அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
ஐப்பசி மாத அமாவாசையை விட கார்த்திகை மாத அமாவாசை தான் தமிழர்கள் கொண்டாடும் உண்மையான ஒளித்திருநாள். எனக்கு தெரிந்து அதுக்கு யாரும் வாழ்த்து சொல்வதில்லை. அது இருக்கட்டும் இந்த தீபாவளியின் சில வெடி நகைச்சுவைகளை பார்ப்போம்.
1. மன்மோகன் சிங் வெடி:-
புகையும் வராது வெடிக்கவும் செய்யாது ஆனால் அமெரிக்கா காரன் வெடிச்சா மட்டும் வெடிக்கும் தன்மையுடையது.
2. சோனியா வெடி:-
இதுக்கு தீ வைத்தால் இதுக்கு பதிலா சுற்றியிருக்கும் சிவகங்கை வெடி, திக்கு விஜய் வெடி, சிபல் வெடி, நாராயணன் வெடி, சிங்வி வெடி போன்ற மற்ற வெடிகள் வெடிக்கும்.
3. கெஞ்ரிவால் வெடி:-
இந்த வெடியால் பாதிப்பு அதிகமா இருக்கும். சில முறை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் சில முறை சிறிய பாதிப்பை ஏற்படுத்தும். பாதிப்பு எந்த அளவு என்பது வெடிச்சதுக்கு அப்புறம் தான் தெரியும்
4. கட்கரி வெடி:-
இது வெடிச்சால் யாருக்கும் பாதிப்பு இருக்காது. ஆனா கடுமையான வெடி போல் தோன்றும். இதை உதார் வெடி என்று தமிழல்லாத சொல்லால் குறிப்பிடுவார்கள். இது இன்னும் சந்தையில் கிடைக்குதுன்னா அதுக்கு காரணம் சங்கத்து ஆட்கள் இதை வாங்குவது தான்.
5. மோடி வெடி:-
முசுலிம்கள் இதை வெடித்தால் அவர்களுக்கு பாதிப்பு உறுதி. இவ்வெடியை தடை செய்ய பலர் முயன்றாலும் இதன் புகழ் அதிகளவில் பரவிவிட்டதால் தடை செய்வது இயலாத செயல.
6. மம்தா வெடி:-
பொதுவுடமைவாதிகள், காங்கிரசு காரங்க வெடிச்சா அவங்க கைய சுட்டுரும். நிறைய புகை வரும் சில முறை வெடிக்கும், வெடிச்சா சத்தம் அதிகமா இருக்கும்.
7. காரத் வெடி:-
இருசியா, சீனா ஆதரவு சொற்களை சொல்லிக்கொண்டு வெடிச்சா அவங்களுக்கு புடிச்ச மாதிரி வெடிக்கும். அமெரிக்க ஆதரவு சொற்களை சொல்லிக்கொண்டு வெடிச்சா அவங்களை சுட்டு விடும்.
8. தாத்தா வெடி:-
வெடிக்கவே செய்யாது ஆனால் வெடிக்கற மாதிரி புஸ்சுன்னு போகும் சத்தமில்லாம இருக்கும் மறுபடியும் புஸ்சுன்னு போகும் வெடிக்கும் வெடிக்கும் அப்படின்னு நினைக்க வைச்சு ஏமாத்தும்.
9. ஆத்தா வெடி:-
வெடிக்காது ஆனா புகை மட்டும் நிறைய வரும். தாத்தா வெடிக்கூட இதை வைக்கக்கூடாது.
10. தரும தலைவி வெடி:-
ஒழுங்கு முறையில்லாமல் வெடிக்கும். வெடிக்கும் என்று சிலர் கூடி நின்று பார்த்தால் கண்டிப்பாக வெடிக்காது. தமிழ்நாட்டை விட்டு வெளி மாநிலத்தில் வெடிக்காது ஆனால் புகை வரும், சில சமயம் அதுவும் வராது.
உங்களுக்கும் இது மாதிரி நிறைய புது வெடிகள் தெரிந்திருக்கும்.
பொருப்பு துறப்பி:-
இது நகைச்சுவைக்காக மட்டுமே யார் மனதையும் புண்படுத்த அல்ல. I-T act 66A பண்ற பாட்டை பாருங்கப்பா :(
வணக்கம்
வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?
திங்கள், நவம்பர் 12, 2012
வியாழன், நவம்பர் 08, 2012
செனட் தேர்தலின் முடிவு.
2012ல் அமெரிக்க அதிபராக ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டது அனைவருக்கும் தெரியும். அதிபர் தேர்தலுடன் இணைந்து 33 செனட் தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. அதைப்பற்றி முந்தைய அமெரிக்க செனட் தேர்தல் என்ற இடுகையில் சொல்லி இருந்தேன். செனட் முடிவுகளும் வந்து விட்டன. அவற்றை இங்கு பட்டியலிடுகிறேன். தேர்தலுக்கு பின் 100 உறுப்பினர் உடைய செனட்டில் சனநாயக கட்சிக்கு 53 உறுப்பினர்களும் குடியரசு கட்சிக்கு 45 உறுப்பினர்களும், எக்கட்சியும் சாராதவர்கள் 02 பேரும் உள்ளனர். குடியரசு கட்சி மூன்று இடங்களை இழந்து ஒரு இடத்தை கைப்பற்றியுள்ளது. சனநாயக கட்சிக்கு இரண்டு இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளன (மூன்றை கைப்பற்றி ஒன்றை இழந்துள்ளது). கட்சி சாரா இரு செனட் உறுப்பினர்களும் சனநாயக கட்சியுடன் சேர்ந்து செயலாற்றுவார்கள் என நம்பப்படுகிறது. விசுக்கான்சின் மாநில செனட்டர் டேம்மி பால்ட்வின் ஓரினச்சேர்க்கையாளர். செனட்டுக்கு தேர்ந்தெடுக்கப்படும் முதல் ஓரினச்சேர்க்கையாளர் இவர். குடியரசு கட்சியின் துணை அதிபராக போட்டியிட்ட பவுல் ரயனும் விசுக்கான்சின் மாநிலத்தவர். விசுக்கான்சின் ஆளுனரும் குடியரசு கட்சிக்காரர். நான் மிகவும் எதிர்பார்த்தது வர்ஜீனியா, மாசச்சூசெட்ஸ், கனெடிக்கட் செனட் தேர்தல் முடிவுகளை. கனெடிக்கட்டை முடிவை எதிர்பார்த்ததுக்கு காரணம் அங்கு போட்டியிட்ட குடியரசு கட்சிக்காரர் லின்டா மெக்மெகோன் (Linda McMahon) செலவு செய்த தொகை, 2010ல் நடந்த செனட் தேர்தலிலும் பணத்தை தண்ணீராய் செலவழித்தும் தோற்றார். லின்டா மெக்மெகோன் உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் அவரின் நிறுவனம் உங்களுக்கு தெரிந்திருக்கும் அதாங்க அதிரடி மல்யுத்தம் (WWE- World Wrestling Entertainment)இசுடார் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீங்களே, நான் அதுல தான் பார்த்தேன் இப்ப எதுல வருதோ தெரியாது. இந்தியானாவில் வெற்றி பெற வேண்டிய குடியரசு கட்சி அதன் வேட்பாளர் கற்பழிப்பு பற்றி சொன்ன கருத்தால் தோற்றுவிட்டார். மிசௌரியிலும் அதேதான் கதை.
10 இடங்களில் போட்டியிட்டு ஒன்பதில் மட்டும் வென்றது குடியரசு கட்சிக்கு பின்னடைவாகும்.
மொத்த இடங்கள் =100
சனநாயக கட்சி = 53
குடியரசு கட்சி = 45
கட்சி சாராதவர்கள் = 2
மாநிலம் | தற்போதய செனட்டரின் கட்சி | கைப்பற்றியது | வெற்றியாளர் |
---|---|---|---|
அரிசோனா | குடியரசு கட்சி | குடியரசு கட்சி | ஜெஃவ் பிளேக் |
மெய்ன் | குடியரசு கட்சி | கட்சி சாராதவர் | ஆங்குசு கிங் |
டெக்சாசு | குடியரசு கட்சி | குடியரசு கட்சி | டெட் குருசு |
மாசச்சூசெட்ஸ் | குடியரசு கட்சி | சனநாயக கட்சி | எலிசபெத் வாரன் |
மிசிசிப்பி | குடியரசு கட்சி | குடியரசு கட்சி | ரோசர் விக்கர் |
நெவாடா | குடியரசு கட்சி | குடியரசு கட்சி | டீன் எல்லர் |
டென்னிசி | குடியரசு கட்சி | குடியரசு கட்சி | பாப் கோர்கர் |
யூட்டா | குடியரசு கட்சி | குடியரசு கட்சி | ஓர்ரின் ஏட்ச்சு |
வயோமிங் | குடியரசு கட்சி | குடியரசு கட்சி | ஜான் பார்ரசோ |
இந்தியானா | குடியரசு கட்சி | சனநாயக கட்சி | ஜோ டான்னிலி |
அவாயி | சனநாயக கட்சி | சனநாயக கட்சி | மாசி கிரனோ |
நெப்ராசுக்கா | சனநாயக கட்சி | குடியரசு கட்சி | டெப் பிச்சர் |
நியூ மெக்சிக்கோ | சனநாயக கட்சி | சனநாயக கட்சி | ஜெஃவ் பிங்கமன் |
வட டக்கோட்டா | சனநாயக கட்சி | சனநாயக கட்சி | எய்ட்டி எயிட்டாம் |
வர்ஜீனியா | சனநாயக கட்சி | சனநாயக கட்சி | டிம் கெய்ன் |
விசுக்கான்சின் | சனநாயக கட்சி | சனநாயக கட்சி | டேம்மி பால்ட்வின் |
கலிபோர்னியா | சனநாயக கட்சி | சனநாயக கட்சி | டையானா பெயின்சுஉடைன் |
டெலவேர் | சனநாயக கட்சி | சனநாயக கட்சி | டாம் கார்பர் |
புளோரிடா | சனநாயக கட்சி | சனநாயக கட்சி | பில் நெல்சன் |
மேரிலாந்து | சனநாயக கட்சி | சனநாயக கட்சி | பென் கார்டின் |
மிச்சிகன் | சனநாயக கட்சி | சனநாயக கட்சி | டெப்பி இசுடேப்னோ |
மினசோட்டா | சனநாயக கட்சி | சனநாயக கட்சி | ஏமி குலோபசர் |
மிசௌரி | சனநாயக கட்சி | சனநாயக கட்சி | கிளாரி மெக்காசுகில் |
மான்டானா | சனநாயக கட்சி | சனநாயக கட்சி | ஜான் டெசுட்டர் |
நியூ செர்சி | சனநாயக கட்சி | சனநாயக கட்சி | ராபர்ட் மென்ன்டேசு |
நியூ யார்க் | சனநாயக கட்சி | சனநாயக கட்சி | ரிசுட்டன் கில்லிபிராண்டு |
ஓகியோ | சனநாயக கட்சி | சனநாயக கட்சி | செர்ராடு பிரௌன் |
பென்சில்வேனியா | சனநாயக கட்சி | சனநாயக கட்சி | பாப் கேசி |
ரோட் ஐலேண்ட் | சனநாயக கட்சி | சனநாயக கட்சி | செல்டன் வொயிட்அவுசு |
வாசிங்டன் | சனநாயக கட்சி | சனநாயக கட்சி | மரியா கான்ட்வெல் |
மேற்கு வர்ஜீனியா | சனநாயக கட்சி | சனநாயக கட்சி | ஜோ மான்சின் |
கனெடிகட் | கட்சி சாரா செனட்டர் | சனநாயக கட்சி | கிரிசு மர்பி |
வெர்மான்ட் | கட்சி சாரா செனட்டர் | கட்சி சாரா செனட்டர் | பெர்னி சான்டர்சு |
மொத்த இடங்கள் =100
சனநாயக கட்சி = 53
குடியரசு கட்சி = 45
கட்சி சாராதவர்கள் = 2
குறிச்சொல்
அமெரிக்க செனட்,
செனட்,
தேர்தல்,
முடிவு
திங்கள், நவம்பர் 05, 2012
We oppose present I-T Act 66A, Demanding change on it.
