வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



செவ்வாய், செப்டம்பர் 05, 2017

புதிய தமிழகம் மருத்துவர் கிருட்டிணசாமியின் யோக்கியம்

நீட் தேர்வுக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வரும் கிருஷ்ணசாமி, அனிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஊடகங்களுக்கு  நீலி கண்ணிர் வடித்து பேட்டியளித்து வருகிறார்.

பொதுவுடமை கட்சியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி  'கிருஷ்ணசாமி தன்னுடைய மகள் மருத்துவ சீட் பெறுவதற்குப் போதிய மதிப்பெண் எடுக்காததால், ஜெயலலிதாவிடம் உதவி கேட்டதாகவும் ஜெயலலிதா உதவிசெய்ததாகவும்’ குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் கிருஷ்ணசாமியிடம் கேள்வியெழுப்பினர். செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் சொல்லாமல் சிரித்து மழுப்பினார் கிருஷ்ணசாமி.


http://www.vikatan.com/news/tamilnadu/101337-krishnaswamy-daughters-medical-seat-issue-what-happened-on-the-day-of-assembly.html?artfrm=news_most_read


கிருஷ்ணசாமி மகளுக்கு சீட் கொடுக்கப்பட்டது குறித்து சட்டசபையில் விவாதிக்கப்பட்டது உண்மைதான் என்பதற்கு ஆதாரமாக பிரபல ஆங்கிலப் பத்திரிகை 2014-ம் ஆண்டு ஜூலை

23-ம் தேதியில் செய்தி வெளியிட்டுள்ளது.  

அப்போதையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வர் சட்டமன்றத்தில் மருத்துவர் கிச்சாவிடம், ''முதல்வர் ஜெயலலிதா உங்கள் மகளுக்குக்கூட மெடிக்கல் சீட் ஒதுக்கித் தந்தாரே'' என்றார்.


http://www.vikatan.com/news/tamilnadu/101327-jawahirullah-agrees-balabharathi-facebook-post.html


''கிருஷ்ணசாமி குறித்து பாலபாரதி கூறியது முற்றிலும் உண்மை'' என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்


14-வது சட்டமன்றத்தில் கிருஷ்ணசாமிக்கு 6-வது இருக்கையில் அமர்ந்திருந்தவர் பாலபாரதி. காவி கண்ணாடிக்காரருக்கு உழைக்கும் மக்களின் பிரதிநிதி கண்ணுக்குத் தெரிய மாட்டார்' என்று குறிப்பிட்டுள்ளார்.

3 கருத்துகள்:

ராஜி சொன்னது…

சோழியன் குடுமி சும்மா ஆகுமா

vimal சொன்னது…

திரமற்றவர்களுக்கு மருத்துவ வாய்ப்பு சென்று சேர்ந்தால் எத்தனை உயிர்கள் பலியாக போகிறதோ ? இந்த லட்சணத்தில் அனிதாவின் மரணத்தை கொச்சைப்படுத்த கிச்சாவுக்கு என்ன யோக்கியதை இருக்கிறதோ ?

வேகநரி சொன்னது…

//பொதுவுடமை கட்சியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி 'கிருஷ்ணசாமி தன்னுடைய மகள் மருத்துவ சீட் பெறுவதற்குப் போதிய மதிப்பெண் எடுக்காததால், ஜெயலலிதாவிடம் உதவி கேட்டதாகவும் ஜெயலலிதா உதவிசெய்ததாகவும்’ குறிப்பிட்டிருந்தார்.//
//'கிருஷ்ணசாமி குறித்து பாலபாரதி கூறியது முற்றிலும் உண்மை'' என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்//
ஆகவே தகுதியற்றவர்கள் டாக்டர்களாகி தமிழ் மக்களுக்கு மருத்துவம் செய்ய, ஊழல் செய்த குற்றசாட்டில் தண்டணை பெற்ற ஜெயலலிதா வழக்கம் போலவே வாய்பளித்துள்ளார். இந்த அநீதிக்கு எதிராக பொதுவுடமை கட்சி பாலபாரதியும் சரி, வெளி நாட்டிலிருந்து சட்ட விரோதமாக பணம் பெற்றது வழக்கில் உள்ள ஜவாஹிருல்லாவும் எந்த எதிர்ப்பையும் அப்போது தெரிவிக்கவில்லை.
இப்போது சோழியன் குடுமி சும்மா ஆடுமா?