வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



திங்கள், மார்ச் 27, 2017

தொழிற்நுட்ப பதிவு இழுத்து மூடு (Shutdown) & இயக்கு தளத்தை நிறுவு (Install OS)

என்னிடம் விண்டோசு 7 இருக்கு. அது வாங்கி கிட்ட திட்ட 4 ஆண்டுகள் ஆகிறது. இழுத்து மூடுன்னு (Shut down) கட்டளை கொடுத்தால் ஒரு நிமிடத்தில் கட்டளையை நிறைவேற்றியது தோராயமா 4 நிமிடம் எடுத்துக்க ஆரம்பித்தது.  என்னடா இதுன்னு 4 நிமிடம் எடுத்துக்க ஆரம்பித்த காலத்துக்கு  ஒரு மாத காலத்துக்கு முந்தி நிறுவிய  அனைத்து மென்பொருட்களையும் கணினியிலிருந்து நீக்கினேன்.  அதுவும் வேலைக்கு ஆகலை. சரின்னு கூகுளாண்டவரை தஞ்சம் அடைந்தேன்.  முதலில்


Performing a Clean Boot:
  • Type msconfig in the searchbox
  • Click msconfig in the search results
  • Click the General tab, and click Selective Startup
  • Under Selective Startup uncheck Load Startup items
  • Click the Services tab, check the Hide all Microsoft Services box, and then click Disable All
  • Click OK, and when you are prompted, click Restart.
என்று இருந்ததை முயன்று பார்த்தேன். பழைய கதை தான் அதனால்  மீண்டும்  கூகிள்  செய்தேன்.

 HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\Session Manager\Memory Management     என்ற இடத்திற்கு செல் பின் ClearPageFile என்பதன் மதிப்பு 1 ஆக இருந்தால் அதை 0 என்று மாற்று என்று இருந்தது, அதேமாதிரியே 1 என்று இருந்ததை 0 என்று மாற்றியதும் இழுத்து மூடுவது 15~-20 விநாடிகள் தான் எடுத்தது.


மேலும்  HKEY_LOCAL_MACHINE\System\CurrentControlSet\Contro l\
Highlight the value WaitToKillServiceTimeout   மதிப்பை 1000 ஆக்கு என்று இருந்தது என்னுடையது 12,000
ன்று இருந்தாலும் அதை நான் செய்யவில்லை

என்னிடம் உபுண்டு இயக்கு தளத்துடன் இன்னொரு கணினி உள்ளது. அதை உபுண்டு 14.04  இலிருந்து 16.04  பதிப்புக்கு மாற்றி விட்டேன் கணினி வழியாகவே மாறினேன் (தினமும் 16.04 புதுசு அதுக்கு மாற்றவா என்று கேட்டு தொந்தரவு பண்ணியது அதான்). நான் வட்டு மூலம் அதை நிறுவவில்லை. அதில் முனையம் வேலை செய்யவில்லை. ஏதேனும்  தீநிரல் நுழைந்திருக்குமோ என்று ஐயம் வந்துவிட்டது. மேலும் பலது வேலை செய்யவில்லை என்பதால் இந்த ஐயம் வலுத்தது.  அதனால் வட்டு வழியாக, தரவுகள் அனைத்தையும்  அழித்து விட்டு புதிதாக உபுண்டு 16.04 நிறுவ முடிவெடுத்தேன். பாதுகாப்பாக வைக்கக் கூடிய கோப்புகள் ஏதும் உபுண்டு கணினியில் நான் வைத்திருக்கவில்லை.  உபுண்டு 16.04 நிறுவ வட்டை போட்டால் கணினி அதை பிடிக்கவில்லை பழையதே (14.04) வந்தது அதாவது புகுபதிகை திரையில் வந்து நிக்கும்.  பல முயன்று விட்டேன் சரின்னு விண்டோசு 8.1 ஐ நிறுவலாம் என்று பார்த்தால் அதே கதை தான் உபுண்டுவின் புகுபதிகை (14.04) திரை வந்து விடும்.

விண்டோசு 8.1 இயக்கு தளத்தை இலவசமாக மைக்ரோசாப்ட் தளத்தில் இருந்தே தரவிறக்கிக் கொள்ளலாம் (https://www.microsoft.com/en-us/software-download/windows8). ரொம்ப நாளா கணினியை நோண்டாததால் எல்லாம் மறந்து விட்டது.  F2, F12 ஐ அழுத்தி முயல்வோம் என்று முயன்றேன். (F12 தான் அந்த வேலையை செய்தது என்பதை பின்பு உறுதிபடுத்திக் கொண்டேன், என் கணினி டெல்)  உபுண்டு, விண்டோசு எதில் பூட் ஆகட்டும் என்றது. அப்பாடா! என்று விண்டோசில் பூட் ஆகு என்றேன். விண்டோசு 8.1 ஐ நிறுவி விட்டேன்.  அப்புறம்  விண்டோசு  இற்றைபடுத்தியை windows updater பயன்படுத்தி எல்லா புது  கோப்புகளையும்  இற்றைபடுத்தினேன் அதாவது  update  செய்தேன்.   அதன் பின் இலவசமாக விண்டோசு 10இக்கு மாற்றி விட்டேன்  (ணினி மூலமாகவே  தரமுயர்த்தினேன் upgrade). விண்டோசு  10  ஐ  தனியாக நிறுவ முயன்றால் என் பழைய கணினியின் வட்டு எழுதி சரியாக வேலை செய்யவில்லை.  அதனால் USB aka Pen drive மூலம் விண்டோசு 10ஐ ஏற்றி நிறுவ முயன்றேன்.  ஏதோ கோளாறு. அதை சீரமைத்தேன் அதாவது பார்மேட் செய்தேன். பின் விண்டோசு 10 ஐ  (https://www.microsoft.com/en-us/software-download/windows10) மீடியா கிரியேசன்  டூல்  மூலம்  தரவிறக்கி கொண்டேன். அதை பயன்படுத்தி மறுபடியும் தனியாக கணினியின் வட்டில் இருந்த எல்லாத்தையும் அழித்து விட்டு  விண்டோசு 10ஐ நிறுவினேன்.  நிறுவும் போது தான் ணினியின் வட்டில் இருந்ததை அழித்தேன்.  இப்ப நான் விண்டோசு 10 பயனர்.

உபுண்டு, மேக் போன்ற விண்டோசு இயக்கு தளங்களில் விண்டோசு மீடியா கிரியேசன் டூலை தரவிறக்கம் செய்ய தேவையில்லை அதிலிருந்தே விண்டோசு 8ஐ நிறுவலாம். விண்டோசு இயக்கு தளம் என்றால் தான் விண்டோசு  மீடியா டூலை தரவிறக்கி ஐஎசுஓ பிம்பத்தை நகல் எடுக்கனும்.  ஐஎசுஓ பிம்பமாத் தான் இயக்கு தளம் வரும் மற்றபடி இழுத்து நகல் எடுப்பது தரவுகள் உள்ள கோப்பிற்கு தான். குச்சி சிறந்தது குச்சி இல்லைன்னா வட்டு வழியா எடுங்க. நமக்கு என்ன இருக்குதோ அதை பொருத்து.

எப்படி Command prompt இல்லாமல் குச்சியை ( USB or PEN drive) சீரமைப்பது(Format) ? இது மிக சுலபம். ஒன்னுமேயில்லை.

எப்படி Command prompt மூலம் குச்சியை ( USB or PEN drive) சீரமைப்பது(Format)?
in the command prompt
  1. Type diskpart 
  2. Type list disk
  3. Type select  disk  n ;  Where  n is USB drive; here our disk is 1. so did select disk 1. some times it may be 0 or 2 it depends based on your computer your disk selection. 
  4. Type list disk (look * that means we selected that disk)
  5. Type clean 
  6. Type create partition primary. (நாம் முழு குச்சியையும் partition பண்ணப் போவதால் நமக்கு எத்தொல்லையும் இல்லை இல்லாவிடில் செய்யுங்க கூகுள்)
  7. Type select partition 1
  8. Type active
  9. Type  format fs=fat32 quick
  10. Type assign 
  11. Type  exit
இதை பல பேர் பல விதமா சொல்றாங்க. நான் எழுதியது சரியானது தானா என்று எனக்கு இப்ப ஐயம் வந்து விட்டது. அதனால ஒரு முறைக்கு இரு முறை கூகுள் செய்து வழியை அறிந்து Command prompt மூலம் குச்சியை சீரமையுங்கள்.


விண்டோசு 8.1 இயக்கு தளத்துடன் உள்ள கணினியை தான் நான் வாங்கினேன் பின்னால் தான் விண்டோசு 8.1 ஐ அழித்து விட்டு அதில் உபுண்டுவை நிறுவினேன். என்னை மாதிரி பழைய விண்டோசு 8.1 இயக்கு தளத்துடன் உள்ள கணினியை விண்டோசு 10இக்கு மாற்ற பொருள் சாவி வேணும் காசு கொடுத்து தான் அதை வாங்கனும். எனக்கு  என்  கணினியின் பொருள் சாவி எனப்படும் product key தெரியாது, அதை கண்டுபிடிக்க   மாசிக்பீன், பெல்ஆர்க்  போன்ற  வேறு  வெளி பொதிகைகளை  நிறுவ தேவையில்லை.  இதை பின்பற்றுங்கள்  நான்  முயன்றது  தான்.

Windows 8.0, Windows 8.1 or Windows 10 came preinstalled on my computer, how do I find the product key?
Press Windows key + X
Click Command Prompt (admin)
Enter the following command type
wmic path SoftwareLicensingService get OA3xOriginalProductKey  Hit Enter
The product key will be revealed.


வியாழன், மார்ச் 23, 2017

ஐந்து மாநில சட்டமன்ற முடிவும் மோதியின் அரசியலும்

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்டம், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களின் முடிவுகள் வந்துள்ளன.

உத்தரப் பிரதேசம்
இதில் அனைவராலும் கவனிக்கப்படுவது இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தைத் தான். 81 மக்களவை உறுப்பினர்களை அனுப்பும் பெரிய மாநிலம். 2014 மக்களவை தேர்தலில் இங்கு பாசக 71 இடங்களையும் அதன் கூட்டணி கட்சியான அப்னா தளம் (2) இடங்களையும் பெற்றது, தொகுதிகளில் வென்றது. இங்கு பெற்ற 71 தொகுதிகளால் தான் பாசக கூட்டணி கட்சிகள் இல்லாமலே பெரும்பான்மை பெற்றது. 282 தொகுதிகளில் பாசக வென்றது. பெரும்பான்மைக்கு 272 தொகுதிகளில் வென்றால் போதும். இதிலிருந்து இது பாசகவிற்கு எத்தனை சிறப்புத்துவம் வாய்ந்த மாநில தேர்தல் என்பது புரியும். கூட்டணி கட்சிகளோடு சேர்த்து 336 தொகுதிகள். செல்லாக்காசு போன்ற நாட்டு மக்களை பாதிக்கும் நடவடிக்கைகளை பயமில்லாமல் எடுக்கிறது.

பாசக பெற்ற தொகுதிகள் பகுதி வாரியாக
உத்தரப்பிரதேசத்தில் ஆளும் சமாச்வாதி கட்சிக்குள் கடுமையான குடும்ப தகராறு. முலாயம் சிங் யாதவும் கடைசி வரை சமாச்வாதிக்காக வாக்கு கேட்க வரவில்லை அது பெரிய சறுக்கல் தான்.  காங்கிரசு வைத்த கூட்டு பலனளிக்கவில்லை.

மாயாவதி வரமுடியாது என்றே பல வட இந்திய நாளேடுகளும் காட்சி ஊடகங்களும் கூறின. அதே போன்று 19 தொகுதிகளைத்தான் பெற்றுள்ளார். இசுலாமியர்களை அளவுக்கு அதிகமாக கூப்பிட்டது, ஐசு வைத்தது, மற்றவர்களுக்கு வெறுப்பை கொடுத்து விட்டததோ?

