வணக்கம்
வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?
புனைவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், மே 29, 2017
நவீன சாவித்திரி - 1
வேலன் சிறந்த முறையில் மின் & மின்னனு கருவிகளின் பழுது பார்ப்பவன். தனியாக தொழில் செய்கிறான். ஏமாற்றுக்காரன் அல்ல. காசும் அதிகம் வாங்கமாட்டான், சரியான தொகையை தான் வாங்குவான். பழுது பார்ப்பது வீண் என்றால் அதை கூறிவிடுவான் அதற்கு எத்தொகையையும் பெற்றுக்கொள்ளமாட்டான். வெளியூர் என்றால் மட்டும் வந்து பார்த்தற்கான கூலியை வாங்கிக்கொள்வான். இதனாலேயே இவனை பல பேர் நம்பி அழைப்பார்கள். நம்பிக்கையான வேலையாள் கிடைப்பது இக்காலத்தில் அரிது அல்லவா?. பக்கத்து ஊரிலிருந்தும் அழைப்பார்கள். அதாவது 6~8 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள ஊர்களிலிருந்து. ஓட்ட டிவிஎசு 50 தான் வைத்துள்ளான் மாற்ற சொன்னால் அது ராசியானது என்று அதை விடமறுக்கிறான்.நல்லவன், மது மாது புகை பழங்கங்கள் இல்லை, அதிகமாக தேநீர் குடிப்பான், வாய்ப்பு கிடைத்தால் வெத்தலை போடுவான். இது இரண்டும் தான் அவனின் கெட்ட பழக்கம் எனலாம். வெத்தலை பழக்கம் எப்படி வந்ததுன்னு தான் தெரியலை.
திருமணம் ஆகாதவன் பெண்களை ஏறெடுத்தும் பார்க்காதவன் எப்படியோ வெளியூரில் வேலை பார்க்க செல்லும் போது காதல் வலையில் விழுந்து விட்டான். அடிக்கடி வெளியூரில் வேலை இருக்குன்னு கிளம்பிடுவான் அப்ப எங்களுக்கு தெரியலை. ஒரு முறை அந்த பொண்ணு குழலி வீட்டுக்கு வந்ததும் தான் எங்களுக்கு விளக்கு எரிந்தது. அந்த பெண்ணும் அவனும் ஒரே சாதி என்பதால் பிரச்சனை இருக்காது என்று நம்பினோம். நம் நம்பைக்கு மாறாகவே எல்லாம் நடந்தது. இருவர் வீட்டிலும் கடும் எதிர்ப்பு. அவனின் அப்பா ஒத்துக்கலை, திருமணத்திற்கு கடும் தடையை ஏற்படுத்தினார். பெண்ணின் வீட்டிலும் திருமணத்திற்கு தடை. ஆனா பெண் மிகவும் உறுதியாக இருந்ததால் பெரியவர்களின் பல கட்ட சமாதான பேச்சுவார்த்தைக்கு பின் திருமணம் இரு வீட்டாரின் உள்ளன்பு இல்லாமலே நடந்தது. (வேலன் கட்டுனா குழலி தான் என்றான் ஆனால் இவ்விடயத்தில் குழலியின் திடம் மிக அதிகம்) முருகன் கோவிலில் நடந்த திருமணத்தில் கடனுக்கேன்னு இருவீட்டாரின் பெற்றோரும் கலந்துகிட்டாங்க.
திருமணத்திற்கு பின்பு மூன்று ஆண்டுகளில் குடியிருக்கும் வீட்டுக்கு பக்கத்திலேயே நிலம் வாங்கி விட்டான். அடுத்த ஆண்டு அதில் இரண்டு அறை பைஞ்சுதை (கான்கரீட்), முற்றம் அதாவது வரபேற்பு அறை ஓடு உள்ள வீடு கட்டிவிட்டான். அவனின் பெற்றோர் அவனுக்கு திருமணமானதும் ஊர்பக்கம் வேற வீட்டுக்கு குடிபோயிட்டாங்க. புது பொண்டாட்டி ராசியனவ, அதான் வந்ததும் வேலன் தார்சு வீடு கட்டிட்டான் மாமனா மாமியா நங்கியா என்று யார் தொந்தரவும் இல்லாதது குழலியின் புண்ணியம் என்று அக்கம் பக்கத்தில் பேசினார்கள். அவ நல்லவ தான், எல்லோரிடமும் நன்றாக தான் பழகுவாள், வேலனுக்கு விட்டவ இல்லை. புது வீட்டுக்கு வந்து இரண்டு குழந்தைகளையும் பெற்றார்கள். இப்ப மாமனார் மாமியார் எல்லாம் இவக்கூட ராசியாயிட்டாங்க. அடிக்கடி இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் பலகாரம் வரும். வேலனைவிட இவதான் இப்ப அவங்களுக்கு நெருக்கம், குழலியின் பெற்றோரும் ராசியாகி விட்டார்கள்,
இவன் வேலையைப் பார்த்து அவனை நிறுவனத்தில் நல்ல சம்பளத்துக்கு வேலைக்கு கூப்பிட்டதும் நல்ல சம்பளம் என்பதாலும் வார விடுமுறையில் தனியாக சிறு சிறு வேலைகளை செய்யலாம் என்பதாலும் மாத சம்பளத்திற்கு போக உடன் பட்டான். அதுவும் நல்லபடியாக போய் கொண்டிருந்தது. யார் கண்ணு பட்டதோ தெரியலை இப்ப வேலன் வீட்டில் புருசன் பொண்டாட்டி தகராறு. அடிக்கடி நல்லா அடி போட்டுடுவான். அவ கத்தலை கேட்டு அடிக்கறான்னு தெரிந்து நாங்க தான் விலக்கி விடுவோம். அவங்களுக்குள்ள இப்ப பேச்சு வார்த்தை இல்லை. அதாவது இவ பேசுவா அவன் பேசமாட்டான்.
கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக ஊர்ல பொருளாதாரம் படுத்து விட்டது எந்த தொழிலும் சரியாப்போகலை, நிறைய வீடுகள் காலியாக உள்ளது, முதன்மை சாலையில் உள்ள கடைகள் பலது கூட பல மாதங்களாக காலியாக உள்ளது. இந்த வீடுகள், கடைகள் எல்லாம் காலியாக இருப்பதே ஊர் நிலவரத்தின் அறிகுறி. என் வாழ்நாளில் இவைகளை ஒரு நாளும் காலியாக பார்த்ததே இல்லை, இவை கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கும். காலியாவது அரிது அப்படி ஆனதை வேண்டும் என்பதற்காக சிபாரிசு எல்லாம் பிடிப்பார்கள்.
ஊரின் பொருளாதாரம் கடுமையாக படுத்து விட்டதால் பல முதலாளிகளால் தொழிலாளிகளுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியவில்லை. வேலனுக்கோ அதிக சம்பளம் கொடுத்து அவங்க முதலாளி வைத்துள்ளார். பொருளாதார தாக்கம் இல்லாம அவரு மட்டும் தப்ப முடியுமா? அவரும் கடுமையாக பாதிக்கப்பட்டார்.. இந்தா சரியாகிடும் அந்தா சரியாகிடும் என்று கை காசை செலவு செய்து சமாளித்தார், நிலமை இப்போதைக்கு சரியாவது போல் தெரியலை, எத்தனை மாதங்கள் தான் சமாளிப்பார்? அதனால் தன் கடையில் இருந்து நிறைய பேரை தூக்கிவிட்டார். வேலனும் அதில் அடிபட்டு போனான். எப்படியோ சூதாட்ட பழக்கமும் இப்ப அவனிடம் சேர்ந்து விட்டது. யாராவது கூப்பிட்டாலும் சரியாக வேலை செய்ய போவதில்லை, வீட்டில் குழலிக்கு அடி விழுவது அதிகமாகிவிட்டது அதாவது இரவு மட்டும் என்பது போய், பகலிலும் சேர்த்து விழ ஆரம்பித்து விட்டது. உச்சமாக இரண்டு மாதம் கழித்து குழலியை வீட்டை விட்டு துரத்திவிட்டான். யார் சொன்னாலும் கேக்கமாட்டிக்கிறான் வேலை போனதற்கு அவ வந்த நேரம் சரியில்லை என்பான் இல்லைன்னா வேற ஏதாவது காரணங்கள் கூறுவான். நம்மால் அவனை திருத்த முடியாது என்று விட்டு விட்டோம். ஆனா இப்பவும், குழலிக்கு மட்டும் தான் அவன் கெட்டவன், மற்றவர்களிடம் நல்லா தான் பழகுகிறான்.
குழலியின் அப்பா தங்களோடு வந்து விடுமாறு கூறியதை மறுத்து இந்த ஊர்ல தான் இருப்பேன் என்று அவங்க கூட வர முடியாது என்று கூறிவிட்டாள். வேலனின் பெற்றோரும் தங்கள் வீட்டுக்கு வருமாறு கூறியதையும் மறுத்து விட்டாள். ஏன்னா அது அவ வீட்டுக்காரனுக்கு பிடிக்காதாம். தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தாள். தினமும் இங்க வருவதும் வேலன் திட்டி அடித்து விரட்டுவதுமாகவே இருந்தது. குழந்தைக்காகவாவது மனம் இறங்குவான்னு பாத்தா பழைய மாதிரியே இருக்கான். இப்பவும் பாருங்களேன் புருசனை இம்மி அளவும் விட்டு கொடுக்காமல் தான் பேசுவா. இவளைப் போய் துரட்டிட்டானே இவளை மாதிரி யார் கிடைப்பார்கள் என்று பேசிக்குவோம். எல்லாம் இவனின் கெட்ட நேரம் தான் என்று பேசிக்கிட்டோம்.ஒரு முறை தூக்கு மாட்டிக்கிட்டான் அவன் நல்ல நேரம் நான் ஏதோ கேட்க அங்க போனதால் அவனை காப்பாற்ற முடிந்தது, கொஞ்சம் தாமதமா நான் போய் இருந்தாலும் அவனுக்கு பால் ஊற்றும் படி ஆகிவிட்டிருக்கும். இந்த விடயம் குழலிக்கு தெரிந்து அழுது ஆர்பாட்டம் பண்ணிவிட்டாள், பிறகு எங்களிடம் அடிக்கடி அவன் வீட்டுக்கு போயி பார்க்க கெஞ்சி கேட்டுக்கொண்டாள். அடிக்கடி நான் அவன் வீட்டுக்கு போவதும் அவன் எங்க வீட்டுக்கும் வருதும் நடக்கும், எங்களுக்கு பையன் மாதிரி தான் அவன்.
தினம் வேலன் வீட்டுக்கு தினம் வந்து கொண்டிருந்தாள். இப்படி ஒரு ஆண்டு கழிந்தது. இப்போதெல்லாம் தினமும் வருவதில்லை அவன் மனசு மாறுவது போல் தெரியவில்லை, அதனால் தினம் வருவதில்லை. ஆனாலும் இப்போது வாரம் ஒரு முறையாவது வந்துவிடுவாள்.
இப்ப சிறிதளவு மனசு மாறிவிட்டதால் குழலிக்கு அடி விழுவதில்லை, வரும் போது இருக்கும் வேலனின் அனைத்து அழுக்கு துணிகளை துவைத்து வைத்து விட்டு சென்று விடுவாள். அப்ப அவன் இருக்க மாட்டான் ஏன்னா மூஞ்சில முழிக்க கூடாது என்ற வைராக்கியம் மேலும் பாத்தா கோவம் வந்து அடிச்சிடுவானே. இப்படியே எட்டு மாதம் போனது. ஒரு நாள் இரவு எட்டு அல்லது ஒன்பதரை மணி இருக்கும் வேலன் வீட்டுக்கு திடீர்ன்னு போனேன். அறையில் யாரோ இருப்பது போல் இருந்தது, அதைப்பற்றி ஏதும் கேட்டுக்கலை. இரண்டு வாரம் இருக்கும் காலையில் ஐந்து மணிவாக்குல ஒரு உருவம் அவங்க வீட்டை விட்டு போனது. பையனுக்கு பொம்பளை தொடர்பு வந்திருச்சோன்னு ஐயம் ஆகிடுச்சு. சரி யார் அதுன்னு கண்டுபிடிப்போமுன்னு அடுத்த நாள் ஐந்து மணிக்கு எழுந்து கவனிச்சேன். யாரும் அங்கிருந்து போகலை, விடமுடியுமா? அதனால அடுத்த நாள் நாலரை மணிக்கு எழுந்து கவனிக்க தொடங்கினேன். ஐந்து மணி வாக்குல ஒரு உருவம் அவங்க வீட்டிலிருந்து போனது. நான் சத்தம் போட்டுவிட்டு வேகமாக போய் யார் அதுன்னு பார்த்தேன்.
பார்த்ததும் அதிர்ச்சிக்குள்ளானேன்
(தொடரும்)
சனி, ஏப்ரல் 08, 2017
வாடகை வீடு
கிலிங் கிலிங் அழைப்பு மணி அடித்தது. விசாலி தூக்க கலக்கத்தில் இன்னேரம் அவர் வரமாட்டாரே என்று மனதில் நினைத்துக் கொண்டு கதவை கிரீச் என்ற சத்தத்தோடு திறந்தார். வெளியே பக்கத்து வீட்டு சிறுவன் நின்று கொண்டிருந்தான். விசாலி தன் முடியை கொண்டை போட்டுக்கொண்டே என்ன என்று கேட்டார். அண்ணனை வீட்டுக்கார அம்மா கூட்டியாரச் சொன்னாங்க என்றான். வெளிய போயிருக்காங்க வந்ததும் வரச்சொல்றேன் என்று விசாலி கூறினார்.
வீட்டுக்காரம்மா முன்வாசல் பெரியதாக இருப்பதால் பக்கத்து வீட்டு பையன் இங்கதான் விளையாடுவான். அவங்க அம்மாவும் இங்க உட்கார்ந்து கதை பேசிக்கிட்டு இருப்பாங்க என்பது கூடுதல்.
