பலான சாமியார் நித்தியானந்தா பேச்சு அதிகமிருப்பதால் இந்த இடுகையை இப்ப எழுதறேன்னு நினைச்சுக்காதிங்க. எனக்கு மின்னஞ்சலில் வந்தது.
சுவாமி மல்லய்யாவின் தத்துவத்தை தமிழ் படுத்தி இருக்கேன் கூடவே ஆங்கிலத்தில் வந்ததையும் கொடுத்திருக்கேன். படிச்சி சுவாமியின் அருள் பெறுவீர்.
"ஆடையை அவிழ்க்க வேண்டும் என்று அடுத்தவருக்கு தோன்றாதவரை அந்த அழகான ஆடையினால் ஒரு பயனுமில்லை."
- சுவாமி விஜய் மல்லய்யா
ஆங்கில மூலம்
“A beautiful dress is of no use until it inspires someone to take it off.”
- சுவாமி விஜய் மல்லய்யா
எனக்கு வந்த மின்னஞ்சல் இது நம்ம பதிவர் எல்லோருக்கும் தனியே அனுப்ப முடியாது என்பதால் இங்கே.
Please forward this mail to 10 people…Miracle awaits you.
** அருண் இந்த மின்னஞ்சலை 10 பேருக்கு அனுப்பினார் அன்று மாலையே அவருக்கு ஒரு பாட்டல் பகார்ட்டி ரம் கிடைச்சது.
** ராசப்பன் நம்பிக்கையோட 15 பேருக்கு இந்த மின்னஞ்சலை அனுப்பினார் அடுத்த நாள் அவரோட மாமா துபாயிலிருந்து ஜானி வாக்கரோட வந்தார்.
** குமரன் இந்த மின்னஞ்சலை யாருக்கும் அனுப்பாம அழிச்சிட்டார். மேசை மேல் இருந்த பிராந்தி பாட்டல் கீழ விழுந்து உடைஞ்சிருச்சி. ஒரு பாட்டல் பிராந்தி கோவிந்தா.
** ஒரு ராணுவ அதிகாரி இந்த மின்னஞ்சலை 20 பேருக்கு அனுப்பினாரு. அன்றைய மாலையே அரசாங்கம் அவருக்கான மாத சரக்கு கோட்டா அளவை உயர்த்தி உத்தரவு போட்டுருச்சி.
** மணியன் இந்த மின்னஞ்சலை யாருக்கும் அனுப்பாம அழிச்சதோட அல்லாமல் இதை எள்ளி நகையாடுனாரு. அன்னைக்கே அவர் வீட்டு பக்கத்தில் இருந்த பார் மூடப்பட்டு விட்டது.
மக்களே இது இடுகைன்னு நினைக்காம இதை உங்களுக்கு வந்த மின்னஞ்சலா நினைந்து குறைந்தது 10 பேருக்கு அனுப்புங்க. உங்கள் வாழ்க்கையில் அதிசயம் நிகழ்வது உறுதி.
.
4 கருத்துகள்:
குறும்பு!
பழமை, 10 பேருக்கு மின்னஞ்சல் அனுப்புனா அதியசம் நடக்குங்க. நீங்க 10 பேருக்கு மேல் அனுப்பி இருக்கனும் அதான் மேல்போர்ன் பதிவர் சந்திப்புல விதவிதமான சரக்கு கிடைச்சிருக்கு. படம் போட்டு காட்டினதுக்கு நன்றி. மக்களே இப்பவாவது நம்புங்க...
அஃகஃகா; ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது? எது செய்தாலும், அதை மத்தவங்க சுலுவுல கண்டு பிடிச்சிடுறாங்க??
நீங்க படம் போட்டு காட்டினதுக்கு அப்புறமும் கண்டு பிடிக்கலைன்னா எப்படி? இஃகிஃகி
கருத்துரையிடுக