I-T ACT SECTION 66 A பற்றி ப்ரனேஷ் ப்ரகாஷ், (Pranesh Prakash, Policy Director of the Bangalore based Centre for Internet and Society)கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது. அவர் சொல்கிறார்: ’யாரும் என்னைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அதில் என்னை வேண்டுமென்றே மோசமாக எழுதினாலும் என்னால் அதைப் பெரிதாக ஒன்றும் சட்டப்படி செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு செய்தியை e-mail செய்தாலும் உங்களுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் நிச்சயம்! இது தவறாக யாரையும் கொன்றுவிட்டால் கிடைக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையை விட அதிகம்!’
”ரவி (சீனிவாசன்) மேல் கார்த்திக் சிதம்பரம் கொடுத்த புகாரின் பேரில், நீதிமன்றங்கள் அவரைத் தண்டிக்காதவரை அவரைக் கைது செய்தது தவறு” என்று இன்று இந்து தினசரியில் (5.11.12 - http://www.thehindu.com/todays-paper/advani-condemns-arrest-of-iac-activist/article4065734.ece) அத்வானி கூறியுள்ளார்.
இந்துவில் வந்த தலையங்கமும் இக்கருத்தைப் பற்றியும், பேச்சு சுதந்திரத்தைப் பற்றியும் தெளிவாக வலியுறுத்தியுள்ளது.
*இவ்வாறு செய்தித் தாட்களில் வந்த செய்திகளை நம் பதிவுகளில் மேற்கோளிடுவதும் கூட இச்சட்டத்தினால் தவறாகக் கருத்தப்படும் என்ற நிலையே இப்போது உள்ளது. இது தனி மனித உரிமைகளையே பறிக்கும். நம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை நமக்கு வேண்டும். இந்த உரிமை நம்மிடம் இருக்குமளவிற்கு I-T ACT திருத்தப்பட வேண்டும்.
*இதனோடு, பிரபலங்கள் கொடுக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் காவல் துறையின் அவசரப் போக்கும் நமக்கு தேவையில்லாத அச்சத்தை மட்டுமே தரும். சரியான விசாரணை வேண்டும்; தேவையற்ற கைது தவிர்க்கப்பட வேண்டும் என்பவைகளைக் காவல் துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.
*முறையான விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் முன்பே வெகு கோரமான ஊடகச் செய்திகள் குற்றமற்றவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் ஊடகங்களிடம் இல்லை என்பதும் வேதனையான செய்தி. ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு செயல்பட வேண்டும்.
*சாமானிய மக்கள் கருத்து தெரிவிப்பதை ஒடுக்கும் இச்சட்டம் மாற்றப்படவேண்டும்.
* இச்சட்டம் அரசியல் சட்டம் வழங்கிய பேச்சுருமையை முற்றிலும் பறிக்கிறது. இங்கு பேசுதல் என்பது எழுத்தில் கருத்து தெரிவிப்பது ஆகும்.
*மனஉழைச்சல் (annoyance) என்றால் என்ன தெளிவாக வரையறை செய்ய வேண்டும்.
* விசாரணை முடியும் வரை கைது செய்யக்கூடாது.
* Inconvenience, obstruction, insult, injury, hatred என்றால் என்ன தெளிவாக வரையறை செய்ய வேண்டும்.
* அரசியல் தலைவர்களை அல்லது பொதுவாழ்வில் உள்ளவர்களை விமர்சிக்கும் போது இச்சொற்களை பயன்படுத்த வேண்டி வரும் அவற்றை குற்றமாக கருதக்கூடாது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)