர்ந்து மூன்று நாள்கள் விலை ஏறுவது சந்தையின் போக்கு மாற்றம் அடைகிறது என்பதை உணர்த்தும் அறிகுறி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக