வணக்கம்
வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?
நாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, ஜனவரி 20, 2017
நுண்ணறிவு
பெரியபிள்ளை வசிக்கும் நகரம் சிற்றூர் ( கிராமம்) அல்ல. அதைவிடப் பெரியது ஆனால் நகரம் அல்ல. பேரூராட்சிக்கு ஒரு கிமீ தள்ளி உள்ள ஊர். வானம் பார்த்த பூமி என்பதால் விவசாயத்தை விட இங்கு கால்நடை வளர்ப்பதே முதன்மையான தொழில். வேளாண்மை என்று பார்த்தால் கால்நடைக்கான தீனி (சோளம்) வளர்ப்பது தான் முதன்மையாக இருக்கும். சோளத்தட்டு தான் மாடுகளுக்கான தீனி.
கொட்டாயில் தான் பெரியபிள்ளை இருந்தார். கொட்டாய் ஓடு வேயப்பட்டு வசிக்கும் படி வசதியாகத்தான் இருந்தது. மாடுகளை கட்டிவைக்கும் கட்டுத்தாரை அவங்க கொட்டாயில் இருந்து 100 அடி தூரத்தில் இருந்தது. தினமும் காலையிலும் மாலையிலும் பால் கறந்து வைப்பார் அதோடு மாட்டுக்கு தீனி போடுவதும் தண்ணி வைப்பதும் இவரது பணி, வேலையாள் வரவில்லை அல்லது அவருக்கு உடனே கவனிக்க வேண்டிய பணிகள் இருந்தால் இவர் மாட்டை மேய்ச்சலுக்கும் கூட்டிபோவார். 4 பசுக்களும் 3 எருமைகளும் அவர்களிடம் இருந்தன. 5 லிட்டர் எருமைப்பால் தேநீர் கடைக்கும் மீதி பால் அனைத்தும் கூட்டுறவு பால் சங்கத்துக்கும் போகும்.
அவங்க பக்கத்து கொட்டாயில் நாட்டு நாய் இருந்தது, அது இங்கும் வரும். அதற்கு சில முறை இவர் சோறு வைத்துள்ளார்.
எவ்வளவு நாள் தான் கொட்டாயிலேயே குடியிருப்பது? அதனால் பெரியபிள்ளை சாலைக்கு இப்புறமுள்ள வீட்டிற்கு குடி பெயர்ந்து விட்டாலும் கொட்டாயிக்கு போவதும் பால் கறப்பதும் நடந்து கொண்டு உள்ளது.
பக்கத்து கொட்டாய் நாய் இவர் கொட்டாயிலிருந்து பால் கறந்து விட்டு வீட்டுக்கு வரும் வரை கூடவே வரும். ஆனா வீட்டுக்கு வராது சாலையிலிருந்தே பார்க்கும் இவர் வீட்டுக்குள் சென்றதும் போய் விடும். சாலையில் இருந்து தோராயமா 100மீட்டர் தொலைவில் இவர் வீடு இருக்கும். இதை இவர் கவனித்ததே இல்லை. இப்படி நாய் இவருக்கு துணையாக வருவது இவருக்கு தெரியாது.கவனிச்சா தானே தெரிவதற்கு.
நாய் துணையாக வருவதை பக்கத்து வீட்டுக்கார பெண் பார்த்து விட்டு பெரியபிள்ளையிடம் கூறியுள்ளார். இப்பெண்ணுக்கு நாய் கட்டுத்தாரைக்கு பெரியபிள்ளைக்கு துணையாக போவது தெரியாது. பெரியபிள்ளை நாயை சில நாட்கள் கவனித்தபொழுது அது துணையாக இவருக்கு வருவது தெரிந்தது.சில வேளை சோறு போட்ட நன்றி கடனுக்காக துணையாக வருகிறது என்று நினைத்தார்.
பக்கத்து வீட்டுப் பெண் அக்கா அக்கா இந்த நாயை நாமளே இங்க வச்சுக்கிட்டா என்ன? என்று பெரியபிள்ளையின் வீட்டு வாசலலில் கேட்டுள்ளார். இதை நாய் பெரியபிள்ளையை வீட்டில் விட்டு செல்லும் முன் கேட்டார். சாலையிலிருந்தே இதை எப்படித்தான் நாய் கேட்டுச்சோ? வீட்டிலிருந்து தோராயமா 100மீட்டர் தொலைவில் சாலை இருக்கு என்பது நினைவு இருக்கட்டும்
அடுத்த நாளில் இருந்து பெரியபிள்ளைக்கு துணையாக நாய் எவ்விடத்திற்கும் வருவதில்லை.
