வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?சனி, செப்டம்பர் 02, 2006

உலகில் இந்திரா நூயி 4வது சக்திமிக்க பெண்

போர்ப்ஸ் இதழ் உலகின் 100 சக்தி மிக்க பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியர்களான காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, பெப்ஸி நிறுவன தலைவி இந்திரா நூயி , ICICI வங்கி தலைவிகள் லலிதா குப்தா & கல்பனா மொர்பரியா, ஜம்போ குழும தலைவி வித்யா சாப்ரியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ஜெர்மனி அதிபர் ஆஞ்சல மெர்க்கெல் உலகிலேயே அதிகாரமிக்க பெண்ணாகவும், அமெரிக்க வெளியுறவு செயலாளர் கான்டலினா ரைஸ் 2வது அதிகாரமிக்க பெண்ணாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
இந்திரா நூயிக்கு 4வது இடம், சோனியா காந்திக்கு 13வது இடம், லலிதா குப்தா & கல்பனா மொர்பரியா க்கு 93 வது இடம், வித்யா சாப்ரியா க்கு 95 வது இடம்.


இதிலிருந்து என்ன தெரிகிறது?

எக்காலத்திலும் 'சோனியா' 'இந்திராவை' விட அதிகாரம் / சக்தி உள்ள பெண்ணாக முடியாதுங்கிறது தெரிகிறது.

http://www.forbes.com/lists/2006/11/06women_The-100-Most-Powerful-Women_Rank_1.html


இந்திரா நூயி தமிழ்நாட்டுப்பெண். இவர் சென்னையில் 1955 ம் ஆண்டு பிறந்தார். சென்னை கிருத்துவ கல்லூரியில் இளங்கலை பட்டமும், கல்கத்தா "Indian Institute of Management" -ல் முதுநிலைப்பட்டமும் பெற்றார்.

இந்தியன் என்ற முறையிலும் தமிழ் நாட்டுக்காரன் என்ற முறையிலும் இந்திரா நூயி க்கு என் தனிப்பட்ட வாழ்த்துக்கள்.
http://en.wikipedia.org/wiki/Indra_Nooyiபுரச்சித்தலைவி , இரும்புமங்கை போன்ற பல பட்டங்களை பெற்ற அ.தி.மு.க வினரால் அன்புடனும் பயத்துடனும் 'அம்மா' என்று அழைக்கப்படும் ஜெயலலிதா இந்த பட்டியலில் இடம்பெறாதது ஒன்றே போதும் போர்ப்ஸ் இதழ் காங்கிரஸ் & தி.மு.க விடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு இப்பட்டியலை தயாரித்தது என்பதற்கு என்று 'வை.கோ', 'காளிமுத்து', 'பன்னீர்செல்வம்' & பல அதிமுக பிரமுகர்கள் தனி தனியாக வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளனர்.


டெல்லியிலில் நடக்க இருக்கும் டீ பார்ட்டிக்கு ஜெயலலிதாவை அழைக்க வந்த "சுப்பிரமணிசாமி" இதற்கான ஆதாரம் உள்ளதாகவும் சி.ஐ.எ மூலம் இதை தான் பெற்றதாகவும் கூறியுள்ளார். பட்டியலை வெளியிட்ட போர்ப்ஸ் இதழை எதிர்த்து அமெரிக்க உச்ச நீதினன்றத்தில் வழக்கு போடபோவதாக சொன்னார்.

"சோ" துக்ளக்கில் கேலிச்சித்திரம் வரைந்தும் கேள்வி பதிலில் நையாண்டியாக பதில் கூறியும் அவருக்கே உரிய முறையில் போர்ப்ஸ் பட்டியலை விமர்சித்துள்ளார்.

3 கருத்துகள்:

வெற்றி சொன்னது…

:))

குறும்பன் சொன்னது…

வெற்றி எதுக்காக சிரித்தீர்கள் என்று சொன்னால் நன்றாக இருக்கும். :-))

வெற்றி சொன்னது…

குறும்பன்,
மன்னிக்கவும். அச் சிரிப்பு 'உள்ளேன்' என பள்ளி நாட்களில் சொல்வது போல் உங்களின் பதிவைப் படித்தேன் என குறிப்பதற்கு. நண்பர் குமரன் அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டது.