வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



ஞாயிறு, ஜூலை 21, 2019

விழும் மூவுலக்கை வழிமுறை The Falling Three Methods


              மேலெழும் மூவுலக்கை வழிமுறைக்கு எதிரான கரடி ஒழுங்கு இது. இதன் முதல் உலக்கையின் உடல் நீளமான கருப்பு நிறமுடையது. அதற்கு அடுத்து வரும் மூன்று அல்லது அதிகமான உலக்கைகளின் நிறம் வெள்ளை  நிறமுடையது (பொதுவாக மூன்று உலக்கைகள் தான் இருக்கும்) இந்த வெள்ளை நிற  உலக்கைகள் முதலில் தோன்றிய நீளமான  கருப்பு  உலக்கையின்  முடிவை தொடாது. அதாவது   அவை முதல் உலக்கையின் உடலின் தோற்றம் முடிவுக்குள் தான் அடங்கி இருக்கும். இந்த வெள்ளை நிற உடல்களுக்கு அடுத்து கருப்பு உடல் தோன்ற வேண்டும். இந்த கருப்பு உடல் நீளமாகவும் இதன் முடிவு முதல் கருப்பு உடலின் முடிவை விட  குறைவாக இருக்க வேண்டும்.



முதல் உலக்கையின் உடலின் நிறம் கருப்பு இது நீளமானது.
இரண்டாம் மூன்றாம் நான்காம் உலக்கைகளின் உடலின் நிறம் வெள்ளை இவை சிறிய நீளமுடையவை.
ஐந்தாம் உலக்கையின் உடலின் நிறம் கருப்பு  இதுவும் நீளமானது.

சமிக்கையை அதிகபடுத்தும் செயல்கள்

* இந்த ஒழுங்கு இறங்கு முகத்தில் தோன்ற வேண்டும்.
* முதல்  உலக்கையின் கருப்பு நிற உடலுக்கு சிறிய குச்சிகள் இருக்க வேண்டும்.

ஏன் இந்த ஒழுங்கு வேலை செய்யுமுன்னு நினைக்கறாங்க?

காளைகளை அமுக்கி விட்டு கரடிகள் செல்வாக்கடைவதை நீண்ட கருப்பு நிற உடல் தெரிவிக்கிறது. விட்டேனா பார் என்று காளைகள்  மெதுவாக மூன்று   நாள்கள் எழும் நான்காவது நாள் காளையின் தலையில் நங்கென்று குத்தி கரடி பெரிதாக மேலெழும். இது காளைகளை அமுக்கி மேலும் வாலாட்ட முடியாதவாறு செய்துவிடும்.

சனி, ஜூலை 20, 2019

மேலெழும் மூவுலக்கை வழிமுறை The Rising Three Methods

இதொரு காளை ஒழுங்காகும். இது ஐந்து உலக்கைகளை கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. இதன் முதல் உலக்கையின் உடல் நீளமான வெள்ளை நிறமுடையது. அதற்கு அடுத்து வரும் மூன்று அல்லது அதிகமான உலக்கைகளின் நிறம் கருப்பு நிறமுடையது (பொதுவாக மூன்று உலக்கைகள் தான் இருக்கும்) இந்த கருப்பு நிற  உலக்கைகள் முதலில் தோன்றிய நீளமான  வெள்ளை உலக்கையின்  முடிவை தொடாதுஅமாவது   அவை முதல் உலக்கையின் உடலின் தோற்றம் முடிவுக்குள் தான் இருக்கும். இந்த கருப்பு நிற உடல்களுக்கு அடுத்து வெள்ளை உடல் தோன்ற வேண்டும். இந்த வெள்ளை உடல் நீளமாகவும் இதன் முடிவு முதல் வெள்ளை உடலின் முடிவை விட  அதிகமாகவும் இருக்க வேண்டும்.



  • முதல் உலக்கையின் உடலின் நிறம் வெள்ளை இது நீளமானது.
  • இரண்டாம் மூன்றாம் நான்காம் உலக்கைகளின் உடலின் நிறம் கருப்பு இவை சிறிய நீளமுடையவை.
  • ஐந்தாம் உலக்கையின் உடலின் நிறம் வெள்ளை இதுவும் நீளமானது.