தன் கணவன் செந்தில் வந்ததும் வீட்டுக்கார அம்மா வரச்சொன்ன செய்தியை விசாலி கூறினார். கைலிக்கு மாறிவிட்டு எதுக்காக இருக்கும் என்று நினைத்துக் கொண்டே இவர் பார்க்க சென்றார். இவர் போய் என்னக்கா என்று கேட்டதும் சங்கடமாதான் இருக்கு தம்பி நீங்க இன்னும் ஒரு மாதத்தில் வேற வீடு பார்த்தா நல்லது, பெரியவன அங்க தனி குடித்தனம் வைக்கலாமுன்னு இருக்கோம் என்றார். என்னக்கா இப்படி சொல்லறிங்க நாங்க ஏதாவது தப்பு பண்ணிட்டமா அவ ஏதாவது ஏடாகூடமா பேசிட்டாளா என்றார். அதெல்லாம் இல்லை தம்பி, உனக்கு தெரியும் ராங்கிப்பட்டி போய் பெரியவன் நேரம் எப்படி இருக்குன்னு திருக்கணிதம் பார்த்தது. அவரு தான் இவனுக்கு இன்னும் 3 ஆண்டு நேரம் சரியில்லை, ஆய் அப்பனுக்கு கூட பாதிப்பு வர வாய்ப்பிருக்கு என்றும் தனிகுடித்தனம் போனா கடும் பாதிப்புகளை குறைக்கலாம் என்றார். சொந்த வீடா இருந்தாலும் உங்ககூட இல்லாம தனியா ஆக்கி தின்னா நல்லது என்றார். அதான் உங்களை காலி செய்யச்சொல்றோம் என்றார் வீட்டு உரிமையாளர் அம்மா. சரிக்கா 3 மாதம் கொடுங்க அதுக்குல்ல வேற வீடு கிடைத்ததும் காலி செய்யறோம் என்றார்.
விசாலியிடம் வீட்டை காலி பண்ணவேண்டும் என்ற செய்தியை கூறியவுடன் எல்லோரையும் விட அதிகம் கவலைப்பட்டது விசாலி தான். பொல பொலன்னு கண்ணீரே வந்துவிட்டது. ஐந்து ஆண்டா இந்த வீட்டில் குடியிருக்கிறார். இத்தெருவிலேயே 15 ஆண்டுகளாக குடியிறுக்கிறார். திருமணமான தினத்திலிருந்து இங்கேயே இத்தெருவிலேயே குடியிருக்கிறார். விசாலிக்கு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுடன் நல்ல பழக்கம் எல்லோரும் சொந்தங்கள் போல நெருக்கம். இவர்களை பிரிய வேண்டும் என்பதை அவரால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இத்தெருவில் வேற வீடு எதுவும் இப்ப காலி இல்லை, யாரும் காலி செய்வதாகவும் சொல்லவில்லை. காலி செய்வதாக இருந்தாலும் மூன்று மாதத்தில் காலி செய்ய போறதில்லை..
இரண்டு வீடு தள்ளி இருந்த வீட்டுக்கு போன மாதம் தான் புதுசா குடிவந்தாங்க,. அந்த வீட்டில் கொஞ்சம் வசதி குறைவு தான், சமாளிச்சுக்கலாம் என்றாலும் இனி அதற்கு வாய்ப்பு இல்லை. இங்க தண்ணி தொல்லை இல்லை. தனி வீடு. பத்து அடி தள்ளி தான் அடுத்த வீடு. செந்திலின் வேலை செய்யும் இடமும் இதற்கு பக்கம். பேருந்து நிறுத்தமும் மிக அருகில் உள்ளது. நிறைய கடைகளும் அருகில் உள்ளது. சொந்தக்காரங்க வந்து ஒரு மாதம் டேரா போட்டாலும் ஒன்றும் சொல்லமாட்டார். அதை விட வீட்டு உரிமையாளர் தங்கமானவர் எந்த பிரச்சனை என்றாலும் உதவ முதல் ஆளாக இருப்பார். பக்கத்தில் உள்ளவர்களுடன் செந்திலுக்கும் நெருங்கிய பழக்கம். இவ்வளவு வசதியுடன் வேற வீடு கிடைக்குமா?
தேடுதல் தொடங்கியது. எதுவும் ஓரளவு வசதியுடன் சிக்கவில்லை. அதனால் எதிர்பார்ப்பை சிறிது குறைத்து தேட தொடங்கினோம். ஐந்து வீடுகளை இப்பகுதியில் பார்த்தோம். எதுவும் ஒத்து வரவில்லை. வீடு நல்லா இருந்தா வீட்டு உரிமையாளர் முசடா இருந்து ஏகப்பட்ட நிபந்தனைகள் விதிப்பார் அதில் பாதி கூட நம்மாள் கடைபிடிக்க இயலாது. அப்படியில்லைன்னா வீடு நல்லா இருக்காது. இப்ப தான் வீட்டு உரிமையாளரின் நல்ல குணமும் வீட்டின் மதிப்பும் புரியுது அதற்கு வீடு பார்க்கும் படலத்துக்கு தான் நன்றி சொல்லனும்.
சரி இந்த பகுதியில் தான் கிடைக்கலை என்று வேறு வழியில்லாமல் மற்ற பகுதிகளிலும் தேடினோம். ஒரு முப்பது வீட்டை பார்த்து இருப்போம். அதில் மூன்றை வடிகட்டி அதில் எதில் சிறந்தது என்று தேர்ந்தெடுத்தோம். எங்களின் முதல் தேர்வு வீட்டு உரிமையாளருக்கு தான், அடுத்தது தண்ணி, பாம்பே கழிப்பிடம் (மூட்டு செத்தவங்கள் நிறைய வீட்டில் அப்ப அப்ப தங்குவாங்க) அந்த பகுதியின் சுற்றம் சில பகுதிகளில் திருட்டு அதிகம் இருக்கும், அதிக பேருந்துகள் நிற்கும் பேருந்து நிறுத்தம், அருகில் கடைகள், வீடு தேடும் போது நான் எது சிறந்த வீடு என்று கண்டறிய பயன்படுத்திய முதன்மை பட்டியல் இது தான்.
இதன்படி முதல் நான்கும் தேர்ந்தெடுத்த மூன்று வீடுகளுக்கும் இருந்தது. நான் வேலை செய்யும் இடத்திலிருந்து தொலைவு என்றாலும் (ஒப்பீட்டளவில் மற்ற இரு வீடுகளின் இருப்பிடத்தை விட) வாடகை குறைவாக இருந்ததும் வீடு பெரிதாக இருந்ததும் இந்த வீட்டை தேர்ந்தெடுக்க காரணமாகியது. பக்கத்தில் அதிக கடைகள் இல்லாதது என் பணத்திற்கு நல்லதாக பட்டது. பக்கத்தில் பேருந்து நிறுத்தம் இல்லாதது நிறைய பேர் அடிக்கடி வீட்டிற்கு வருவதை குறைக்கும் என்ற நம்பிக்கையை தந்தது.
