வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



புதன், நவம்பர் 01, 2006

பிரம்ச்சாரிகள் வேலை செய்யும் உணவகம்

(1) பிரம்மச்சாரிகள் மட்டும் வேலை செய்யும் உணவகம் எது என்று தெரியுமா?

துப்பு:- இது ஒரு பிரபலமான உணவகம்.

(2) ஏன் இது பிரம்மச்சாரிகள் மட்டும் வேலை செய்யும் இடமாக ஆகியது என்று தெரியுமா?

துப்பு:- நீங்கள் பத்திரிக்கை படிக்கும் பழக்கம் உடையவராய் இருக்க வேண்டும்.

சரி உங்கள் விடையை சரி பார்த்துக்கொள்ளுங்கள்.

முதல் கேள்விக்கு பதில்:-
சென்னையில் பிரபலமான "ஹோட்டல் சரவணபவன்"

இரண்டாவது கேள்விக்கு பதில்:-
(௧) மாற்றான் மனையை விரும்புபவர் ஹோட்டல் சரவணபவன் முதலாளி அண்ணாச்சி. திருமணமான ஊழியரின் மனைவியை மறுமணம் செய்பவர் முதலாளி அண்ணாச்சி. அதனால் ஊழியருக்கு திருமணமாலும் அது வீண். மனைவியை விட்டு கொடுக்கலைன்னா கொலை செய்ய கூட அஞ்சமாட்டார். அதாவது ஊழியர் திருமணமாகியும் பிரம்மச்சாரி.

(௨) இந்த சங்கதி தெரிந்ததால் திருமணமாகப்போவதாக இருந்தால் ஊழியர்கள் வேலையை விட்டு முன்பே விலகிவிடுவார்கள்.

செவ்வாய், அக்டோபர் 31, 2006

யார் லூசு?

தனியா அமைதியா நடந்து போயிக்கிட்டு இருந்த ஆளு திடீர்ன்னு சிரிச்சுக்கிட்டு நடந்து போனா என்னன்னு நினைப்பிங்க? லூசுன்னு தான்.

தனியா சிரிக்காதடா லூசுன்னு உன்னை நினைக்கப்போறாங்க என்று சொல்வதையும் சிலர் கேட்டிருக்கலாம், சொல்லியிருக்கலாம்.

அப்படி ஒரு அனுபவம் எனக்கு ஆச்சு. பூங்காவுல ஊர்ல இருந்து வந்தவர் கூட பேசிக்கிட்டு இருந்தேன் அப்ப ஒரு இளைஞர் திடீர்ன்னு தனியா சிரிக்க ஆரம்பிச்சுட்டார். அந்த இளைஞன் தனியா சிரிப்பதை பார்த்த நம் ஊர் காரர் என்னை பார்த்து ஒரு நமட்டு சிரிப்பை விட்டார் எனக்கு அந்த நமட்டுச்சிரிப்பின் பொருள் புரிந்துவிட்டது. என்ன உங்களுக்கும் தான? :-)

கண்ணால் காண்பதும் பொய் !       காதால் கேட்பதும் பொய் !!       தீர விசாரித்து அறிவதே மெய் !!!

 
அந்த பயல பத்தி தப்பா நினைக்காதிங்க, அவன் 'Blue Tooth' தொழில்நுட்பம் உள்ள செல்பேசியை பயன்படுத்தி யாருக்கிட்டையோ பேசிக்கிட்டு இருக்கான் என்றேன். அப்புறம் அவருக்கிட்ட என்னோட "BlueTooth" செல்பேசியை காட்டி பேசி காட்டினேன்.

இனிமே தனியா பேசிக்கிட்டு, சிரிச்சுக்கிட்டு இருக்கிறவன் ஒன்னு லூசா இருக்கனும் இல்ல 'BolueTooth செல்பேசியை ' பயன்படுத்தி பேசறவனா இருக்கனும்னார்.

நான் BolueTooth செல்பேசியை பயன்படுத்தும் லூசா கூட இருக்கலாம் என்றேன். :-))

புதன், அக்டோபர் 25, 2006

FireFox 2.0 vs IE 7.0

பழையபடி இணைய உலாவி போர் ஆரம்பமாகிவிட்டதா? நெருப்பு நரி (FireFox) 2.0 இணைய உலாவி மைக்ரோசாப்ட்டின் IE 7.0 க்கு போட்டியாக வந்து விட்டது. சொல்லப்போனால் IE 7.0 தான் நெருப்பு நரியின் போட்டியின் காரணமாக நெருப்பு நரியை போன்றே உலாவியை வெளியிட்டுள்ளது. நெருப்பு நரி 1.5 க்கும் நெருப்பு நரி 2.0 க்கும் அதிக வேறுபாடு இல்லை. ஆனால் IE 6.0 க்கும் IE 7.0 க்கும் அதிக வேறுபாடுகள் உள்ளது. அதாவது நெருப்பு நரியின் முக்கிய அம்சங்களை IE 7.0 கொண்டுள்ளது. நெருப்பு நரியில் இல்லாத எதையும் IE கொண்டிருக்கவில்லை.


முக்கியமாக IE 7.0 பயன்படுத்த உங்களிடம் Windows XP இயங்குதளம்( Operating System) இருக்க வேண்டும். ஆனால் நெருப்பு நரி 2.0 ஐ Windows 2000, Windows XP, Linux, Mac OS X போன்ற எல்லா இயங்குதளங்களிலும் புழங்கலாம். என்னிடம் Windows 2000 இயங்குதளம் தான் உள்ளது எனவே நான் இப்போது நெருப்பு நரி 2.0 ஐ நிறுவி இப்போது பயன்படுத்துகிறேன்.

நெருப்பு நரி 2.0 ல் உள்ள சில முக்கிய அம்சங்கள்.

Spell checking
Phishing protection
Stability
Security
Updates
Extensibility
Portability and standards.
Open source

மைக்ரோசாப்ட் நிறுவனம் IE 7.0 உலாவியை Windows 2000 இயங்கு தளத்தில் இயங்காதது அவர்களின் வணிக உத்தி தான். IE 7.0 க்காக எல்லோரும் Windows XP or Windows Vista க்கு மாறனுமா? அதிக அளவில் புழக்கத்தில் உள்ள Windows 2000 இயங்குதளத்திலும் வேலை செய்யுமாறு அவர்கள் IE 7.0 ஐ வெளியிட்டிறுக்க வேண்டும் அது தான் முறை.

IE யின் மேம்பாடு நெருப்பு நரியை பொருத்தே உள்ளது. அலுகுனி ஆட்டம் ஆடி போட்டியாளரை அழித்து அதன் பின் உருப்பிடியான தயாரிப்புகளை வழங்காமல் ஏகபோக ஆதிக்கம் செலுத்துவது தான் மைக்ரோசாப்ட்டின் வணிக முறை. என்வே நீங்கள் 'IE' ஐ விரும்புபவராக இருந்தால் நெருப்பு நரியை பயன்படுத்துங்கள் அப்போது தான் மேம்பட்ட IE உங்களுக்கு கிடைக்கும்.

நெருப்பு நரியை பயன்படுத்துவது IE ஐ பயன்படுத்துவதை விட பாதுகாப்பானது. இதன் காரணமாகவே நான் நெருப்பு நரிக்கு மாறினேன். நான் இன்னும் IE பயன்படுத்துகிறேன் என்றால் அதற்கு காரணம் "தமிழ்". ஆம் தமிழ் எழுத்துக்கள் IE ல் தெரிவது போல் நெருப்பு நரியில் தெரிவதில்லை. இது நெருப்பு நரியின் ஒரு மிகப் பெரிய குறை. விரைவில் இக்குறை தீரும் என்று நம்புவோம். சரவணா காப்பாத்தப்பா. ஆங்கில தளங்களை பார்க்க நான் பயன்படுத்துவது நெருப்பு நரி.

நெருப்பு நரி 2.0 ல் எனக்கு பிடித்த அம்சங்கள் Spell Check, Add-ons, தவறதலாக மூடிய Tab ஐ மீட்க்கும் வசதி "Shift+Ctrl+t" அலுத்தினால் மூடப்பட்ட Tab Window மீட்கப்பட்டுவிடும்.

மைக்ரோசாப்ட்டின் Windows 2000 இயங்குதள பயனாளரான நான் சிறந்த இணைய உலாவி என்று நெருப்பு நரியையே கருதுகிறேன். இணைய உலாவி போரில் நெருப்பு நரியை ஒழித்து இந்த முறை IE வெற்றிபெறுவது கடினம், காரணம் நெருப்பு நரி Open Source.