காங்கிரசு தலித் முசுலிம் வாக்கு வங்கியை வைத்திருந்தது. தலித் மாயாவதிக்கு போய் விட்டது. முசுலிம்களை இழுக்க முடியும். மாயாவதியுடன் காங்கிரசு கூட்டு வைத்திருந்தால் தலித் முசுலிம் வாக்குகள் இக்கூட்டணிக்கு அதிகம் கிடைத்திருக்கும். பாசக 39.7% வாக்குகள் வாங்கி 312 தொகுதிகளை பெற்றது பசக 22.8% வாக்குகள் பெற்று 19 தொகுதிகளைப் பெற்றது. காங்கிரசு இதனுடன் இணைந்திருந்தால் இக்கூட்டணி குறைந்தது 30% வாக்குகளை பெற்றிருக்கும் மேலும் இது பாசகவின் வாக்கு % குறைத்திருக்கும் என்பது என் கணிப்பு.

பச்சை சமாச்வாதி+, நீலம் பசக, காவி பாசக+
வாரணாசி பக்கம் தோற்க கூடாது என்பதற்காக அப்பகுதியில் பலமாக உள்ள அப்னா தளம் (சோனா வால்)  உடனும் மக்களவை தேர்தலிலேயே கூட்டு, கிழக்கு உத்திரப் பிரதேசத்தில் உள்ள ராச்பார் சமூகத்தில் ஆதரவு பெற்ற சுகல்தேவ் பாரதிய சமாச் கட்சியுடன் இந்த தேர்தலில் தான் கூட்டணி வைத்தது. இக்கட்சி தலைவர் பகுசன் சமாச்சிலிருந்து பிரிந்து வந்தவர். இது அவர்களின் உத்தியை காட்டுகிறது.  சுகல்தேவ் பாரதிய சமாச் கட்சி கிழக்கு உத்தரப் பிரதேசத்தை தனியாக பிரித்து கொஞ்ச நிலத்தை பீகாரிலிருந்து எடுத்து பூர்வாஞ்சல் மாநிலம் அமைக்க போராடுகிறது.

ஏழ்மையான பகுதியான  புதல்காண்டம் பகுதி முழுவதும் பாசக கைப்பற்றியது கவனிக்கத்தக்கது.  வடக்கு பகுதியில் முசுலிம்கள் அதிகம் உள்ள மத கலவரம் நிகழ்ந்த தாத்ரி போன்றவை நிறைந்த அப் பகுதியில் பாசக 73% வெற்றி பெற்றுள்ளது.  எது எப்படி இருந்தாலும் பாசகவின் பெரு வெற்றி பல காலம் பேசப்படக்கூடியது.



ஏழு கட்டங்களில் வாக்குப்பதிவு நடந்தது. 



பாரதிய சனதா - 312 ( 39.2% )
சமாச்வாதி+காங்கிரசு - 54 (47+7) (21.8%+6.2)
பகுசன் சமாச் - 19 ( 22.2%)
அப்னா தளம் (சோனேவால்)-9 (1%)
சுகல்தேவ் பாரதிய சமாச் கட்சி -4 ( 0.7%)
ராசுட்டிரிய லோக்தளம் - 1 ( 1.8%)
நிர்பல் இந்தியன் சோகித் அமாரா ஆம் தளம் - 1 (0.6%)
கட்சி சார்பற்றவர்கள் - 3
(பம்பர் பரிசு மாநிலம்)

அடுத்த பெரிய மாநிலம் பஞ்சாப்,
காவி அகாலி+, கத்தரிப்பூ- ஆம் ஆத்மி+, நீலம்-காங்கிரசு

இங்கு அகாலி தளம் - பாசக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. அகாலி முதல்வர் பாதல் குடும்பத்து மேலும், அகாலிகள் மேலும் கடும் குற்றச்சாட்டுகள் உள்ளன. நிதி அமைச்சர் அருண் செயிட் லீ பஞ்சாபிலுள்ள நவசோத் சிங் சித்து வெற்றி பெற்ற அகாலி-பாசக பலமான இருந்த அமிர்தசரசு தொகுதியில் மோதி அலையிலும் தோற்றவர் தான்.
காங்கிரசு பெற்ற தொகுதிகள் பகுதி வாரியாக

