வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?திங்கள், செப்டம்பர் 20, 2010

எச்சு மிச்சு - அனுபவம்

நான் கல்லூரியில் விடுதியில் தங்கி படிக்கும் போது அடிக்கடி குளிக்க பக்கத்திலிருக்கும் கிணத்துக்கு போவோம் (தண்ணி இருக்கறப்பதான்). நீச்சல் தெரியாத பசங்களும் வருவாங்க. கிணறு பெரிசா வட்டமா இருக்கும்.

எங்க ஊர்ப்பகுதியில் எல்லாம் செவ்வகம் அல்லது சதுர வடிவில் தான் கிணறு இருக்கும். பொதுவாக ஒரக்கிணறு (பொதுக்கிணறு) சதுரமாவும் விவசாய கிணறு செவ்வகமாகவும் இருக்கும்.  அதாவது சிறு கிணறு சதுரமாகவும் பெருங்கிணறு செவ்வகமாகவும் இருக்கும். விவசாய கிணறில் மேல இருந்து கிட்டதட்ட 5அடி கீழ போனா பாம்பேரின்னு ஒன்னு இருக்கும் அந்த பகுதி கிட்டதட்ட 2 அடி அகலத்துக்கு இருக்கும். பாம்பேரிக்கு மேல் தண்ணி வராது. இப்பவெல்லாம் 2 அடிக்கு தண்ணி இருக்கறதே பெரிசு. பாம்பேரிக்கு வேலையே இல்லை.

எனக்கு நீச்சல் தெரியும் என்பதால் மத்தவனுங்க மரியாதையா பார்ப்பானுங்க. என்னையும் சேர்த்து 2 பேருக்கு நல்லாவும் 3 பேருக்கு சுமாராவும் மத்தவனுங்களுக்கு நல்லா கடப்பாரை நீச்சலும் தெரியும்.

ஒரு முறை நாங்க வட்ட கிணத்துல குளிச்சிட்டு விடுதிக்கு வந்துக்கிட்டு இருந்தோம், அப்ப பேச்சு வாக்குல நான் ஏதோ சொன்னேன் (தப்பா எல்லாம் இல்லிங்க) , கூட இருந்த நண்பன் (சோழ நாட்டான்) இப்ப  என்ன சொன்னன்னு கேட்டான்.
சொன்ன வாக்கியம் மறந்திடுச்சு ஆனா அவன் புதுசா கேட்ட சொல் மட்டும் நினைவு இருக்கு.

அதிகமா இருக்கு. ஜாஸ்தியா இருக்கு, நிறைய இருக்கு,  ரொம்ப இருக்கு இப்படி பல சொற்களை சொன்னேன். அவன் அதெல்லாம் இல்லை வேற சொன்ன அப்படின்னான். எனக்கு ஒன்னும் தோணவேயில்லை.

கொஞ்ச நேரம் கழித்து இன்னொரு கொங்கு நாட்டான் என்ன எச்சான்னு கேட்டான். ஆமா அதே தான் அப்படின்னு நம்ம சோழ நாட்டான் புடிச்சிக்கிட்டான். எனக்கு அதை கேட்டதும் அட இதை நாம்ப ஏன் சொல்லவேயில்லை அப்படின்னு தோன்றியது. எச்சு அப்படிங்கிற புதிய சொல்லை நம்ம சோழநாட்டான் தெரிஞ்சுக்கிட்டான். கொங்கு பகுதியில் அதிகம் என்பதற்கு பதிலா எச்சு என்ற சொல்(லும்) புழங்குவதை அங்க போன மற்ற பகுதி\நாட்டுக் காரங்க கவனிச்சிருக்கலாம். சரி எச்சு-ன்னா அதிகம் அதென்ன மிச்சுன்னு கேக்கறிங்களா? எல்லாம் எதுகை மோனை தான் இஃகி இஃகி.

காட்டு: விலை எச்சா இருக்கே.

5 கருத்துகள்:

பழமைபேசி சொன்னது…

//அதென்ன மிச்சுன்னு கேக்கறிங்களா? எல்லாம் எதுகை மோனை தான் இஃகி இஃகி.//

தேனுங்.... நாயமெல்லாம் நெம்ப நல்லாத்தேன் இருக்குங்கோய்...

எச்சாப் போச்சுன்னா... எஞ்சிப் போச்சு... அதிகமாப் போச்சுங்... செரிதானுங்....

மிச்சுன்னா... மிஞ்சிப் போனதுங்.... மிச்சமாப் போச்சுன்னு சொல்லிச் சொல்றதில்லீங் நம்பூர்ல??

இஃகி இஃகி!!

குறும்பன் சொன்னது…

நான் கொங்கு நாட்டின் கிழக்கு எல்லை காரங்க. எங்க பகுதியில் மிச்சுக்கு மிஞ்சிப்போச்சுன்னு பொருள் இல்லீங்கோ (எனக்கு தான் தெரியலையா?? வீட்டுல பேசறப்ப கேக்கறனுங்கோ)

குறும்பன் சொன்னது…

அனானி தொல்லை தாங்க முடியலையே... என் பதிவ கூட அனானி படிக்குதாதாதாதா....

குறும்பன் சொன்னது…

ஆமாங்க எச்சு மிச்சு இருந்தா பரவாயில்லை அதாவது கூட குறையா இருந்தா பரவாயில்லை அப்படின்னு சொல்லுவாங்க.
மிச்சு எப்பவும் எச்சு கூட ஒட்டிக்கிட்டு தான் வருமாம். தனியா வராதாம்.

பழம சொல்றது என்னைக்கு தப்பா போயிருக்கு இஃகி இஃகி..

sweatha சொன்னது…

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்
ஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்
தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்
வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம் .ஜீஜிக்ஸ் தளத்தை பற்றிய ஒரு ப்ளாகரின் விமர்சனத்தை காண இங்கே கிளிக் செய்யவும் http://adrasaka.blogspot.com/2010/08/500.html