வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



திங்கள், மார்ச் 10, 2014

தேர்தல் கணிப்பு

மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டாயிற்று. சில கணிப்புகளை இங்கே சொல்லி உள்ளேன். இது எந்த கட்சிகாரங்களும் காசு கொடுத்து செய்ததல்ல :) கருத்து கணிப்புன்னு வந்தா இதை முதல்ல சொல்லனும் பல கருத்து கணிப்பு நிறுவனங்களால் இந்த நிலை.

மாநிலம் தொகுதிகள் ஆட்சி 2009ல் காங் வென்றது 2009ல் பாசக வென்றது
ஆந்திரப்பிரதேசம் 42 காங்கிரசு 33 0
அருணாச்சல்பிரதேசம் 2 காங்கிரசு 2 0
அஸ்சாம் 14 காங்கிரசு 7 4
பீகார் 40 ஐக்கிய ஜனதாதளம் 2 12
சத்திசுகர் 11 காங்கிரசு 1 10
கோவா 2 பாசக 1 1
குசராத் 26 பாசக 11 15
அரியானா 10 காங்கிரசு 9 0
இமாச்சலப்பிரதேசம் 4 காங்கிரசு 1 3
சம்மு காசுமீர் 6 தேசிய மாநாடு 2 0
சார்கண்ட் 14 காங்கிரசு 1 8
கருநாடகம் 28 காங்கிரசு 6 19
கேரளா 20 காங்கிரசு 13 0
மத்தியப்பிரதேசம் 29 பாசக 12 16
மகாராசுட்டிரா 48 காங்கிரசு 17 9
மணிப்பூர் 2 காங்கிரசு 2 0
மேகாலயா 2 காங்கிரசு 1 0
மிசோரம் 1 காங்கிரசு 1 0
நாகாலாந்து 1 காங்கிரசு 0 0
ஒடிசா 21 பிசு ஜனதாதளம் 6 0
பஞ்சாப் 13 அகாலிதளம் 8 1
இராசபுதினம் 25 பாசக 20 4
சிக்கிம் 1 காங்கிரசு 0 0
தமிழ்நாடு 39 அதிமுக 8 0
திரிபுரா 2 காங்கிரசு 00
உத்திரப்பிரதேசம் 80 சமாச்வாடி 21 10
உத்திராகண்டம் 5 காங்கிரசு 5 0
மேற்கு வங்கம் 42 திரிணாமுல் காங்கிரசு 6 1

2009 தேர்தல் முடிவுப்படி: கேரளா, ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு, நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், திரிபுரா, சிக்கிம், அருணாச்சலப்பிரதேசம், அரியானா, உத்திராகண்டம், ஓடிசா , சம்மு காசுமீர் போன்ற மாநிலங்களில் பாசக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

காங்கிரசு திரிபுரா, நாகாலாந்து, சிக்கிம் போன்ற மாநிலங்களில் வெற்றி பெற வில்லை.

மகாராசுட்டிரா, பஞ்சாப், பீகார் போன்றவற்றில் பாசகவுக்கு வலுவான கூட்டணி கட்சிகள் இருந்தன. காங்கிரசுக்கு தமிழ்நாடு, மேற்கு வங்கம் சம்மு காசுமீர் போன்றவற்றில் வலுவான கூட்டணி கட்சிகள் இருந்தன.

2009ல் காங்கிரசு 3 மாநிலத்தில் முட்டை வாங்கியிருக்கு பாசக 14 மாநிலங்களில் முட்டை வாங்கியிருக்கு. இதில் பெரும்பாலான மாநிலங்கள் வடகிழக்கை சேர்ந்தது. அங்கு 1 அல்லது 2 தொகுதி தான் இருக்கும். ஆனா கேரளா, தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், உத்திரா கண்டம்,  அரியானா, ஒடிசா, சம்மு காசுமீர் போன்ற 4க்கு மேற்பட்ட தொகுதி உடைய மாநிலங்களிலும் முட்டை.

தெற்கில் கூட்டணி பலமா அமைந்தால் தமிழ்நாட்டில் அதற்கோ அதன் கூட்டணி கட்சிகளுக்கோ சில இடங்கள் கிடைக்கலாம். கேரளா, ஆந்திராவில் இப்பவும் முட்டை தான் கிடைக்கும். மேற்கு வங்கத்தில் 2009ல் எப்படியோ 1 இடம் கிடைத்தது. அந்த மாநிலத்தில் பாசக செல்லாக்காசு. ஒடிசாவில் பிஜு ஜனதாதளத்துடன் கூட்டணி வைத்தா தேறலாம் இல்லை ஆம்லெட் திங்க முட்டை கிடைக்கும்.

பீகாரில் நிதிசு கூட காய் விட்டதால் இம்முறை எத்தனை இடங்களில் வெற்றி கிடைக்கும் என்பது தெரியவில்லை.  அதாவது வடமாநிலங்களில் நிறைய இடங்களில் வென்றால் மட்டுமே ஆட்சியை பாசக பிடிக்கமுடியும். ஆனால் வடமாநிலங்களில் பெருநகரங்களில் ஆம் ஆத்மி கட்சி பாசகவுக்கு புது தலைவலியாக உருவெடுத்துள்ளது.

அரியானாவில் 2009ல் இரு தொகுதிகளில் (பரிதாபாத், சோனிபேட்டை) பாசக இரண்டாவது வந்துள்ளது. இங்கு இது கூட்டணி வைத்தால் தான் ஒரு தொகுதியிலாவது வெற்றி கிடைக்கும். சௌத்தாலா கூட கூட்டணி வைத்தால் சில தொகுதிகள் கிடைக்கலாம். காங்கிரசுக்கு போட்டி கொடுக்கலாம். காங்கிரசும் சௌத்தாலாவும் தான் பெரிய ஆளுங்க. அங்குள்ள சிறிய கட்சியான (சௌத்தாலாவை விட சிறியது) அரியானா ஜாங்கிட் காங்கிரசு கூட 2009ல் பாசக கூட்டணி வைத்தது. 2014ல் அங்கு ஆம் ஆத்மி எப்படி எல்லோருடைய கணக்கை கலைச்சிப்போடும்ன்னு தெரியலை.

மேற்கு வங்கத்தில் 2009ல் பாசகவின் பெரிய ஆளுங்களில் ஒருவரான ஜசுவந்த் சிங் டார்சலிங்கில் வெற்றி பெற்றவர். இவர்  தொண்டர் செல்வாக்கு இல்லாவர் ஆனால் அமைச்சராக இருந்ததால் பெரிய ஆளு என்றேன். அப்ப டார்சலிங்கில் எப்படி வெற்றி பெற்றார் என்கிறீர்களா? அது டார்சலிங்கின் தாதாவான கூர்க்கா சனமுக்தி மோர்சாவுடன் கூட்டணி வைத்தால் தான்.

அசாமில் நாலு இடம் அப்பா! அங்கு பெரும் வளர்ச்சி அப்படின்னு நினைக்காதிங்க. 2004ல் தனியா போட்டி போட்ட போது 2 இடம் கிடைத்தது உண்மை. ஆனால் அங்கு பாசகவுக்கு பெரும் செல்வாக்கு இல்லை. அதில் ஒருவரான பாடகர் பூபன் தன் தனி செல்வாக்கால் வென்றார். பாச கட்சியால் அல்ல. 2009ல் அசாம் கன பரிசத்துடன் கூட்டணி வைத்ததால் தான் 4 இடம் கிடைத்தது. பாவம் அசாம் கன பரிசத்துக்கு அப்போ 1 இடத்தில் தான் வெற்றி கிடைத்தது. இது தேர்வில் இவன் மதிப்பெண் குறைவு ஆனால் இவனை பார்த்து எழுதியவன் நிறைய மதிப்பெண் என்ற கணக்காயிடுச்சு.

பாசக பெரும்பான்மை பெறனும்னா தோராயமா 350ல் இருந்து தான் பெறனும். அதனால அது தனிப்பெரும்பான்மை பெறுவது சுலபம் அல்ல. கூட்டணி தான் ஒரே வழி. 200க்கு மேல் வெற்றி பெற்றால் பயம் இல்லாமல் இருக்கலாம் இல்ல எப்ப யாரு கத்தியால் குத்துவாங்கன்னு தெரியாது அநியாயத்துக்கு பயப்படனும் (ஆட்சியில் அமர்ந்தால்).

நிறைய தொகுதிகளில் வெற்றி பெறனும்னா அதற்கான வழி உத்திரப்பிரதேசத்தில் தான் இருக்கு. மராட்டியத்தில் ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா புண்ணியத்தில் பாதிப்பு இருக்கு. அதை சரி கட்டுனா தேவலை. ஆம் ஆத்மியால் சில\பல இடங்களில் பாதிப்பு ஏற்படலாம்.



 இத்தேர்தலில் காங்கிரசு செத்த எலி.

கருத்துகள் இல்லை: