வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?ஞாயிறு, மார்ச் 16, 2014

மலேசியன் ஏர்லைன்சு (MH370) எங்கப்பா போயிடுச்சு?

சனிக்கிழமை (மார்ச்சு 8, 2014) காணாமல் போன மலேசியன் ஏர்லைன்சு பற்றி ஒவ்வொரு நாளும் ஒரு செய்தி வருது ஆனா அது எங்க இருக்குன்னு தெரியலை.

வியட்நாம் பகுதி கடல்ல விழுந்துருச்சுன்னு சொன்னாங்க, மலேசியன் ஏர்லைன்சின் எண்ணெய் கசிவு இதோ இருக்கு அப்படின்னு சொன்னாங்க.

மலேசியன் ஏர்லைன்சின் கதவு கடல்ல மிதக்குதுன்னு சொன்னாங்க.

இதுல போனங்க 2 பேர் போலி (தாய்லாந்தில் திருடப்பட்ட) கடவுச்சீட்டு பயன்படுத்தியிருக்கறதா சொல்றாங்க. கடவுச்சீட்டை தாய்லாந்தில் பறிகொடுத்தவங்க ஆசுத்திரியா & இத்தாலி நாட்டுக்காரங்க.

40க்கும் மேற்பட்ட கடற்படை கப்பல்கள் தேடுதுன்னு சொன்னாங்க.

சீனா 10 செய்மதிகளை கொண்டு வியட்நாம் கடல் பகுதியை சல்லடை போட்டு தேடுதுன்னு சொன்னாங்க.

வானூர்தி மேற்கு பக்கம் போயிடுச்சி அப்படினாங்க.

பயணிகள் சிலரின் செல்போன் சிக்னல் இருக்குது செல்பேசியின் மணி அடிக்குது ஆனா எடுக்கலை அப்படினாங்க.

சீன செய்மதி வானூர்தி விபத்து நடந்த இடத்தை காட்டுச்சுனாங்க.

மலாக்கா நீர்சந்தி பகுதியில் தீவிர தேடுதல் நடத்துனாங்க. மலாக்கா நீர்சந்தி அதிக கப்பல் போக்குவரத்து உடையது.

வானூர்தி ஓட்டுநர் தற்கொலை பண்ண எங்காவது முட்டியிருக்கலாம் என்கிறாங்க.

மலேசிய இராணுவம் காணாமல் போன வானூர்தி மேற்க போனதா சொல்லுது.

கடத்தப்பட்டிருக்கலாம் அப்படின்னு சொல்றாங்க.  போலி கடவுச்சீட்டை பயன்படுத்தனவங்களுக்கும் கடத்தலுக்கும் தொடர்பில்லை\வாய்ப்பில்லை அப்படின்னும் சொல்றாங்க.

கடத்தப்பட்டிருக்கும் அப்படங்கிறதையும் புறந்தள்ள முடியாது அப்படிங்கிறாங்க. 

மலேசிய அரசாங்கம் மந்திரவாதிய கூப்பிட்டு தேடுனாங்க. அதனால் கோபம் கொண்ட வாசுது நிபுணர்கள் அவங்க கதைய சொல்லியிருக்காங்க.

இந்திய படை தேடுதலில் ஈடுபட்டது, அதை நிறுத்த மலேசிய அரசு சொல்லிட்டுச்சி.

அந்தமான் பக்கம் வந்துச்சினாங்க.

இந்தியப்பெருங்கடல் பக்கம் வந்துச்சினாங்க.

வானூர்தி காணாம போனாலும் அது இன்னும் சமிக்கை தருதுன்னு சொல்றாங்க.

வானூர்தி காணாமல் போன இடத்திலிருந்து 5 அல்லது 6 மணி நேரம் பறந்திச்சி அப்படின்னு அமெரிக்கா சொல்லுது.

வானூர்தி மேற்க வந்தப்ப எந்த நாட்டு (மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, இந்தியா) இராணுவ ரேடாரும் அதை கண்டுபிடிக்கலை ஏன்னா அப்போ ரேடார்கள் தேய்ஞ்சிருமுன்னு அது செயல்படலை. (சுருளி படத்தை பார்த்து இருப்பாங்களோ?)
 
இன்னும் நிறைய சொன்னாலும் இன்றைய தேதி வரை கண்டுபிடிக்கலை. தேடுதல் வேட்டையில் உலகின் பெரும் தொழில்நுட்பம் கொண்ட நாடுகள் ஈடுபடுது. தொழில்நுட்பத்தின் மீது பெரிய நம்பிக்கை வந்திருக்கனுமே?