ஆம் ஆத்மி கட்சி இல்லையென்றால் அதிக சுவாரசியம் பஞ்சாப் தேர்தலில் இருக்காது. இப்ப காங்கிரசு - அகாலி தளம்- பாசக - ஆம் ஆத்மி என்று மும்முனைப் போட்டி உள்ளது. ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும் அல்லது தொங்கு சட்டமன்றம் வரும் என்றார்கள் இப்போது காங்கிரசு பெரு வெற்றி பெற்றுள்ளது ஆம் ஆத்மி 20 மட்டுமே பெற்றுள்ளது. 20இக்கும் மேலான தொகுதிகளில் வைப்புத்தொகையை இழந்துள்ளது. அகாலி-பாசக கூட்டணி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டாலும் வாக்கு % அடிப்படையில் அது இரண்டாவது இடத்தில் உள்ளது. மால்வா பகுதியில் தான் ஆம் ஆத்மிக்கு அதிக செல்வாக்கு என்றார்கள் அங்கு தான் அதிக தொகுதிகளை பெற்றுள்ளது. மகசா பகுதியில் வெல்பவரே ஆட்சியமைக்க முடியும் என்றார்கள் அது போலவே அங்கு காங்கிரசு வென்றுள்ளது. ஆம் ஆத்மி அங்கு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. 2014 மக்களவை தேர்தலில் பாட்டியாலா, பரித்தாகோட், பாட்டாஃகரப் சாகிப்,  சங்குரூர் ஆகிய நான்கு மக்களவைத் தொகுதிகளில் ஆஆக வென்றிருந்தது.  பாட்டியாலா மக்களவை தொகுதியில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் இப்போது தோற்றுள்ளது. 2014 ஆம் ஆண்டு 9 இல் 5 தொகுதிகளில் வென்றிருந்தது. பரித்தாகோட் மக்களவை தொகுதியில் 9 இல் 3சட்டமன்ற தொகுதிகளிலும் மட்டும்  இப்போது வென்றுள்ளது. 2014 ஆம் ஆண்டு 9 இல் 8 தொகுதிகளில் வென்றிருந்தது. பாட்டாஃகரப்  சாகிப்  மக்களவை தொகுதியில் 9 இல் 1  சட்டமன்ற தொகுதிகளிலும் மட்டும்  இப்போது வென்றுள்ளது. 2014 ஆம் ஆண்டு 9 இல் 6 தொகுதிகளில் வென்றிருந்தது.  சங்குரூர்  மக்களவை தொகுதியில் 9 இல் 5 சட்டமன்ற தொகுதிகளிலும் மட்டும்  இப்போது வென்றுள்ளது. 2014 ஆம் ஆண்டு 9 இல் 7 தொகுதிகளில் வென்றிருந்தது.  இந்த நான்கு தொகுதிகளும் மால்வா பகுதியில் உள்ளன. ஆஆக இக்கு இத் தேர்தல் தோல்வி. 2014இல் 24% வாக்குகளை பெற்றிருந்த இக்கட்சி இப்போது 23.7% தான் பெற்றுள்ளது. உட்கட்சி பூசல் மாநில தலைமை இல்லாதது பெரும் தொல்வியை இதற்கு கொடுத்துள்ளது. தன்னார்வத் தொண்டர்கள் நிரம்பிய இக்கட்சியை அரவிந்து கெச்ரிவால் தில்லியில் இருந்து இயக்க முற்பட்டது போணியாகவில்லை இது தோற்றதே நல்லது இப்போதாவது கெச்ரிவாலுக்கு அறிவு வருதான்னு பார்ப்போம். இது சீக்கியர்களிடம் தான் அதிக ஆதரவை பெற்றிருந்தது.  காங்கிரசு 40 ஊர்ப்புற தொகுதிகளில் வென்றுள்ளது அதாவது அங்கு பெரிய நகரங்கள் இல்லை. அதில் 30இல் ஆஆக மூன்றாவதாக வந்துள்ளது.  டரன் டரன் மாவட்டமே அதிக சீக்கியர்களை கொண்டது அதில் உள்ள நான்கு தொகுதிகளையும் காங்கிரசு அள்ளிவிட்டது, அங்கும் ஆஆக மூன்றாவது இடம் தான். லோக் இன்சாப் கட்சி ஆஆக துணையுடன் போட்டி போட்டது அதனால் தான் ஆம் ஆத்மி பஞ்சாபில் 22 இடங்களை பெற்றதாக செய்தி இதழ்களில் போடுவார்கள்.

காங்கிரசு - 77 ( 38.5% )
அகாலிதளம்-பாசக - 18 (15+3) ( 25.2%+5.4%)
ஆம் ஆத்மி - 20 ( 23.7%)
லோக் இன்சாப் கட்சி - 2 ( 1.2 %)

உத்தராகண்டம்
காவி-பாசக, நீலம் - காங்கிரசு

உத்தராகண்டத்தை பெரிதாக யாரும் கண்டு கொள்ளவில்லை. காங்கிரசு - பாசக என இரு தேர்வு தான் மக்களுக்கு உள்ளது. இருந்தாலும் இவ்வளவு பெரிய வெற்றி யாரும் எதிர்பார்க்காதது.
பாசக பெற்ற தொகுதிகள் பகுதி வாரியாக

இமாச்சலப் பிரதேசதை ஒட்டியுள்ள எல்லைப் புறத்திலும் நேபாள எல்லைப் புறத்திதலும் மட்டும் காங்கிரசு வென்றுள்ளது. நிறைய காங்கிரசு காரர்கள் பாசகவுக்கு தாவி அந்த கட்சி சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இதுவும் காங்கிரசின் மரண தோல்விக்கு காரணம் எனலாம்.
ஒரு சிலர் கட்சி மாறுவது ஏற்றுக்கொள்ளக் கூடியது ஆனால் நிறைய பெருந்தலைகள் மாறியது கட்சி தொண்டர்களுக்கு சோர்வை கொடுக்கும்.

பாசக வேட்பாளர்களாக போட்டியிட்ட 14 முன்னாள் காங்கிரசுகாரர்களில் 12 பேர் வெற்றி பெற்றுள்ளனர். முடிந்த 3-வது சட்டமன்றத்தின் தொடக்கத்தில் ஓர் ஆண்டு வரை முதல்வராக இருந்த விசய் பகுகுணா பாசவுக்கு மாறி தன் பையனுக்கு தான் போட்டியிட்ட தொகுதியையே வாங்கிவிட்டார்.  உத்தராகண்டத்தில் காங்கிரசின் தலித் முகமாக இருந்த மூத்த தலைவர் யசுபால் ஆரியா தனக்கும் தன் மகன் சஞ்சீவ் ஆரியாவுக்கும் பாசகவில் தொகுதிகளை பெற்றார் (பேச்பூர், நைனிடால்). இது பழைய உத்தரப் பிரதேசம் என்பதை மறக்கக் கூடாது. ஆனாலும் இங்கு சமாச்வாதி கட்சி 2% வாக்கு வாங்கும் அளவில் கூட இல்லை. பல இந்து புண்ணிய தலங்கள் அதாவது கேதர்நாத் ரிசிகேசு பத்ரிநாத் அரித்துவார் கங்கோத்திரி யமுனோத்திரி போன்றவை தான் இங்குள்ளன உத்தரப் பிரதேச காத்து இங்கும் பலமாக அடித்துள்ளது போலும்.

பாசக பெருவெற்றி பெற்றாலும் அது கேதார்நாத்தில் நான்காவது இடமே பிடித்தது. மூன்றாவது சட்டமன்றத்தின் வெளியேரும் முதல்வர் அரிசு ரவாட் தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் ( அரித்துவார் புறநகர், கிச்சா) தோற்றார்.

பாரதிய சனதா - 57 ( 46.5%)
காங்கிரசு - 11 (33.5)
கட்சி சார்பற்றவர்கள் - 2

மணிப்பூர்

காவி- பாசக, நீலம்-காங்கிரசு, சாம்பல்-மற்ற கட்சிகள்
மணிப்பூரை வட இந்திய ஊடகங்கள் சுத்தமாக கண்டு கொள்ளவில்லை. இரும்பு பெண்மணி இரோம் சர்மிளா  அரசியல் ஈடுபாடே நம்மை அங்கு ஈர்த்தது. மூன்று தொகுதிகளில் தான் அவரின் கட்சி போட்டியிடுகறது. அவர் 90 வாக்குகளை மட்டுமே பெற்றது கொடுமை. அவரை தோற்கடித்தது தப்பில்லை ஆனால் 90 இக்கு பதிலாக சில ஆயிரம் வாக்குகள் கொடுத்திருக்கலாம். அது அவரைப்போன்ற சமூக போராளிகளுக்கு உத்வேகத்தை கொடுத்திருக்கும்.
காங்கிரசு பெற்ற தொகுதிகள் பகுதி வாரியாக


மலைப்பகுதிகளில் பாசக அதிக தொகுதிகளை பெற்றுள்ளது. நாகா மக்கள் முன்னனி மக்கள் உட்பட மற்ற கட்சிகள் பள்ளத்தாக்கு பகுதியிலேயே வெற்றி பெற்றது. இதில் நாகா மக்கள் முன்னனிக்கு காங்கிரசு ஆவாது. இது நாகா மக்கள் வாழும் பகுதிகளை இணைத்து அகண்ட நாகாலாந்து அமைக்க போராடுகிறது அதாவது மணிப்பூரின் சில பகுதிகளை கேட்கிறது. தேசிய மக்கள் கட்சி தேசிய சனநாயக முன்னனியில் அதாவது பாசகவுடன் இருந்தாலும் இதை பொதுவுடமை கட்சி ஆதரித்திருந்தது அதனால் மத சார்பற்ற கட்சிக்கு ஆதரவு தரும் படி பொதுவுடமையின் நெருக்குதல் இதற்கு இருக்கிறது.

மணிப்பூரின் ஆளுநர் பாசகவை முதலில் ஆட்சியமைக்க அழைத்து பெரும்பான்மையை 15 நாட்களுக்குள் நிருபிக்க கூறியுள்ளார். நமக்கு என்ன நடக்கும் என்று தெரியும். அதாவது குதிரை பேரம் தான்.

காங்கிரசின் சட்டமன்ற உறுப்பினர் சியாம்குமார் பாசகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். காங்கிரசின் 28 உறுப்பினர்களில் 27 பேர் தான் எதிர்ப்பு மீதி அனைத்து கட்சிகளும் பாசகவுக்கு ஆதரவு.

தேசிய மக்கள் கட்சிக்கு இரு அமைச்சர் பதவிகள் அதில் ஒன்று துணை முதல்வர். நாகா மக்கள் முன்னனிக்கு மூன்று அமைச்சர் பதவிகள். காங்கிரசிலிருந்து வந்த சியாம் குமாருக்கும் லோக் சன சக்தி உறுப்பினருக்கும் அமைச்சர் பதவி. திரிணாமுல் உறுப்பினருக்கும் கட்சி சார்பற்ற உறுப்பினருக்கும்  அமைச்சர் பதவி இப்போதைக்கு இல்லை.

பாசக முதல்வர் ஆக்கியுள்ள நாங்தோம்பம் பீரேன் சிங் காங்கிரசுகாரர் 2016 அக்டோபரில் தான் பாசகவில் இணைந்தவர்.


காங்கிரசு - 28 ( 35.1%)
பாரதிய சனதா - 21 (36.3%)
நாகா மக்கள் முன்னனி-4 ( 7.2%)
தேசிய மக்கள் கட்சி - 4 (5.1%)
திரிணாமுல் காங்கிரசு-1 ( 1.4%)
லோக சனசக்தி - 1 ( 2.5 %)
கட்சி சார்பற்றவர்கள் - 1

கோவா

காங்கிரசு பெற்ற தொகுதிகள் பகுதி வாரியாக
கோவா சிறிய மாநிலம் என்றாலும் ஆம் ஆத்மி கட்சி இல்லையென்றால் அதிக சுவாரசியம் கோவா தேர்தலில் இருக்காது. இப்ப காங்கிரசு - பாசக - ஆம் ஆத்மி என்று மும்முனைப் போட்டி உள்ளது.
தென் கோவா கிறுத்துவர்கள் நிறைந்தது. இங்கு தான் ஆம் ஆத்மி வேறூன்ற பார்த்தது. அதன் முதல்வர் கிறுத்துவர் என்பதால்.

வட கோவா இந்துகள் நிறைந்தது. பாசகவின் கோட்டை.  அப்பகுதி ஏழை இந்துக்களின் ஆதரவுடன் தான் மகாராட்டிரவாதி கோமந்த கட்சி உள்ளது அது ஏன்னா போர்த்துகீசியர்கள் அதிகாரத்தில் கிறுத்துவர்களுக்கே சலுகைகள் கிடைத்தன, இப்போ இந்துக்களின் ஆதரவு நிறைய பாசகவுக்கு போய்விட்டது. கோவா விடுதலை அடைந்ததிலிருந்து சுமார் இருபது ஆண்டுகள் முதல்வர் பதவியை அலங்கரித்த கட்சி தான் இது. மகாராட்டிரவாதி கோமந்த கட்சி முன்பு பாசகவுடன் கூட்டணியில் இருந்தது. மேலும் RSSஇன் செல்வாக்கு மிக்க தலைவர் தனியாக பிரிந்து போட்டியிட்டதும் பாசகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. இதில் கோவா முன்னேற்ற கட்சி பாசகவை ஆட்சியிலிருந்து தூக்கிவிடுவது என்று களத்தில் குதித்த கட்சி.
காவி- பாசக, நீலம்-காங்கிரசு, சாம்பல்-மற்ற கட்சிகள்


ஆளுநர் பாசகவை முதலில் ஆட்சியமைக்க அழைத்து பெரும்பான்மையை 15 நாட்களுக்குள் நிருபிக்க கூறியுள்ளார். நமக்கு என்ன நடக்கும் என்று தெரியும். அதாவது குதிரை பேரம் தான்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் பாசகவை ஆதரிக்காதவர்கள் காங்கிரசின் 17 உறுப்பினர்களும் கட்சி சார்பற்ற ஒரு உறுப்பினரும்.  காங்கிரசின் விசுவசித் ராணே நம்பிக்கை வாக்கெடுப்பின் போது வெளிநடப்பு செய்தார். பின்பு பதவி விலகல் கடிதத்தை சபாநாயகரிம் கொடுத்தார். காங்கிரசில் இருந்தும் விலகிவிட்டார்.  தேசியவாத காங்கிரசு அவர்களின் ஒரே உறுப்பினர் கட்சி கட்டுப்பாட்டை மீறி அதாவது ஆதரத்து வாக்கு போட்டதற்காக விளக்கம் கேட்டுள்ளது

காங்கிரசு-17 ( 28.4% )
பாரதிய சனதா-13 ( 32.5%)
ஆம் ஆத்மி- 0 (6.3% )
மகாராட்டிரவாதி கோமந்த கட்சி-3 (11.3%)
கோவா முன்னேற்ற கட்சி -3 (3.5 %)
தேசிய வாத காங்கிரசு -1 (2.3% )
கட்சி சார்பற்றவர்கள்  3

வியாழன், மார்ச் 09, 2017

அமுக்குப் பிசாசு

நாங்க ஐந்து நண்பர்கள் சென்னையில் தங்கியிருந்தோம். நானும் இன்னொரு நண்பனும் எப்பவும் மொட்டை மாடியில் தூங்குவது தான் வழக்கம். அங்கிருந்து கொஞ்சம்  தள்ளி இன்னொரு மாடி வீடு இருந்தது அந்த வீட்டுக்காரங்களின் அழகான கல்லூரி பொண்ணு காலையில் மாடிக்கு வந்து உடற்பயிற்சி செய்வா ஆனா அங்கிருந்து பார்த்தா நாங்க மாடியிலிருந்து அவளை பார்ப்பது தெரியாது, ஏன்னா எங்களது இரண்டு மாடி கட்டடம் அவங்களது ஒரு மாடி கட்டடம். சுற்றி மாடி கட்டடம் இல்லாதது எங்களுக்கு வசதியாக இருந்தது. அப்படியிருந்தாலும் நாங்க எச்சரிக்கையா ஒளிந்து இருந்து தான் பார்ப்போம். அவ போனதையும்  நாங்களும் அறைக்கு போய் விடுவோம். அப்புறம் அவ அண்ணன் மேல வருவான் அவ அம்மா துணி காயப்போட வருவாங்க. இவங்கள் வந்தா எங்களுக்கென்ன வராட்டி எங்களுக்கென்ன.

என் மற்ற அறை நண்பர்களுக்கு இது தெரியும் ஆனா என்னை மாதிரி பொண்ணுங்களை கண்டால் வாயில் எச்சில் ஒழுகுபவர்கள்  அல்ல அவர்கள்  என்பதால் என் மாடி தூக்கத்துக்கு இடையூறு இல்லாமல் இருந்தது. இது கிட்டத்தட்ட ஓராண்டு நல்லா போய்க்கிட்டு இருந்தது.

இந்த சமயத்தில் தான் ஒரு நாள் நடு இரவில் என் முகத்தை அமுக்கிக்கிட்டது போல இருந்தது, திமிறினேன் யாரோ என்  கையையும் காலையும் அமுக்கிட்ட மாதிரி இருந்தது என்னால எதுவும் செய்ய முடியவில்லை.  சிறிது நேர போராட்டத்துக்கு பிறகு முழித்துக்கொண்டேன். சில்லுன்னு காத்து வீசியபோதும் என் முகம் உடம்பு முழுக்க வியர்வை. என்  செப்பத்தின் (இதயம்) தேளை (லப் டப் என்னும் இதய ஒலி) ஒரு பர்லாங் தூரத்துக்கு கேட்பது மாதிரி அவ்வளவு சத்தமா அடிச்சிக்சி.  என் நண்பனை பார்க்கிறேன் போர்வையை இழுத்துப்போர்த்தி குறட்டை விட்டு தூங்கிட்டு இருக்கான். உடனே அவனை எழுப்பி இவ்விடயத்தை சொன்னேன். அவனுக்கும் ஏதும் புரியவில்லை. உடனே போர்வையை சுருட்டிக்கிட்டு அறைக்கு வந்துவிட்டோம், அன்றைய இரவு என் தூக்கமே போச்சி. அன்றைக்கு அறைக்கு வரும் போது நான் சுடுகாட்டு பக்கம் இருந்து வந்தேன் அப்போது பிணம் எரிந்து கொண்டு இருந்ததை பார்த்தேன்.

மற்றவர்கள் பயப்படலாம் என்று இரவே கூற என்னை தடுத்து விட்டதால், விடிந்ததும் எனக்கு இரவு மொட்டை மாடியில் நடந்ததை கூறினேன். சுடுகாட்டில் பிணம் எரிவதை பார்த்ததால் கெட்ட கனவு வந்திருக்கும் என்றனர். ஆனா எனக்கு பயம் போகலை நான் மொட்டை மாடிக்கு போய் தூங்கமாட்டேன் என்று கூறிவிட்டேன். மாடியில் தூங்க இனி வரமுடியாது என்று கூறிவிட்டான்.  .இன்னொரு நண்பன் வீரமானவன் மனத்திடம் உள்ளவன் பேய், பிசாசு இதுக்கெல்லாம் பயப்படாதவன், நான்  சொல்வதைக்கேட்டு கடுப்பாயிட்டான். இனிமே நான் உங்கூட மேல வந்து தூங்கறேன் எது வருது என்று பார்க்கலாம் என்றான். என்னால அந்த அழகு தேவதையை விடிந்ததும் பார்க்காம இருக்க முடியாது என்பதால் சரின்னு ஒத்துக்கொண்டேன்.

புதுசா மாடியில் தூங்க வந்த நண்பனோட என் தூக்கம் மாடியில் நான்கு மாதத்திற்கு நல்லா போயிக்கிட்டு இருந்தது. என் நண்பனுக்கும் எனக்கு நடந்த மாதிரியே பேய் அமுக்கிருச்சு.  நெஞ்சாங்குலை படபடக்க உடம்பு வியர்த்து கொட்ட நன்றாக தூங்கிக் கொண்டிருந்த என்னை எழுப்பி நடந்ததை கூறி அறைக்கு போகலாம் என்றான். இரண்டு பேரும் பாயையும் போர்வையும் சுருட்டிக்கிட்டு அறைக்கு அடிச்சுக்க பிடிச்சுக்கன்னு ஓடிப்போனோம்.

விடிந்ததும், இரவு மொட்டை மாடியில் நடந்ததை எங்கள் அறையின் மிக திடமான மனதும் வலுவும் உடைய என் நண்பன் விளக்கினான். அவன் வரும் வழியில் சுடுகாடு எல்லாம் கிடையாது. நிறுவனத்திலிருந்து எங்கள் அறைக்கு அவன் வரும் சாலை மக்கள் நடமாட்டம் மிக்கது. அவனுக்கும் எனக்கு நடந்தது போலவே நடந்ததால் மாடியில் பிசாசு இருக்குன்னு முடிவு செய்தோம். துணி காயப்போட மாடிக்கு தான் போகனும். குறைந்தது மூன்று பேர் சேர்ந்து தான் மாடிக்கு போவோம். 9 மணிக்கு மேல தான் போவோம் ஐந்து அல்லது ஐந்தரை மணிக்கு துணி காய்ந்தாலும் காயாவிட்டாலும் அறைக்கு எடுத்து வந்து விடுவோம்.

இரண்டு வாரங்கள் கழித்து என் நண்பன் என்னை பார்க்க வந்தான். அவனிடம் எனக்கு நேர்ந்ததையும் என் நண்பனுக்கு நேர்ந்ததையும் கூறினேன். அவன் இத்தெருவின் கோட்டு வீட்டில் அதாவது கடைசியில் உள்ள வீட்டில் இரண்டு  ஆண்டுகளுக்கு முன் இளம் பெண்  தன் இரண்டு வயது குழந்தையை தலையணையால் அமுக்கி கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாகவும் அதுக்கு காரணம் தன் கணவனின் கள்ளக்காதல் தெரிந்ததால் என்றும் மாமியார் வீட்டு கொடுமை என்றும் பல விதமாக கூறுகிறார்கள் என்றும் அப் பெண் பேய் அமுக்கி இருக்கலாம் என்றும் கூறினான். நாங்க இங்க வந்து இன்னும் மூன்று மாதங்கள் ஆனா தான் இரண்டு ஆண்டு ஆகும் என்பதால் இவ்விபரம் எங்களுக்கு தெரியவில்லை.  நிறைவேறா ஆசையுடனோ ஏமாற்றப்பட்டதாகவோ நினைக்கும் பெண்ணோ ஆணோ தற்கொலை செய்து கொண்டால் அவர்கள் பேயாக பிசாசாக திரிவார்கள் என்றும் அவர்கள் மற்றவர்களின் மூச்சை அடக்கி கொல்ல முயல்வதால் அப்பிசாசை அமுக்குப் பிசாசு என்று அழைப்பார்கள் என்று அவனின் ஆயா கூறியுள்ளதாகவும் கூறினான்

அமுக்குப் பிசாசிடம் இருந்து  போராடி தப்பிய நாங்கள் ,சரி நான், இனி மாடிக்கு தூங்கப்போவோம் \வேன்? அழகு தேவதையை விடிந்ததும் பார்ப்பதை விட உயிர் முக்கியமில்லையா? வாடகைக்கு வீடு பார்க்கும் படலம் தொடங்கி விட்டது.

திங்கள், மார்ச் 06, 2017

காருண்யா என்னும் கொலைக்களம்.

வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈசா  இப்போது பெரிய சர்ச்சையில் சிக்கி தவிக்கிறது. ஆனா அவர்களை விட ஏழு மடங்கு நிலத்தை வனப்பகுதியில் வளைத்துப் போட்டு யானைகளின் வழித்தடத்தை மறித்து கல்லூரி கட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் பால் தினகரனின் காருண்யா குழுமம் பற்றி இது வரை யாரும் மூச்சு விடவில்லை. அது ஏனோ? நமக்கு ஈசாவோ காருண்யாவோ சட்ட விரோதமாக வளைத்துப் போட்டுள்ள வனத்துறையின் நிலங்கள் பற்றி தெரியாது. நான் அதைப் பற்றி சொல்லப் போவதில்லை.

பல ஆண்டுகளாக நிறைய பேரிடம் காருண்யா பற்றி பேசியிருக்கிறேன் ஆனால்எ இவர்களைப் பற்றி எழுதி இருக்கிறேனா என்று தெரியவில்லை. இப்ப ஈசா சூட்டுல்ல சொன்னா சிலருக்கு மண்டையில் ஏறலாம்.

என் எதிர்த்த வீட்டு நண்பன் கூறிய உண்மைச் சம்பவங்கள் இது.  இது இப்போ கூறினது இல்லை. கூறி கிட்டதட்ட இருபது ஆண்டுகள் ஆகிறது. அவனுக்கு மருத்துவம் படிக்கனும் என்று ஆசை,  1992ஆம் ஆண்டு எடுத்த மதிப்பெண்கள் பற்றாததால் மீண்டும் தேர்வு எழுதினான் அப்பவும் மருத்துவம் படிக்கும் அளவு மதிப்பெண் பெறவில்லை அதனால் காருண்யாவில் பொறியியல் (1993-1997) சேர்ந்தான்.

அங்கு எல்லோரும் கல்லூரி விடுதியில் தான் தங்க வேண்டுமாம். வீடு கல்லூரிக்கு அடுத்த தோட்டம் என்றாலும் அவர்களுக்கும் கல்லூரி விடுதி தான். வீட்டிலிருந்து எம்மாணவரும் கல்லூரிக்கு வரமுடியாது அனுமதியில்லை. யாரும் பொட்டு வைத்துக்கொள்ளக் கூடாது, பூ வைத்துக் கொள்ளக் கூடாது. யாரும் திரு நீறு, குங்குமம், சந்தனம் வைத்துக்கொள்வது கூடாது, அவை\ தினகரன் குடும்பத்தால் அதாவது கல்லூரி நிருவாகத்தால் தடை செய்யப்பட்டவை.

இதனால் பல மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் கோபம். என்ன செய்ய முடியும். ஞாயிற்றுக்கிழமை மட்டும் வெளியில் போய் வர அனுமதியுண்டு அதனால் ஞாயிறன்று நகர பேருந்து மூலம் அருகிலுள்ள சின்மயா மிசனுக்கு போவார்கள். இப்படித்தான் தங்கள் எதிர்ப்பை காட்டிக்கொண்டிருந்தார்கள். இதில் சாமி என்றாலே காத தூரம் ஓடுபவனும் அடக்கம். அப்ப  எந்த அளவு நொந்து போயிருப்பார்கள் என்று புரிந்து கொள்ளலாம்.

தேர்வு சமயத்தில் மாணவர்கள் தேர்வு எழுதும் போது அப்பாடத்தை நடத்திய ஆசிரியர் மாணவர்களுக்காக அதற்காக உள்ள அறையில் செபம் செய்து கொண்டிருப்பார். எதுக்கய்யா செபம்? ஒழுங்காக சொல்லிக்கொடுத்திருந்தால் அப்பாடத்தில் மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்கப்போகிறார்கள். இவரின் இப்போதைய செபத்தால் ஏதும் மாறப்போகிறதா?

மதமாற்ற முயற்சிகளும் விடுதியில் நடக்குமாம். அதன் விளைவாக சிலர் மதம் மாறியும் உள்ளார்கள். இங்கு நிறைய மலையாள கிறுத்துவர்களும் படிக்கிறார்கள்.  அதில் சிலர் பெரும் பணக்கார மலையாள கிறுத்துவர்கள்.

1997ஆம் ஆண்டு இறுதியாண்டு மாணவர்களுக்கும் நிருவாகத்துக்கும் மோதல். மாணவர்களுக்கு தலைமை பெரும் பணக்கார மலையாள கிறுத்துவ மாணவன். நிருவாகம் காலிப்பயல்களை இரும்பு தடிகளுடன் விடுதியில் இறக்கி காருண்யம் இல்லாமல் மாணவர்களை தாக்கியுள்ளது. பலருக்கு மண்டை உடைந்தது. காயமுற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள்.

விடுதி மூடப்பட்டது.  தலைவன் அசரலை, கேரளாவில் இருந்து ஆட்களை கொண்டாந்தான். கோயமுத்தூரில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். எந்த தமிழ் இதழ்களும் அதை துண்டு செய்தியாக கூட போடவில்லை. இந்துவோ இந்தியன் எக்சுபிரசோ தான் ஒரு முறை துண்டு அதாவது பெட்டி செய்தியாக போட்டது. இத்தனைக்கும் ஆதாரத்துடன் அனைத்து இதழ்களிடமும் கல்லூரி நிருவாகம் செய்ததை சொல்லி இதழில் எழுதுமாறு கேட்டனர். காவல் துறையில் புகார் செய்யப்பட்டும் நடவடிக்கை இல்லை. கல்லூரி சார்பில் எதிர் புகார் அளிக்கப்பட்டிருந்தது. தினகரனின் வீச்சு அப்படிப்பட்டது.

இந்த அடிதடி கேரள இதழ்களில் இடம்பெற்றது. மாணவர்கள் கோயமுத்தூர் சட்டமன்ற உறுப்பினரிடமும் புகார் அளித்துள்ளனர்.  அப்போது திமுகவின் ஆட்சி என்பது தெரியும் தினகரனை பகைத்துக்கொண்டால் திருநெல்வேலி பக்கம் சில ஆயிரம் வாக்குகளை இழக்க வேண்டியிருக்கும் என்பதால் திமுகவும் கண்டு கொள்ளவில்லை.

1997ஆம் ஆண்டு இறுதியாண்டு மாணவர்களை கல்லூரி நிருவாகம் இறுதில தேர்வை (8th semester எழுத அனுமதிக்க வில்லை. மன்னிப்பு கேட்டால் தான் அனுமதி என்றதால் மன்னிப்பு கேட்ட  நாலைந்து பேர் மட்டும் எழுதினர். மற்றவர்கள் யாரும் மன்னிப்பு கேட்கவில்லை.  என் நண்பன் பிரச்சனையில் கலந்து கொள்ளாமல் வீட்டுக்கு வந்து விட்டாலும் மன்னிப்பு கேட்க மறுத்து அடுத்த முறை தேர்வு எழுதி 1998 தான் பட்டம் பெற்றான். கல்லூரியில் ஒவ்வொரு தேரவிலும் 75% இக்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தாலும் மற்றவர்களுடன் இணைந்தே தேர்வு எழுதினான். அவங்க அப்பா கண்டிப்பானவர் எப்போதும் கல்லூரி நிருவாகத்தை ஆதரித்து பேசி வந்தாலும் இறுதி தேர்வை மன்னிப்பு கேட்டு எழுத வேண்டும் என்பதை புறக்கணித்து இறுதியில் மாணவர்கள் பக்கம் நின்றார் என்பதையும் சொல்ல வேண்டும்.

இப்போ மாணவர்கள் வெளியில் தங்கி கல்லூரிக்கு வரலாம் என்று கேள்விப்பட்டேன்.  அதுக்கு 1997இல் அடிவாங்கி மண்டை உடைந்து நடந்திய போராட்டமே காரணம். இப்போது பூ வைக்க, பொட்டு வைக்க, திருநீறு வைக்க அனுமதியுண்டா என்று அறியேன். போராடாமல் அடிப்படை உரிமை கூட இக்காலத்தில் கிடைக்காது.