என் நண்பன் குழந்தைக்கு தமிழில் பெயர் வைக்க விரும்பி சிறிய அழகான தமிழ் பெயர்களை கூறுமாறு கேட்டான். மூன்றுக்கு மேல் நினைவுக்கு வரவில்லை எல்லாம் வடமொழி அல்லது வடமொழியோ என்று ஐயம் உள்ள பெயர்களே. ஒரு வாரம் யோசனை செய்து ஒரு 10 பெயர்களை கூறிவிட்டேன்.
இணையத்தில் தேடியதில் நிறைய சிறிய பெயர்கள் கிடைக்கவில்லை. எல்லாம் பெரிய பெயர்களாகவே இருந்தன.
என் நண்பனின் நிபந்தனை:-
பெயர் 4 எழுத்துக்குள் இருக்க வேண்டும், ரொம்ப நல்ல பெயராக இருந்தால் 5 எழுத்துக்கு விதி விலக்கு உண்டு உ.தா. இலக்கியா. "ழ" இல்லாமல் இருத்தல் நலம் என்பது அவன் எண்ணம் ஏனென்றால் அமெரிக்காவில் உள்ளதால் "ழ" ஆனது "ல" ஆகி பெயரின் பொருளை மாற்றிவிடும் என்பதால். இருந்தாலும் சில பெயர்கள் எனக்கு மிகவும் பிடித்ததால் (யாழினி) இங்கு பட்டியலில் குறிப்பிட்டுள்ளேன்.
உங்களுக்கு தெரிந்த சிறிய பெண் குழந்தைக்கான தமிழ் பெயர்களை பின்னூட்டத்தில் கூறி என் நண்பனுக்கு உதவுங்கள். உங்கள் நண்பர் யாரேனும் தமிழ் பெயர் கேட்டால் இப்பட்டியலை கொடுத்து அவர்களுக்கு உதவுங்கள்.
இதுவரை அவனிடம் உள்ள பெயர் பட்டியல்:-
அல்லி
அருவி
அகலி
அந்தி
அன்னம்
அனிச்சை
அரசி
அன்பரசி
அழகி
ஆதிரை
இலக்கியா
இனியா
இளமதி
இன்பா
இனிமை
உமையாள் - உமையா
உமை
எழில்
எழிலினி
ஐயை
ஒளி
ஓவியா
ஔவை
கயல்
கயல்விழி
கண்மணி
கண்ணகி
கனிமொழி
கவி
கலை
காவியா
காவேரி
காந்தள்
சிட்டு
கோதை
குழலி
குமுதம்
குமாரி
குமரி
குயிலி
கொற்றவை
கோமதி
கோமளா - தமிழா ??
சுடர்
சுருதி - தமிழா? பொன்ஸ்க்கே ஐயம் வந்துவிட்டது.
செண்பகம் - செண்பகா
செவ்வந்தி
செல்வி
தமி
தமிழ்
தமிழினி
தமிழரசி
தமிழிசை
தாமரை
தென்றல்
தேனினி
தேன்மொழி
நிலா
நிலானி
நிலாவினி
நித்திலா
நிறைமதி
நங்கை
நந்தினி - நந்தி தமிழ் என்றால் நந்தினியும் தமிழ்.
நாச்சியார்
நாமகள்
பாவை
பாவாயி
புகழினி
புனிதா - புனிதம் தமிழ் என்றால் புனிதாவும் தமிழ்.
பூவை
பூங்கோதை
பூங்குயில்
பிறை
பொன்னி
பொன்மணி
மகிளா / மகிழா ?
மகிழம்
மங்கை
மதி
மலர்
மணி மலர்
மயில்
மல்லி
மகிழினி
மஞ்சுளா - தமிழ் என்று நினைக்கிறேன் மஞ்சு விரட்டு - மஞ்சள் - மஞ்சுளா.