என் ஊகம்:

வானூர்தி சுமத்திரா தீவுக்கோ, தாய்லாந்து அல்லது மியான்மாருக்கோ (பர்மா) கடத்தப்பட்டிருக்கலாம் என்பது தான்.

7 கருத்துகள்:

ராஜி சொன்னது…

இனி விமானத்தில் ஏறும்போதெல்லாம் இந்த நினைப்பு வருமே!

குறும்பன் சொன்னது…

உண்மை. பயணிகளை சித்தரவதை பண்ணும் (இனிமே இன்னும் அதிகமாகும்), மக்கள் வானூர்தி ஓட்டுநர்களை ஒன்னும் செய்யமாட்டாங்களா? வானூர்தியை புறப்படும் இடத்திலிருந்து சேரும் இடம் வரை செய்மதி துணை கொண்டு கண்காணிக்க முடியாதா? குறிப்பிட்ட இடைவெளியில் வானூர்தி ஓட்டுநர்களின் நடத்தையை கண்காணிக்க முடியாதா. இது நடந்தால் தான் நாம் சிறிது நிம்மதியாக பயணம் செய்யலாம்.

வவ்வால் சொன்னது…

குறும்பன்,

நானும் இந்த விமான மர்மத்தினை கவனிச்சுட்டு தான் வரேன், இதில மலேஷிய அரசின் " வெளிப்படைத்தன்மை இன்மை" தான் சந்தேகத்துக்குள்ளாக்குது.

ஏன் எனில் விமானம் கடத்தப்பட்டிருந்தால் " டிமாண்ட்" ஏதேனும் கடத்தப்பட்டவர்களால் கேட்கப்பட்டிருக்கும். அதனை சொல்லாமல் மழுப்புறாங்களோனு டவுட்.

அமெரிக்கா மற்றும் சீனா ஆகியவற்றுக்கு தான் அவ்விடங்களில் கூட சேட்டிலைட் கண்கானிப்பு இருக்கும் ,மற்ற யாருக்கும் இருக்க வாய்ப்பில்லை.

அமெரிக்கா உலகம் முழுக்க கண்காணிக்குது,சீனா அதன்ன் எல்லைப்பகுதி அருகாமைனு கண்காணிக்கும்.

மற்ற எல்லா நாடுகளும் அவற்றின் எல்லைக்குள் தான் கண்காணிப்பு வசதி வச்சிருக்கும்.

ரேடார் ரேஞ்ச் என்பது பெரும்பாலும் , நில எல்லையில் இருந்து 30 கி.மி தான் தெளிவா இருக்கும், அப்புறம் குத்து மதிப்புக்கு ஒரு லாங் ரேஞ்ச் ரேடார் தனியா வச்சு கவனிப்பாங்க.இதனால் தான் விமானங்களை தெளிவாக அடையாளம் காட்ட அவற்றில் இருந்து ரேடியோ சிக்னல் அனுப்பிட்டு இருப்பாங்க. விமானத்தில் இருந்து சிக்னல் வரலைனா தெரியாது,மலேஷிய விமானத்தில் அதான் நடந்திருக்கு.

ஒவ்வொரு விமானத்திலும் தானியங்கியாக , விமானத்தின் குறியீட்டு எண்ணை பிராட்காஸ்ட் செய்யனும். அதை வச்சு தான் ரேடாரில் இது இந்த நாட்டு விமானம் என அடையாளப்படுத்துவாங்க, அந்த எண் டிஸ்பிளே ஆகும்.அப்படி குறியீட்டு ரேடியோ சிக்னல் வராத பறக்கும் பொருளை "Un identified Flying Object-UFO" என சொல்லுவார்கள்.

ஒரு நாட்டு வானெல்லையில் அப்படி அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் ரேடாரில் சிக்கினாலே "விமான படை மூலம்" செக் செய்வது வழக்கம்.

எனவே ஒரு விமானம் அடையாளம் இல்லாமல் ஒரு நாட்டையும் கடந்து பறக்கவே முடியாது.

இரு முறை அத்துமீறி "அடையாளமே" இல்லாமல் இந்திய வானெல்லையில் பறந்த அமெரிக்க போர் விமானங்களை இந்தியாவே மடக்கிப்பிடிச்சு தறையிறக்கி இருக்கு.

