வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈசா இப்போது பெரிய சர்ச்சையில் சிக்கி தவிக்கிறது. ஆனா அவர்களை விட ஏழு மடங்கு நிலத்தை வனப்பகுதியில் வளைத்துப் போட்டு யானைகளின் வழித்தடத்தை மறித்து கல்லூரி கட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் பால் தினகரனின் காருண்யா குழுமம் பற்றி இது வரை யாரும் மூச்சு விடவில்லை. அது ஏனோ? நமக்கு ஈசாவோ காருண்யாவோ சட்ட விரோதமாக வளைத்துப் போட்டுள்ள வனத்துறையின் நிலங்கள் பற்றி தெரியாது. நான் அதைப் பற்றி சொல்லப் போவதில்லை.
பல ஆண்டுகளாக நிறைய பேரிடம் காருண்யா பற்றி பேசியிருக்கிறேன் ஆனால்எ இவர்களைப் பற்றி எழுதி இருக்கிறேனா என்று தெரியவில்லை. இப்ப ஈசா சூட்டுல்ல சொன்னா சிலருக்கு மண்டையில் ஏறலாம்.
என் எதிர்த்த வீட்டு நண்பன் கூறிய உண்மைச் சம்பவங்கள் இது. இது இப்போ கூறினது இல்லை. கூறி கிட்டதட்ட இருபது ஆண்டுகள் ஆகிறது. அவனுக்கு மருத்துவம் படிக்கனும் என்று ஆசை, 1992ஆம் ஆண்டு எடுத்த மதிப்பெண்கள் பற்றாததால் மீண்டும் தேர்வு எழுதினான் அப்பவும் மருத்துவம் படிக்கும் அளவு மதிப்பெண் பெறவில்லை அதனால் காருண்யாவில் பொறியியல் (1993-1997) சேர்ந்தான்.
அங்கு எல்லோரும் கல்லூரி விடுதியில் தான் தங்க வேண்டுமாம். வீடு கல்லூரிக்கு அடுத்த தோட்டம் என்றாலும் அவர்களுக்கும் கல்லூரி விடுதி தான். வீட்டிலிருந்து எம்மாணவரும் கல்லூரிக்கு வரமுடியாது அனுமதியில்லை. யாரும் பொட்டு வைத்துக்கொள்ளக் கூடாது, பூ வைத்துக் கொள்ளக் கூடாது. யாரும் திரு நீறு, குங்குமம், சந்தனம் வைத்துக்கொள்வது கூடாது, அவை\ தினகரன் குடும்பத்தால் அதாவது கல்லூரி நிருவாகத்தால் தடை செய்யப்பட்டவை.
இதனால் பல மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் கோபம். என்ன செய்ய முடியும். ஞாயிற்றுக்கிழமை மட்டும் வெளியில் போய் வர அனுமதியுண்டு அதனால் ஞாயிறன்று நகர பேருந்து மூலம் அருகிலுள்ள சின்மயா மிசனுக்கு போவார்கள். இப்படித்தான் தங்கள் எதிர்ப்பை காட்டிக்கொண்டிருந்தார்கள். இதில் சாமி என்றாலே காத தூரம் ஓடுபவனும் அடக்கம். அப்ப எந்த அளவு நொந்து போயிருப்பார்கள் என்று புரிந்து கொள்ளலாம்.
தேர்வு சமயத்தில் மாணவர்கள் தேர்வு எழுதும் போது அப்பாடத்தை நடத்திய ஆசிரியர் மாணவர்களுக்காக அதற்காக உள்ள அறையில் செபம் செய்து கொண்டிருப்பார். எதுக்கய்யா செபம்? ஒழுங்காக சொல்லிக்கொடுத்திருந்தால் அப்பாடத்தில் மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்கப்போகிறார்கள். இவரின் இப்போதைய செபத்தால் ஏதும் மாறப்போகிறதா?
மதமாற்ற முயற்சிகளும் விடுதியில் நடக்குமாம். அதன் விளைவாக சிலர் மதம் மாறியும் உள்ளார்கள். இங்கு நிறைய மலையாள கிறுத்துவர்களும் படிக்கிறார்கள். அதில் சிலர் பெரும் பணக்கார மலையாள கிறுத்துவர்கள்.
1997ஆம் ஆண்டு இறுதியாண்டு மாணவர்களுக்கும் நிருவாகத்துக்கும் மோதல். மாணவர்களுக்கு தலைமை பெரும் பணக்கார மலையாள கிறுத்துவ மாணவன். நிருவாகம் காலிப்பயல்களை இரும்பு தடிகளுடன் விடுதியில் இறக்கி காருண்யம் இல்லாமல் மாணவர்களை தாக்கியுள்ளது. பலருக்கு மண்டை உடைந்தது. காயமுற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள்.
விடுதி மூடப்பட்டது. தலைவன் அசரலை, கேரளாவில் இருந்து ஆட்களை கொண்டாந்தான். கோயமுத்தூரில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். எந்த தமிழ் இதழ்களும் அதை துண்டு செய்தியாக கூட போடவில்லை. இந்துவோ இந்தியன் எக்சுபிரசோ தான் ஒரு முறை துண்டு அதாவது பெட்டி செய்தியாக போட்டது. இத்தனைக்கும் ஆதாரத்துடன் அனைத்து இதழ்களிடமும் கல்லூரி நிருவாகம் செய்ததை சொல்லி இதழில் எழுதுமாறு கேட்டனர். காவல் துறையில் புகார் செய்யப்பட்டும் நடவடிக்கை இல்லை. கல்லூரி சார்பில் எதிர் புகார் அளிக்கப்பட்டிருந்தது. தினகரனின் வீச்சு அப்படிப்பட்டது.
இந்த அடிதடி கேரள இதழ்களில் இடம்பெற்றது. மாணவர்கள் கோயமுத்தூர் சட்டமன்ற உறுப்பினரிடமும் புகார் அளித்துள்ளனர். அப்போது திமுகவின் ஆட்சி என்பது தெரியும் தினகரனை பகைத்துக்கொண்டால் திருநெல்வேலி பக்கம் சில ஆயிரம் வாக்குகளை இழக்க வேண்டியிருக்கும் என்பதால் திமுகவும் கண்டு கொள்ளவில்லை.
1997ஆம் ஆண்டு இறுதியாண்டு மாணவர்களை கல்லூரி நிருவாகம் இறுதில தேர்வை (8th semester எழுத அனுமதிக்க வில்லை. மன்னிப்பு கேட்டால் தான் அனுமதி என்றதால் மன்னிப்பு கேட்ட நாலைந்து பேர் மட்டும் எழுதினர். மற்றவர்கள் யாரும் மன்னிப்பு கேட்கவில்லை. என் நண்பன் பிரச்சனையில் கலந்து கொள்ளாமல் வீட்டுக்கு வந்து விட்டாலும் மன்னிப்பு கேட்க மறுத்து அடுத்த முறை தேர்வு எழுதி 1998 தான் பட்டம் பெற்றான். கல்லூரியில் ஒவ்வொரு தேரவிலும் 75% இக்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தாலும் மற்றவர்களுடன் இணைந்தே தேர்வு எழுதினான். அவங்க அப்பா கண்டிப்பானவர் எப்போதும் கல்லூரி நிருவாகத்தை ஆதரித்து பேசி வந்தாலும் இறுதி தேர்வை மன்னிப்பு கேட்டு எழுத வேண்டும் என்பதை புறக்கணித்து இறுதியில் மாணவர்கள் பக்கம் நின்றார் என்பதையும் சொல்ல வேண்டும்.
இப்போ மாணவர்கள் வெளியில் தங்கி கல்லூரிக்கு வரலாம் என்று கேள்விப்பட்டேன். அதுக்கு 1997இல் அடிவாங்கி மண்டை உடைந்து நடந்திய போராட்டமே காரணம். இப்போது பூ வைக்க, பொட்டு வைக்க, திருநீறு வைக்க அனுமதியுண்டா என்று அறியேன். போராடாமல் அடிப்படை உரிமை கூட இக்காலத்தில் கிடைக்காது.
வணக்கம்
வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?
திங்கள், மார்ச் 06, 2017
ஞாயிறு, பிப்ரவரி 12, 2017
தமிழகத்தின் குழப்பமும் ஒன்றிய அரசின் சித்து விளையாட்டும்
தமிழகம் தற்போது கடும் குழப்பத்தில் உள்ளது, இந்த கலங்கிய குட்டையில் மீன் பிடிக்க திமுகவும் ஒன்றிய ஆளும் அரசான பாசகவும் முயல்கின்றன.
அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக யார் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களோ அவர்களே முதல்வராக வரவேண்டும். எட்டாந் தேதி இரவு வரை ஆளுநர் சென்னைக்கு வரவில்லை. அதாவது அடுத்த முதல்வரை நியமிக்க காலதாமதம் எடுத்துக்கொள்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் சொல் கேட்காமல் போகக்கூடிய பணபலம் பொருந்திய சசிகலா வருவதை விரும்பவில்லை. செயலலிதா உயிரோடு இருந்த பொழுது சசிகலாவின் ஆதிக்கம் அதிகமிருந்ததும் காரணமாக இருக்கும். அவர் விலகியிருந்த போது தான் சோக்களிடம் சசிகலா நிருவகித்த மிடாசு சாராய ஆலை உட்பட பொருப்புகளை தற்காலிகமாக செயா தந்தார். அவாளிடம் அவாள் அல்லாத ஆளின் நெருக்கம் அவாள் அவாளை தன்னிடம் நெருங்க விடாதது எல்லாம் பாசகவின் சசிகலா வெறுப்புக்கு காரணமாக இருக்கலாம்.
சசிகலா முதல்வர் பதவி ஏற்றால் 6 மாதத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றே தீரவேண்டும். அவரை எதிர்ப்பவர்கள் அங்கு அவரை மக்கள் ஆதரவுடன் தோற்கடித்தால் பிரச்சனை சுலபமாக முடிந்து விடுமே. வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவை தோற்கடித்து அவரது தலைமையால் அதிமுகவிற்கு பயன் இல்லை என்று காட்டலாமே. அதிமுக நிருவாகிகளே அப்போ அவரை எதிர்ப்பார்களே.
ஆளுநர் ஐந்தாம் தேதியே சென்னையில் இருந்திருந்தால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் தலைமையை ஏற்று ஆட்சி அமைக்க அழைத்திருப்பார் அல்லவா? ஏன் ஐந்தாம் தேதி ஊட்டியிலிருந்து மும்பைக்கு போகிறார்? ஏன் பன்னீரின் பதவி விலகல் மடலை ஏற்றுக்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்? எதற்காக காலதாமதம்? காலதாமதம் குதிரை பேரத்தை வளர்ப்பது அல்லவா. பன்னீருக்கு இரு நாட்களுக்கு பிறகு செயா ஆவியிடம் பேச தோன்றி கட்டாயப்படுத்தி கையெழுத்து என சொன்னது ஏன்?. ஏன்னா மோதி சொல்லியிருப்பார் அதனால செயா சமாதிக்கு சென்று 5 நிமிடம் சிறு உறக்கம் போடுகிறார். தியானம் என்பது கடும் பயிற்சி இல்லாம வராது தம்பி.
மோதி ஆட்டுவித்தது போல் பன்னீர் பேசியாயிற்று, பாசக ஆளுநர் அதற்காகத்தானே தாமதம் செய்தார். பன்னீரின் வயசென்ன அரசியல் அனுபவம் என்ன? (எத்தனை பேரை மிதித்துவிட்டு மேல வந்திருப்பார்) இப்ப முதல்வராகவும் உள்ளார். அவரை மிரட்டி கையெழுத்து வாங்க முடியுமா அப்படியே வாங்கியிருந்தாலும் மிரட்டலுக்கு பணிகின்றவர் நமக்கு முதல்வராக இருக்கலாமா?முதல்வரே கட்டாயத்திற்கு உள்ளாகி கையைழுத்து போட்டால் குடிகளின் கதி? அவர்களுக்கு என்ன பாதுகாப்பு? நாளைக்கு வேறொருவரின் மிரட்டலுக்கு பன்னீர் பணியமாட்டார் என்பதற்கு என்ன உறுதியிருக்கு?
ஆகசட்டு 31, 2017 தமிழக ஆளுநராக ரோசையாவின் கடைசி நாள். அவருக்கு பதவி நீடிப்பு இல்லை என்று ஒன்றிய அரசு முடிவெடுத்தபின் வழக்கமாக இறுதி நாளுக்கு முன்பே ஒரு மாதத்திற்கு முன் அடுத்த ஆளுநரை தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கி விடும். சரி ஒரு மாதத்தில் தேர்ந்தெடுக்க முடியவில்லை என்றால் அடுத்த மாதத்திற்குள் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். தமிழகமும் மகாராட்டிரமும் இந்தியாவின் பெரிய மாநிலங்கள், ஒன்றியத்துக்கு பெரும் அளவில் வரியை ஈட்டி தருபவை. பெரிய மாநிலமான தமிழகத்திற்கு இன்னும் நிரந்தர ஆளுநரை போடாடதன் அரசியல் என்ன? ஒன்றிய பாசக அரசே விளக்கவேண்டும்.
துரை முருகன் பழுத்த அரசியல்வாதி எப்படி பேசி, எதை புரியவைக்க வேண்டும் என்று அவருக்கு தெரியும். துரைமுருகன் உங்களுக்கு துணையாக இருப்போம் என்பதை புரிந்து கொண்டால் சரி. ஊழல்வாதி செயலலிதா மருத்துவமனையில் மரண படுக்கையில் இருந்த போதே நடைபெற்ற மூன்று சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல், முழு தேர்தல்களில் 20,000இக்கும் அதிகமான வாக்கு வேறுபாட்டில் திருக்குவளை கொள்ளைக்கூட்டத்தின் கட்சி தோற்றது. இத்தனைக்கும் கருணாநிதி, இசுடாலின் பரப்புரை இருந்தது. தமிழக மக்களின் நம்பிக்கையை பெறமுடியாததால் இப்போ குழப்பத்தை பயன்படுத்தி குறுக்கு சால் ஓட்டுகிறார்கள். திமுக நண்பர்கள் இந்த ஆட்சி கவிழவேண்டும் அடுத்து ஆட்சியை பிடித்துவிடலாம் என்று எண்ணி இந்த ஆட்சி கவிழாதா என்று ஆசையாக காத்துக்கொண்டுள்ளார்கள்.
சசிகலா கூட்டம் ஒழுங்கா என்றால் இல்லை அவர்கள் செயலலிதா உயிருடன் இருந்த போது அவரின் உதவியுடன் தமிழகத்தை கொள்ளையடித்தவர்கள் தான். பல ஆயிரம் கோடி கொள்ளையடித்தவர்கள், கங்கை அமரனின் சிறுதாவூர் பங்களாவை (உண்மையில் பையனூர் பங்களா தான், அருகில் சிறுதாவூர் உள்ளது) மிரட்டி வாங்கியவர்கள் மன்னிக்க அடி மாட்டு விலைக்கு பரித்துக்கொண்டவர்கள். வாங்கிய கோடிக்கனக்கான மதிப்புள்ள நகைகளுக்கு பணம் தர மறுத்ததால் நகைக்கடையாளர் பாலு இறப்பிற்கு காரணமானவர்கள். அமிர்ந்தாஞ்சன் தலைவலி தைல முதலாளியின் வீட்டை மிரட்டி அடி மாட்டு விலைக்கு பரித்துக்கொண்டவர்கள். மிரட்டி அடி மாட்டு விலைக்கு தான் எந்த நிலத்தையும் வாங்குவார்கள் மன்னிக்க பரிப்பார்கள். மிடாசு சாராய ஆலை அதிபர்கள் இது உருவானது அதிமுக ஆட்சி காலத்தில் தான். டாசுமாக் அவர்களிடம் சரக்கு வாங்குவதிலேயே பல்லாயிரம் கோடிகள் பார்த்திருப்பர்.
