பழையபடி இணைய உலாவி போர் ஆரம்பமாகிவிட்டதா? நெருப்பு நரி (FireFox) 2.0 இணைய உலாவி மைக்ரோசாப்ட்டின் IE 7.0 க்கு போட்டியாக வந்து விட்டது. சொல்லப்போனால் IE 7.0 தான் நெருப்பு நரியின் போட்டியின் காரணமாக நெருப்பு நரியை போன்றே உலாவியை வெளியிட்டுள்ளது. நெருப்பு நரி 1.5 க்கும் நெருப்பு நரி 2.0 க்கும் அதிக வேறுபாடு இல்லை. ஆனால் IE 6.0 க்கும் IE 7.0 க்கும் அதிக வேறுபாடுகள் உள்ளது. அதாவது நெருப்பு நரியின் முக்கிய அம்சங்களை IE 7.0 கொண்டுள்ளது. நெருப்பு நரியில் இல்லாத எதையும் IE கொண்டிருக்கவில்லை.
முக்கியமாக IE 7.0 பயன்படுத்த உங்களிடம் Windows XP இயங்குதளம்( Operating System) இருக்க வேண்டும். ஆனால் நெருப்பு நரி 2.0 ஐ Windows 2000, Windows XP, Linux, Mac OS X போன்ற எல்லா இயங்குதளங்களிலும் புழங்கலாம். என்னிடம் Windows 2000 இயங்குதளம் தான் உள்ளது எனவே நான் இப்போது நெருப்பு நரி 2.0 ஐ நிறுவி இப்போது பயன்படுத்துகிறேன்.
நெருப்பு நரி 2.0 ல் உள்ள சில முக்கிய அம்சங்கள்.
Spell checking
Phishing protection
Stability
Security
Updates
Extensibility
Portability and standards.
Open source
மைக்ரோசாப்ட் நிறுவனம் IE 7.0 உலாவியை Windows 2000 இயங்கு தளத்தில் இயங்காதது அவர்களின் வணிக உத்தி தான். IE 7.0 க்காக எல்லோரும் Windows XP or Windows Vista க்கு மாறனுமா? அதிக அளவில் புழக்கத்தில் உள்ள Windows 2000 இயங்குதளத்திலும் வேலை செய்யுமாறு அவர்கள் IE 7.0 ஐ வெளியிட்டிறுக்க வேண்டும் அது தான் முறை.
IE யின் மேம்பாடு நெருப்பு நரியை பொருத்தே உள்ளது. அலுகுனி ஆட்டம் ஆடி போட்டியாளரை அழித்து அதன் பின் உருப்பிடியான தயாரிப்புகளை வழங்காமல் ஏகபோக ஆதிக்கம் செலுத்துவது தான் மைக்ரோசாப்ட்டின் வணிக முறை. என்வே நீங்கள் 'IE' ஐ விரும்புபவராக இருந்தால் நெருப்பு நரியை பயன்படுத்துங்கள் அப்போது தான் மேம்பட்ட IE உங்களுக்கு கிடைக்கும்.
நெருப்பு நரியை பயன்படுத்துவது IE ஐ பயன்படுத்துவதை விட பாதுகாப்பானது. இதன் காரணமாகவே நான் நெருப்பு நரிக்கு மாறினேன். நான் இன்னும் IE பயன்படுத்துகிறேன் என்றால் அதற்கு காரணம் "தமிழ்". ஆம் தமிழ் எழுத்துக்கள் IE ல் தெரிவது போல் நெருப்பு நரியில் தெரிவதில்லை. இது நெருப்பு நரியின் ஒரு மிகப் பெரிய குறை. விரைவில் இக்குறை தீரும் என்று நம்புவோம். சரவணா காப்பாத்தப்பா. ஆங்கில தளங்களை பார்க்க நான் பயன்படுத்துவது நெருப்பு நரி.
நெருப்பு நரி 2.0 ல் எனக்கு பிடித்த அம்சங்கள் Spell Check, Add-ons, தவறதலாக மூடிய Tab ஐ மீட்க்கும் வசதி "Shift+Ctrl+t" அலுத்தினால் மூடப்பட்ட Tab Window மீட்கப்பட்டுவிடும்.
மைக்ரோசாப்ட்டின் Windows 2000 இயங்குதள பயனாளரான நான் சிறந்த இணைய உலாவி என்று நெருப்பு நரியையே கருதுகிறேன். இணைய உலாவி போரில் நெருப்பு நரியை ஒழித்து இந்த முறை IE வெற்றிபெறுவது கடினம், காரணம் நெருப்பு நரி Open Source.
2 கருத்துகள்:
ம்ம்....
தமிழ் எழுத்து பிரச்சனை தீர்க்க ஒரு வழி உண்டு. முயன்றீர்களா?
http://tamilgnu.blogspot.com/2006/09/firefox.html
இந்த தொடுப்பு சிலவேளை உதவலாம்.
2.0 எனக்கும் சரியாக பிடித்து கொண்டுவிட்டது.
உபுண்டு லினக்சின் புதிய பதிப்பு firefox 2.0 உடனே வருகிறது.
பயன்படுத்தி பார்க்கலாமே?
http://www.ubuntu.com/
ஒரே ஒரு வட்டு தான். பயன்படுத்த கணினியில் நிறுவ வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை
Open Source என்று எழுதும் போது எனக்கு நினைவுக்கு வந்த பெயர் மு.மயூரன் தான்.
எனக்கு நெருப்பு நரியில் தமிழ் எழுத்துக்கள் தெரிகிறது ( சரவணன் உதவினார் ) ஆனாலும் ஒரு சில எழுத்துக்கள் உடைந்து தான் தெரிகிறது. IE ல் தெரிவது போல் தமிழ் எழுத்துக்கள் நெருப்பு நரியில் தெரிவதில்லை.
கருத்துரையிடுக