மாதவி
மீனா
முல்லை
முழுமதி
மின்னல்
மேகலை
மேகலா
யாழினி
வடிவு
வள்ளி
வல்லி
வசந்தி
வதனி, வதனா - வதனம் (முகம்) தமிழ் என்றால் வதனி, வதனாவும் தமிழ்.
வானதி
வான்மதி
வளர்மதி
வெண்ணிலா
31 மறு மொழி:
அல்லி
ஆதிரை
இலக்கியா
இனியா
உமை
ஐயை
ஒளி
ஓவியா
ஔவை
குமுதம்
கொற்றவை
கண்மணி
பூவை
பாவாயி
மதி
செல்வி
தமிழ்
தாமரை
தென்றல்
தேனினி
வெண்ணிலா
நங்கை
நாச்சியார்
மங்கை
மயில்
மல்லி
முல்லை
வள்ளி
வல்லி
நன்றி SK. தங்களின் பட்டியலை பதிவில் இணைத்துவிடுகிறேன்.
எனக்கு பிடித்த பெயர்கள் சில
தமி
தமிழினி
நிலாவினி
நிலா(எனக்கு பிடித்த சுட்டிப்பெண் ஒன்று இந்தபெயரில் ஜெர்மனியில் இருக்கிறது)
அகலி
அருவி (இந்தபெயரில் ஒரு கனடா குழந்தை இருக்கிறது)
கவி
அந்தி
நன்றி மயூரன். தங்களின் பட்டியலை பதிவில் இணைத்துவிடுகிறேன்.
http://www.nithiththurai.com/name/index.html
குறும்பன். இந்த வலைப்பக்கத்தைப் பாருங்கள்.
நன்றி குமரன்.
குறும்பன்,
முதலில் தான் பெற்ற செல்வத்திற்குப் தமிழில் பெயர் வைக்க ஆவலாக இருக்கும் உங்கள் நண்பருக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
மதுரா
காவேரி
சிறீதேவி
உமா
மாதவி
கண்ணகி
வாசுகி
நான் மேலே குறிப்பிட்டவற்றில் ஏதேனும் வட மொழிப் பெயர்களா என்பது சரியாகத் தெரியாது. இப்போதைக்கு நினைவில் வருபவை இவைதான்.
நித்திலா.
நித்திலம் என்றால் முத்து.
ஸ்டாலின்
அழகிரி
தயாநிதி
அட..பெண் பெயரா..
தயாளு
சம்யுக்தா
சங்கமித்ரா
4 வார்த்தைக்குள்ளா...ஸாரி..தேடிதான் பார்க்கணும். ஆனா, மேலே சொன்னதெல்லாம் ஒரிஜினல் தமிழ் சர்டிபிகேட் யுனிவர்சிடி அதாரிடிகளோட குடும்பப் பெயர்கள். அதனால தமிழ் பெயரில்லைன்னு பரமார்த்த குரு & சீடர்கள் போராட்டமெல்லாம் நடத்த மாட்டார்கள்.
நன்றி வெற்றி.
சிறீதேவி வடமொழி பெயர் தான். சிறீ என்பது வடமொழி அதற்கு ஈடான தமிழ் திரு.
சிறீதேவ/மகாலட்சுமியை தமிழில் திருமகள் என்று கூறுவார்கள்.
மதுரா - வடமொழியென்ற ஐயம் உண்டு.
நன்றி ஊசி.
மாயவரத்தான் ஏன் கலாநிதி, முத்து, கனிமொழி பேரையெல்லாம் விட்டுட்டீங்க? :-)
இனியா
இன்பா
காயத்திரி
சுருதி
வாசுகி
தேவகி
தேன்மொழி
கயல்விழி
நன்றி ஜோசப் , காண்டீபன்.
காயத்திரி என்பது வடமொழி பெயர்.
