பிரிட்டானிய கப்பற்படை வீரர்கள் 15 பேரை ஆயுதம் தாங்கிய இரானிய படைகள் கைது செய்துள்ளது.
ஈராக்கின் கடல் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த போது இரானிய படைகள் தனது கடற்படை வீரர்களை கைது செய்ததாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. இதற்காக தனது கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு அவர்களை உடனடியாக விடுவிக்குமாறு கோரியுள்ளது.
ஆனால் இரான், பிரிட்டானிய கடற்படை வீரர்கள் தங்கள் நாட்டு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததனாலயே கைது செய்ததாக கூறியுள்ளது.
எது உண்மை ? யாம் அறியோம் பராபரமே.
ஏன் இந்த கைது நடவடிக்கை?
1. யுரேனிய செறிவூட்டல் தொடர்பாக இரானுக்கு எதிராக ஐ.நா மூலம் தடை கொண்டு வருவதில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் மும்முரமாக உள்ளதால்.
2. இரானிய கடற்பகுதியில் அத்துமீறி பிரிட்டானியர்கள் நுழைந்ததனால்.
3. அமெரிக்க Hollywood 300 படம், இரானிய / பெர்சிய மக்களை கேவலமாக சித்தரித்ததனால்.
என்னைப்பொருத்தவரை 300 படமே இதற்கு காரணம் என்பேன். 300 பேர் கொண்ட ஸ்பார்ட்டா நகர படை மாபெரும் பெர்சிய படையை தோற்கடித்த வரலாற்று நிகழ்வு தான் படம். அந்த படத்தில் ரொம்ப கேவலமாக பெர்சிய (தற்போதய இரான்) படைகளை / மக்களை காட்டியிருப்பர்கள்.
கொசுறு:
மதன் ஸ்பார்ட்டா பெர்சிய சண்டையை வைத்து ஒரு தொடர் எழுத போறார் தலைப்பு - "போனாங்க தோத்தாங்க" , இது தொடர்பாக ஏகப்பட்ட நூல்கள் உள்ளன, மதன் 90 சத நூற்களை படித்து குறிப்பெடுத்து விட்டார் 10 சத நூற்கள் தான் பாக்கி, தோத்து போன பெர்சிய மன்னனே இது தொடர்பாக ஒரு நூல் எழுதி அதில் ஸ்பார்ட்டா மக்களின் திறமையை புகழ்ந்திருப்பார். போதாதுக்கு அற்புதமான graphics உடன் படமே வந்தாச்சு. ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் அதிலிருந்து ஒரு படத்தை போடுவதாக உள்ளார்கள்
ஆனால் படம் எடுக்கப்பட்ட விதம் இரானியர்களை கோபப்படுத்தியுள்ளது, அதனால் தங்களது வீரத்தை காட்ட வேண்டி பிரிட்டானிய வீரர்கள் 15 பேரை கோழி அமுக்கர மாதிரி அமுக்கிட்டாங்க.
பின்ன இரானியனா கொக்கா...
ஸ்பார்ட்டா நாட்டு படையை பிடிக்காம வெள்ளைக்காரனை புடிச்சு என்ன சாதிக்கப்போறாங்க அப்படின்னு கேக்கறீங்களா? மதனின் போனாங்க தோத்தாங்க தொடரில் இது தொடர்பாகவும் அவர் விளக்கப்போறார்.
அதுவரைக்கும் பொறுக்க முடியாதவர்களுக்கு இப்ப ஸ்பார்ட்டா என்ற நாடே இல்லை, அது பழங்காலத்து கிரேக்க நாடுகளில் ஒன்று.
2 கருத்துகள்:
குறும்பன்,
"Royal Navy personnel seized at gunpoint by Iran in the Gulf have admitted being in the country's waters, an Iranian general has claimed."
[Source : BBC online News]
ம்ம்ம்ம், ஆங்கிலேயப் படைகளே ஈரானின் எல்லைக்குள் வந்ததை ஒப்புக்கொண்டுள்ளதாக ஈரானிய இராணுவத் தளபதி சொல்கிறார்.
இதில் எவ்வளவு உண்மையோ தெரியாது.
அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தல் நெருங்குகிறது. ஈராக் யுத்தத்திற்கு எதிராக அமெரிக்க மக்கள் திரும்புவதாக கருத்துக் கணிப்புக்கள் சொல்கின்றன. ஆக இந்த நிலையில் வெள்ளை மாளிகை இந்த விடயத்தை நிதானமாகத்தான் கையாளும் என நினைக்கிறேன். எடுத்தேன் , கவிழ்த்தேன் என்ற மாதிரிச் செயற்படுவார்கள் என நான் நம்பவில்லை.
பிரிட்டனிலும் இதே நிலைதான். பிளேயர் அரசியலில் இருந்து ஒதுங்கப் போகிறார். அவரின் அமைச்சரவையில் தற்போது நிதியமைச்சராக இருப்பவர்தான் இவரின் இடத்தை நிரப்பவுள்ளதாகத் தெரிகிறது. பிரிட்டனிலும் மக்கள் ஈராக் யுத்தத்தை ஆதரிப்பதாகத் தெரியவில்லை.ஆக பிரிட்டனிலும் தொழிலாளர் கட்சி தேர்தலைச் சந்திக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆக பிரிட்டனும் எடுத்தேன் கவிழ்த்தேன் என செயற்படாது என்பதே என் கணிப்பு.
வெற்றி, எல்லாம் அரசியல், என்னத்த சொல்ல.
வெள்ளைக்காரப்பய இரானின் எல்லைக்குள் போயிருக்க வாய்ப்பு உண்டு மறுப்பதற்கில்லை. எப்படி இந்த சிக்கலை தீர்க்கறாங்கன்னு பார்ப்போம்.
கருத்துரையிடுக