வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?புதன், ஜூன் 01, 2011

நடிகர் இராஜ் கிரண் மனநல மருத்துவமனையில்


நடிகர் இராஜ் கிரண் மனநல மருத்துவமனையில் இருக்கிறார் என டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் படித்த பிறகு தமிழ்மணத்தை திறந்தா யாரும் அதைப்பற்றி ஒன்றும் எழுதக் காணோம். என்னடா இராஜ் கிரணுக்கு பதிவர்கள் இடையே மவுசு இல்லையேன்னு வருத்தமா போச்சு. அதனால அவரைப்பற்றி நாமளாவது எழுதுவோம் என்று முடிவெடுத்தேன். டைம்ஸ் ஆப் இந்தியாவில் நம்ம ஆளுங்களைப் பற்றிகூட செய்தி  போடறாங்கன்னு ஆச்சரியமா இருந்தது. அதனால செய்திய முழுசா படிச்சு பார்த்தேன். இராஜ் கிரண் மனநல மருத்துவமனையில் இருக்கிறார் என அவர் நண்பர் ரிசி கபூர் சொல்லியிருக்கறார். இந்தி பட உலகலேயும் பல நண்பர்களை கொண்டு இருக்கறாரே என வியப்பாக இருந்தது. இவர் இந்தி படங்களில் நடித்ததே எனக்கு புதிய செய்தி.

இவர் 10 ஆண்டுகளாக காணாம போயிருந்ததா போட்டிருந்தாங்க, என்னுள் சந்தேகம் எட்டி பார்த்தது. இவர் பல இந்தி படங்களில் நடித்திருந்ததாக போட்டவர்கள் தமிழில் நடித்ததா போடவேயில்லை. சந்தேகம் அதிகமாகியது. இவர் அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா நகரத்தின் ஒர் மனநல மருத்துவமனையில் இருப்பதாக படித்ததும் எனக்கு டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் குறிப்பிட்டுள்ள இராஜ் கிரண் நம்ம இராஜ் கிரண் அல்ல என தெரிந்தது. இவரது அண்ணன் பெயர் கோவிந்து தம்பி பெயர் அஜித்.மனநல மருத்துவமனையில் இருந்த தற்போது அங்கு வேலை பார்க்கும் இராஜ் கிரண் இந்தி பட உலக இராஜ் கிரண். நல்லா பீதிய கிளப்பிட்டாங்க.

கருத்துகள் இல்லை: