நமக்கு தமிழில் உள்ள கோல் மால் என்றால் என்ன என்று நன்கு தெரியும், மால் கொடுத்தியா என்றால் அதன் பொருளும் புரியும். -
இப்ப அமெரிக்காவ பாத்து நம்பெரு நகர்களிலும் மால் (இது இங்கலிபீசு மால்)நிறைய வந்திருச்சு. நானும் மால் அப்படின்னா பெரிய வணிக வளாகம் அதில் நிறைய கடைகள் இருக்கும் என்று புரிந்து வைத்திருந்தேன். நானும் பல மால்களுக்கு பொருட்கள், துணிகள் வாங்க சென்றிருக்கறேன். அமெரிக்காவின் பெரிய மால் புளூமிங்டன் மின்னசோட்டாவில் உள்ள மால் ஆப் அமெரிக்கா அப்படின்னு சொல்லுவாங்க. ஆனா அமெரிக்காவின் தேசிய மால் அப்படி கிடையாது சொல்லப்போனா அது மாலே கிடையாது. அது ஒரு வெட்ட வெளி.
தேசிய மால் படம்:- அமெரிக்க காங்கிரசு கட்டடம் - வாசிங்டன் நினைவுத்தூண் தூரத்தல தெரியறது லிங்கன் நினைவகம்.
எனக்கு இது மொதல்ல தெரியல. அமெரிக்க விடுதலை தினத்தன்று அமெரிக்காவின் கிட்டதட்ட எல்லா ஊர்லயும் வாண வாடிக்கை நடக்கும். நான் இருந்த ஊர்லயும் நடந்திச்சு அதை கண்டு நான் வாய பொழந்தப்ப பக்கத்திலிருந்த நண்பர் வாசிங்டன் டிசில நடக்கும் வாண வேடிக்கை பெருசா இருக்குமுன்னார். அடுத்த ஆண்டு அங்க போங்கன்னு சொன்னார். அந்த வாண வேடிக்கை தேசிய மால்ல தான் நடத்துவாங்கன்னு கூட வேலை செய்யறவங்க சொன்னாங்க.. மால்ல எப்படி வாண வேடிக்கைன்னு நினைச்சேன். மால்ல எப்படின்னு கேட்டேன், அதுக்கு மால் பெரிசா இருக்கறதால அங்க தான் பட்டாசு கொளுத்துவாங்கன்னு சொல்லிட்டாங்க.. நான் மாலில் ஏன் என்று ஏன் கேக்கறன்னு அவங்களுக்கு புரியலை. திருப்பி திருப்பி மால பத்தி கேட்டா நல்லா இருக்காதுன்னு அதைப்பத்தி கேக்கறத விட்டுட்டேன். நம்ம மரியாதையை நாமே கெடுத்துக்கலாமா? எப்படி போகனும் எங்க உட்கார்ந்தா வாண வேடிக்கை நல்லா தெரியும் என்று எல்லா விவரத்தையும் கூட வேலை செய்யும் மக்கள் சொல்லிட்டாங்க. வாசிங்டன் டி.சி-யில் வாண வேடிக்கைக்கு போகாதது தான் பாக்கி. எனக்கு மால்ல எப்படி? அப்படிங்கற சந்தேகம் மட்டும் தீரவேயில்லை.
சூலை 4-லும் வந்தது. மெட்ரோ ஏறி (அதாங்க local train) வாசிங்டன் நினைவுத்தூண் போயி லிங்கன் நினைவகத்தை பார்க்கற மாதிரி துண்ட போட்டு எடத்தை புடிச்சேன். நமக்கு முன்னாடியே பல பேர் குடும்பத்தோட வந்து துண்டு மன்னிக்க சமக்காளத்தையே போட்டு இடத்தை புடிச்சிருந்தாங்க. நாற்காலி, தண்ணி, தின்பண்டம், போர்வை என்று அனைத்து வசதிகளோடும் முகாம் போட்டிருந்தாங்க. நேரம் ஆக ஆக கூட்டம் நிறைய வந்தது. கூட்டத்தை சமாளிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்கள். சிறுநீர் கழிக்கவும் ஆய் போகவும் தற்காலிக கழிவறைகளை அமைத்திருந்தனர். கூட்டம் நிறைய வர இடத்துல இது முக்கியம் இல்லைன்னா இடம் நாறிடும்.
தேசிய மால் படம்:- லிங்கன் நினைவகம் - வாசிங்டன் நினைவுத்தூண் தூரத்தல தெரியறது அமெரிக்க காங்கிரசு கட்டடம்.
தேசிய மால் அப்படிங்கிறது லிங்கன் நினைவகத்திலுருந்து அமெரிக்க காங்கிரசு கட்டடம் வரை உள்ள வெட்ட வெளி தான். இதன் நீளம் கிட்டதட்ட 3 கி.மீ. லிங்கன் நினைவகத்துக்கும் அமெரிக்க காங்கிரசு கட்டடத்துக்கும் இடையில் வாசிங்டன் நினைவுத்தூண் இருக்கு. லிங்கன் நினைவகத்துக்கு முன்னாடி செவ்வக வடிவில் குளம் உள்ளது. (ஆழம் குறைவு அதனால வாத்த தவிர யாரும் நீச்சல் அடிக்க முடியாது) வாசிங்டன் நினைவுத்தூணின் நிழல் இதில் விழும் அதனால இதை எதிரொலிக்கும் குளம் (reflecting pool) அப்படின்னு சொல்லுவாங்க. வாசிங்டன் நினைவுத்தூணில் இருந்து வலது பக்கதில் வெள்ளை மாளிகை இருக்குது.
வாண வேடிக்கை நடக்கறப்ப இந்த குளத்து தண்ணிய காலி செய்து அங்கிருந்து தான் வாண வேடிக்கை நடத்துவாங்க. அதனால லிங்கன் நினைவகத்தை நோக்கி வாசிங்டன் நினைவுத்தூண் பக்கம் உட்கார்ந்து பார்த்தா வாண வேடிக்கை நல்லா தெரியும். 20 நிமிடம் நடக்கும் இந்த வாண வேடிக்கை நல்லாவே இருக்கும்.
அறிவது: எல்லா மாலும் மாலல்ல.
வணக்கம்
வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?
செவ்வாய், டிசம்பர் 28, 2010
ஞாயிறு, டிசம்பர் 05, 2010
கருத்துப்படம் - இதில் 3 இருக்கு
தினமணியில் வந்த 3 கருத்துப்படங்கள். அனைத்தும் பார்க்கவேண்டியவை....
சொல்றது நியாமாதான் படுது, அவருக்குன்னு ஏதாவது மதிப்பு உண்டா?
இந்த நெருப்பு போர்ஸ்ன்னா சுடும் ஸ்பெக்டர்ம்ன்னா அணைஞ்சிடும்.
பிரதமரை எருமைன்னு சொல்லிட்டாங்களே.....

வெள்ளி, டிசம்பர் 03, 2010
திங்கள், நவம்பர் 29, 2010
கஜேந்திர மோட்சம் தவறியது
கஜேந்திர மோட்சம் என்றால் என்ன பெரும்பாலோருக்கு தெரிந்திருக்கும்.
தெரியாதவங்களுக்கு - பாகவதத்தில் கூறப்பட்ட கதை...
கம்பீரமும் வீரமும் மிகுந்த யானைகளின் அரசனான கஜேந்திரன் தன் பிடிகளுடனும் குட்டிகளுடனும் காட்டில் மரங்களை உடைத்தும் மூங்கிலை உண்டும் உலாவி கொண்டிருந்தது அதன் அந்த சப்தத்தை கேட்டதுமே சிங்கம் புலி முதலிய பலம் மிகுந்த மிருகங்கள் பயந்து ஓட மற்ற சிறிய மிருகங்களான மான் , முயல் முதலியவை பயமில்லாமல் அதனுடன் ஒட்டி வந்து கொண்டிருந்தன. அப்போது எங்கிருந்தோ தாமரை மலரின் நறுமணம் அவனது துதிக்கையை எட்டியது .உடனே தனது பரிவாரங்கள் சூழ அந்த பொய்கையை நோக்கி ஓடத்தொடங்கினான். வழியில் உள்ளவற்றையெல்லாம் துவம்சம் செய்து கொண்டு பொய்கையை அடைந்த கஜா தன் துதிக்கையால் தாமரைப் பூ. அல்லி ஆகியவற்றின் மகரந்தங்கள் நிறைந்த அந்த இனிய பொய்கை நீரை உறிஞ்சி உளம் குளிர பருகி, அந்த நீரை தன் பரிவாரங்களுக்கும் வழங்கினான் ஒரு குடும்பத்தலைவனைப் போல, பின் ஒரு தாமரை மலரை தான் வணங்கும் பெருமாளுக்கு சமர்பிக்க பறிக்க பொய்கைக்குள் காலை வைத்த போது அந்த பொய்கையிலிருந்த முதலை கஜேந்திரனின் காலைக் கவ்விக் கொண்டு கஜேந்திரனை தண்ணீருக்குள் இழுக்க முயன்றது. கதை முடிந்தது என்று நினைத்த கஜா, ஆதிமூலமே என்று அலறியது. அந்த அபயக்குரல் கேட்டவுடனே பெருமாள் புள்ளேறி ( கருடன்), சுதர்சன சக்கரத்தால் முதலையை வதைத்து கஜேந்திரனைக் காப்பாற்றி அவனுக்கு மோட்சம் அளித்தான்.
சுருக்கமா --- தண்ணிக்குள்ள வந்த யானையை அங்கிருந்த முதலை பிடிச்சுக்கிச்சி உடனே யானை பெருமாளே காப்பாத்துன்னு கத்த அதைக்கேட்ட திருமால் விரைந்து அங்குவந்து தன் சக்ராயுதத்தால் முதலையை கொன்று யானையை காப்பாற்றினார். பின்பு யானைக்கு மறுபிறவி இல்லாத நிலையை (மோட்சம்) திருமால் அருளினார். சுதர்சனத்தால் முதலை கொல்லப்பட்டதால் அதற்கும் மோட்சம் கிடைத்திருக்கும் ஆனா அதை பற்றி யாரும் ஒன்னும் சொல்லக்காணோம் ஏன்னு தெரியலை.
இக்காலத்தில் நடந்தது -
கால கடிச்சு துதிக்கையை சும்மா விட்டதால தான யானை ஆதிமூலமேன்னு கத்துச்சு. அதனால முதலை இம்முறை காலை கடிக்காமல் துதிக்கையை கவ்விறுச்சு. இப்ப ஆதிமூலமேன்னு கத்தமுடியாதில்லையா. அதாவது யானைக்கு மோட்சம் கிடைக்காம தடுத்து விட்டது இந்த புத்திசாலியான முதலை. (முடிவு:- முதலையின் பிடியில் இருந்து யானை தப்பி ஓடிவிட்டது)
குறிப்பு :- இது களிறு (ஆண் யானை) அல்ல பிடி (பெண் யானை)
முதலை யானையின் துதிக்கையை கடிக்கும் காட்சி.
முதலையிடம் இருந்து தப்ப யானை போராடும் காட்சி.
பிபிசி-யில் இந்த காட்சிகள் வந்திருக்கு. அதிலிருந்து சுட்டதுதான் மேல் இருக்கும் 2 படமும்.

திங்கள், செப்டம்பர் 20, 2010
எச்சு மிச்சு - அனுபவம்
நான் கல்லூரியில் விடுதியில் தங்கி படிக்கும் போது அடிக்கடி குளிக்க பக்கத்திலிருக்கும் கிணத்துக்கு போவோம் (தண்ணி இருக்கறப்பதான்). நீச்சல் தெரியாத பசங்களும் வருவாங்க. கிணறு பெரிசா வட்டமா இருக்கும்.
எங்க ஊர்ப்பகுதியில் எல்லாம் செவ்வகம் அல்லது சதுர வடிவில் தான் கிணறு இருக்கும். பொதுவாக ஒரக்கிணறு (பொதுக்கிணறு) சதுரமாவும் விவசாய கிணறு செவ்வகமாகவும் இருக்கும். அதாவது சிறு கிணறு சதுரமாகவும் பெருங்கிணறு செவ்வகமாகவும் இருக்கும். விவசாய கிணறில் மேல இருந்து கிட்டதட்ட 5அடி கீழ போனா பாம்பேரின்னு ஒன்னு இருக்கும் அந்த பகுதி கிட்டதட்ட 2 அடி அகலத்துக்கு இருக்கும். பாம்பேரிக்கு மேல் தண்ணி வராது. இப்பவெல்லாம் 2 அடிக்கு தண்ணி இருக்கறதே பெரிசு. பாம்பேரிக்கு வேலையே இல்லை.
எனக்கு நீச்சல் தெரியும் என்பதால் மத்தவனுங்க மரியாதையா பார்ப்பானுங்க. என்னையும் சேர்த்து 2 பேருக்கு நல்லாவும் 3 பேருக்கு சுமாராவும் மத்தவனுங்களுக்கு நல்லா கடப்பாரை நீச்சலும் தெரியும்.
ஒரு முறை நாங்க வட்ட கிணத்துல குளிச்சிட்டு விடுதிக்கு வந்துக்கிட்டு இருந்தோம், அப்ப பேச்சு வாக்குல நான் ஏதோ சொன்னேன் (தப்பா எல்லாம் இல்லிங்க) , கூட இருந்த நண்பன் (சோழ நாட்டான்) இப்ப என்ன சொன்னன்னு கேட்டான்.
சொன்ன வாக்கியம் மறந்திடுச்சு ஆனா அவன் புதுசா கேட்ட சொல் மட்டும் நினைவு இருக்கு.
அதிகமா இருக்கு. ஜாஸ்தியா இருக்கு, நிறைய இருக்கு, ரொம்ப இருக்கு இப்படி பல சொற்களை சொன்னேன். அவன் அதெல்லாம் இல்லை வேற சொன்ன அப்படின்னான். எனக்கு ஒன்னும் தோணவேயில்லை.
கொஞ்ச நேரம் கழித்து இன்னொரு கொங்கு நாட்டான் என்ன எச்சான்னு கேட்டான். ஆமா அதே தான் அப்படின்னு நம்ம சோழ நாட்டான் புடிச்சிக்கிட்டான். எனக்கு அதை கேட்டதும் அட இதை நாம்ப ஏன் சொல்லவேயில்லை அப்படின்னு தோன்றியது. எச்சு அப்படிங்கிற புதிய சொல்லை நம்ம சோழநாட்டான் தெரிஞ்சுக்கிட்டான். கொங்கு பகுதியில் அதிகம் என்பதற்கு பதிலா எச்சு என்ற சொல்(லும்) புழங்குவதை அங்க போன மற்ற பகுதி\நாட்டுக் காரங்க கவனிச்சிருக்கலாம். சரி எச்சு-ன்னா அதிகம் அதென்ன மிச்சுன்னு கேக்கறிங்களா? எல்லாம் எதுகை மோனை தான் இஃகி இஃகி.
காட்டு: விலை எச்சா இருக்கே.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)