பன்னீர் ஒழுங்கா என்றால் அவரும் இல்லை பெரும் ஊழல்வாதி ரெட்டியுடன் பிணைந்திருப்பவர். மெரினா போராட்டத்தை கடைசி நாளில் இரத்தக்களறி ஆக்கியது அவர் தான். இது அலங்காநல்லூரிலும் கோவையிலும் தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் தொடர்ந்தது. மெரினா போராட்டக்காரர்களை ஒரு முறை கூட சந்திக்காதவர். காவல்துறை அமைச்சரும் இவரே. ஆறு இலட்சம் பேர் மெரினாவில் ஒரு வாரம் இடைவிடாமல் போராட்டம் நடத்தியதை மாநில அரசும் ஒன்றிய அரசும் எளிதில் புறம் தள்ளிவிட முடியாது. ஏன் உச்ச நீதிமன்றமும் புறம் தள்ளமுடியாது. மெரினா மட்டுமல்ல போராட்டம் தமிழகம் முழுக்க நடந்தது. உலகம் முழுக்க நடந்தது. வெளிநாட்டு நாளேடுகளில் செய்தி வந்த பிறகு அதை புறக்கணிக்க முடியாது. அழுத்தமும் முடிவும் போராட்டத்தால் தான் வந்தது, செயலலிதா உயிரோடு இருந்த போதே அவருக்கு தெரியாமல் ஊழல் செய்து பணம் சேர்த்ததால் செயாவின் கோபத்திற்கு ஆளானவர் (செயா பங்கு போனதால் தான் கோபம்). இவருக்கும் கரூரில் அன்புநாதன் வீட்டில் நடைபெற்ற சோதனைக்கும் தொடர்பு இருந்தல்லவா? சேகர் ரெட்டிக்கு தமிழகத்தின் மணல் குத்தகையை மொத்தமாக தாரைவார்த்து தமிழக ஆறுகளை சுரண்டியவர் இவரே. தம்பி ராசா பையன் ரவீந்திரநாத் மூலம் வெளிநாட்டு (முறைகளை மீறி) முதலீடுகளுக்கு அடித்தளம் அமைத்தார். டீ கடையும் பால் பண்ணையும் விவசாயமும் பார்த்தவரிடம் எப்படி பல கோடிகள் சேர்ந்தது? சசி கொள்ளை பற்றி தெரிந்த அளவுக்கு நமக்கு பன்னீரின் கொள்ளைகள் தெரியவில்லை என்பது உண்மையே.
சசிகலா கூட்டமும் கொள்ளைக்கார கூட்டம், பன்னீர் கூட்டமும் கொள்ளைக்கார கூட்டம். இருவருக்கும் உள்ள வேறுபாடு கொள்ளையடிக்கும் முறையில் தான் உள்ளது. ஆனால் நம் பொருட்கள் கொள்ளை போவது உறுதி. எனக்கு இவன் தான் கொள்ளையடிக்கனும் , இவன் கொள்ளையடிக்கும் அழகு தான் பிடித்துள்ளது என்று மக்கள் கேட்பது புரியாதது.
அதிமுகவிலும் பழ.கருப்பையா போன்ற நல்லவர்கள் உள்ளார்கள் (பழ. கருப்பையா வெளியேறிவிட்டார் என்பது வேறு) . அவர்களை யாராவது அடையாளம் காட்டி அவர்கள் முதல்வர் ஆக மாணவ & இளைஞர் சமூகம் குரல் கொடுத்தால் ஏற்கலாம் ஆனால் மெரினா சல்லிக்கட்டு ஆதரவு போராட்டக்காரர்களை ஒரு முறை கூட சந்திக்காதவருக்கு ஆதரவு தருவதை நினைக்க முடியவில்லை.
நமக்கு சசிகலா கூட்டத்தின் மேல் ஒவ்வாமை இருக்கலாம் அதற்காக ஆளுநர் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை கொடுத்த சசிகலாவை ஆட்சியமைக்க கூப்பிடாதது நம் மாநில உரிமையை ஒன்றிய அரசுக்கு தாரை வார்ப்பது ஆகும். இப்பவே மாநில உரிமைகள் ஆடுது, அதை மீட்கவே எத்தனை ஆண்டுகள் போராடனும் என்று தெரியவில்லை! என்பதை நினைவில் கொள்க. ஆளுநருக்கு ஏதாவது ஐயம் இருந்தால் தனித்தனியாக சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்தை ஆளுநர் மாளிகையில் கேட்கலாம் அல்லது சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க சசிகலாவை கேட்கலாம். அது தான் முறை. ஒன்பதாம் தேதி ஆளுநர் சென்னை வந்தார் பன்னிரெண்டாம் தேதி வரை முடிவு எதையும் எடுக்கவில்லை. நிறைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பன்னீர் பின் போக அவகாசம் கொடுக்கிறார் அப்படியும் 15 உறுப்பினர்கள் கூட பன்னீர் பின் இன்னும் திரளவில்லை. என்று எட்டுவார் என்றும் தெரியவில்லை, இந்த ஆண்டு நடுவில் குடியரசு தலைவர் தேர்தல் வருகிறது அதற்கா ஒன்றிய பாசக ஏதேனும் சித்து விளையாட்டை அரங்கேற்றுகிறதோ என்னவோ.

