வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



வெள்ளி, ஜூலை 07, 2006

இலங்கையில் தடை செய்யப்பட்டவை.


1) இலங்கையில் தடைசெய்யப்பட்ட பாம் "டைகர் பாம்"

2) இலங்கையில் தடைசெய்யப்பட்ட பானம் (பியர்) - " மில்லர் பியர்"

3) இலங்கையில் தடைசெய்யப்பட்ட திரைப்படம் சூப்பர் ஸ்டாரின் " பாயும் புலி "

4) இலங்கை தடைசெய்யப்போகும் திரைப்படம் வைகைப் புயலின் " இம்சை அரசன் 2-ம் புலிகேசி"

5) இலங்கையில் தடை செய்யப்பட்ட ஆட்டம் " புலி ஆட்டம்".

6) இலங்கையில் தடை செய்யப்பட்ட பாட்டு கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் " அண்ணாத்தே ஆடுறார் " என்ற பாட்டு காரணம் அதில் கமல் புலி வேசம் கட்டி ஆடுவார்.

7) இலங்கை அரசு வெறுக்கும் அரச பரம்பரை " புலிக்கொடி தாங்கிய சோழ அரச பரம்பரை"

8) இலங்கை அரசால் தடை செய்யப்பட்ட விளையாட்டு வீரர் " டைகர் வுட்ஸ் "

9) இலங்கை அரசுக்கு பிடிக்காத விலங்கு "புலி".

10) இலங்கையில் தடை செய்யப்பட்ட உணவு பண்டம் " புளி " புளியை புலியா நினைத்து தடை பண்ணிட்டாங்க. அதனால கொழும்பு போனா புளிக் குழம்பு வேண்டும், புளி இரசம் வேண்டும் என்று கேட்காதிங்க. ஆனா அதிரசம் கிடைக்கும். :-)

11) இலங்கையில் தடை செய்யப்பட்ட ஏப்பம் "புளி ஏப்பம்" புளியை புலியா நினைத்து தான் காரணம்.


15 கருத்துகள்:

கானா பிரபா சொன்னது…

குறும்பன் ஆனாலும் உங்களுக்கு குறும்பு சாஸ்தி:-)

நீங்கள் மூன்றாவதாகக் குறிப்பிட்ட பாயும் புலி, உண்மையாகவே இரும்புக்கை என்ற இன்னொரு பெயரிலும் வைக்கப்பட்டது. அதுப்போல் புதுச்சேரி கச்சேரி (சிங்காரவேலன்) பாடலில் டைகராச்சாரி வரதாச்சாரி என்ற வரிகளில் "டைகராச்சாரி என்ற வரியை இலங்கை வானொலி இப்போதும் இந்தப் பாடலைப் போடும் போது அமுக்கிவிடும்.

சாரே குறும்பாய் குறிப்பிட்ட பெரும்பாலானவை நிஜத்தில் அங்கு நடப்பவை:-))

Machi சொன்னது…

கானா பிரபா அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் அண்ணாத்தே ஆடுறார் பாட்டை இலங்கையில் தணிக்கை செய்ததாக படித்த நினைவு. முதல் தற்கொலை படை தாக்குதலை நடத்தியவர் மில்லர் என்று படித்ததும் நகைச்சுவையாக இதை எழுத தோன்றிற்று.

//சாரே குறும்பாய் குறிப்பிட்ட பெரும்பாலானவை நிஜத்தில் அங்கு நடப்பவை:-)) //

புலின்னா அவர்களுக்கு கிலி என்று சொல்லித்தான் தெரியனுமா என்ன? :-))

Machi சொன்னது…

//சாரே குறும்பாய் குறிப்பிட்ட பெரும்பாலானவை நிஜத்தில் அங்கு நடப்பவை:-)) //

எல்லாமே நடந்தாலும் ஆச்சரியமில்லை. :-))

கோவி.கண்ணன் சொன்னது…

அப்ப லங்காவில் புளிய மரம் ஒன்னுக் கூட கெடயாதா ?

பெயரில்லா சொன்னது…

குறும்பு!
உங்க கடி எறும்புக்கடி!
இன்னும் பலதடையுண்டு.
ஔவையார் படம் ஒரு காட்சியில்; காடும் புலியும் வருகிறது.
"அச்சம் என்பது மடமையடா! அஞ்சாமை திராவிடர் உடமையடா!" பாடல்
"நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்"
தென்னிந்திய அரசியற் பேச்சாளர்கள்;;;
இன்னும் பல பல ;மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்!
சீப்பை ஒழித்துக் கலியாணம் நிறுத்தும் ;நினைப்பு!
யோகன் பாரிஸ்

Machi சொன்னது…

கோவி கண்ணன் இலங்கை அரசுக்கு தெரியாம காட்டுல சில புளிய மரங்கள் இருப்பதாக கேள்வி அப்புறம் புளிப்பாசம் கொண்ட சில மக்கள் பல இடங்களில் புளிய மரங்களை வளர்க்கிறாங்க. :-))

Machi சொன்னது…

ஒத்துக்கறேன் யோகன்.

யாரு கண்டா ஐயப்பனுக்கு மாலை போட்டா கூட இலங்கையில் குற்றமோ என்னமோ?
புலிப்பால் அருந்தி புலி மேல் பவனி வருபவனாயிற்றே ஐயப்பன். ஐயப்பனையும் புலியையும் பிரிக்க முடியாதே.

வெற்றி சொன்னது…

குறும்பன்,
நீங்கள் இதை நகைச்சுவைப் பதிவாகப் போட்டிருப்பினும், பல விடயங்களில் சிங்கள அரசு இப்படி கோமாளித்தனமாகத்தான் நடந்து கொள்கிறது.

பி.கு:- இந்த புளியமரத்திற்கும் யாழ்ப்பாணத்திற்கும் ஒரு பழங் கதையே உண்டு. 1912 ம் ஆண்டு ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை என்பவரால் எழுதப்பட்ட யாழ்ப்பாண வரலாறு எனும் நூலை இன்றுதான் படிக்கத் தொடங்கினேன். அதில் இந்த புளியமரத்தைப் பற்றிய சுவையான தகவலைப் படித்தேன். பின்னர் பதிகிறேன்.

Machi சொன்னது…

என்ன பண்றது வெற்றி? கோமாளிங்க அரசு கோமாளித்தனமாத்தான் நடக்கும். :-))

/அதில் இந்த புளியமரத்தைப் பற்றிய சுவையான தகவலைப் படித்தேன். பின்னர் பதிகிறேன்.
/
விரைவில் பதிவை போடுங்க.

மலைநாடான் சொன்னது…

குறும்பன்!

இது வெறும் கதையல்ல நிஜம்

Machi சொன்னது…

இப்படியெல்லாம் நடந்தால்? என்று கேலியாக சிரிப்புக்காக இந்த பதிவு போட்டேன் ( அண்ணாத்தே ஆடுறார் பாட்டை தடை பண்ணியதாக அப்போ படித்ததை நினைவு கொண்டு ) ஆனால் பின்னூட்டங்களின் மூலம் நான் கேலியாக நினைத்தவை உண்மையில் அங்கு நடைபெறும் சம்பவங்களே என்று அறியும் போது என்ன சொல்வதென்றே புரியவில்லை. முட்டாள்களின் மூர்க்கர்களின் ஆட்சியில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

Muse (# 01429798200730556938) சொன்னது…

பிரதமர் ராஜ பக்ஷே அரசியல் கணக்கு பண்ணுவதில் புலியாமே?

Machi சொன்னது…

மூஷ் உங்களுக்கு ராஜ பக்ஷேவை பிடிக்கலைன்னா தப்பில்லை, அதுக்காக அவரை போய் புலின்னு சொல்லி பதவிக்கே வேட்டு வைச்சிருவிங்க போலிருக்கு. :-)

இது அவரால் ஏற்றுக்கொள்ள முடியாத பாராட்டு என்பதை கருணை கூர்ந்து புரிந்துகொள்ளுங்கள். :-))

பெயரில்லா சொன்னது…

வருது வருது விலகு விலகு வேங்கை வழியெ வருது.... என்ற பாடலுக்கு இலங்கை அரசு உண்மையிலேயே தடைசெய்தது 20து வருடம் முன்னால்...!

வந்தியத்தேவன் சொன்னது…

தற்போது டைலமோ டைலமோ எனும் தத்துவ பாடலில் வரும் வரிகளான ஸ்ரீலங்கா நீ ஆனால் LTTE நான் ஆவேண் என்ற வரிகள் அரச தொலைக்காட்சிகளிலும் வானொலியிலும் வெட்டிவிட்டார்கள்.