ரஷ்ய விமானங்களை நம்ம ஊரில் விமர்சிப்பாங்க ,ஆனால் அமெரிக்க எஃப்-16 ஐ இன்டெர்செப்ட் செய்ய ,ரஷ்ய விமானங்களால் மட்டுமே முடியும்,இல்லைனா இன்னொரு எஃப்-16 இருக்கணும். ப்ரென்ச் மிராஜ் வகை கூட இன்டர் செப்ட் செய்யும். இந்தியா கிட்டே ரஷ்யா மிக்,பிரென்ச் மிராஜ்ஜ் என ரெண்டுமே வச்சிருப்பதால் தான் அமெரிக்க ஃபைட்டர் ஜெட்டை மடக்க முடிஞ்சது.

எஃப்-32,f-35 இன்டர் செப்ட் செய்ய நம்ம கிட்டே விமானமில்லை அவ்வ்!

இந்தியாவை மட்டமா எடைப்போடுவாங்க ,ஆனால் அந்தமானை மலேஷியா விமானம் "சிக்னல் இல்லாமல்"கடந்திருந்தால் , புடிச்சிருக்கும், அந்தமானில் ரேடார் உண்டு. மிராஜ், மிக் லாம் இந்திய எல்லையில் இருந்து சுமார் முக்கால்-1 மணியில் அந்தமானை அடைந்துவிடும்.

என்னோட அனுமானம் என்னனா , ஏதோ ஒரு "ராணுவ ஆட்சி" நடைபெறும் நாட்டுக்கு கடத்தி போயிருக்கணும் இல்லைனா விபத்தில் சிக்கி இருக்கணும்.

//வானூர்தியை புறப்படும் இடத்திலிருந்து சேரும் இடம் வரை செய்மதி துணை கொண்டு கண்காணிக்க முடியாதா? குறிப்பிட்ட இடைவெளியில் வானூர்தி ஓட்டுநர்களின் நடத்தையை கண்காணிக்க முடியாதா. இது நடந்தால் தான் நாம் சிறிது நிம்மதியாக பயணம் செய்யலாம்.//

எல்லா இடத்திலும் சேட்டிலைட் கண்காணிப்பு தொடர்ச்சியாக செய்ய முடியாது ,கம்யூனிகேஷன் சேட்டிலைட் மூலம் சிக்னல் பரிமாற்றம் தான் நடக்கும், சிக்னல் கட் ஆச்சுனா இப்போ போல என்னாச்சுனு தெரியாது.

மற்ற ரிமோட் சென்சிங் டைப் சேட்டிலைட் எல்லாம் ஒரு குறிப்பிட்ட இடத்தினை ஒரு நாளுக்கு இத்தனை முறைனு கடக்கும் ,அப்போ மட்டுமே "கண்காணிப்பு" இருக்கும். அப்படி உலகம் முழுக்க கண்கானிக்க அமெரிக்காவால் மட்டுமே பொருளாதார சாத்தியம் இருக்கு.

அவங்க சேட்டிலைட் கூட அந்த பகுதியை சில மணி நேரங்கள் தான் கண்காணிச்சு இருக்க முடியும், அதை வச்சு தான் சொல்லுறாங்க. அதுக்கு அப்புறம் என்னாச்சுனு தெரியாம போச்சு.

குறும்பன் சொன்னது…

வவ்வால்,
மலேசிய அரசு அரண்டு போயிருக்கு மந்திரவாதிய கூட்டி வானூர்தி எங்க இருக்குன்னு பார்த்திருக்காங்க. மலேசிய அரசிடம் கடத்தல் தொடர்பா வெளிப்படைத்தன்மை இன்மை குறைவு என்பதை ஒத்துக்கறேன் ஏதாவது சொல்லி வில்லங்கமாயிடுமோன்னு பயப்படறாங்களோ என்னவோ. 5 மணி நேரத்துக்கும் மேல வானூர்தி பறந்ததாக சொல்றாங்க இப்ப கசக்கசுத்தானுக்கு கடத்தப்பட்டிருக்கலாம் அப்படிங்கிறாங்க. எனக்கு கடல்ல விழுந்திருக்குமுன்னு நம்பிக்கையில்லை. மலேசிய இராணுவம் இதன் பாதையை சொல்லியிருக்கு ஆனா அவங்க கோட்டை விட்டுட்டாங்க. அந்தமான் பகுதி கடத்தல் காரங்க அதிகம் நடமாடும் பகுதி பக்கத்திலேயே மலாக்கா நீரிணை உள்ளது. எனவே இந்திய இராணுவம் விழிப்பாக இருந்திருக்கனும்.
ரேடார் கண்காணிப்பு இருந்திருக்குமான்னு எனக்கு ஐயம் தான். நாம எப்பவும் சுருளி இல்லை அப்பப்ப பயன்படுத்துவோம். இந்திய வானெல்லையில் பறந்த அமெரிக்க போர் வானூர்திகளை இந்தியா தரையிரைக்கியதை நானும் ஒத்துக்கிறேன். ஆனா அதுக்கு முன்னாடி எத்தனை முறை பறந்தாங்களோ. நம்ம நாட்டு இராணுவத்தின் மேல் எனக்கு அவ்வளவு நம்பிக்கை. இராணுவத்தில் இருக்கும் குறைகளை நாம தெரிஞ்சுக்க முடியாது எல்லா நாட்டுக்கும் இது பொது. எதிரி நாடு உளவாளிகளை வைத்து சில குறைகளை தெரிந்துக்கும் அவ்

