வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



செவ்வாய், ஏப்ரல் 13, 2010

புத்தாண்டு வாழ்த்து

தமிழ் புத்தாண்டு எந்த மாசத்துல பிறக்குது? சித்திரையில் சிலபேருக்கும் தையில் சிலபேருக்கும் பிறக்கிறது. 99% திருக்கணிதகாரங்களுக்கு (சோசியக்காரங்க) சித்திரை மாதம் தான் புத்தாண்டு பிறக்கும். புத்தாண்டு  தை மாதம் பிறந்தா ஒழுங்கா கணிக்கமுடியாதா?. சித்திரையில் புத்தாண்டு கொண்டாடும் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். புத்தாண்டு சித்திரையில் பிறப்பதை ஒத்துக்கொள்ளாத மக்களுக்கு சித்திரை திருநாள் வாழ்த்துகள்.

நான் தை மாதம் தான் ஆண்டு பிறப்பு என்பதை ஏற்றுக்கொள்ளும் நபர். இப்ப சட்டம் போட்டதால் அல்ல முதலில் இருந்தே தை மாதத்துக்கு தான் என் ஆதரவு. சித்திரை மாதத்தை நான் கொண்டாடியதே இல்லை. தை மாசம்ன்னா அப்படியா? வெகு விமரிசையா கொண்டாடுறோம். புத்தாண்டை பொங்கல் விழா மூலம் வரவேற்கிறோம். கையில் காசு வந்தவுடன் குடியானவன் கொண்டாடுற முதல் விழா பொங்கல் தான் அதாவது புத்தாண்டு பிறப்பு.

ஒவ்வோரு மாதத்துக்கும் பழமொழிகள் இருந்தாலும் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று தை மாதத்துக்கு சொல்லும் மொழிக்கு சிறப்பு உண்டு. அதாவது அறுவடை முடிந்து கைல பணம் புழங்கற மாதம் தை. கேட்பவர்களுக்கு பணம் கொடுக்க முடியும்.  வாரிசு திருமண செலவுக்கு வேண்டிய பணம் அறுவடை முடிஞ்சா தான கைக்கு வரும்.  தை, மாசி திருமண மாதங்கள். சித்திரை மாதத்தில் அவ்வளவாக திருமணம் நடப்பதில்லை. 

வானியல் படி கதிரவன் மேல் நோக்கி கடக ரேகை நோக்கி செல்லும் நாள் தை 1. ஆறு மாதம் மேல் ஆறு மாதம் கீழ். தமிழரின் ஆறு காலங்களில்  ஒன்றாகிய  இள வேனில் காலம் தொடங்குவதும் தை மாதத்தில் இருந்துதான். வெயில் காய்ச்சற காலத்திலிருந்து யாரு புத்தாண்ட தொடங்குவாங்க?

சித்திரையில் தொடங்கும் புத்தாண்டில் ஒன்று கூட தமிழ் பெயர் அல்ல. அப்புறம் எப்படி சித்திரை ஆண்டுபிறப்பை தமிழ் புத்தாண்டாக சொல்றாங்கன்னு புரியலை. சித்திரையில் தொடங்கும் புத்தாண்டை தமிழ் புத்தாண்டு என்று சொல்லாதீர்கள்.

12 கருத்துகள்:

கோவி.கண்ணன் சொன்னது…

//சித்திரையில் புத்தாண்டு கொண்டாடும் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். //

வழிமொழிகிறேன். கொண்டாடுபவர்களுக்கு வாழ்த்து சொல்லுவோம்.

நான் கொண்டாடவில்லை

www.bogy.in சொன்னது…

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

செ.சரவணக்குமார் சொன்னது…

இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள் சார்.

குறும்பன் சொன்னது…

நன்றி கோவி.
சோசியக்காரர்களின் சித்திரையில் தான்\மட்டுமே தமிழ் புத்தாண்டு கொண்டாடனும் என்ற வாதத்தை தான் ஏற்கமுடியவில்லை. அவங்க எப்படி மற்ற மாநிலத்தவருக்கு சோசியம் பார்ப்பாங்க? அல்ல மற்ற மாநில சோசியரு நமக்கு பார்த்து சொல்லும் கணிப்பு தப்பா?

குறும்பன் சொன்னது…

நன்றி செ.சரவணக்குமார்.
தங்களுக்கும் சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்.

பெயரில்லா சொன்னது…

சித்திரையை தமிழ் புத்தாண்டு என்று சொல்லக்கூடாது என்றால் தமிழ் வருடம் எது?தமிழ் மாதம் எது?அதில் தமிழ் புத்தாண்டு எது?
அட நெசமா தெரிஞ்சிக்க தான் கேக்கரேன்.

பெயரில்லா சொன்னது…

தமிழ் ஓவியா வும் தங்கள் கருத்தையே கூறியிருந்தார்.அவரிடமும் இதே கெள்வியையே கேட்டேன.பதில் இல்லை.நீங்களாவது சொல்லுங்க தெரிஞ்சிக்கலாம்ல அதான் கேட்டேன்

பெயரில்லா சொன்னது…

தமிழ் ஓவியா வும் தங்கள் கருத்தையே கூறியிருந்தார்.அவரிடமும் இதே கெள்வியையே கேட்டேன.பதில் இல்லை.நீங்களாவது சொல்லுங்க தெரிஞ்சிக்கலாம்ல அதான் கேட்டேன்

பெயரில்லா சொன்னது…

தமிழ் ஓவியா வும் தங்கள் கருத்தையே கூறியிருந்தார்.அவரிடமும் இதே கெள்வியையே கேட்டேன.பதில் இல்லை.நீங்களாவது சொல்லுங்க தெரிஞ்சிக்கலாம்ல அதான் கேட்டேன்

பெயரில்லா சொன்னது…

தமிழ் ஓவியா வும் தங்கள் கருத்தையே கூறியிருந்தார்.அவரிடமும் இதே கெள்வியையே கேட்டேன.பதில் இல்லை.நீங்களாவது சொல்லுங்க தெரிஞ்சிக்கலாம்ல அதான் கேட்டேன்

குறும்பன் சொன்னது…

வருகைக்கு நன்றி venkatesa sivam & sivaramamurthy sivam.

குறும்பன் சொன்னது…

தமிழ் ஓவியாவே சொல்லலையா? சரி நான் சொல்றேன்.

தை முதல் நாளிலிருந்து தொடங்குவது தான் தமிழ் புத்தாண்டு.

சித்திரை - பங்குனி மாத பெயர்கள் எல்லாம் சமசுகிருதத்தில் இருந்து வந்ததா நீங்களே சொல்லி இருக்கிங்க அதனால இந்த சமசுகிருத பெயர்களை நீக்கி தமிழறிஞர்கள் வேற பெயரை சொல்லுவாங்கன்னு எதிர் பார்ப்போம்.

சித்திரையில் தொடங்கும் ஆண்டு பெயர்கள் எதுவும் தமிழ் பெயர்கள் அல்ல என்பதை ஒத்துக்கிறிங்க தானே?