வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



வியாழன், ஜூன் 04, 2009

"ற்க்" பிழையும் பதிவர்களும்


நன்கு அறியப்பட்ட பதிவர்களும் பல புதிய (எனக்கு) பதிவர்களும் தங்களது இடுகைகளில் "ற்க்" பிழை செய்வதை காண முடிந்தது. நான் பிழையின்றி தமிழ் எழுதுபவன் இல்லை, எழுதவேண்டும் என்று முயற்சிப்பவன். ஆனால் எனக்கு நன்கு தெரிந்த தமிழ் இலக்கண விதி இது. அதாவது "ற்" என்ற எழுத்திற்கு அப்புறம் மெய்யெழுத்து வராது. சந்திப்பிழையை தவிர்க்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு எழுதுகிறார்கள் என்று நினைக்கிறேன்.

வல்லினப் புள்ளி எழுத்து ஆறின் (க், ச், ட், த், ப், ற்) பின்னும் மெய்யெழுத்து வராது என்பது பதிவர் சவுக்கடியால் அறிந்துகொண்ட புது விதி.




அதற்க்கு, இதற்க்கு (தவறு) ---> அதற்கு, இதற்கு (சரி)
முயற்ச்சி, அயற்ச்சி (தவறு) ---> முயற்சி, அயற்சி (சரி)
என்பதற்க்காக (தவறு) ---> என்பதற்காக (சரி)
தற்ப்போது (தவறு) ---> தற்போது (சரி)


இன்னுமொரு விதி , எந்தச் சொல்லும் மெய்யெழுத்தில் (புள்ளி வைத்தயெழுத்தில்) தொடங்காது. இந்த விதியை மீற கிரந்த எழுத்தை பயன்படுத்துறாங்க. கிரந்தம் தமிழ் எழுத்து இல்லை எனவே தமிழ் இலக்கண விதி இதற்கு பொருந்தாது என்று நினைக்கிறார்கள் போலும். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக ஸ்டாலின் என்ற பெயரை காட்டுவார்கள். இதை இசுடாலின் என்று எழுதலாம் என்பதை மறந்து விடுகிறார்கள். தமிழகத்தில் இசுடாலின் கருணாநிதியின் மகன், தற்போதய துணை முதல்வர், எனவே இந்த பெயரை காட்டுக்கு அழைப்பவர்கள் ஏராளம். ருசுய அல்லது ஜார்ஜிய மொழியில் இசுடாலினை எப்படி பலுக்குவார்கள்\உச்சரிப்பார்கள் என்று தெரியாது. இதைக்காட்டி பலரும் புள்ளிவைத்த கிரந்தம் எழுத்தில் தமிழ் சொற்களை தொடங்கி எழுதுகிறார்கள், அதுமட்டுமல்லாமல் தமிழ் மெய்யெழுத்திலேயே தமிழ் சொற்களை தொடங்கி எழுதவும் ஆரம்பித்துள்ளார்கள். இது மிக மிக தவறான போக்கு....


விதி என்பதே அதை மீறுவதற்கு தான் என்று சப்பை கட்டு கட்டாமல் இருந்தால் சரி. :-((

சனி, மே 30, 2009

தமிழ்மணத்தின் புதிய வாக்களிக்கும் முறை

தமிழ்மணத்தின் புதிய வாக்களிக்கும் முறை பயனர்களுக்கு சிரமத்தை குடுக்கிறது. பிடித்த இடுகைக்கு வாக்களிக்க முயன்ற போது 'OpenID authentication failed: Bad signature' என்று வருகிறது. நான் kurumban.blogspot.com , http://kurumban.blogspot.com இரண்டையும் கொடுத்துப்பார்த்தேன். புண்ணியமில்லை.

சிலரின் இடுகைகள் எப்போதும் 40க்கும் அதிகமான வாசகர் பரிந்துரை வாக்குகளையும், சமீபத்திய ஒரு இடுகை 80க்கும் அதிகமான வாக்குகளையும் பெற்றதனால் தமிழ்மணம் இப்புதிய முறைக்கு வந்திருக்கலாம். அதாவது பதிவர் அல்லாதவரும் பரிந்துரைப்பதால் இவ்வாறு நேருகிறது என கருதியிருக்கலாம், அதுக்கு வாய்ப்பு அதிகம் தான். சில குழுக்கள் மூலம் இவ்வாறு நடப்பதற்கு அதிக வாய்ப்புண்டு. இது வாசகர் பரிந்துரை என்பதையே கேலிக்குள்ளாக்கிவிடுகிறது.

வாசகர் பரிந்துரை என்பதற்கு பதிலாக பதிவர்கள் பரிந்துரை என தலைப்பை மாற்றலாம். வாசகர் அனைவரும் பதிவராக இருப்பது அவசியமில்லையே?




தமிழ்மணத்தில் வாக்களிப்பதற்கு உங்கள் OpenIDஐ பயன்படுத்த வேண்டும்.

உங்கள் ப்ளாகர், வேர்ட்பிரஸ் முகவரிகளே OpenID முகவரி ஆகும். உதாரணமாக கீழே உள்ள பெட்டியில் உங்களது ப்ளாகர் முகவரியை இவ்வாறு அளிக்க வேண்டும் - username.blogspot.com அல்லது username.wordpress.com

அவ்வாறு அளித்தவுடன் ப்ளாகர் தளத்திற்கோ, வேர்ட்பிரஸ் தளத்திற்கோ நீங்கள் கொண்டு செல்லப்படுவீர்கள். அங்கு உங்கள் பயனர்பெயரையும், கடவுச்சொல்லையும் அளிக்க வேண்டும். ப்ளாகர்/வேர்ட்பிரஸ் அதனை சோதித்து அது ஒரு சரியான முகவரியே என்ற தகவலை மட்டும் தமிழ்மணத்திற்கு வழங்கும்

முக்கிய குறிப்பு : உங்கள் பயனர் பெயரோ, கடவுச்சொல்லோ தமிழ்மணத்திற்கு தெரியாது. உங்களது வலைப்பதிவு முகவரி மட்டுமே தமிழ்மணத்திற்கு தெரியும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு OpenID குறித்த தகவல்களை வாசிக்கலாம்

வியாழன், மே 28, 2009

உடன்பிறப்புகளுக்காக ஒரு Cartoon

எப்ப பார்த்தாலும் கடித தந்தி புகழ் தலைவரை/கட்சிய பத்தியே கருத்துப்படம் போடராங்கன்னு சில உடன்பிறப்புகளுக்கு கவலை அதனால ஒரு மாறுதலுக்காக....




இருந்தாலும் இந்த cartoon ன பார்த்ததும் மனசு கேக்காம இங்க உங்களுக்காக...;-)





என்னதான் இருந்தாலும் உண்ணாவிரதத்தை இப்படி கேலி ஆக்கி இருக்கக்கூடாது..... (கருத்துபடம் வரைந்தவரை சொல்லலிங்க ... )