என்னிடம் மகிழுந்து எதுவும் இல்லைங்க. அந்த நிழற்படம் முன்னாடி அங்க இருந்தவங்களோடது, பெரிய வீடு கட்டி அவங்க போயிட்டாங்க. என்னிடம் இருப்பது பைக் தான். என்ன இருந்தாலும் பழைய வீட்டு நினைவு போகவில்லை, இந்த இடம் பழகிப்போகலாம் ஆனால் பழைய இடத்து நினைவு போகாது. அப்பகுதியில் நல்ல வீடு கிடைத்தால் அங்கு குடியேறுவது உறுதி.

![]() |
புதிய வீடு |

வியாழன், மார்ச் 09, 2017
அமுக்குப் பிசாசு
நாங்க ஐந்து நண்பர்கள் சென்னையில் தங்கியிருந்தோம். நானும் இன்னொரு நண்பனும் எப்பவும் மொட்டை மாடியில் தூங்குவது தான் வழக்கம். அங்கிருந்து கொஞ்சம் தள்ளி இன்னொரு மாடி வீடு இருந்தது அந்த வீட்டுக்காரங்களின் அழகான கல்லூரி பொண்ணு காலையில் மாடிக்கு வந்து உடற்பயிற்சி செய்வா ஆனா அங்கிருந்து பார்த்தா நாங்க மாடியிலிருந்து அவளை பார்ப்பது தெரியாது, ஏன்னா எங்களது இரண்டு மாடி கட்டடம் அவங்களது ஒரு மாடி கட்டடம். சுற்றி மாடி கட்டடம் இல்லாதது எங்களுக்கு வசதியாக இருந்தது. அப்படியிருந்தாலும் நாங்க எச்சரிக்கையா ஒளிந்து இருந்து தான் பார்ப்போம். அவ போனதையும் நாங்களும் அறைக்கு போய் விடுவோம். அப்புறம் அவ அண்ணன் மேல வருவான் அவ அம்மா துணி காயப்போட வருவாங்க. இவங்கள் வந்தா எங்களுக்கென்ன வராட்டி எங்களுக்கென்ன.
என் மற்ற அறை நண்பர்களுக்கு இது தெரியும் ஆனா என்னை மாதிரி பொண்ணுங்களை கண்டால் வாயில் எச்சில் ஒழுகுபவர்கள் அல்ல அவர்கள் என்பதால் என் மாடி தூக்கத்துக்கு இடையூறு இல்லாமல் இருந்தது. இது கிட்டத்தட்ட ஓராண்டு நல்லா போய்க்கிட்டு இருந்தது.
இந்த சமயத்தில் தான் ஒரு நாள் நடு இரவில் என் முகத்தை அமுக்கிக்கிட்டது போல இருந்தது, திமிறினேன் யாரோ என் கையையும் காலையும் அமுக்கிட்ட மாதிரி இருந்தது என்னால எதுவும் செய்ய முடியவில்லை. சிறிது நேர போராட்டத்துக்கு பிறகு முழித்துக்கொண்டேன். சில்லுன்னு காத்து வீசியபோதும் என் முகம் உடம்பு முழுக்க வியர்வை. என் செப்பத்தின் (இதயம்) தேளை (லப் டப் என்னும் இதய ஒலி) ஒரு பர்லாங் தூரத்துக்கு கேட்பது மாதிரி அவ்வளவு சத்தமா அடிச்சிக்சி. என் நண்பனை பார்க்கிறேன் போர்வையை இழுத்துப்போர்த்தி குறட்டை விட்டு தூங்கிட்டு இருக்கான். உடனே அவனை எழுப்பி இவ்விடயத்தை சொன்னேன். அவனுக்கும் ஏதும் புரியவில்லை. உடனே போர்வையை சுருட்டிக்கிட்டு அறைக்கு வந்துவிட்டோம், அன்றைய இரவு என் தூக்கமே போச்சி. அன்றைக்கு அறைக்கு வரும் போது நான் சுடுகாட்டு பக்கம் இருந்து வந்தேன் அப்போது பிணம் எரிந்து கொண்டு இருந்ததை பார்த்தேன்.
மற்றவர்கள் பயப்படலாம் என்று இரவே கூற என்னை தடுத்து விட்டதால், விடிந்ததும் எனக்கு இரவு மொட்டை மாடியில் நடந்ததை கூறினேன். சுடுகாட்டில் பிணம் எரிவதை பார்த்ததால் கெட்ட கனவு வந்திருக்கும் என்றனர். ஆனா எனக்கு பயம் போகலை நான் மொட்டை மாடிக்கு போய் தூங்கமாட்டேன் என்று கூறிவிட்டேன். மாடியில் தூங்க இனி வரமுடியாது என்று கூறிவிட்டான். .இன்னொரு நண்பன் வீரமானவன் மனத்திடம் உள்ளவன் பேய், பிசாசு இதுக்கெல்லாம் பயப்படாதவன், நான் சொல்வதைக்கேட்டு கடுப்பாயிட்டான். இனிமே நான் உங்கூட மேல வந்து தூங்கறேன் எது வருது என்று பார்க்கலாம் என்றான். என்னால அந்த அழகு தேவதையை விடிந்ததும் பார்க்காம இருக்க முடியாது என்பதால் சரின்னு ஒத்துக்கொண்டேன்.
புதுசா மாடியில் தூங்க வந்த நண்பனோட என் தூக்கம் மாடியில் நான்கு மாதத்திற்கு நல்லா போயிக்கிட்டு இருந்தது. என் நண்பனுக்கும் எனக்கு நடந்த மாதிரியே பேய் அமுக்கிருச்சு. நெஞ்சாங்குலை படபடக்க உடம்பு வியர்த்து கொட்ட நன்றாக தூங்கிக் கொண்டிருந்த என்னை எழுப்பி நடந்ததை கூறி அறைக்கு போகலாம் என்றான். இரண்டு பேரும் பாயையும் போர்வையும் சுருட்டிக்கிட்டு அறைக்கு அடிச்சுக்க பிடிச்சுக்கன்னு ஓடிப்போனோம்.
விடிந்ததும், இரவு மொட்டை மாடியில் நடந்ததை எங்கள் அறையின் மிக திடமான மனதும் வலுவும் உடைய என் நண்பன் விளக்கினான். அவன் வரும் வழியில் சுடுகாடு எல்லாம் கிடையாது. நிறுவனத்திலிருந்து எங்கள் அறைக்கு அவன் வரும் சாலை மக்கள் நடமாட்டம் மிக்கது. அவனுக்கும் எனக்கு நடந்தது போலவே நடந்ததால் மாடியில் பிசாசு இருக்குன்னு முடிவு செய்தோம். துணி காயப்போட மாடிக்கு தான் போகனும். குறைந்தது மூன்று பேர் சேர்ந்து தான் மாடிக்கு போவோம். 9 மணிக்கு மேல தான் போவோம் ஐந்து அல்லது ஐந்தரை மணிக்கு துணி காய்ந்தாலும் காயாவிட்டாலும் அறைக்கு எடுத்து வந்து விடுவோம்.
இரண்டு வாரங்கள் கழித்து என் நண்பன் என்னை பார்க்க வந்தான். அவனிடம் எனக்கு நேர்ந்ததையும் என் நண்பனுக்கு நேர்ந்ததையும் கூறினேன். அவன் இத்தெருவின் கோட்டு வீட்டில் அதாவது கடைசியில் உள்ள வீட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இளம் பெண் தன் இரண்டு வயது குழந்தையை தலையணையால் அமுக்கி கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாகவும் அதுக்கு காரணம் தன் கணவனின் கள்ளக்காதல் தெரிந்ததால் என்றும் மாமியார் வீட்டு கொடுமை என்றும் பல விதமாக கூறுகிறார்கள் என்றும் அப் பெண் பேய் அமுக்கி இருக்கலாம் என்றும் கூறினான். நாங்க இங்க வந்து இன்னும் மூன்று மாதங்கள் ஆனா தான் இரண்டு ஆண்டு ஆகும் என்பதால் இவ்விபரம் எங்களுக்கு தெரியவில்லை. நிறைவேறா ஆசையுடனோ ஏமாற்றப்பட்டதாகவோ நினைக்கும் பெண்ணோ ஆணோ தற்கொலை செய்து கொண்டால் அவர்கள் பேயாக பிசாசாக திரிவார்கள் என்றும் அவர்கள் மற்றவர்களின் மூச்சை அடக்கி கொல்ல முயல்வதால் அப்பிசாசை அமுக்குப் பிசாசு என்று அழைப்பார்கள் என்று அவனின் ஆயா கூறியுள்ளதாகவும் கூறினான்
அமுக்குப் பிசாசிடம் இருந்து போராடி தப்பிய நாங்கள் ,சரி நான், இனி மாடிக்கு தூங்கப்போவோம் \வேன்? அழகு தேவதையை விடிந்ததும் பார்ப்பதை விட உயிர் முக்கியமில்லையா? வாடகைக்கு வீடு பார்க்கும் படலம் தொடங்கி விட்டது.

வெள்ளி, ஜனவரி 20, 2017
நுண்ணறிவு
பெரியபிள்ளை வசிக்கும் நகரம் சிற்றூர் ( கிராமம்) அல்ல. அதைவிடப் பெரியது ஆனால் நகரம் அல்ல. பேரூராட்சிக்கு ஒரு கிமீ தள்ளி உள்ள ஊர். வானம் பார்த்த பூமி என்பதால் விவசாயத்தை விட இங்கு கால்நடை வளர்ப்பதே முதன்மையான தொழில். வேளாண்மை என்று பார்த்தால் கால்நடைக்கான தீனி (சோளம்) வளர்ப்பது தான் முதன்மையாக இருக்கும். சோளத்தட்டு தான் மாடுகளுக்கான தீனி.
கொட்டாயில் தான் பெரியபிள்ளை இருந்தார். கொட்டாய் ஓடு வேயப்பட்டு வசிக்கும் படி வசதியாகத்தான் இருந்தது. மாடுகளை கட்டிவைக்கும் கட்டுத்தாரை அவங்க கொட்டாயில் இருந்து 100 அடி தூரத்தில் இருந்தது. தினமும் காலையிலும் மாலையிலும் பால் கறந்து வைப்பார் அதோடு மாட்டுக்கு தீனி போடுவதும் தண்ணி வைப்பதும் இவரது பணி, வேலையாள் வரவில்லை அல்லது அவருக்கு உடனே கவனிக்க வேண்டிய பணிகள் இருந்தால் இவர் மாட்டை மேய்ச்சலுக்கும் கூட்டிபோவார். 4 பசுக்களும் 3 எருமைகளும் அவர்களிடம் இருந்தன. 5 லிட்டர் எருமைப்பால் தேநீர் கடைக்கும் மீதி பால் அனைத்தும் கூட்டுறவு பால் சங்கத்துக்கும் போகும்.
அவங்க பக்கத்து கொட்டாயில் நாட்டு நாய் இருந்தது, அது இங்கும் வரும். அதற்கு சில முறை இவர் சோறு வைத்துள்ளார்.
எவ்வளவு நாள் தான் கொட்டாயிலேயே குடியிருப்பது? அதனால் பெரியபிள்ளை சாலைக்கு இப்புறமுள்ள வீட்டிற்கு குடி பெயர்ந்து விட்டாலும் கொட்டாயிக்கு போவதும் பால் கறப்பதும் நடந்து கொண்டு உள்ளது.
பக்கத்து கொட்டாய் நாய் இவர் கொட்டாயிலிருந்து பால் கறந்து விட்டு வீட்டுக்கு வரும் வரை கூடவே வரும். ஆனா வீட்டுக்கு வராது சாலையிலிருந்தே பார்க்கும் இவர் வீட்டுக்குள் சென்றதும் போய் விடும். சாலையில் இருந்து தோராயமா 100மீட்டர் தொலைவில் இவர் வீடு இருக்கும். இதை இவர் கவனித்ததே இல்லை. இப்படி நாய் இவருக்கு துணையாக வருவது இவருக்கு தெரியாது.கவனிச்சா தானே தெரிவதற்கு.
நாய் துணையாக வருவதை பக்கத்து வீட்டுக்கார பெண் பார்த்து விட்டு பெரியபிள்ளையிடம் கூறியுள்ளார். இப்பெண்ணுக்கு நாய் கட்டுத்தாரைக்கு பெரியபிள்ளைக்கு துணையாக போவது தெரியாது. பெரியபிள்ளை நாயை சில நாட்கள் கவனித்தபொழுது அது துணையாக இவருக்கு வருவது தெரிந்தது.சில வேளை சோறு போட்ட நன்றி கடனுக்காக துணையாக வருகிறது என்று நினைத்தார்.
பக்கத்து வீட்டுப் பெண் அக்கா அக்கா இந்த நாயை நாமளே இங்க வச்சுக்கிட்டா என்ன? என்று பெரியபிள்ளையின் வீட்டு வாசலலில் கேட்டுள்ளார். இதை நாய் பெரியபிள்ளையை வீட்டில் விட்டு செல்லும் முன் கேட்டார். சாலையிலிருந்தே இதை எப்படித்தான் நாய் கேட்டுச்சோ? வீட்டிலிருந்து தோராயமா 100மீட்டர் தொலைவில் சாலை இருக்கு என்பது நினைவு இருக்கட்டும்
அடுத்த நாளில் இருந்து பெரியபிள்ளைக்கு துணையாக நாய் எவ்விடத்திற்கும் வருவதில்லை.
ஞாயிறு, ஆகஸ்ட் 07, 2016
இடமாற்றம்
செந்தில்வேலவன் மாவட்ட அளவிலான பெரிய அரசு அதிகாரி. பல்வேறு காரணங்களால் இடமாற்றம் வேண்டியும் இடமாற்றம் கிடைக்கவில்லை. ஒன்பது மாதங்களாக இதற்கு பல வகைகளில் முயல்கிறார். இன்னும் ஓர் ஆண்டுக்கு இடமாற்றத்துக்கு வாய்ப்பில்லை என்று அறிந்து மனம் வெறுத்த நிலையில் கடைசி புகழிடமான முருகனை மனம் உருகி வேண்டிக்கொள்கிறார். இன்னும் முப்பது நாளைக்குள் இடமாற்றம் கிடைத்தால் அன்னதானம் செய்வதாக வேண்டிக்கொள்கிறார்.
