வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



சனி, மார்ச் 24, 2007

300 ஆல் 15 கடத்தப்பட்டதா ?

பிரிட்டானிய கப்பற்படை வீரர்கள் 15 பேரை ஆயுதம் தாங்கிய இரானிய படைகள் கைது செய்துள்ளது.


ஈராக்கின் கடல் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த போது இரானிய படைகள் தனது கடற்படை வீரர்களை கைது செய்ததாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. இதற்காக தனது கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு அவர்களை உடனடியாக விடுவிக்குமாறு கோரியுள்ளது.

ஆனால் இரான், பிரிட்டானிய கடற்படை வீரர்கள் தங்கள் நாட்டு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததனாலயே கைது செய்ததாக கூறியுள்ளது.

எது உண்மை ? யாம் அறியோம் பராபரமே.

ஏன் இந்த கைது நடவடிக்கை?

1. யுரேனிய செறிவூட்டல் தொடர்பாக இரானுக்கு எதிராக ஐ.நா மூலம் தடை கொண்டு வருவதில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் மும்முரமாக உள்ளதால்.

2. இரானிய கடற்பகுதியில் அத்துமீறி பிரிட்டானியர்கள் நுழைந்ததனால்.

3. அமெரிக்க Hollywood 300 படம், இரானிய / பெர்சிய மக்களை கேவலமாக சித்தரித்ததனால்.



என்னைப்பொருத்தவரை 300 படமே இதற்கு காரணம் என்பேன். 300 பேர் கொண்ட ஸ்பார்ட்டா நகர படை மாபெரும் பெர்சிய படையை தோற்கடித்த வரலாற்று நிகழ்வு தான் படம். அந்த படத்தில் ரொம்ப கேவலமாக பெர்சிய (தற்போதய இரான்) படைகளை / மக்களை காட்டியிருப்பர்கள்.

கொசுறு:

மதன் ஸ்பார்ட்டா பெர்சிய சண்டையை வைத்து ஒரு தொடர் எழுத போறார் தலைப்பு - "போனாங்க தோத்தாங்க" , இது தொடர்பாக ஏகப்பட்ட நூல்கள் உள்ளன, மதன் 90 சத நூற்களை படித்து குறிப்பெடுத்து விட்டார் 10 சத நூற்கள் தான் பாக்கி, தோத்து போன பெர்சிய மன்னனே இது தொடர்பாக ஒரு நூல் எழுதி அதில் ஸ்பார்ட்டா மக்களின் திறமையை புகழ்ந்திருப்பார். போதாதுக்கு அற்புதமான graphics உடன் படமே வந்தாச்சு. ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் அதிலிருந்து ஒரு படத்தை போடுவதாக உள்ளார்கள்


ஆனால் படம் எடுக்கப்பட்ட விதம் இரானியர்களை கோபப்படுத்தியுள்ளது, அதனால் தங்களது வீரத்தை காட்ட வேண்டி பிரிட்டானிய வீரர்கள் 15 பேரை கோழி அமுக்கர மாதிரி அமுக்கிட்டாங்க.

பின்ன இரானியனா கொக்கா...

ஸ்பார்ட்டா நாட்டு படையை பிடிக்காம வெள்ளைக்காரனை புடிச்சு என்ன சாதிக்கப்போறாங்க அப்படின்னு கேக்கறீங்களா? மதனின் போனாங்க தோத்தாங்க தொடரில் இது தொடர்பாகவும் அவர் விளக்கப்போறார்.

அதுவரைக்கும் பொறுக்க முடியாதவர்களுக்கு இப்ப ஸ்பார்ட்டா என்ற நாடே இல்லை, அது பழங்காலத்து கிரேக்க நாடுகளில் ஒன்று.

வியாழன், மார்ச் 22, 2007

பாப் ஊல்மர் கொலை செய்யப்பட்டார்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் 58 வயதான பாப் ஊல்மர் கொலை செய்யப்பட்டு இறந்தார் என்பதற்கான தடயம் பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக ஜமைக்கா நாட்டு காவல் துறை அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. அவர் மூச்சு திணறடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான அறிகுறி தென்படுவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.


முன்பு முகத்தை அழுத்தியதால் அவர் கழுத்து எழும்பு முறிந்துள்ளதாக ( gland க்கு அருகில் ) அதிகாரபூர்வமல்லாத செய்தி வந்தது.


ஜமைக்காவின் காவல் துறை துணை ஆணையர் மார்க் சீல்ட்ஸ் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இக்கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்றார். அவர்களை உடனடியாக சரணடையும் படி அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


பாப் ஊல்மரின் மரணம் தொடர்பாக பாகிஸ்தான் அணியினரிடம் விசாரணை நடத்திய ஜமைக்கா காவல் துறை அவைகளின் கைரேகையையும் சேகரித்துள்ளது.

இக்கொலையை கிரிக்கெட் சூதாடிகள் செய்திருக்கலாம் என்ற ஐயம் பலரிடம் உள்ளது. இக்கொலை கிரிக்கெட் விளையாட்டின் நீக்க முடியாத கரை என்பதை உறுதியாக கூற முடியும்.

வெள்ளி, மார்ச் 02, 2007

சனிக்கிழமை முழு சந்திர கிரகணம்.

3 ஆண்டுகளுக்கு பிறகு நாளை சனிக்கிழமை முழு சந்திர கிரகணம் ஏற்பட உள்ளது. அப்போழுது வெண்ணிலா செந்நிலாவாக காட்சியளிக்கும். இதை அனைவரும் எந்தவித சிறப்பு கருவிகளும் இன்றி வெறும் கண்ணாலயே பார்க்கலாம். வெறும் கண்ணால் பார்ப்பது பாதுகாப்பானது, அதனால் கவலையில்லாமல் வெறும் கண்ணால் பார்க்கலாம். பைனாகுலர் மூலம் பார்த்தால் இன்னும் சிறப்பாக காட்சி தெரியும்.

கிரகணம் தொடங்கும் நேரம் - 2018 GMT
முழு கிரகணம் தெரியும் நேரம் - 2244 TO 2358 GMT.



மேலுள்ளது எவ்வாறு கிரகணம் உருவாகிறது என்பதை காட்டும் படம்..


ஐரோப்பா , மத்திய கிழக்கு & ஆப்பிரிக்காவில் உள்ளவர்களுக்கு முழுதாக இது தெரியும். இந்தியா & அமெரிக்க, கனடா கிழக்கு கரை மக்களுக்கு முழுதாக இல்லாவிட்டாலும் பெரும்பகுதி தெரியும். நியுசிலாந்து, கிழக்கு ஆஸ்திரேலியா பகுதி மக்களுக்கு சுத்தமா ஒன்னும் தெரியாது.


மேலுள்ளது எங்கு கிரகணம் தெரியும் என்பதை காட்டும் படம்.