வியாழன், ஆகஸ்ட் 12, 2010
நீதி கதை- நாயும் கழுதையும்
ஒரு ஊர்ல இருந்த சலைவைத்தொழிலாளி ஒரு நாயையும் கழுதையையும் வளர்த்து வந்தான். நாயிக்கு சலவைத் தொழிலாளி மேல் கோபம். என்னடான்னு கேக்கறீங்களா? அது சில முறை முதலாளி மேல் தொழிலாளி படுவானே அந்த மாதிரியான கோபம்.
எந்த மாதிரி?
கதை சொல்றப்ப குறுக்க பெரியமனுசனாட்டம் பேசக்கூடாது. சொன்னா இம் போட்டு கேட்டுக்கனும்.
ஒரு நாள் சலைவைத்தொழிலாளி நல்லா தூங்கி கிட்டு இருக்கறப்ப ஊர் சனத்து துணியை துவச்சு அவன் சேர்த்து வைச்சிருக்கற காசையெல்லாம் ஆட்டைய போடலாம்ன்னு ஒரு திருடன் வந்தான்.
அவனென்ன உங்களை மாதிரியா தினம் சம்பாதிக்கிற காச வங்கியில் போட.
திருடன கண்டா அதாவது நடு நசில தெரியாதவன் வீட்டுக்கு வந்தா நாய் என்ன பண்ணனுமோ அத பண்ணல. ஏன்னா அதுக்கு தான் முதலாளி மேல் கோபமாச்சே. அதுக்காக கடமை தவறுவதா என்று கடுப்பான கழுதை நாமாவது முதலாளியை எழுப்புவோம்னு நினைச்சி கத்துச்சு. கழுதை கத்தற சத்தம் கேட்டு முதலாளி முழுச்சிட்டாரு. பார்த்தா நாய் சும்மா இருக்கு கழுதை கத்திக்கிட்டு இருக்கு, அவருக்கு சரியான கோவம். பின்ன நடு நசில நல்ல தூக்கத்தில் இருக்கும் போது கழுதை சத்துத்தால தூக்கம் கெட்டா கோவம் வருமா வராதா. பக்கத்தில் கிடந்த கட்டைய எடுத்து கழுதை மண்டைல ஒரு போடு போட்டு கத்துன பாருன்னுட்டு தூங்கப்போயிட்டார். பாவம் கழுதை நல்லது பண்ண போயி மண்டைல அடி வாங்கினது தான் மிச்சம்.
நீதி :-- அடுத்தவன் வேலை செய்யலையே நிறுவனத்துக்கு நட்டம் வந்துடுமேன்னு அடுத்தவன் வேலையை நாம செய்யக்கூடாது. நம்ம வேலையை மட்டும் ஒழுங்கா செஞ்சாப்போதும்.
மேலுள்ள கதை முடிவு இப்படியும் இருக்கலாம்.
கழுதை சத்தம் கேட்டு முழிச்ச முதலாளி திருடன் ஓடுவதை பார்த்தார். நல்ல வேலை கழுதை கத்தினதால திருடன் ஓடிட்டான் நம்ம பணம் தப்பிச்சுதுன்னு கழுதை மேல் பாசம் அதிகமாயிடுச்சி. கழுதைக்கு நல்ல தீனியா போட்டார். கொஞ்சம் கொஞ்சமா நாயோட வேலையெல்லாத்தையும் கழுதை மேல கட்டிட்டார். பாவம் கழுதை. நாய் நல்லா தின்னுட்டு ஒரு வேலையும் செய்யாம இருந்தது.
நீதி :-- அடுத்தவன் வேலை செய்யலையே நிறுவனத்துக்கு நட்டம் வந்துடுமேன்னு அடுத்தவன் வேலையை நாம செய்யக்கூடாது. நம்மல பாராட்டுரேன்னுட்டு அடுத்தவன் வேலையையும் நம்ம தலையிலேயே கட்டிடுவாங்க.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)