தங்கத் தமிழகத்திலே மொய் எழுதும் பழக்கம் உள்ளது யாவரும் அறிந்ததே. சின்னக்கவுண்டர் படம் மூலம் இது தருமமிகு சென்னை மற்றும் பட்டணத்து வாசிகளுக்கும் தெரியவந்தது. இது ஒரு வகையான கடன், வட்டியில்லா கடன் அதாவது கைமாத்து (கை மாற்று மருவி கைமாத்தாகிவிட்டது).
திருமணம் , பூப்பு நீராட்டு, புதுமனை புகுதல், குழந்தைக்கு முதல் மொட்டை & காது குத்து, போன்ற நிகழ்ச்சிகளில் மொய் வாங்குவது வழக்கம். மொய்க்குனே ஒரு பொத்தகம் போட்டு யார் யார் எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்று எழுதி வைப்பார்கள். அவர்களின் மொய் வாங்கும் நிகழ்ச்சிகளில் இந்த மொய் பொத்தகத்தை பார்த்து அதே பணம் அல்லது அதை விட அதிகமாக வைப்பார்கள். அதே அளவு பணம் வைத்தால் மொய் உறவு முறிந்துவிடும், எனவே அவங்க வைத்த பணத்தை விட அதிகமாகவே வைப்பார்கள்.
மறு மொய் வைக்காவிட்டால் மானக்கேடாகிவிடும். அவன் பையன் கல்யாணத்துக்கு 100 ரூபா வச்சேன் என் பையன் கல்யாணத்துல அவன் மொய்யே வைக்கலை என்று பேசுவார்கள்.
இதன் தொல்லை காரணமாக சில பகுதிகளில் மொய் வாங்கப்படாது என்று அழைப்பிதழ்களில் அச்சடித்து கூறினர். காலப்போக்கில் அப்பகுதிகளில் மொய் வாங்கும் பழக்கம் கிட்டத்தட்ட நின்றுவிட்டது ( இப்பவெல்லாம் யாரும் மொய் வாங்கப்படாது என்று அழைப்பிதல்களில் அச்சடிப்பதில்லை).
சின்னக்கவுண்டர் படத்தில் வருவது போன்ற மொய் வாங்கும் பழக்கம் தஞ்சை பேராவூரணி பகுதி மக்களிடம் உண்டு.
இப்ப அமெரிக்க வாழ் மக்களிடம் இந்த பழக்கம் பலமாக வேரூன்றி வருகிறது. அதாவது பரிசு & "Gift Card" என்ற உருவத்தில். இங்க பெரும்பாலும் பிறந்தநாள் விழாக்களை நண்பர்களை அழைத்து கொண்டாடுவர். அப்போது எல்லோரும் பரிசு அல்லது "Gift Card" உடன் வருவர், அதனால் நம்மால எதுவும் வாங்காமல் கைய வீசிக்கிட்டு போய்ட்டு வர முடியலை. நாம பரிசு அல்லது "Gift Card" கொடுத்தால் அவர்களும் நம் வீட்டுக்கு வரும் நிகழ்ச்சிகளுக்கு பரிசு அல்லது "Gift Card" கொடுக்க வேண்டும் என்ற கணக்கு வருகிறது, இது கட்டாய மொய் என்பதற்கு பதிலாக கட்டாய பரிசு என்று வந்துவிட்டது. இப்பழக்கத்தை உடைக்க வேண்டுமென்றால் விழா அல்லது நிகழ்ச்சிக்கு அழைக்கும் போது பரிசு எதுவும் வேண்டாம் "Your Presence is Best Present" என்று சொல்லி அழைப்பது தான்.
9 கருத்துகள்:
குறும்பன். இதுக்காகவே இன்னும் நண்பர்கள் யாரையும் ஒரே நேரத்தில் எங்கள் புது வீட்டிற்கு (ஒரு வருடம் முன்பு வாங்கியது) அழைக்கவில்லை. மொய்யுடன் வந்து நிற்பார்களே என்று. ஓரிரு நண்பர்களாக அழைக்கிறோம். அப்படி அழைப்பதால் சிலர் எங்கள் மகளுக்கு பரிசு கொண்டு வருகிறார்கள். சிலர் கொண்டு வருவதில்லை. எங்கள் வீட்டில் தான் 'விவரங்கெட்ட மனுசன்'ன்னு திட்டு வாங்கிக்கிட்டு இருக்கேன். :-)
நீங்கள் பதிவுகள் இடும்போது உங்கள் படம் தமிழ்மணத்தில் வருவதில்லை என்றும் என்ன செய்வது என்றும் கேட்டிருந்தீர்கள். எனக்குத் தெரியவில்லை குறும்பன். அதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது என்று நினைக்கிறேன். தமிழ்மணம் நிர்வாகிகளைக் கேட்டுப் பார்த்தீர்களா? தமிழ்மணம் குழுமத்தில் கேட்டுப் பார்த்தீர்களா?
நாம வாங்காம இருக்கலாம் ஆனா அடுத்தவங்க வீட்டுக்கு போகும் போது நாம வாங்காம போனா நல்லா இருக்காதே? அதனால 'விவரங்கெட்ட மனுசன்'ன்னு திட்டு வாங்க வேண்டியது தான் :-))
வீட்டுக்கு கூப்பிடும் போதே "No Gift Please" என்று சொல்லி தான் கூப்பிடனும் போல, வீட்டுக்கார அம்மாவும் இதுக்கு ஒத்துக்கிடனும் இல்லனா சிக்கல் தான். :-)
கேட்டேன் குமரன் ஆனா பதில் ஒன்னும் காணோம். சரி உங்க படமெல்லாம் வருதே எதாவது "template"ல் மாற்றம் செய்யனுமோ என்று நினைத்து உங்களை கேட்டேன்.
தமிழ்மணத்தை குறை சொல்லி தனியே ஒரு பதிவு போடனும் போல. :-) இதையெல்லாம் அவங்க "FAQ" பகுதியில் போட்டா நல்லா இருக்கும்.
"முத்து மணி மாலை...என்னத்தொட்டு தொட்டு தாலாட்ட.."
பாட்டு பதிவுல பேக்ரவுண்டு ம்யூசிக்கா ஓடிக்கிட்டிருக்குறது கேக்குது :)
:-( ஒன்னும் புரியலயே ச.சங்கர்.
///சின்னக்கவுண்டர் படத்தில் வருவது போன்ற மொய் வாங்கும் பழக்கம் தஞ்சை பேராவூரணி பகுதி மக்களிடம் உண்டு/////
இந்த படத்துல வற்ற பேமஸ் பாட்டுங்கோவ் :) பட ரெபெரன்ஸ் குடுத்ததுனால ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...அப்படீன்னு சொன்னேன் :)
இப்ப புரியுதுங்க :-))
"Your Presence is Best Present" - well said kurumban
கருத்துரையிடுக