நில ரேடார் சரிவராதுன்னா செய்மதியை பயன்படுத்தி வானூர்திகளை தொடருனும். அதுக்கு தொழில்நுட்பம் இல்லாமல் இருக்காது. இல்லைன்னா உருவாக்குவதும் பெரிதில்லை. வானூர்தி பயண விலையில் அக்காசையும் இணைத்துவிடலாம், இப்ப மட்டும் கம்மியாவா இருக்கு :). 5வது தலைமுறை வானூர்திக்கான வேலை நடக்குது அது புழக்கத்துக்கு வந்ததும் F-32,F-35ஐ தடுக்கக்கூடிய ஆற்றல் நமக்கு வந்துடும். அதுக்கு முன்னாடி அமெரிக்கா காரன் 6-வது தலைமுறை வானூர்தியை புழக்கத்துக்கு விடாம இருக்கனும். மிக் 21ஐ வைத்து குறை சொல்றவங்க இருப்பாங்க ஆனா அது தன் ஆயுளை தாண்டி பல காலம் ஆச்சு என்பதை மறந்துடுவாங்க. மிக் 29 சுகோய் 30\31, MKI-ஐ குறை சொல்ல முடியுமா?

selvaraj சொன்னது…

எல்லாரும் கவலைப்படக்கூடிய விசயம்தான். 239 உயிர்கள், 239 குடும்பங்கள், அவர்களின் சொந்தங்கள், ஏறக்குறைய 10 நாடுகளின் அந்த 10 நாட்டு மக்களின் கவலைகள். விமானம் தயாரித்த போயிங் நிறுவனம் (அமெரிக்க பன்னாட்டு நிறுவனம்), இயக்கியை (மோட்டார்) தயாரித்த ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் (இங்கிலாந்து பன்னாட்டு நிறுவனம்)இவர்களுக்கு அதன் நுணுக்கங்கள் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. மூடி மறைக்கப்படுது. கடத்தப்பட்ட சீனர்களில் 4 பேர் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களின் அதிபர்கள். இவர்களுக்காகத்தான் ஒட்டு மொத்த விமானமும் கடத்தப்பட்டிருக்க வேண்டும். இதைக்கடத்தியவர்கள் இசுரேலிய மொசாட் படையினராகத்தான் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். இவர்கள் அமெரிக்காவின் பின் புல உதவி இல்லாமல் கடத்தியிருக்க முடியாது. அமெரிக்கா GPS (Global Positioning System) மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கக்கூடியது. மலாக்கா நீரிணை ராணுவ பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த சிறிய இடம் என்பதால் தொடர் கண்காணிப்பு எப்போதும் இருக்கும். பக்கத்திலேயே அமெரிக்காவுக்கு சொந்தமான கிறிஸ்துமஸ் தீவிலும், இந்தியாவிற்கு நேர் கீழே இந்திய பெருங்கடலில் உள்ள அமெரிக்காவுக்கு சொந்தமான தியுகோ கார்சியா தீவிலும் அமெரிக்க போர் விமானங்கள் எப்போதும் கண்காணிப்பில் இருக்கும். அப்படி இருக்கும் பொது ஒன்னும் இதுவரை தெரியவில்லை என்று சொல்வது, காதில் பூ சுற்றும் வேலை. இந்த அமெரிக்காவின் நடவடிக்கைக்கு மலேசியாவும் பகடைக்காயாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதனால்தான் உலகமும் சீனாவும் ஏதாவது சொல்லுமே என்பதற்காக தேடுதல் நாடகம். அமெரிக்காவும் வழக்கம் போல அல் குவைதா, பாகிஸ்தான் என்று கதை சொல்லிக் கொண்டிருக்கிறது. 4 தொழில் அதிபர்கள் மூலம் சீனாவுக்கு விடுக்கப்பட்ட மிரட்டலின் பலன் கிடைத்ததும் வேறொரு கதை சொல்லப்பட்டு அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என்பது என் கணிப்பு.