சமிக்கையை அதிகபடுத்தும் செயல்கள்

* இந்த ஒழுங்கு ஏறு முகத்தில் தோன்ற வேண்டும்.
* முதல்  உலக்கையின் வெள்ளை நிற உடலுக்கு சிறிய குச்சிகள் இருக்க வேண்டும்.

ஏன் இந்த ஒழுங்கு வேலை செய்யுமுன்னு நினைக்கறாங்க?

கரடிகளை அமுக்கி விட்டு காளைகள் செல்வாக்கடைவதை நீண்ட வெள்ளை நிற உடல் தெரிவிக்கிறது. விட்டேனா பார் என்று கரடிகள்  மெதுவாக மூன்று   நாள்கள் எழும் நான்காவது நாள் கரடியின் தலையில் நங்கென்று குத்தி காளை பெரிதாக மேலெழும். இது கரடிகளை அமுக்கி மேலும் வாலாட்ட முடியாதவாறு செய்துவிடும்.

மூன்று காகங்கள் (Three black crows)

காளையான மூன்று வெள்ளை படை வீரர்களுக்கு எதிரான கரடி ஒழுங்கு இது.


  1. வரிசையா மூன்று  நாள்கள் கருப்பு உடல் தோன்றும்.  ஏறு முக போக்கின்  கடைசி உலக்கையின் உடலின் நிறம் கருப்பாக இருக்கும் இதை முதல் உடல் என்போம்..
  2. அடுத்த நாள் அதாவது இரண்டாம் நாள் உடலின் விலை தொடக்கமும்   முடிவும் முந்தைய நாள் உடலின் விலை தொடக்கம்  மற்றும்  முடிவை விடகுறைவாக இருக்க வேண்டும்.
  3. அதேபோல் மூன்றாம் நாளின் உடலின் விலை தொடக்கமும்   முடிவும் முந்தைய நாள் உடலின் விலை தொடக்கம்  மற்றும்  முடிவை விடகுறைவாக இருக்க வேண்டும்.




சமிக்கையை அதிகப்படுத்தும் செயல்கள்

* முதல் நாள் உடலை விட பெரிதாக (நீளமாக) இரண்டாம் நாள் உடல் இருக்க வேண்டும்
* இரண்டாம் நாள் உடலும் மூன்றாம் நாள் உடலும் கிட்டத்தட்ட ஒரே நீளத்தில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் கரடியின் செல்வாக்கு உள்ளதாக கருதலாம்.
* குச்சிகள் மிக சிறிதாகவோ இல்லாமலோ இருக்க வேண்டும்
* தெளிவான ஏறு முக போக்கில் இந்த ஒழுங்கு தோன்ற வேண்டும்.
* உடல்களின் நீளம் அதிகமாக இருப்பது இதன் வீரியத்தை காட்டும்   அறிகுறி.
* வாங்கல் விற்றல் அதிகமாக நடந்திருக்க  வேண்டும்.



ஒழுங்கைப்பற்றிய சில குறிப்புகள்

**  மூன்றாம் நாள் உடலின் நீளம் மற்ற இரு நாள்களை விட சிறிதாக இருந்தால் தவிர்ப்பது நலம்.

 **  நெடிய ஏறு முக போக்கின் பின் மூன்று காகங்கள் தோன்றுவது சில மாதங்கள் பங்கை வைத்திருந்து விற்பவர்களுக்கு ஏற்றது.

ஏன் இந்த ஒழுங்கு  வேலைசெய்யுமென்று   நினைக்கிறார்கள்?

நெடிய ஏறு முக போக்கின் போது காளைள்  சோர்வடைந்து கரடிகள் வீரியத்துடன் விலையை குறைக்கும். தொடர்ந்து மூன்று நாள்கள் விலை இறங்குவது சந்தையின் போக்கு மாற்றம் அடைகிறது  என்பதை உணர்த்தும் அறிகுறி.