ஆண்டுதோறும் நடக்கும்
சிறப்பு விழாவை கண்காணிக்கும் பொறுப்பு இவருக்கு தரப்படுகிறது. இவ்விழாவிற்கு நிறைய
கூட்டம் வரும் மேலும் மாவட்ட அளவில்லான பெரிய அதிகாரிகளும் மாவட்டத்தை சேர்ந்த சட்டமன்ற
உறுப்பினர்களும் அமைச்சரும் கலந்து கொள்வர். ஆளும் கட்சியின் பெரும் அரசியல் புள்ளிகள் கலந்து கொள்வதால் ஏதாவது ஏடாகூடமாக நடந்தால் பொறுப்பேற்க வேண்டி இருக்கும் என்பதால் இவ்விழா அதிகாரிகளின்
தீவிர கண்காணப்பில் நடக்கும்.
சிலைக்கு மாலை
அணிவித்தால் இடமாற்றம் அல்லது பதவி பறிப்பு போன்றவை நடக்கும் என்ற நம்பிக்கையால் எந்த
பெரிய அதிகாரியும் சட்டமன்ற உறுப்பினர்களும் சிலைக்கு மாலை அணிவிக்க மாட்டார்கள். இந்நம்பிக்கையை புறந்தள்ளி சிலைக்கு மாலை அணிவித்த
சில சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி பறிபோயுள்ளது (அடுத்த தேர்தலில்) அதிகாரிகள் இடமாற்றத்தைச்
சந்தித்துள்ளனர். அதனால் இந்நம்பிக்கை அதிகரித்தது.
செந்தில்வேலவனுக்கு
இந்நம்பிக்கை பற்றி மற்றவர்களால் சொல்லப்பட்டது. அவர் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும்
சிலைக்கு மாலை அணிவித்தார்.
திங்கள், பிப்ரவரி 08, 2016
பண்பாட்டு மாற்றம்
கிராமத்தில் உள்ள அத்தை வீட்டிற்கு மாரியம்மன் திருவிழாவுக்கு போயிருந்தேன். எட்டு ஊரு மக்களுக்கு அதான் மாரியாயி. மாரியம்மன் திருவிழா தான் அவங்க கொண்டாடும் பெரிய விழா. அதனால நிறைய சொந்தங்களையும் அழைத்திருந்தார்கள். நாடகம் போட்டிருந்தாங்க நாடகத்தில் அத்தை பையனுக்கு பெண் வேடம். நாடகம் முடிந்து வீட்டுக்கு வந்தோம் அந்த நேரத்திலயும் வீட்டில் பெண்கள் அரட்டை ஓயவில்லை. எப்பவும் இல்லாம இன்று மட்டும் கோம்பை ஆயாவிடம் உள்ள வேறுபாடு தெரிந்தது. தூங்கும் போது மண்டையை கசக்கியும் அது என்னான்னு தெரியலை.
எல்லோரும் அத்தை வீட்டை விட்டு கிளம்பிட்டோம். ஆனா எனக்கு கோம்பை ஆயாவின் வேறுபாடு குறித்து ஒரே சிந்தனை. மூன்று நாள் கழித்து கண்டுபிடித்து விட்டேன். அதாவது கோம்பை ஆயா மார்புக்கச்சையாகிய சா(ஜா)க்கெட் அணிந்திருந்தார். அவர் வயது ஒத்த மற்ற ஆயாக்களிடம் மார்புக்கச்சை அணியும் பழக்கம் இல்லை. பதில் சொல்ல தகுதியான என் ஆயாவிடம் கோம்பை ஆயாவின் வேறுபாட்டைப் பற்றி கேட்டேன்.
கோம்பை தாத்தா திருமணத்துக்கு முன் மலேசியாவில் வேலை செய்துள்ளார். திருமணத்திற்கு இரண்டு ஆண்டுகள் முன்பே தாயகம் வந்துள்ளார். இங்குள்ள விவசாய நிலத்தை கவனித்துக்கொண்டு இனி மலேசியா போகும் எண்ணமில்லைன்னு சொல்லியிருக்கார்.
அவரின் சொந்தங்களும் பெண் தேடும் படலத்தை ஆரம்பித்தனர். பெண் வீட்டாரிடம் மாப்பிளையின் முடிவை சொல்லி பெண் கேட்டு அது திருமணத்தில் முடிந்து விட்டது.
கோம்பை ஆயாவுக்கு திருமணமான மூன்று ஆண்டுகளில் கோம்மை தாத்தாவுக்கு இங்க உள்ள விவசாய வருமானம் போதாம மலேசியாவுக்கு கூப்பிட்டாராம். அங்க எசுட்டேட்டில் தான் வேலை ஆனா வரும்படி அதிகம். கோம்பை தாத்தாவை நேரில் பார்த்ததில்லை நான் பிறக்கும் முன்பே சிவலோக பதவியை அடைந்துவிட்டார்.
மார்புக்கச்சை எனப்படும் சா(ஜா)க்கெட் அணியும் பழக்கம் அக்கால எம்குலப் பெண்களுக்கு கிடையாது. ஆனால் மலேசியாவிற்கு வானூர்தியிலோ கப்பலிலோ செல்லவேண்டுமானால் மார்புக்கச்சை அணிந்தாக வேண்டும். கோம்பை ஆயா அணியமுடியாது என்று பிடிவாதமாக இரண்டு ஆண்டு தாக்குபிடித்துள்ளார். பின் சொந்தங்களின் அறிவுரையின் (வற்புறுத்தலின்) பேரில் பிடிவாதம் தளர்ந்து மார்பு கச்சை அணிந்து கொள்ள ஒப்புக்கொண்டு மலேசியாவிலேயே 30 ஆண்டுகள் இருந்து விட்டு இனி அந்த ஊர் போதும் என்று விட்டு தாயகம் வந்துவிட்டார்.
இப்ப பழக்கத்தால் சா(ஜா)க்கெட் போடுகிறார். பண்பாடு அல்லது உடை பழக்கம் எப்படி மாறுதுண்ணு பாருங்க.
கொசுறு - எங்க பக்க ஆயாக்கள் படத்தில் உள்ளது போல் தான் இருப்பாங்க. என் ஆயா காலத்து ஆட்களுக்கு நெற்றியில் ஈறுகுச்சி போல (மூக்கிலுருந்து தலை வகுடு வரை) பச்சை குத்தப்பட்டிருக்கும். சில பேர் கையில் வித விதமாக பச்சை குத்தப்பட்டிருக்கும்.
(படங்கள் உதவி - கூகுள், பிளிக்கர்)
எல்லோரும் அத்தை வீட்டை விட்டு கிளம்பிட்டோம். ஆனா எனக்கு கோம்பை ஆயாவின் வேறுபாடு குறித்து ஒரே சிந்தனை. மூன்று நாள் கழித்து கண்டுபிடித்து விட்டேன். அதாவது கோம்பை ஆயா மார்புக்கச்சையாகிய சா(ஜா)க்கெட் அணிந்திருந்தார். அவர் வயது ஒத்த மற்ற ஆயாக்களிடம் மார்புக்கச்சை அணியும் பழக்கம் இல்லை. பதில் சொல்ல தகுதியான என் ஆயாவிடம் கோம்பை ஆயாவின் வேறுபாட்டைப் பற்றி கேட்டேன்.
கோம்பை தாத்தா திருமணத்துக்கு முன் மலேசியாவில் வேலை செய்துள்ளார். திருமணத்திற்கு இரண்டு ஆண்டுகள் முன்பே தாயகம் வந்துள்ளார். இங்குள்ள விவசாய நிலத்தை கவனித்துக்கொண்டு இனி மலேசியா போகும் எண்ணமில்லைன்னு சொல்லியிருக்கார்.
அவரின் சொந்தங்களும் பெண் தேடும் படலத்தை ஆரம்பித்தனர். பெண் வீட்டாரிடம் மாப்பிளையின் முடிவை சொல்லி பெண் கேட்டு அது திருமணத்தில் முடிந்து விட்டது.
மார்புக்கச்சை எனப்படும் சா(ஜா)க்கெட் அணியும் பழக்கம் அக்கால எம்குலப் பெண்களுக்கு கிடையாது. ஆனால் மலேசியாவிற்கு வானூர்தியிலோ கப்பலிலோ செல்லவேண்டுமானால் மார்புக்கச்சை அணிந்தாக வேண்டும். கோம்பை ஆயா அணியமுடியாது என்று பிடிவாதமாக இரண்டு ஆண்டு தாக்குபிடித்துள்ளார். பின் சொந்தங்களின் அறிவுரையின் (வற்புறுத்தலின்) பேரில் பிடிவாதம் தளர்ந்து மார்பு கச்சை அணிந்து கொள்ள ஒப்புக்கொண்டு மலேசியாவிலேயே 30 ஆண்டுகள் இருந்து விட்டு இனி அந்த ஊர் போதும் என்று விட்டு தாயகம் வந்துவிட்டார்.
இப்ப பழக்கத்தால் சா(ஜா)க்கெட் போடுகிறார். பண்பாடு அல்லது உடை பழக்கம் எப்படி மாறுதுண்ணு பாருங்க.
கொசுறு - எங்க பக்க ஆயாக்கள் படத்தில் உள்ளது போல் தான் இருப்பாங்க. என் ஆயா காலத்து ஆட்களுக்கு நெற்றியில் ஈறுகுச்சி போல (மூக்கிலுருந்து தலை வகுடு வரை) பச்சை குத்தப்பட்டிருக்கும். சில பேர் கையில் வித விதமாக பச்சை குத்தப்பட்டிருக்கும்.
(படங்கள் உதவி - கூகுள், பிளிக்கர்)
திங்கள், ஏப்ரல் 01, 2013
முள்கரண்டி
பிறந்து வளர்ந்து படித்தது கொசப்பள்ளம் என்னும் சிற்றூர் ஒன்றில். கப்பி சாலையை ஒட்டி எங்க வீடு இருந்தது. 6 எக்டேர் கிணற்று பாசனமுடைய எங்க தோட்டத்தில் தான் வீடு கட்டியிருந்தோம். எங்கவூட்டுக்கு பெரியசாளை அப்படின்னு பெயர். பெரியசாளை வூட்டு பையன் அப்படின்னு தான் என்னை அடையாளம் சொல்லுவாங்க. ஊரிலிருந்து 2 தோட்டத்தை தாண்டுனா எங்க வீடு வந்துடும். எங்கவூரில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள மற்றொரு சிற்றூரான தருமாபாளையத்தில் தான் நான் படிச்ச துவக்கப்பள்ளி இருந்தது. அது தான் பக்கத்தில் இருந்த ஐந்து சிற்றூர்களுக்கான ஒரே பள்ளிக்கூடம். அங்க பெட்டிக்கடை, பால் கூட்டுறவு சங்கம் எல்லாம் உண்டு. இப்ப பெட்டிக்கடைல டீயும் போடறாங்க. மளிகை கடை அங்க இல்லை.
உயர்நிலைப்பள்ளி இருந்த ஊரில் தான் மளிகை கடை இருக்குது. நான் 9 வது படித்த போது அது மேல்நிலைப்பள்ளியாக உயர்வடைந்த காரணத்தால் என் பன்னிரண்டாவதும் அங்கே தான். எனக்கு மிதிவண்டி கிடைத்தது இங்க படிக்க வந்த பிறகு தான். ஏழாவது படிக்கும் போது வாங்கி கொடுத்தாங்க. ஆறாவது படிக்கறப்ப நடை இல்லாட்டி யார் வண்டியிலயாவது தொத்திக்கிட்டு போவேன்.
பணக்காரர்கள் போகும் உணவகங்களில் அதாவது பெரிய உணவகங்களில் திங்கறவங்க கரண்டி, முள் கரண்டி எல்லாம் வச்சு தான் தின்பார்கள். கையால உணவை தொடுவது அரிதாக இருக்கும், இதை திரைப்படத்தில் தான் பார்த்திருக்கேன். எங்கவூர் பக்கமும் நிறைய பணக்காரர்கள் உண்டு ஆனால் அவர்கள் விவசாயத்தால் பணக்காரர்கள் ஆனவர்கள். எங்கவூர் அதாவது பக்கத்து நகரத்திலுள்ள (அதை பெரிய சிற்றூர் என்பதே பொருத்தம்) உணவகம் எதிலும் முள் கரண்டியை நான் பார்த்ததில்லை. அந்த ஊரில் சில உணவகங்கள், ஒரு திரையரங்கு எல்லாம் இருக்கு. எங்க ஊரில் மாரியம்மன் நோம்பி (திருவிழா) போடும் போது நான் திரையரங்கு செல்ல அனுமதி கிடைக்கும். பக்கத்து தோட்டத்தில் உள்ள அண்ணனுடன் திரைப்படத்துக்கு போவேன். அந்த திரையரங்குங்குக்கு சிவசக்தி டாக்கீசு என்று பெயர். அதில் எப்பவும் பழைய படங்கள் தான் போடுவார்கள். இப்ப அங்க இன்னொரு திரையரங்கம் வந்திடுச்சு அதில் புது படத்தையும் போடறாங்க.
திரைப்படங்களில் உள்ளது போல் நானும் முள் கரண்டியை வைத்து தின்று பார்க்கவேண்டும் என்ற ஆசை உண்டானது. ஆண்டுகள் ஆனது தான் மிச்சம் என் முள் கரண்டி ஆசை நிறைவேறவில்லை. திங்கறத விடுங்க பார்க்க கூட எனக்கு கொடுப்பினை இல்லை. ஒரு முறை பெரிய நகருக்கு செல்லும் வாய்ப்பும் அங்கு உள்ள பெரிய உணவகத்துக்கு செல்லும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால் அங்கேயும் முள் கரண்டியை காணல. இருந்தாலும் மனசில் முள்ளு மாதிரி முள்கரண்டிய பார்க்கனும் அதால திங்கனும் என்பது குத்திக்கிட்டே இருந்தது.
பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஊரிலேயே படித்ததால் முள் கரண்டி ஆசை நிறைவேற வாய்ப்பில்லாமல் போய்விட்டது. பன்னிரெண்டாவதில் நல்ல மதிப்பெண்கள் பெற்றதால் பெரிய நகரின் நல்ல கல்லூரியில் இடம் கிடைத்தது. இதனால் வீட்டில் எல்லோருக்கும் மகிழ்ச்சி எனக்கு முள் கரண்டி ஆசை நிறைவேறும் என்று கூடுதல் மகிழ்ச்சி.
கல்லூரி இருந்தது நகரை விட்டு சற்று தொலைவில். நாங்கள் அறை எடுத்து தங்கியிருந்தது புறநகர் பகுதியில் அதனால் பேருந்தில் தான் கல்லூரிக்கு போகமுடியும். ஊர்ல இருந்தப்ப மரத்தில் இருந்து இறக்கியதும் கிடைக்கும் கள்ளை குடிப்பேன், வெளியில் வாங்கி குடிக்கும் பழக்கம் இல்லை, மரத்திலிருந்து இறக்கியதும் குடிக்கற கள்ளுக்கு ருசியே தனி தான். வெளிநாட்டு மது பழக்கம் சுத்தமாக இல்லை. இப்ப மாதிரி குடிமக்கள் நலனில் அக்கறை உள்ள அரசாங்கம் அப்ப இல்லை. கல்லூரியில் சேர்ந்த சில மாதங்களுக்குப் பிறகு வெளிநாட்டு மது குடிக்கும் பழக்கம், சிகரெட்டு பழக்கம் வந்தது. நான் குடிகாரன்னு முடிவு கட்டாதிங்க, நண்பர்கள் பிறந்தநாளுக்கு அவர்களுடன் அதை கொண்டாட மது குடிப்பேன், சிகரெட்டும் அப்பதான் புகைப்பேன். மற்றபடி வேற எந்த கொண்டாடத்திலும் மது, புகையை தொடும் பழக்கம் இல்லை. கல்லூரிக்கு வந்துட்டு இதெல்லாம் இல்லைன்னா நாம கல்லூரியில் படிச்சோம்முன்னு சொல்றது கேவலம் இல்லையா அதுக்காக தான் நண்பர்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மட்டும் . ஆனால் முள் கரண்டி ஆசை மட்டும் நிறைவேறாமல் இருந்தது.
நிறைய வீடுகள், கடைகள் என்று நாங்க இருந்த பகுதி நல்ல வளர்ச்சி கண்டது. கல்லூரியில் சேரும் போது இருந்த அப்பகுதிக்கும் கல்லூரி படிப்பு முடிந்த போது அப்பகுதிக்கும் உள்ள வேறுபாடு நினைக்க முடியாத அளவு இருந்தது. வளர்ச்சின்னா இதுதாண்டா வளர்ச்சி என்று சொல்லற மாதிரி இருந்தது.
எங்க பேருந்து நிறுத்தத்தில் இருந்து 2 கிமீ தொலைவில் நல்ல உயர்தர உணவகமும் வந்தது. பேருந்தில் போகும் அந்த உணவகத்தை தாண்டி தான் கல்லூரிக்கு போகனும். அதனால் அதை கவனிப்பதுண்டு. அங்கு வருபவர்கள் கார்களிலும் மோட்டார் சைக்கிளிலும் வருவார்கள். முதல் ஓராண்டு நாங்கள் போகவில்லை. மது புகை பழக்கம் இல்லாத நண்பனின் பிறந்தநாளை கொண்டாட முடிவு செய்து அவனும் பங்கு கொள்ளும் விதத்தில் எங்கு கொண்டாடலாம் என்று யோசித்தப்ப இந்த உணவகத்தில் மதிய உணவு உட்கொண்டு பின் திரைப்படத்திற்கு செல்வது என்று முடிவாகியது.
நான் வருவதற்கு சிறிது நேரமானதால் பசி பொறுக்காம (என்னை விட்டுட்டு போயிட்டாங்கன்னு சொன்னா என் மரியாதைக்கு இழுக்கு ;) ) என் நண்பர்கள் அந்த உணவகத்திற்கு மதிய உணவுக்கு சென்று விட்டார்கள். நான் அங்கு போனபொழுது 2 பேர் தின்னுட்டு வெளியேவே வந்துட்டானுங்க. வேகம் என்றால் இதுவல்லவோ வேகம். எனக்கு என்ன வாங்கி தின்பது என்று தெரியவில்லை (முன்ன பின்ன செத்திருந்தா தானே சுடுகாடு தெரியும்) எனவே தின்னுட்டு நிக்கறவங்கிட்ட (உணவகத்துக்குள்ளயே) என்னடா திங்கறதுன்னு கேட்டேன். அறிவாளி அவன் தின்ன உணவையே எனக்கும் கொண்டுவர சொல்லிட்டு வெளிய போயிட்டான்.
முதலில் பீங்கான் தட்டு வந்தது அடுத்து அடுத்து அடுத்து என் கனவான சிறு வயது முதல் இருந்த ஆசையான 'முள்கரண்டி' வந்தது. அப்போது என் உணர்ச்சியை விவரிக்க சரியான சொற்களே இல்லை. கரண்டி, கத்தி, முள்கரண்டி மூன்றையும் ஒன்றாக தான் கொண்டுவந்தது வைத்தார்கள். 5 நிமிடத்தில் சுடசுட கோழி பிரியாணியும் சிக்கன்-65ம் வந்தது. கூடவே சிக்கலும். எனக்கு முள்கரண்டியை வைத்து திங்க தெரியலை. என் நிலைமை மாதிரி கொடுமை யாருக்கும் வரக்கூடாது என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். பக்கத்து மேசையில் தின்பவர்களை பார்த்து நான் முயற்சி செய்தாலும் என்னால் சரியாக முள்கரண்டியை பயன்படுத்த முடியலை (தெரியவில்லை). 10 வயசு சின்னப்பசங்க எல்லாம் முள்கரண்டிய வைத்து அழகா எடுத்து திங்கறாங்க அது என் வேதனையை மேலும் அதிகமாக்கியது. 10 நிமிடம் நான் சிரமப்பட்டதை பார்த்து ஆண்டவன் என் (இவன் வெளியில் இருந்து வந்து சில பொருட்களை வாங்க வந்தவன் அதாவது என் பர்சு) நண்பனை நான் இருக்கும் பக்கம் அனுப்பினான். அவனிடம் முள்கரண்டியை வைத்து எப்படிடா தின்னைங்கன்னு கேட்டேன் (அவனுங்களும் முள் கரண்டியில் இதற்கு முன் தின்றிறுக்க மாட்டார்கள் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை) முள்கரண்டியை வைத்து யாரும் திங்கலை நமக்கு கைதான், முள்கரண்டியை தூக்கி போட்டுட்டு கையால தின்னு என்று சொல்லிட்டு போயிட்டான்.
அப்ப தான் என் மனம் அமைதியடைந்தது. முள்கரண்டியை தூக்கி போட்டுட்டு பிரியாணியையும் சிக்கன்-65ம் நல்லா கட்டிட்டு வெளியே வந்து பீடா போட்டுட்டு அறைக்கு போனோம்.
என் முள்கரண்டி ஆசை இப்படி சோகமா முடிஞ்சிருச்சுங்க.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)