வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?செவ்வாய், மார்ச் 02, 2010

முக்கோணத்தில் புதிர்.

மேல் முக்கோணமும் கீழ் முக்கோணமும் ஒரே அளவு உள்ளவை. மேலுள்ள முக்கோணத்தின் நான்கு பாகங்களை இடம் மாற்றி கீழுள்ள முக்கோணத்தில் வைத்துள்ளார்கள். அப்படி வைக்கும் போது கொஞ்சம் இடம் (ஒரு கட்டம்) மிஞ்சி இருக்கு. எப்படி இது?


8 கருத்துகள்:

பழமைபேசி சொன்னது…

ரெண்டும் முக்கோணமே அல்ல; மொன்னைக் கத்தியில அரிஞ்ச தர்பூசணிப் பழமாட்ட இருக்கு.... மேமட்டம் மேல வளைஞ்சு இருக்கு இன்னுல; அடுத்ததுல கீழ....

கண்டுபாவனையில சுத்து மாத்து! இஃகிஃகி!!

A.சிவசங்கர் சொன்னது…

மேல பச்சை நிறத்தில மூன்று கட்டதில இருக்கு

மற்றது இரண்டு கட்டதில இருக்கு

குறும்பன் சொன்னது…

வாங்க பழமை. கண்டுபாவனையில சுத்து மாத்துன்னு தான் சொல்றாங்க எனக்கு புரிபடலை :-(

குறும்பன் சொன்னது…

வாங்க சிவசங்கர். புரியலையே விளக்கமா சொல்லுங்க.

கெக்கே பிக்குணி சொன்னது…

இரண்டின் மொத்த பரப்பளவு ஒன்றே தான்.

குறும்பன் சொன்னது…

வாங்க கெக்கே பிக்குணி. இரண்டும் ஒரே பரப்பளவு தான். ஓட்டை எப்படி இரண்டாவதில் வந்தது?

கெக்கே பிக்குணி சொன்னது…

உங்க‌ளுடைய‌ கேள்வி "எப்ப‌டி இது?" இர‌ண்டுமே ஒரே வ‌கையான‌ ப‌குதிக் க‌ட்ட‌ங்க‌ளால் ஆன‌வை. என‌வே ஒரே ப‌ர‌ப்ப‌ள‌வு. இர‌ண்டு வ‌டைக‌ளை நான்கு மாறுப‌ட்ட‌ ப‌குதிக‌ளாகப் பிய்த்தாலும் இதே தான் ந‌ட‌க்கும். நீங்க‌ள் என்ன‌ ம‌றுமொழி எதிர்பார்க்கிறீங்க‌ன்னு புரிய‌லை.

குறும்பன் சொன்னது…

இரண்டும் சம அளவுள்ள முக்கோணமாக உள்ள போது அதில் உள்ள பகுதிகளை நகர்த்தி வைத்தாலும் அவற்றின் பரப்பளவு மாறாது ஆனா இங்க பகுதிகளை மாற்றி வைத்த போது எப்படி சிறு இடம் எஞ்சியுள்ளது என்பதே என் கேள்வி? அப்படி என்றால் அவற்றின் பரப்பளவு வேறுபட்டதா?