வெள்ளி, ஜனவரி 20, 2017
நுண்ணறிவு
பெரியபிள்ளை வசிக்கும் நகரம் சிற்றூர் ( கிராமம்) அல்ல. அதைவிடப் பெரியது ஆனால் நகரம் அல்ல. பேரூராட்சிக்கு ஒரு கிமீ தள்ளி உள்ள ஊர். வானம் பார்த்த பூமி என்பதால் விவசாயத்தை விட இங்கு கால்நடை வளர்ப்பதே முதன்மையான தொழில். வேளாண்மை என்று பார்த்தால் கால்நடைக்கான தீனி (சோளம்) வளர்ப்பது தான் முதன்மையாக இருக்கும். சோளத்தட்டு தான் மாடுகளுக்கான தீனி.
கொட்டாயில் தான் பெரியபிள்ளை இருந்தார். கொட்டாய் ஓடு வேயப்பட்டு வசிக்கும் படி வசதியாகத்தான் இருந்தது. மாடுகளை கட்டிவைக்கும் கட்டுத்தாரை அவங்க கொட்டாயில் இருந்து 100 அடி தூரத்தில் இருந்தது. தினமும் காலையிலும் மாலையிலும் பால் கறந்து வைப்பார் அதோடு மாட்டுக்கு தீனி போடுவதும் தண்ணி வைப்பதும் இவரது பணி, வேலையாள் வரவில்லை அல்லது அவருக்கு உடனே கவனிக்க வேண்டிய பணிகள் இருந்தால் இவர் மாட்டை மேய்ச்சலுக்கும் கூட்டிபோவார். 4 பசுக்களும் 3 எருமைகளும் அவர்களிடம் இருந்தன. 5 லிட்டர் எருமைப்பால் தேநீர் கடைக்கும் மீதி பால் அனைத்தும் கூட்டுறவு பால் சங்கத்துக்கும் போகும்.
அவங்க பக்கத்து கொட்டாயில் நாட்டு நாய் இருந்தது, அது இங்கும் வரும். அதற்கு சில முறை இவர் சோறு வைத்துள்ளார்.
எவ்வளவு நாள் தான் கொட்டாயிலேயே குடியிருப்பது? அதனால் பெரியபிள்ளை சாலைக்கு இப்புறமுள்ள வீட்டிற்கு குடி பெயர்ந்து விட்டாலும் கொட்டாயிக்கு போவதும் பால் கறப்பதும் நடந்து கொண்டு உள்ளது.
பக்கத்து கொட்டாய் நாய் இவர் கொட்டாயிலிருந்து பால் கறந்து விட்டு வீட்டுக்கு வரும் வரை கூடவே வரும். ஆனா வீட்டுக்கு வராது சாலையிலிருந்தே பார்க்கும் இவர் வீட்டுக்குள் சென்றதும் போய் விடும். சாலையில் இருந்து தோராயமா 100மீட்டர் தொலைவில் இவர் வீடு இருக்கும். இதை இவர் கவனித்ததே இல்லை. இப்படி நாய் இவருக்கு துணையாக வருவது இவருக்கு தெரியாது.கவனிச்சா தானே தெரிவதற்கு.
நாய் துணையாக வருவதை பக்கத்து வீட்டுக்கார பெண் பார்த்து விட்டு பெரியபிள்ளையிடம் கூறியுள்ளார். இப்பெண்ணுக்கு நாய் கட்டுத்தாரைக்கு பெரியபிள்ளைக்கு துணையாக போவது தெரியாது. பெரியபிள்ளை நாயை சில நாட்கள் கவனித்தபொழுது அது துணையாக இவருக்கு வருவது தெரிந்தது.சில வேளை சோறு போட்ட நன்றி கடனுக்காக துணையாக வருகிறது என்று நினைத்தார்.
பக்கத்து வீட்டுப் பெண் அக்கா அக்கா இந்த நாயை நாமளே இங்க வச்சுக்கிட்டா என்ன? என்று பெரியபிள்ளையின் வீட்டு வாசலலில் கேட்டுள்ளார். இதை நாய் பெரியபிள்ளையை வீட்டில் விட்டு செல்லும் முன் கேட்டார். சாலையிலிருந்தே இதை எப்படித்தான் நாய் கேட்டுச்சோ? வீட்டிலிருந்து தோராயமா 100மீட்டர் தொலைவில் சாலை இருக்கு என்பது நினைவு இருக்கட்டும்
அடுத்த நாளில் இருந்து பெரியபிள்ளைக்கு துணையாக நாய் எவ்விடத்திற்கும் வருவதில்லை.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)