குறும்பன் சொன்னது…

செல்வராசு,

மொசாட் கடத்தியிருக்க வாய்ப்பு இல்லை. கடத்தப்பட்ட வானூர்தியில் பாலத்தீன இயக்கத்தை சேர்த்த குறிப்பிடத்தக்க மனிதர் பயணம் செய்யவில்லை. அப்படி இருந்தால் மொசாட் மேலயும் ஐயம் கொள்ளலாம். அமெரிக்க GPS அப்பகுதியில் வேலை செய்யுதான்னு தெரியலை அதனால் அதைப்பற்றி ஒன்னும் சொல்றதுக்கில்லை. கிறிஸ்துமசு தீவு ஆத்திரேலியாவுக்கு சொந்தமானது. அது சுமத்திராவுக்கு கீழ இல்ல இருக்கு. தியுகோ கார்சியா தீவு பிரித்தனுக்கு சொந்தமானது. அங்கு இராணுவ தளம் உண்டு அதை அமெரிக்கா பயன்படுத்தலாம், இது மாலத்தீவுக்கு கீழ் ரொம்ப தொலைவில் உள்ளது. தொழில் அதிபர்களை கடத்தி சீனாவுக்கு எச்சரிக்கை என்பது நம்பும் படி இல்லை. இக்கடத்தல் தொடர்பா வானூர்தி கண்டுபிடிக்கப்படும் வரை நிறைய ஊகங்களை அவரவருக்கு தோன்றிய படி சொல்லலாம் ஆனால் சிறிது நம்பும்படி இருந்தால் நல்லது.

selvaraj சொன்னது…

If Indonesia becomes embroiled in a regional conflict to its north, a major basing facility on Christmas Island for ADF and US Air Force assets could be invaluable – the critical political dimension is whether Indonesia wishes to remain aligned with the US and Australia in the long term.

These considerations apply to Australian strategic needs in the context of defending Australia's immediate interests in the region, during a period of increased strategic competition across the region.

An additional dimension to consider is that of the strategic needs of our principal ally, the United States.

The United States had an excellent basing network across the Pacific during the Cold War, including multiple bases in Japan, South Korea, the Philippines, the Marianas and Hawaii, with leased access to Britain's Diego Garcia in the Indian Ocean.

Two decades after the Cold War the North Asian bases are demonstrably indefensible against Chinese air assets, cruise missiles and ballistic missiles. The large Subic Bay and Clark bases in the Philippines were closed down at the end of the Cold War [24].
நண்பர் குறும்பன் அவர்களே,
கிறிஸ்துமஸ் தீவில் அமெரிக்காவின் ராணுவத்திற்கு தொடர்பு இருக்கிறது என்பதற்கு ஆதாரம் கீழே இணைப்பாக தரப்பட்டுள்ளது. (அது ஆஸ்திரேலியாவிற்கு சொந்தமான தீவு என்றாலும்)

http://www.ausairpower.net/APA-2012-01.html

While Diego Garcia and Guam have become central basing “hubs”, the remaining bases are of limited utility due to their exposed locations. A crisis in South East Asia or the eastern Indian Ocean would present major challenges, especially for tactical air and tanker aircraft basing. This would be true of a conflict, as much as a major natural disaster.
அதே போல டீகோ கார்சியா தீவை பிரிட்டன் இந்தியாவை விட்டு போனபோது எடுத்துக்கொண்டாலும்(British Indian Ocean Territory) அமெரிக்காவிற்கு 99 வருட குத்தகைக்கு விட்டுள்ளதால் இப்போ அமெரிக்க விமானப்படைதான் அங்கு இருக்கிறது இந்திய பெருங்கடல் முழுவதையும் கண்காணிக்க. அதன் படங்களையும் கூகுள் எர்த் லிருந்து காணலாம். கீழே அந்த விமானப்படை.
படம் போட முடியவில்லை. டீகோ கார்சியா அமெரிக்க விமானப்படை நான் படம் வைத்திருக்கிறேன். விரைவில் எனது தளத்தில் எழுதுகிறேன்.
ஜப்பானின் புருக்ஷிமா அணு உலை விபத்தில் கூட (சுனாமி யிலும்)இஸ்ரேலிய மொசாட் ஊடுருவல் இருப்பதை ஆதாரத்தோடு சொல்லி இருக்கிறார்கள்.நன்றி
ஆதாரம் http://www.thetruthseeker.co.uk/?p=74277