வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



செவ்வாய், செப்டம்பர் 19, 2006

கோவை ஆத்துப்பாலம்.

கோவை ஆத்துப்பாலம் பிரசித்தி பெற்ற இடம் எதனால் என்று தெரியுமா உங்களுக்கு?
நொய்யல் ஆறு செல்வதாலா? பொள்ளாச்சி, கேரளா செல்லும் வண்டிகள் இதை கடந்து செல்வதாலா? உக்கடம் அருகில் உள்ளதாலா? சில பேர் கிண்டலாக இதை வாய்க்காப்பாலம் என்பதாலா? கோவைகாரர்களுக்கு நன்றாக தெரியும்.

கோவை மாநகரானது ஆத்துபாலத்துக்கு இந்தப்பக்கமும் நன்றாக வளர்ந்துள்ளது. குனியமுத்தூர் நகராட்சி பாலத்துக்கு இப்பக்கம் உள்ளது. நிறைய மக்கள் வேலைக்கு செல்ல, துணிமணி வாங்க, பெரிய கடை வீதிக்கு செல்ல இந்த பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும். சுருக்கமா சொன்னா காலையில் டீ குடிக்க, பல் துலக்க, முகம் கழுவ கூட நிறைய பேர் ஆத்துப்பாலத்தை கடப்பார்கள்.

இது ஒரு சிறிய பாலம் ஆனா முக்கியமான இடத்தில் உள்ளது. இதுல என்ன பிரச்சனைன்னா இதை கடப்பதற்கு சுங்கம் (Toll) கட்ட வேண்டும். அதில் என்ன தப்பு என்று கேட்பவர்களுக்கு, தினமும் பயன் படுத்தும் உள்ளூர் மக்களும் இதற்கு சுங்கம் கட்ட வேண்டும். ஊரின் நடுவில் உள்ள இச்சிறு பாலத்தை அரசு கையகப்படுத்தி சுங்கம் வசுலிப்பதை நிறுத்த வேண்டும். ஆனா என்ன காரணத்தாலோ மாநகராட்சி / அரசு இதை செய்ய மறுக்கிறது. இப்பாலத்தில் சுங்கம் வசுலிப்பதனால் இங்கு போக்குவரத்து நெரிச்சலும் ஏற்படுகிறது. ஊருக்கு நடுவில் அவசியமற்ற நெரிச்சல்.

என்னை பொருத்தவரை இப்பாலம் கட்ட அதிகபட்சம் ரூபாய் 2 கோடி ஆகியிருக்கலாம். இந்த வாய்க்காப்பாலத்தை (ஆத்துப்பாலம்) கட்ட சென்னை நேரு அரங்க புகழ் "L&T" பல ஆண்டுகள் எடுத்துக்கொண்டது குறிப்பிடதக்கது.

கிட்டத்தட்ட இதை கட்டி 7 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது, போட்ட காசுக்கு மேல பல பல மடங்கு லாபம் பார்த்திருப்பார்கள் ஆனால் இன்னும் சுங்கம் வசுலிக்கிறார்கள். இப்போ இது அதிகாரபூர்வமான ஒரு பகல் கொள்ளை. சுங்கம் கட்டி பழகி விட்டதால் இதைப்பற்றி இப்ப யாரும் கண்டுக்கறதில்லையா?

19 கருத்துகள்:

Amar சொன்னது…

தல, பெரிய நெரிசல் எதுவும் ஏற்படுவதில்லை....மிஞ்சி போனால் ஒரு 15 வினாடிகள்..அவ்வளோ தான்.

இரண்டு சக்கர வாகனங்களுக்கு சுங்கம் கிடையாது இல்லையா?

ஆன செலவு இரண்டு கோடிக்கு மேல்.ரொம்ப குறைச்சு சொல்லீடீங்க.

பெயரில்லா சொன்னது…

ata namma ooru aalaa? virginia la enga irukkeenga?

கார்த்திக் பிரபு சொன்னது…

idhu munnala coment pottavaru l&t la work pannraro ennavo..

nan niraya time andha aathu palathai kadakkum podhu idhey pol ninaithu parthirukrane..

enna seiyuradhu arasangam iyanthiram ippdi than irkirdhu..mm..

Machi சொன்னது…

சமுத்ரா, நெரிச்சல் இல்லைன்னா மகிழ்ச்சிதான். இப்பாலத்தை கடக்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க நெரிச்சல் ஏற்பட வாய்ப்புண்டு.
இப்ப 2 சக்கர வாகனங்களுக்கு சுங்கம் கிடையாது ஆனா இச்சலுகையை கடும் போராட்டத்துக்கு பின்னர் தான் பெற்றனர்.
3 & 4 சக்கர வாகனத்துக்கு இப்பாலத்தில் சுங்கம் வசுலிப்பது அநியாயம்.