குறும்பன்,
என்னுடைய சில பரிந்துரைகள்
மலர்கள்:
மலர்
அனிச்சை
காந்தள்
முல்லை
கேள்விப்பட்ட ஆனால் மேலே விடுபட்ட பெயர்கள்:
குந்தவை
நளாயினி
பூவை
பூங்கோதை
மாலினி
கோதை
பூங்கோதை
பாவை
மலர்
குந்தவி/குந்தவை
பொன்னி
பொன்மணி
வான்மதி
வளர்மதி
குயில்
வானதி
கோமதி
குமாரி?
நந்தினி
பூங்குயில்
உமையாள்
மீனா
வசந்தி?
கோமளா
செவ்வந்தி
வதனா
மாலா
அரசி
எழில்
அன்பரசி
குயிலி
சுருதி - கூட தமிழ் மாதிரி தெரியவில்லையே..
என் பங்குக்கு:
அழகி
தமிழரசி
முழுமதி
அன்னம்
அழகி
சிட்டு
புனிதா
வதனி
கமலி?
மின்னல்
பூமகள்
நாமகள்
கலை
வாணி
கலைவாணி
மகிழினி
புகழினி
பிறை
மணி
மேகலை
மேகலா
இனிமை ( i know someone in this name)
எழிலினி
மஞ்சுளா?
தமிழிசை
புதுப் பெயர்களைப் பட்டியலில் சேர்க்கும் பொழுது அகர வரிசையில் அடுக்கலாமே..!
நன்றி யாழ்த்தமிழன்.
குந்தவை, நளாயினி, மாலினி தமிழ் பெயர்கள் இல்லை என்று நினைக்கிறேன்.
நன்றி அனானிகளே ஏகப்பட்ட பெயர்கள் கொடுத்திருக்கறிங்க.
நன்றி பொன்ஸ் , நீங்கள் சொல்வது சரி, முடிந்தவரை எல்லாவற்றையும் அகர வரிசையில் அடுக்கிவிட்டேன்.
மேலும் பெயர்கள் நினைவுக்கு வந்தால் சொல்லுங்கள்.
அமுதா
கனகா
குமுதா
குமுதினி
Thanya
what's the meaning of "thami"?
Thx.
குறும்பன், நல்லதொரு பணி. தமிழில் பெயரிட வேண்டும் என ஆவலிருந்தாலும், மிஞ்சிப்போனால் பத்து பெயர்கள் மட்டுமே நியாபகம் வருவது பெருங்குறை. அனைவரும் எடுத்து வைக்கும் பெயர்களை நன்றாக ஆய்வு செய்து, பட்டியலிட்டால், இப்பக்கத்தை சேமித்துக் கொள்வேன். பாராட்டுகிறேன்!
//http://www.nithiththurai.com/name/index.html
குறும்பன். இந்த வலைப்பக்கத்தைப் பாருங்கள்.//
குமரன் மேற்கண்ட வலைப்பக்கத்தை அறிமுகஞ்செய்தமைக்கு நன்றி
அன்பு உள்ளங்களுக்கு வணக்கம். நான் சந்தித்த சில பெயர்கள்.
முத்துநகை
நகைமுத்து
பொற்கொடி
சேக்கியா
புன்னகை
செம்மல்
செருத்தி
நப்பினை
வணக்கம் நண்பகளே,
நான் எனது பெண்குழந்தைக்கு பெயர் தேடும் போது இந்த பதிவு கிடைத்தது..நன்றி...
எனது பெண்குழந்தை 2009 சனவரி 1ம் திகதி அதிகாலை 5.45 மணிக்கு பிறந்தது ஏதேனும் புது பெயர்கள் இருந்தால்..jayes28@gmail.com முகவரிக்கு அனுப்பிவைக்கவும்..தமிழ் பெயர் மட்டும்..குழ்ந்தையின் புகைபடம் இங்கே http://9790007179.blogspot.com/2009/01/new-year-baby_06.html
கருத்துரையிடுக