வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



செவ்வாய், ஜூன் 28, 2011

வலு குறைந்த தமிழ்மணம் வழங்கி

ஒரு மாதத்துக்கு மேல் தமிழ்மணம் பக்கத்தை திறந்தால் The connection has timed out என்ற செய்தி 75% க்கு அதிக முறை வருகிறது, 25%க்கும் குறைவான நேரம் தான் முகப்பு பக்கம் தெரிகிறது.  சில நேரம் மட்டுமே தமிழ்மணம் பக்கம் திறக்கிறது. அப்படியே பக்கம் திறந்தாலும் அதிலுள்ள இடுகைகளின் இணைப்பை சொடுக்கினால் அது திறக்காது timed out (50%) என்ற செய்தி வரும். தமிழ்மணம் முகப்பில் உள்ள சில பக்கங்கள் The connection...... என்று பிழையை தான் காட்டும்.

குரோம் உலாவியில்


ஐஇ உலாவியில்

தமிழ்மணம் நிருவாகிகளுக்கு இச்சிக்கல் பற்றி தெரியும் என எண்ணுகிறேன் ஏன்னா ஒரு மாதத்துக்கு மேல் இச்சிக்கல் உள்ளது. இச்சிக்கலை மாதக்கணக்கில் நீடிக்க விடாமல் விரைவில் சரிசெய்வார்கள் என்ற நம்பிக்கை உண்டு.

இதற்கு காரணம் தமிழ்மணம் வழங்கி பலுவை தாங்க முடியாதது தான் என்று எண்ணுகிறேன். அவ்வாறு இருந்தால் வழங்கியை மாற்றுங்கள்.

இன்று ஒரு முறை கூட தமிழ்மணம் முகப்பு பக்கத்துக்கு செல்ல முடியவில்லை எல்லா முறையும் The connection has timed out என்ற பிழை செய்திதான் உலாவியில் தோன்றியது.

8 கருத்துகள்:

ராஜ நடராஜன் சொன்னது…

பிரச்சினை தமிழ் மணமா,எக்ஸ்புளோரரா என்பதை முதலில் தீர்மானித்து விடலாம்.

முதலில் எக்ஸ்புளோரர் மாற்றுங்கள்.பயர்பாக்ஸ்,குரோம் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுங்கள்.

மறுபடியும் மறுமொழி சொல்லுங்கள்.

பழமைபேசி சொன்னது…

//வலு குறைந்த தமிழ்மணம் வழங்கி//

தமிழ்மணத்துக்கு வழங்குவோர் வலு குறைஞ்சிடுச்சா?? நாம ஆளுக்கு ஒரு கை கொடுப்பமுங்ளா??

ப.கந்தசாமி சொன்னது…

நானும் இதை அனுபவிக்கிறேன். எல்லா தள கருவிப் பட்டைகளையும் தலை முழுகி விட்டேன். இப்போது நிம்மதியாக இருக்கிறேன்.

தமிழ்மணம் நில்வாகம் இதைப்பற்றி கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

குறும்பன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
குறும்பன் சொன்னது…

தமிழ்மணத்துக்கு வருவோரை அரவணைக்க முடியாமல் வலு குன்றி அது தடுமாறுது. தமிழ்மணத்துக்கு வழங்குவோர் வலு அதிகமாயிடுச்சி அதான் அது வலு குறைஞ்சி தடுமாறுது இஃகி நாம கை கொடுத்தா பாவம் அது இன்னும் தடுமாறும் இஃகி.

உங்க மறுமொழியை பார்த்ததும் வலுவா அல்ல வழுவா என்று எனக்கு சந்தேகம் வந்துடுச்சி உடனே விக்சனரிய பார்த்துட்டேன். :))

குறும்பன் சொன்னது…

கந்தசாமி உங்க இடுகையை பார்த்ததுக்கு அப்புறம் தான் எனக்கு இது தொடர்பா இடுகை போடனும்னு தோனுச்சி.

குறும்பன் சொன்னது…

ராஜ நடராஜன் நான் எக்ஸ்புளோரரை பயன்படுத்தியே பல காலமாயிடுச்சங்க. 80%பயர்பாக்ஸ் தான். 15% குரோம். தமிழ் வலைப்பதிவுகளை பார்க்கறதுன்னா பயர்பாக்ஸ் தான், ஏன்னா தமிழில் தட்டச்ச இதில் தான் நீட்சி இருக்கு. இங்க உதாரணத்துக்கு குரோம், ஐஇ இரண்டையும் போட்டேன் அதாவது உலாவியினால் இச்சிக்கல் இல்லை என்று சொல்வதற்காக. வீடு & அலுவலகத்தில் எனக்கு இச்சிக்கல் உள்ளது. அதனால உறுதியா தமிழ்மணத்து மேல் பழியை போடலாம் :))

குறும்பன் சொன்னது…

உலாவி பயர்பாக்ஸ்.
கடந்த 1 வாரமா தமிழ்மணம் விரைவாக வேலை செய்தது. ஃபெட்னா விழா நேரடி ஒளிபரப்பை தடையில்லாமல் பார்க்க வேண்டும் என்பதற்காக வழங்கியின் வலுவை கூட்டியிருப்பார்கள். அதனால் 1 வாரம் கழிச்சு பார்க்கலாம் என்று இருந்தேன். இன்று தமிழ்மணம் பக்கம் திறப்பதற்கு நிறைய நேரம் எடுத்துக்கொண்டது. அதிலுள்ள சில இடுகைகளுக்கான இணைப்பை சொடுக்கிய போது The server at tamilmanam.net is taking too long to respond. என்ற செய்தி வருகிறது. நான் 3 இடுகைகளை சொடுக்கி பார்த்து விட்டேன்.