தைவான் நாட்டின் கோசியுங் ( Kaohsiung ) நகர முதலைப்பண்ணையில் இக்கொடூரம் நடந்துள்ளது. அப்பண்ணையின் விலங்கு மருத்துவர் 17 வயதுடைய நைல் நதி முதலைக்கு மருத்துவம் பார்க்கும் போது முதலையானது அவரது கையை கடித்து எடுத்து விட்டது. நல்ல வேலையாக அவர் தப்பிவிட்டார். துண்டான கையை துப்பாக்கியால் முதலையை சுட்டு மீட்டுள்ளனர். அறுவை சிகிச்சை மருத்துவர்கள் அவரது கையை ஒட்டியுள்ளார்கள்.
துப்பாக்கியால் சுட்டும் முதலை மீது ஒரு குண்டும் படவில்லை ( சுட்ட ஆளு அப்படி சுட்டு இருக்கார் :-(( ). வெடிச்சத்தத்தினால் முதலை அதிர்ச்சியாகி வாயை திறந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.
முதலையிடம் கையை கொடுத்தவர் பெயர் சேங்-பொ-யு (Chang Po-yu)
முதலை சேங்-பொ-யு (Chang Po-yu)ன் முன் கையுடன்
முதலை சேங்-பொ-யு (Chang Po-yu)ன் முன் கையுடன்
முதலை சேங்-பொ-யு (Chang Po-yu)ன் முன் கையுடன்
முதலை சேங்-பொ-யு (Chang Po-yu)ன் முன் கையுடன்
முதலைக்கு கையை கொடுத்த சேங்-பொ-யு (Chang Po-yu)
4 கருத்துகள்:
அடக்கடவுளே! மகா பயங்கரம். நல்லகாலம் கையை இணைக்க முடிஞ்சது.
நாய்க்கு கை கொடுத்தால் முன்னங்காலைத் தூக்கி கைமேல் வைக்கும், முதலைக்கு முன்னாங்கால் அவ்வளவு பெருசாக இல்லையே அதான் வாயால் வாங்கி இருக்கு.
:)))
கை துண்டான போது அவருக்கு ஏற்பட்டிருக்கும் மரணவலியை புரிந்து கொள்ள முடிகிறது !!!
/அடக்கடவுளே! மகா பயங்கரம். நல்லகாலம் கையை இணைக்க முடிஞ்சது//
நல்லகாலம் ஆளு பிழைச்சுக்கிட்டார்.
//நாய்க்கு கை கொடுத்தால் முன்னங்காலைத் தூக்கி கைமேல் வைக்கும், முதலைக்கு முன்னாங்கால் அவ்வளவு பெருசாக இல்லையே அதான் வாயால் வாங்கி இருக்கு.
:)))
//
முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி.
புறாவுக்கு தொடை கொடுத்தான் சிபி.
அது மாதிரி முதலைக்கு கை கொடுத்தான் சேங்-பொ-யு :-))
//கை துண்டான போது அவருக்கு ஏற்பட்டிருக்கும் மரணவலியை புரிந்து கொள்ள முடிகிறது !!!
//
அப்பா நினைக்கவே பயங்கரமா இருக்கு
கருத்துரையிடுக