வணக்கம்
சனி, மே 12, 2007
1 2 3 - கொடுமை
திமுகவின் அழிவுக்கு காரணம் கருணாநிதியின் குடும்பமாக இருக்கப்போகிறது. இதை தான் காலத்தின் போக்கு என்பதோ? தனது மகனின் அரியணைக்கு போட்டியாக வைகோ இருப்பார் என்பதால் அவரை கட்சியில் இருந்து துரத்திய கருணாநிதி இப்போது என்ன செய்யப்போகிறார்? முன்பே ஸ்டாலினின் ஆதரவாளர் என்று மூத்த திமுக ஆளான முன்னால் அமைச்சர் தா.கிருட்டிணனை அழகிரி கொலை செய்தபோதே இவர் கடும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பிள்ளை பாசம் தடுத்தது, இப்போது அதே பிள்ளையால் குடும்பத்துக்குள்ளேயே சிக்கல், ஆனால் இவர்களின் யார் வாரிசு என்ற சண்டையில் 3 அப்பாவி உயிர்கள் பலி போனது தான் கொடுமை.
கருத்து கணிப்பை வெளியிட வேண்டாம் என்று சொன்னேன் கேட்காமல் தினகரன் வெளியிட்டுவிட்டார்கள் என்று கருணாநிதி சொல்கிறார். பிரச்சனை என்னவென்றால் தினகரன் கருத்து கணிப்பை வெளியிட்டது அல்ல, தான் முதல்வர் மகன் என்ற தைரியத்தில் அழகிரி செய்த அடாவடியும் அவரின் தொண்டரடிப்பொடி செய்த அட்டூழியங்களுமே.
கருத்துக்கணிப்பு பிடிக்கவில்லை என்றால் கண்டன அறிக்கை விடலாம், ஆர்ப்பாட்டம் நடத்தலாம், தந்தையிடம் முறையிடலாம், அல்லது சன் தொலைக்காட்சி மதுரையில் தெரியாமல் தடை பண்ணலாம் ( இது கொஞ்சம் சிரமமான செயல் தான் ) , வெளியே தெரியாமல் குடும்பத்திற்குள்ளேயே சமரசம் பேசி அடுத்த கருத்து கணிப்பில் அழகிரியின் ஆதரவு பெருகிவிட்டதாக காட்டலாம். இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும் ஏன் அடியாட்களை விட்டு அட்டூழியம் செய்ய வேண்டும்? அதிகாரபூர்வமாக கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லாத போதே நிலைமை இப்படியென்றால் அதிகாரபூர்வமாக கட்சி பொறுப்பு வகித்தால் என்ன செய்வாறோ? எல்லாம் கருணாநிதிக்கே வெளிச்சம்.
இவர்கள் செய்ததிற்கும் அதிமுக காரர்கள் தர்மபுரியில் பேருந்தை எரித்து மாணவிகளை கொன்றதிற்கும் பெரிய வேறுபாடு இல்லை.
இத்தகராறு கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களுக்கிடையே வந்த போதும் காவல் துறை என்ன செய்வதென்று தெரியாமல் கை கட்டி கொலைக்கு சாட்சியாக இருந்துள்ளார்கள். நினைத்துப்பாருங்கள் ஒரு சாதாரண மனிதனின் நிலையை?
இப்படி பட்ட சூழ்நிலையில் மதுரையில் இடைத்தேர்தல் வர இருக்கிறது, அழகிரியின் இந்த அடாவடி தேர்தலில் எதிரொலித்தால் மட்டுமே கருணாநிதி அவர்கள் கொஞ்சமாவது நடவடிக்கை எடுப்பார். பார்க்கலாம் மதுரை மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று.
வியாழன், ஏப்ரல் 12, 2007
முதலை பயங்கரம் - எச்சரிக்கை
தைவான் நாட்டின் கோசியுங் ( Kaohsiung ) நகர முதலைப்பண்ணையில் இக்கொடூரம் நடந்துள்ளது. அப்பண்ணையின் விலங்கு மருத்துவர் 17 வயதுடைய நைல் நதி முதலைக்கு மருத்துவம் பார்க்கும் போது முதலையானது அவரது கையை கடித்து எடுத்து விட்டது. நல்ல வேலையாக அவர் தப்பிவிட்டார். துண்டான கையை துப்பாக்கியால் முதலையை சுட்டு மீட்டுள்ளனர். அறுவை சிகிச்சை மருத்துவர்கள் அவரது கையை ஒட்டியுள்ளார்கள்.
துப்பாக்கியால் சுட்டும் முதலை மீது ஒரு குண்டும் படவில்லை ( சுட்ட ஆளு அப்படி சுட்டு இருக்கார் :-(( ). வெடிச்சத்தத்தினால் முதலை அதிர்ச்சியாகி வாயை திறந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.
முதலையிடம் கையை கொடுத்தவர் பெயர் சேங்-பொ-யு (Chang Po-yu)
முதலை சேங்-பொ-யு (Chang Po-yu)ன் முன் கையுடன்
முதலை சேங்-பொ-யு (Chang Po-yu)ன் முன் கையுடன்
முதலை சேங்-பொ-யு (Chang Po-yu)ன் முன் கையுடன்
முதலை சேங்-பொ-யு (Chang Po-yu)ன் முன் கையுடன்
முதலைக்கு கையை கொடுத்த சேங்-பொ-யு (Chang Po-yu)
சனி, மார்ச் 31, 2007
உலகின் மாபெரும் நிறுவனங்கள்
வங்கி & எண்ணெய் நிறுவனங்கள் தான் பணம் கொழிக்கிற நிறுவனங்களா இருக்கு. Microsoft 66 வது இடத்திலயும், Google 289 வது இடத்திலயும், நம்ம மிட்டலின் Archelor Mittal 72 வது இடத்திலயும் இருக்கு.
உலக தர வரிசையில் முதல் 20 இடங்களில் உள்ள நிறுவனங்களை இந்த அட்டவணையில் காணலாம்.

சரி எந்தெந்த இந்திய நிறுவனங்கள் 2000 பட்டியலில் இருக்குதுன்னு தெரியனுமா? இந்த அட்டவணையை பாருங்க. 34 இந்திய நிறுவனங்கள் 2000 பட்டியலில் இருக்கு.

தொடர்புடைய சுட்டிகள் :
http://www.forbes.com/lists/2007/18/biz_07forbes2000_The-Global-2000_Rank.html
http://www.forbes.com/lists/2007/18/biz_07forbes2000_The-Global-2000-India_10Rank.html