வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?புதன், அக்டோபர் 05, 2011

இலங்கை மீது போர் குற்றம் & மனித உரிமை மீறல்கள் குறித்து பன்னாட்டு விசாரணை தேவையா இல்லையா

வெள்ளை மாளிகையின் இணைய தளத்தில் இலங்கையில் நடந்த போர் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து பன்னாட்டு விசாரணை தேவை என்று ஒரு கையெழுத்து விண்ணப்பம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பம் வெற்றிகரமாவதற்கு 5000 கையெழுத்துகள் தேவை. இது வரை 1547 மட்டுமே விழுந்துள்ளது. இன்னும் 3453 கையெழுத்துகள் தேவை. 5000 கையெழுத்துகள் விழுந்தால் மட்டுமே அமெரிக்க அரசு போர் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து பன்னாட்டு விசாரணைக்கு அழுத்தம் கொடுக்கும். நான் குறைந்தது 15,000 கையெழுத்தாவது விழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். ஈழப்படுகொலை தொடர்பாக பதிவுகளில் மக்கள் பொறிந்ததை பார்த்ததால் 5000 கையெழுத்துகளை இன்னேரம் தாண்டி இருக்கும் என நினைத்தேன். இது வெள்ளை மாளிகையின் இணைய தளத்தில் உள்ள விண்ணப்பம் என்பதால் இதற்கு அமெரிக்க அரசின் ஆதரவு உறுதியாக இருக்கும் அதற்கு அவர்கள் எதிர்பார்ப்பது குறைந்தது 5000 கையெழுத்துகள்.
மக்களே உங்கள் கையெழுத்துகளை இந்த இணைப்பில் செலுத்தி அமெரிக்க அரசு போர் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து பன்னாட்டு விசாரணைக்கு அழுத்தம் கொடுக்க உதவுங்கள். பெரியண்ணன் பேச்சுக்கு மதிப்பு உண்டு, இலங்கையும் பெரியண்ணன் பேச்சை தட்டி எதுவும் செய்யமுடியாது.  குறிப்பாக உங்கள் நண்பர் அமெரிக்காவில் இருந்தால் அவரை கட்டாயம் கையெழுத்து இடச்சொல்லுங்கள்.

https://wwws.whitehouse.gov/petitions#!/petition/support-international-investigation-war-crimes-and-other-human-rights-abuses-committed-sri-lanka/h0bvBbSg

WE THE PEOPLE

கருத்துகள் இல்லை: