வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?

சனி, ஜூலை 27, 2019

கழுத்தில், கழுத்தின் மேல் மற்றும் ஊடுறுவு On neck, In neck, Thrust pattern

கழுத்து மேல், கழுத்தில் மற்றும் ஊடுறுவு என்ற மூன்று ஒழுங்குகளும் கரடி ஒழுங்குகளே.  அவைகளுக்கிடையே சிறு வேறுபாடே உண்டு.

கழுத்து மேல்  என்பதில்  முன்னாடி உள்ள  உலக்கையின்   கீழ் குச்சியின்  (அன்று அது தான் குறை\கீழ் விலை) இறுதியிலேயே அடுத்த நாளின் முடிவு இருக்கும். முதல் நாளின் குறை விலையை இந்நாளின் அதிக விலை மீறாது.

கழுத்தில்  முதல் நாளின் குறை விலையை இந்நாளின் அதிக விலை மீறும்.

ஊடுறுவில்  உடலை அடுத்த நாள் உடல் தொடும் ஆனால் பாதியை தாண்டாது , தாண்டினால் அது துழை ஆகி விடும். 

கழுத்தின் மேல்
இது  ஈருலக்கை  ஒழுங்காகும். இதற்கு கருப்பு, வெள்ளை என்ற  இரு உடல்கள்  தோன்றும். எப்படி இருந்தா கழுத்து மேல் என்று கூறுவோம்?

  • முதலில் இறங்கு முக  போக்கு இருக்கனும்.
  • இரண்டாவதாக பெரிய கருப்பு நிற உடல்  தோன்றனும்.
  • மூன்றாவதாக வெள்ளை உடல் கருப்பு உடலுக்கு அடுத்து தோன்றனும்.
  • நான்காவதா கருப்பு உலக்கையின் குறை\கீழ் விலையை வெள்ளை உடலின் முடிவு தொடனும் ஆனா அதை விட அதிகமாக இருக்கக்கூடாது. வெள்ளை உடலுக்கு மேல் குச்சி இருக்கக்கூடாது.
  • கருப்பு உடல் பெரியதாகவும் வெள்ளை உடல் அதை விட சிறியதாகவும் இருக்க வேண்டும்.
வெள்ளை உடலுக்கும் அடுத்த நாள் தோன்றும் உடலுக்கும் இடைவெளி இருந்தால் இறங்கு முக போக்கு தொடரும் என கணிக்கலாம்.

ஏன் இறங்கு முக போக்கு தொடரும் என்று  நினைக்கறாங்க?

முதல் நாள் உலக்கையின் நிறம் கருப்பு இது இறங்கு முக போக்கு தொடருவதை காட்டுது அடுத்த நாள் காளையின்  வெள்ளை உடல் தோன்றினாலும் அது கருப்பு உடல் நாளின் குறை\கீழ் விலையை மீறவில்லை. இது இறங்கு முக போக்கு தொடருவதை காட்டுகிறது.

கழுத்தில்
இது  ஈருலக்கை  ஒழுங்காகும். இதற்கு கருப்பு, வெள்ளை என்ற  இரு உடல்கள்  தோன்றும். எப்படி இருந்தா கழுத்தில் என்று கூறுவோம்?

  • முதலில் இறங்கு முக  போக்கு இருக்கனும்.
  • இரண்டாவதாக பெரிய கருப்பு நிற உடல்  தோன்றனும்.
  • மூன்றாவதாக வெள்ளை உடல் கருப்பு உடலுக்கு அடுத்து கீழாக தோன்றனும்.
  • நான்காவதாக கருப்பு உடல் உலக்கையின் உடலின் முடிவை வெள்ளை உடலின் முடிவு தொடனும், கொஞ்சூண்டு மேலயோ கீழயோ  இருக்கலாம்.  
  • கருப்பு உடல் பெரியதாகவும் வெள்ளை உடல் கருப்பு உடலை விட சிறியதாகவும் இருக்க வேண்டும்.
வெள்ளை உடலுக்கும் அடுத்த நாள் தோன்றும் உடலுக்கும் இடைவெளி இருந்தால் இறங்கு முக போக்கு தொடரும் என கணிக்கலாம்.

ஏன் இறங்கு முக போக்கு தொடரும் என்று  நினைக்கறாங்க?

முதல் நாள் உலக்கையின் நிறம் கருப்பு இது இறங்கு முக போக்கு தொடருவதை காட்டுது அடுத்த நாள் காளையின்  வெள்ளை உடல் தோன்றினாலும் அது கருப்பு உடல் நாளின் முடிவை மீறவில்லை. இது இறங்கு முக போக்கு தொடருவதை காட்டுகிறது.

ஊடுறுவு
இது  ஈருலக்கை  ஒழுங்காகும். இதற்கு கருப்பு, வெள்ளை என்ற  இரு உடல்கள்  தோன்றும். எப்படி இருந்தா கழுத்து மேல் என்று கூறுவோம்?

  • முதலில் இறங்கு முக  போக்கு இருக்கனும்.
  • இரண்டாவதாக பெரிய கருப்பு நிற உடல்  தோன்றனும்.
  • மூன்றாவதாக வெள்ளை உடல் கருப்பு உடலுக்கு அடுத்து கீழாக தொடங்கனும்.
  • நான்காவதா கருப்பு உடல் உலக்கையின் முடிவுக்கு மேல் வெள்ளை உடலின் முடிவு இருக்கனும் ஆனா கருப்பு உடலின் பாதிக்கும் மேல் (50%)  போகக்கூடாது. அப்படி போனா அது துழை ஆகிவிடும்.
வெள்ளை உடலுக்கும் அடுத்த நாள் தோன்றும் உடலுக்கும் இடைவெளி இருந்தால் இறங்கு முக போக்கு தொடரும் என கணிக்கலாம்.

ஏன் இறங்கு முக போக்கு தொடரும் என்று  நினைக்கறாங்க?

முதல் நாள் உலக்கையின் நிறம் கருப்பு இது இறங்கு முக போக்கு தொடருவதை காட்டுது அடுத்த நாள் காளையின்  வெள்ளை உடல் தோன்றினாலும் அது கருப்பு உடல் நாளின் பாதியை தாண்ட முடியாததால் இறங்கு முக போக்கு தொடருவதை உணரலாம்.

கருத்துகள் இல்லை: