வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?புதன், மார்ச் 16, 2011

அதிமுக கூட்டணியில் மதிமுக இல்லை - செயலலிதா

அதிமுக கூட்டணியில் இரண்டு பொதுவுடமை கட்சிகளும் மதிமுக-வும் இருக்குமா இருக்காதா என்ற கேள்விக்கு பொதுவுடமை கட்சிகளுகு தொகுதிகளை ஒதுக்கியதன் மூலம் அவர்கள் கூட்டணியில் இருக்கிறார்கள் என்று செயலலிதா உறுதிபடுத்தினார். பாவம் மதிமுகவை அவர் கண்டுக்கவே இல்லை. சரி பின்னாடி உடன்பாடு வரும் தொகுதி ஒதுக்குவாருன்னு வைகோ போன்றவர்கள் நினைச்சிருப்பாங்க. ஆனா அதிமுக போட்டியிடும் 160 தொகுதிகளை அறிவித்ததின் மூலம் மதிமுகவுக்கான கதவை அதிமுக சாத்திவிட்டது (செயலலிதா சாத்திவிட்டார்). அண்ணா, தனி கடை கட்ட நடைய கட்டுங்க.

அதிமுக கூட்டணி


கட்சி போட்டியிடும் தொகுதிகள்
அதிமுக 160
தேமுதிக 41
CPM 12
CPI 10
மனித நேயமக்கள் கட்சி 3
புதிய தமிழகம் 2
சரத்குமார் கட்சி 2
சேதுராமன் கட்சி 1
குடியரசு கட்சி 1
கொங்கு இளைஞர் பேரவை 1
மதிமுக 00
மொத்தம் 234மதிமுக இல்லாததால் அதிமுகவுக்கு நட்டமா? 

மதிமுகவுக்கு தமிழகத்தின் மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் கணிசமான வாக்கு உண்டு. மேலும் வைகோ போன்ற மக்கள் அறிந்த சிறந்த உணர்வுபூர்வமான பேச்சாளரை இழந்தது அதிமுகவுக்கு பெரும் இழப்பு. வைகோவின் பேச்சு இலவசமாக செய்திதாள்களில் வரும் அத்தகைய விளம்பரத்தை இழந்தது அதிமுகவுக்கு பாதிப்பே. இந்த தேர்தலில் வாக்கு வேறுபாடு குறைவாக இருக்கும் என்பது என் கணிப்பு. வைகோவின் வெளியேற்றத்தால் அதிமுக கூட்டணிக்கு கிடைக்ககூடிய திமுக அனுதாபிகளான (தற்போது திமுக மேல் கோபமாக உள்ள) தமிழ் உணர்வாளர்கள் பெரும் பாலோரின் வாக்குகளை அதிமுக இழக்கப்போவது உறுதி.

மதிமுக வாக்கு குறைவாக வாங்கினாலும் அதன் தொண்டர்கள் சிறப்பாக வேலை செய்யக்கூடியவர்கள். தேர்தல் நேரத்தில் இவற்றை அதிமுக இழந்தது அதற்கு தான் பாதிப்பு. தேமுதிகவிற்கு வட மாவட்டங்களில் அதிக செல்வாக்கு உண்டு ஆனால் தெற்கே இல்லை. மதிமுகவிற்கு தெற்கே உண்டு ஆனால் வடக்கே இல்லை.

ஏன் அண்ணனை தங்கை ஆட்டத்துக்கு சேர்த்துக்கலை?

தங்கை இத்தேர்தலுக்கு சோ போன்றவர்களின் வழிகாட்டுதலில் நடப்பதாக சொல்லப்படுகிறது. அவருக்கு இப்போது வழிகாட்டுபவர்களுக்கு வைகோவை பிடிக்காது என்பது அனைவரும் அறிந்த ரகசியம். மதிமுகவுக்கு மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் தான் செல்வாக்கு உண்டு அங்கு அதிமுக பலமாக உள்ளது எனவே மதிமுக தேவையில்லை. வைகோ இல்லாமல் போனாலும் விசயகாந்த் கூட்டணியில் இருப்பதால் நாயுடு வாக்குக்கு பாதிப்பு இல்லை. தேர்தல் பிரச்சாரத்தின் போது தனக்கு ஈடான விளம்பரம் வைகோவுக்கு கிடைப்பதில் உடன்பாடு இல்லை. மதிமுகாவால் ஏற்படும் சிறிய இழப்பை தேமுதிகவால் ஈடுசெய்யலாம். மதிமுகவை விட தேமுதிகவிற்கு வாக்கு வங்கி அதிகம் உள்ளது.

அதிமுகவுக்கு அறுதி பெரும்பான்மை கிடைக்காது (கிடைக்க கூடாது என்பது என் விருப்பம்). மற்ற கட்சிகளின் ஆதரவுடன் மைனாரிட்டி அரசு வேணா அமைக்கலாம். ஜெயா தொலைக்காட்சியில் மைனாரிட்டி அரசு என்பதை அழுத்தி சொல்லலாம்.

6 கருத்துகள்:

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

//இத்தேர்தலுக்கு சோ போன்றவர்களின் வழிகாட்டுதலில் நடப்பதாக சொல்லப்படுகிறது. //
முழு உண்மை. சோவுக்கு வைகோவை பிடிக்காது.

தாராபுரத்தான் சொன்னது…

திருந்தாத சென்மங்கள் இருந்தென்ன லாபம்..

குறும்பன் சொன்னது…

ஆமாங்க யோகன் வாய்ப்பு கிடைக்கும் போது ஆப்பு குடுக்குறதுல சோ கில்லாடி. வைகோ தேர்தலில் வெல்வது மட்டுமே அவங்களுக்கு ஆப்பு கொடுக்கும்\அவங்க ஆட்டத்தை செல்லாதது ஆக்கும்.

குறும்பன் சொன்னது…

தாராபுரத்தான் யாரை சொல்றிங்க. செயாவையா வைகோவையா அல்ல இரண்டு பேரையுமா? :-) யூகம் பண்ண விடாதிங்க. :-)

பழமைபேசி சொன்னது…

அதிமுகவுக்கு விஜய்காந்தின் 3 நிபந்தனைகள்

1. மதிமுகவை கூட்டணியில் சேர்க்க வேண்டும்
2. தேமுதிக கேட்ட தொகுதிகள் அனைத்தும் வேண்டும்
3. கூட்டணித் தலைவர்கள் கூட்டுப் பிரச்சாரம் செய்ய வேண்டும்

குறும்பன் சொன்னது…

விஜய்காந்தின் 3 நிபந்தனைகளை செயா ஏத்துக்குவாறா? - யாருக்கும் தெரியாத மர்மம் இது. சோ அறிவுரை எப்படியோ??

1. நடக்கலாம், ஆனா எத்தனை தொகுதி??? இனி குறைவான தொகுதிக்கு மதிமுக ஒத்துக்குமா??
2. நடக்காது
3. செயா தவிர மத்தவங்களெல்லாம் ஒன்னா பிரச்சாரம் செய்வாங்க. செயா 1 அல்லது 2 கூட்டத்துல கலந்துக்கலாம்.


இந்த கூட்டணி தொடர்ந்தாலும் இனிமே பழைய உற்சாகத்துடன் கூட்டணி தொண்டர்கள் அதிமுகவுக்கு வேலை செய்வாங்களா என்பது பெரிய கேள்விக்குறி.


நந்த வனத்திலோர் ஓர் ஆண்டி அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி அதைக் கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி...