வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



செவ்வாய், அக்டோபர் 31, 2006

யார் லூசு?

தனியா அமைதியா நடந்து போயிக்கிட்டு இருந்த ஆளு திடீர்ன்னு சிரிச்சுக்கிட்டு நடந்து போனா என்னன்னு நினைப்பிங்க? லூசுன்னு தான்.

தனியா சிரிக்காதடா லூசுன்னு உன்னை நினைக்கப்போறாங்க என்று சொல்வதையும் சிலர் கேட்டிருக்கலாம், சொல்லியிருக்கலாம்.

அப்படி ஒரு அனுபவம் எனக்கு ஆச்சு. பூங்காவுல ஊர்ல இருந்து வந்தவர் கூட பேசிக்கிட்டு இருந்தேன் அப்ப ஒரு இளைஞர் திடீர்ன்னு தனியா சிரிக்க ஆரம்பிச்சுட்டார். அந்த இளைஞன் தனியா சிரிப்பதை பார்த்த நம் ஊர் காரர் என்னை பார்த்து ஒரு நமட்டு சிரிப்பை விட்டார் எனக்கு அந்த நமட்டுச்சிரிப்பின் பொருள் புரிந்துவிட்டது. என்ன உங்களுக்கும் தான? :-)

கண்ணால் காண்பதும் பொய் !       காதால் கேட்பதும் பொய் !!       தீர விசாரித்து அறிவதே மெய் !!!

 
அந்த பயல பத்தி தப்பா நினைக்காதிங்க, அவன் 'Blue Tooth' தொழில்நுட்பம் உள்ள செல்பேசியை பயன்படுத்தி யாருக்கிட்டையோ பேசிக்கிட்டு இருக்கான் என்றேன். அப்புறம் அவருக்கிட்ட என்னோட "BlueTooth" செல்பேசியை காட்டி பேசி காட்டினேன்.

இனிமே தனியா பேசிக்கிட்டு, சிரிச்சுக்கிட்டு இருக்கிறவன் ஒன்னு லூசா இருக்கனும் இல்ல 'BolueTooth செல்பேசியை ' பயன்படுத்தி பேசறவனா இருக்கனும்னார்.

நான் BolueTooth செல்பேசியை பயன்படுத்தும் லூசா கூட இருக்கலாம் என்றேன். :-))

1 கருத்து:

Divya சொன்னது…

ஹா ஹா ஹா !! [ இது லூசு சிரிப்பு இல்லீங்க , உங்க பதிவு வாசிச்சுட்டு சிரிச்சது]