இக்குட்டி பாலத்துக்கு 2 கோடி கணக்கே அதிகம்ன்னு நான் நினைச்சிக்கிட்டு இருக்கேன். ஒரு தோராயமாதான் சொன்னேன்.

எவ்வளவு செலவுன்னு யாருக்குமே தெரியலை. எவ்வளவு செலவு ஆகியிருக்கும்ன்னு நீங்க சொல்லுங்க.

Machi சொன்னது…

அனானி, நான் கோவை காரன் கிடையாது ஆனா எனக்கு நிறைய நண்பர்கள் அங்கு உண்டு. வெர்ஜீனியாவில் வசிக்கும் நிறைய கோவை மக்களை எனக்கு தெரியும். யார் கண்டது உங்களை கூட எனக்கு தெரிந்து இருக்கலாம். :-))

Machi சொன்னது…

கார்த்திக் பிரபு சரியா சொன்னீங்க. ஊருக்கு நடுவுல இருக்கிற சின்ன பாலத்துக்கு சுங்கம் வசுலிப்பது அநியாயம்.
யாராவது வர போகிற உள்ளாட்சித் தேர்தலில் இப்பிரச்சனையை கிளப்பினா விடிவு பிறக்க வாய்ப்பு உண்டு.

வெற்றி சொன்னது…

குறும்பன்,
நல்ல பதிவு.

//கிட்டத்தட்ட இதை கட்டி 7 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது, போட்ட காசுக்கு மேல பல பல மடங்கு லாபம் பார்த்திருப்பார்கள் ஆனால் இன்னும் சுங்கம் வசுலிக்கிறார்கள். இப்போ இது அதிகாரபூர்வமான ஒரு பகல் கொள்ளை. சுங்கம் கட்டி பழகி விட்டதால் இதைப்பற்றி இப்ப யாரும் கண்டுக்கறதில்லையா?//

இப்பாலம் யாருடைய கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது? மாநில அரசின் கட்டுப்பாட்டிலா?

ராசுக்குட்டி சொன்னது…

நம்ம ஊடு அந்தப் பக்கம்தானுங்க இருக்கு... அது பெரிய தொடச்சல்தான்... அட இதுக்காகவே எங்க பக்கத்தூட்டுக்காரரெல்லாம் காரே எடுக்கறதில்லீங்கன்னா பாத்துக்கங்களேன்...

அதுவும் பாலக்காடு டூ கோவை முக்கியமான சாலை வேற

7 வருஷத்துல அந்த பாலம் கட்றதுக்காக எவ்வளவு போட்ருந்தாலும் எடுத்திருக்கலாம்! இனியும் இருப்பது பகல் கொள்ளைதான்!

Amar சொன்னது…

//இக்குட்டி பாலத்துக்கு 2 கோடி கணக்கே //

குட்டி பாலமா?
சரியா போச்சு போங்க. இது பெரிய பாலமுங்க. கவருமெண்டுகாரங்களை விட நெம்ப சூப்பரா கட்டியிருக்காங்க.

மஞ்சூர் ராசா சொன்னது…

எனக்கென்னமோ L&T க்கும் கோவை நகராட்சிக்கும் இந்தப் பாலத்தில் சுங்கம் வசூலிப்பதற்காக ஏதேனும் குறிப்பிட்டக் கால ஒப்பந்தம் இருக்கும் என்றே தோன்றுகிறது.

ஆன இந்த முறை அவ்வழியே போனப்போது போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஒரு பத்து நிமிடம் தாமதமானது என்னவோ உண்மைதான்.

Machi சொன்னது…

வெற்றி இப்பாலம் மாநகராட்சிக்கு உட்பட்டது என்று நினைக்கிறேன். ஆனால் இப்போது "L&T" நிறுவனத்துக்கு உரிமையுள்ளது.
BOT முறையில் "L&T" இப்பாலத்தை கட்டியுள்ளார்கள்.
ஆனால் BOT-ல் உள்ள 'T' என்று வருமோ தெரியாது.

Machi சொன்னது…

ராசுக்குட்டி, என் நண்பனும் காரை எடுக்க மாட்டான். :-))
அதனால தான் இப்பாலத்தை பற்றி எனக்கு தெரிய வந்தது. :-))

Machi சொன்னது…

சமுத்ரா, இது பெரிய பாலமா?

நண்பன் கிட்ட ஆத்துப்பாலம்ன்னு சொன்னியே எங்கடா பாலம்ன்னு கேட்டேன் இப்ப தாண்டி வந்தது தான் அப்படின்னான். ஏன் எனக்கு தெரியாம போச்சுன்னா இது அவ்ளோ பெருசு:-) . அப்புறம் தான் தெரிந்தது நொய்யல் ஆறு அங்கு ஓடுவது.

/கவருமெண்டுகாரங்களை விட நெம்ப சூப்பரா கட்டியிருக்காங்க/
நல்லது தான், பாராட்டலாம். அதுக்காக ஆயுசு முழுக்க சுங்கம் கட்ட வேண்டுமா?

நீங்க L&T share வச்சிருக்கீங்களா? :-)

Machi சொன்னது…

மஞ்சூர் ராசா, சமுத்ரா 15 வினாடிங்கிறார் நீங்க என்னடான்னா 10 நிமிடம்ன்னு சொல்றிங்க?

ம்ம் இப்பொ புரிஞ்சி போச் பாலத்தை கடக்க 15 வினாடிகள் கூட ஆகாதுங்கிறார் நாம சொல்றது இதனால் ஏற்படும் கால விரயம்/ தாமதம். :-))

நீங்கள் நினைப்பது சரி தான். BOT முறையில் "L&T" இப்பாலத்தை கட்டியுள்ளதாக சொல்கிறார்கள், ஆனால் நிறையபேர் இது "BO" முறையில் கட்டப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். ஏன்னா "T" நடந்தா தான் நிச்சயம். :-))

Unknown சொன்னது…

குறும்பன்

பாலம் கட்ட ஆன செலவு 7 கோடி.முதல் இரண்டு வருஷம் மக்கள் புரட்சி செஞ்சு காசு கொடுக்காம போயிட்டிருந்தாங்க.ஆனா அப்புறமா கெடுபிடியா இருந்து,கோர்ட்கேஸ் போட்டு மக்கள் கிட்ட பணம் வசூலிச்சுட்டாங்க.

அரசே இந்த 7 கோடியை போட்டு பாலம் கட்டிருக்கலாம்.ஆனா ஆத்துப்பாலத்துக்கு ஏன் காண்டிராக்ட் விட்டாங்கன்னு தெரியலை.மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோட்டுக்கு காண்டிராக்ட் விட்டதை புரிஞ்சுக்க முடியுது.ஆனா கோவை மக்களுக்கு இது ஒரு எரிச்சலான விஷயம் தான்

பெயரில்லா சொன்னது…

அதவிடக் கொடுமை என்னனா கார்க்கு 6 ருபா வாங்கிட்டு இருந்தாங்க இப்ப 7 ருபா வாங்கிறாங்க. bot contract மொத்தம் 20 வருசம்

இதுக்கு ஒரு பக்கம் பாலம் மட்டும் தான் இவிங்க கட்டுனது. ஒரு பாலம் ஏற்கனவே இருந்தது. ஆனா இரண்டு பாலத்துக்கும் சேர்த்து காசு வாங்கராங்க

Machi சொன்னது…

செல்வன் பாலம் கட்ட ஆன செலவு எவ்வளவு என்பதை இப்ப தான் கேள்விப்படறேன் . 7 கோடி ரொம்ப அதிகம் தான்.

நீங்க சொல்வது சரி, புறவழிச்சாலைக்கு சுங்கம் வசுலிப்பது, contractorஐ விட்டு கட்ட சொல்வது சரி, இந்த பாலத்து கொள்ளைல யார் யாருக்கு பங்கு போகுதோ?

Machi சொன்னது…

சிதம்பரம் சரியா சொன்னீங்க. கட்டாத பாலத்துக்கும் சேர்த்து சுங்கம் வசுலிப்பாங்கலாம் நீதிமன்றமும் அவங்களுக்கு சாதகமா தீர்ப்பு சொல்லுமாம் இது தான் கொடுமையான கூத்து.
நீதிமன்றமே இப்படி தவறான தீர்ப்பு சொன்னா மக்களுக்கு எப்படி விடிவுகாலம் பொறக்கும்?

பாலம் கட்டுன செலவு அதிகமாகிக்கிட்டே வருதுன்னு சுங்கத்தை 7 ரூபாய் ஆக்கியிருப்பாங்க. :-))
20 ஆண்டு கழித்தாவது சுங்கம் வசுலிப்பதை நிறுத்துவாங்களா? எனக்கு சுத்தமா நம்பிக்கையில்லை.

மு.கார்த்திகேயன் சொன்னது…

//சுங்கம் கட்டி பழகி விட்டதால் இதைப்பற்றி இப்ப யாரும் கண்டுக்கறதில்லையா?//

குறும்பன், மக்கள் இந்த அளவுக்கு மாறிபோய்ட்டாங்களே..

முதல் முறை இங்கே..நல்ல பதிவு.. வாழ்த்துக்கள்