அவனோட பெற்றோர் ஆசிரியர்கள். காலையில் அவங்க பள்ளிக்கு போனதும் எங்க ஆட்டம் ஆரம்பமானது. என்ன ஆட்டமா? அது இந்த இடுகைக்கு தொடர்பில்லாதது மேலும் அது பற்றி சொன்னால் இந்த இடுகையின் போக்கு திசை மாறிவிடும் என்பதால் அதை நான் இங்கு விவரிக்கவில்லை. எத்தனை பேர் பதிவுல இந்த மாதிரி படிச்சிருக்கேன். அதை நான் இங்கு பயன்படுத்தி பதிவு படித்ததின் பலனை அனுபவிக்கறேனே. இஃகிஃகி..
பள்ளியில் இருந்து வீட்டுக்கு முதலில் வருவது அவனோட அப்பா தான். அவங்க அம்மா கொஞ்சம் நேரம் கழித்து தான் வருவாங்க. ஏன்னா அவனோட அப்பா பணியாற்றும் பள்ளி பக்கம், அம்மா பணியாற்றும் பள்ளி சற்று தூரம். அவனோட அப்பா வரும் நேரத்தில் எல்லோரும் நல்ல பசங்களா இருந்தோம். ஒருத்தன் புத்தகம் (கதை புத்தகம் தான்) படிச்சிக்கிட்டிருந்தான் ஒருத்தன் வெளியே பராக்கு பாத்துக்கிட்டு இருந்தான். ஒருத்தன் வீட்டு தோட்டத்தை சுற்றி பாத்துக்கிட்டு இருந்தான்.
மிதி வண்டியில் வீட்டிற்கு வந்தவர் உடை மாற்றிக்கொண்டு வெளியில் வந்தார். என்னிடம் ஏதோ கேட்டார் எனக்கு ஒன்னும் புரியலை பேந்த பேந்த முழித்தேன். என்னை காப்பாற்ற என் நாஞ்சில் நண்பன் வந்தான் அவங்க அப்பா கேட்ட கேள்விக்கு பதிலை கூறி என்னை இக்கட்டில் இருந்து காப்பாற்றினான். ஏன் நான் முழிச்சன்னா அவரு பேசிய தமிழ் எனக்கு புரியலை. எனக்கு மட்டும் அல்ல என் நண்பர்கள் யாருக்கும் அவரின் நாஞ்சில் தமிழ் புரியலை. அவர் பேச்சில் மலையாள வாடை அதிகம். நாஞ்சில் தமிழ் அப்படிதான் இருக்குமோ??? எனக்கு தெரியலை. நாஞ்சில் நாடான் அப்படியெல்லாம் பேசமாட்டான்.
அவனோட அம்மாவும் நாஞ்சில் நாடு என்றாலும் எங்களிடம் நாஞ்சில் தமிழ் பேசவில்லை.
நல்ல பிள்ளைகளாட்டம் அடுத்த நாள் காலையில் வண்டியேறி விடுதிக்கு வந்துட்டோம். வந்ததும் நாஞ்சில் நாடானிடம் கேட்ட\பேசிய முதல் கேள்வி\பேச்சு இது தான்.
நாங்க பரவாலைடா, உங்க அப்பா வாத்தியாரு அவருக்கிட்ட படிக்கற பசங்க நிலைமையை நினைச்சு பாத்தா தான் பாவமா இருக்கு.
ஆனா பாருங்க அந்த பள்ளியிலேயே இவரு பாடத்தில் தான் மாணவர்கள் தேர்ச்சி அதிகமா இருக்குமாம். உடனே நாங்க வாத்தியாரு நடத்துவது புரியலைன்னு பசங்களே படிச்சிக்கிட்டா நிறைய மதிப்பெண் வாங்கலாம் என்பதை இதுல இருந்து புரிஞ்சிக்கிட்டோம் அப்படின்னோம். ஒரு மாசத்துக்கு இதை வச்சு நாஞ்சில் நாடானை நையாண்டி பண்ணிக்கிட்டிருந்தோம்.
அவனோட அப்பா கணிதம் மற்றும் ஆங்கில ஆசிரியர். கணிதத்துக்கு மொழி பெரிய தடை இல்லையே இஃகிஃகிஃஃஃஃ...
8 கருத்துகள்:
//நாங்க வாத்தியாரு நடத்துவது புரியலைன்னு பசங்களே படிச்சிக்கிட்டா நிறைய மதிப்பெண் வாங்கலாம் என்பதை இதுல இருந்து புரிஞ்சிக்கிட்டோம் அப்படின்னோம். //
இது பாயிண்ட். :-):-)
தலைப்பப் பாத்து வந்தேன். எங்க ஊர் தமிழ் புரிஞ்சா தான் அதிசயம்.
அட, சீமாட்டி எனக்கு முன்னமே வந்துட்டு போயிட்டாங்க போல?!
வாங்க கபீஷ்.
\\எங்க ஊர் தமிழ் புரிஞ்சா தான் அதிசயம்.\\ இதுக்காகவாவது கன்னியாகுமரியில் 1 வாரம் டேரா போட்டு நாஞ்சில் தமிழை தெரிஞ்சுக்கனும். 1 வாரமுன்னு நம்பிக்கையோட சொல்லிட்டேன். 1 வாரத்துல புரிஞ்சிக்கலாமல்ல?
வாங்க பழமைபேசி.
ஹி ஹி ”ஒரு ஆய்ச்சயில ஒண்ணும் மனசிலாகாதுன்னு” புரிஞ்சுக்கலாம் நீங்க கன்யாகுமரி வந்தா.
@பழமை, பதிவைப் பத்தி என்ன சொல்லறதுன்னு யோசிக்க சோம்பேறித்தனப்பட்டு அட்டெண்டண்டன்ஸ் பின்னூ போட்டுட்டு ஓடிட்டீங்களா? சேட்டா,சரியில்ல
//அட்டெண்டண்டன்ஸ்//
attendance ரொம்ப டண்டனக்கா ஆகிடுச்சு:-)
//”ஒரு ஆய்ச்சயில ஒண்ணும் மனசிலாகாதுன்னு” புரிஞ்சுக்கலாம் நீங்க கன்யாகுமரி வந்தா. //
எனக்கு ஒண்ணும் அப்படிங்கறது மட்டும் புரிஞ்சிடுச்சி. மீதிய எப்படியாவது புரிஞ்சிக்கறேன். பல்மொழி வித்தகரே பழமை உதவுங்கககக்கக்கக்க......
\\@பழமை, பதிவைப் பத்தி என்ன சொல்லறதுன்னு யோசிக்க சோம்பேறித்தனப்பட்டு அட்டெண்டண்டன்ஸ் பின்னூ போட்டுட்டு ஓடிட்டீங்களா? சேட்டா,சரியில்ல\\
பழமை சோம்பேறியாவெல்லாம் இருக்கமாட்டாருங்க (நம்பிக்கை தான்) இருந்தாலும் நான் பஸ்ட் பின்னூட்டம் மாதிரி பின்னூட்டம் போட்டுட்டு ஓடுனது தான் எனக்கு புரியலைங்க...
பழமை நாஞ்சில் தமிழை பற்றி சொல்ல என்ன இருக்குன்னு ஒன்னும் சொல்லலையோ என்னவோ.
கருத்துரையிடுக