வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



புதன், மார்ச் 31, 2010

விளம்பரத்தில் ரஜினிகாந்த்

அமீரக பதிவர் செந்தில்வேலன் இந்தி ஜாக்கிகள் ரஜினிகாந்தை கேலி செய்தது குறித்து வருத்தப்பட்டிருந்தார். அவருக்காக இந்த இடுகை. இஃகிஃகி.

கேஸ்ட்ரால் எண்ணெய் விளம்பரத்தில் ரஜினிகாந்த் (கேலி படம்) - அனேகம்பேர் பார்த்ததா இருக்கும்.




IDBI Kismat விளம்பரத்தில் ரஜினிகாந்த் (கேலி படம்).



திரைப்படத்துல ரஜினிகாந்த் சண்டை :-))

திங்கள், மார்ச் 29, 2010

சிரிங்க சிரிங்க

ஒரு இளைஞனுக்கு மிகச் சிறந்த எழுத்தாளனாக வரவேண்டும் என்ற ஆசை இருந்தது. எந்த மாதிரியான "சிறந்த எழுத்தாளனாக" வர நீ ஆசைபடுகிறாய் என்று ஒருவர் கேட்டார்.
என்னுடைய எழுத்துக்களை உலகம் முழுவதும் உள்ளவர்கள் படிக்க வேண்டும். படிப்பவர்களுக்கு ஒரு உண்மையான உணர்ச்சியை கொடுக்கவேண்டும். படிப்பவர்கள் துடிக்க வேண்டும், கத்த வேண்டும், கதற வேண்டும், கோவப்பட வேண்டும், திட்ட வேண்டும் என்றார்.

இப்போது அவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் "Error Message" எழுதும் வேலை செய்கிறார்.



முதலாளி எனக்கு சம்பளத்தை நீங்கள் உயர்த்தி தந்தாக வேண்டும், 3 நிறுவனத்துக்காரங்க என்னை தொல்லை பண்றாங்க என்றார் பணியாள்..
இப்ப வியாபாரம் நல்லா போயிக்கிட்டிருக்கு, இன்னும் 3 பேரை வேலைக்கு எடுக்கலாம் என்று இருக்கிறப்போ இவன் சம்பளத்தை உயர்த்தலைன்னா வேலையை விட்டு விலகிடற மாதிரி பேசறானே என்று யோசித்துவிட்டு, சம்பளத்தை உயர்த்த ஒப்புக்கொண்டார்.

இவனை தொல்லை பண்ணுன 3 நிறுவனத்துக்காரங்க யாருன்னு தெரிஞ்சுக்க ஆசைப்பட்ட முதலாளி சரி எந்த 3 நிறுவனத்துக்காரங்க உன்னை தொடர்பு கொண்டது என்று கேட்டார்.

மின்சார நிறுவனம், சமையல் எரிவாயு நிறுவனம், தொலைபேசி நிறுவனம் என்றார் பணியாள்.



ஒரு கணவன் மருத்துவரிடம் சென்று ஐயா என் மனைவிக்கு இப்பவெல்லாம் சரியா காது கேட்கமாட்டக்குது என்ன செய்யறது என்று கேட்டார். மருத்துவர் நான் சொல்லும் சிறு சோதனையை செய்துபாருங்க, காது எந்த அளவுக்கு கேட்குதுன்னு தெரிந்து கொள்ளலாம், அதற்கு தகுந்த மாதிரி மருத்துவம் பார்க்கலாம் என்று சொன்னார்.

சரின்னு கணவர் மனைவியின் செவியை சோதனை செய்ய வீட்டுக்கு வந்துவிட்டார்.

மனைவி சமையல் அறையில் பாத்திரம் கழுவும்போது, 15 அடி தொலைவில் இருந்துகொண்டு இன்னைக்கு என்ன சமையல் என்று கேட்டார், பதிலில்லை. சரின்னு 10 அடி தொலைவில் இருந்துகொண்டு இன்னைக்கு என்ன சமையல் என்று கேட்டார், பதிலில்லை. சரின்னு 5 அடி தொலைவில் இருந்துகொண்டு இன்னைக்கு என்ன சமையல் என்று கேட்டார், இப்பவும் பதிலில்லை. வெறுத்துப்போயி மனைவியின் பின்னால் நின்று இன்னைக்கு என்ன சமையல் என்று கேட்டார்.

4-வது தடவையா சொல்றேன் இன்னைக்கு வெண்டைக்கா குழம்பு என்றார் மனைவி.



ஒரு விழாவில் வயதான பாட்டி ஒருவர் தற்போதைய இளம்பெண்களின் போக்கு குறித்து கவலைகொண்டார்.
பக்கத்தில் அமர்ந்திருந்தவரிடம் அந்த பெண்ணை பாருங்க , பசங்க ஜீன்ஸ், பசங்க சட்டை, பசங்க மாதிரி முடி ஒரு பெண் மாதிரியே இல்லை, நீங்க என்ன சொல்லறீங்க என்றார்.
இந்த காலத்தில் இதெல்லாம் சகஜம் என்றவர் அவ என் பெண் தான் என்று பாட்டியிடம் கூறினார்.
பாட்டிக்கு தர்மசங்கடமா போச்சு, மன்னிக்கனும் நீங்க அவளோட அப்பான்னு தெரியாம போச்சு என்றார்.

நான் அவளோட அப்பா கிடையாது அம்மா என்றார். 



அஞ்சல் நிலையத்தில் வயதான பெரியவர் ஒரு வாலிபனை அணுகி தம்பி எனக்கு இந்த அஞ்சல் அட்டையை எழுதி தர முடியுமான்னு கேட்டார்.
வாலிபனும் சரி என்று பெரியவர் சொன்ன செய்தியை அஞ்சல் அட்டையில் எழுதிவிட்டு குறிப்பு ஏதாவது எழுத வேண்டுமா என்று கேட்டார்.

பெரியவர் ஒரு நிமிடம் யோசித்து விட்டு , ஆமாப்பா, கையெழுத்து கோழி கிறுக்கல் மாதிரி இருப்பதற்கு மன்னிகவும் என்று எழுதவும் என்றார்.




நான்கு எறும்புகள் ஒரு காட்டு வழியில் சென்று கொண்டிருந்தன. அப்பொழுது ஒரு யானை எதிர்பட்டது. உடனே முதல் எறும்பு சொன்னது, "நாம் அதை கொன்று விடுவோம்".
இரண்டாவது எறும்பு, "நாம் அதன் காலை உடைத்து விடுவோம்" என்று சொன்னது.
மூன்றாவது எறும்பு, "அதை நாம் நமது பாதையிலிருந்து தூக்கியெறிந்து விடுவோம்" என்றது.

கடைசியாக நான்காவது எறும்பு, "பாவம்! அதை நாம் விட்டு விடுவோம். ஏனென்றால், அது தனியாக வந்திருக்கிறது. நாம் நான்கு பேர் இருக்கிறோம்.
.
.

சனி, மார்ச் 20, 2010

கிராம மாணவர் நலனில் அக்கரையுள்ள தமிழக அரசு

தமிழ் படித்தால் போதுமா? ஆங்கிலம் தெரிந்தால் தான் இந்த உலகத்தில் பிழைக்க முடியும். நகர மக்களுக்கு பல ஆங்கில வழி கல்வி நிலையங்கள் அதற்கு துணை புரிகின்றன. கிராம மக்கள் கதி? அதோ கதிதான். ஆங்கில வழி கல்வி கற்று வரும் நகர மாணவர்களின் அறிவுக்கு முன் போட்டி போட முடியாமல் திண்டாடுகிறார்கள். கிராம மாணவர்களின் அறிவை எப்படி வளர்ப்பது? அவர்களுக்கும் ஆங்கில வழி கல்வி கிடைப்பதன் மூலம் இது கைகூடும். ஆனால் கிராமத்தில் வசிப்பவர்களுக்கு வசதி குறைவாக இருக்கும். என்ன தீர்வு? அரசே ஆங்கில வழி கல்வி கொடுப்பது தான் ஒரே வழி. இதை கருத்தில் கொண்டு நமது தமிழக அரசு ஆங்கில வழி பள்ளிகளை கிராம்ப்புறங்களில் தொடங்க உள்ளது. ஈரோட்டில் தொடங்கப்பட்டுள்ளதை தினமணி செய்தியில் இருந்து அறியலாம்.

தமில் வலர தமிலக அரசு துணை இருக்கும் ஆனால் தமிலர்களின் வால்வு தான் இம்பார்ட்டண்ட் என்பதால் அரசு இங்கிலிஸை ஆதரிக்கிறது.

இங்கிலிஸ் நன்றாக தெரியாததால் நமது மக்களவை உறுப்பினர் கேபினட் மினிஸ்ட்டராக இருப்பதை தமிழகத்தின் அப்போசிசன் லீடர் உட்பட பலர் குறை கூறினதை பலரும் அறிவீர்கள், இந்த நிலைமை பியூச்சரில் தமிலகத்தை சார்ந்த யாருக்கும் வரக்கூடாது என்ற நல்நோக்கில் அரசு வொர்க் பண்ணுகிறது என்பதை அனைவரும் அன்டர்ஸ்டேண்ட் பன்னவேண்டும்.

இந்தி தெரிந்தால் நன்றாக இருக்கும் என்பதால் தமிலர்களின் நலம் பேணும் இவ்வரசு இந்தியையும் ஒரு பாடமாக அரசு பள்ளிகளில் வைக்கும் என்பதை மக்கள் குறித்துக் கொண்டு ஹாப்பியாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


http://tinyurl.com/yh2lt6v

ஈரோடு மாவட்டத்தில் ​ இரண்டு அரசு ஆங்கிலப் பள்ளிகள்

ஈரோடு,​​ மார்ச்.​ 19: ஈரோடு மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை மூலம் நடப்பு கல்வி ஆண்டில் இரண்டு அரசு ஆங்கிலப் பள்ளிகள் தொடங்கப்படவுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொன்குமார் தெரிவித்தார்.​ ​

இதுகுறித்து அவர் கூறியது:​ ஈரோடு மாவட்டம்,​​ நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்தில் பட்டிமணியக்காரபாளையம்,​​ அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் மாத்தூர் ஆகிய கிராமங்களில் பள்ளிக் கல்வித் துறை மூலம் இரண்டு ஆங்கிலப் பள்ளிகள் நடப்புக் கல்வியாண்டில் தொடங்கப்படவுள்ளது.​ இதற்காக அரசு ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.​ வரும் கல்வியாண்டிலேயே இதற்கான முதல் கட்டப் பணிகள் தொடங்கப்படவுள்ளது.​ ​

பள்ளிகளின் கட்டுமான பணிகளுக்கென முதல் கட்டமாக ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ.50 லட்சம் நிதியினை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.​ ​ பள்ளி கட்டுமான பணிகள் முழுமையடைந்த ​ பிறகு இங்கு வகுப்புகள் தொடங்கப்படும்.​ ​ இப்பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் படிக்க முடியும்.​ ​

தனியார் ஆங்கிலப் பள்ளிகளுக்கு இணையாக இப்பள்ளிகளில் பாடத்திட்டம் அமைந்திருக்கும்.​ தமிழ் மொழிப்பாடம் தவிர பிற பாடங்கள் அனைத்தும் ஆங்கில வழியிலேயே கற்றுத் தரப்படும்.​ ​ இப்பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிற்கும் சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.​ ​

நகர்ப் புறங்களிóல் உள்ள மாணவர்களுக்கு இணையாக கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களும் கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பள்ளிகள் தொடங்கப்படுகின்றன.​ ஈரோடு மாவட்டத்தில் வரும் 2010-2011 ம் கல்வி ஆண்டில் மேலும் 3 ஆங்கில வழி பள்ளிகளை தொடங்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.​ இந்த பள்ளிகள் அனைத்தும் கிராமப்புறங்களில் மட்டும் தொடங்கப்படும் என்றார் அவர்.​ ​