வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



புதன், ஜூலை 05, 2006

AIIMS போராட்டத்தால் இதய நோயாளி மரணம்

உத்தர பிரதேசத்திலுள்ள ஃபருக்காபாத் நகரில் வசிக்கும் சர்வேஷ் குமார் என்பவர் புதன் மாலை மாரடைப்பால் பாதிக்கப்பட்டார், உடனே அவரை அருகிலுள்ள புது டில்லி AIIMS மருத்துவமனைக்கு அழைத்துவந்துள்ளார்கள். ஆனால் மருத்துவமனையில் அப்போது வேணுகோபால் நீக்கத்தை எதிர்த்து AIIMS மருத்துவர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால் அவரை அங்கு அனுமதிக்க முடியாது என்று கூறி அருகிலுள்ள சப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிறுந்த மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் AIIMS மருத்துவமனையிலிருந்து சப்தர்ஜங் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே 35 வயதுடைய சர்வேஷ் குமார் மரணமடைந்து விட்டார்.



http://www.newindpress.com/Newsitems.asp?ID=IEL20060705131345&Title=B+R+E+A+K+I+N+G++++N+E+W+S&Topic=-463&



என்ன கொடுமை..... மருத்துவர்கள் போராட்டம் நடத்தட்டும் அதற்காக அவசர சிகிச்சை நோயாளிகளை பந்தாடி உயிரை எடுப்பது மன்னிக்க முடியாத செயல்.
அவசர சிகிச்சை வேண்டுவோர் தாமதமாக மருத்துவமனைக்கு செல்வதால் ஏற்படும் பாதிப்புகள்( பல சமயம் உயிரிழப்புகள் ) மருத்துவர்கள் அறியாததா? அதுவும் குறிப்பாக இதய நோய் உள்ளவர்களுக்கு உடனடி சிகிச்சை தர வேண்டும் இல்லையெனில் சங்கு தான் ஊத வேண்டும். இங்கு AIIMS மருத்துவர்கள் காக்கும் வேலையை செய்வதை விட்டுவிட்டு சங்கு ஊதும் வேலையை எடுத்துக்கொண்டுள்ளார்கள்.
மிக முக்கியமான கடமையை செய்ய தவறிய இவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

11 கருத்துகள்:

Pot"tea" kadai சொன்னது…

There is a need for whole refurbishment(reshuffle of staffs) in AIIMS. Sacking "venu" wasnt good enough!!!

VSK சொன்னது…

இதற்கு முழுப் பொறுப்பு ஏற்க வேண்டிய மதிமூடர்,
சக மருத்துவருக்கு மதிப்பளிக்காத, அரசியல் ஆணவம் கொண்ட மருத்துவ மந்திரி அன்புமணிதான்!

Machi சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பொட்"டீ"கடை.

Machi சொன்னது…

SK அவசர சிகிச்சை பிரிவை இழுத்து மூடிவிட்டு சென்றவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். போராட்டம் நடத்தட்டும் தவறில்லை ஆனால் சில அத்தியாவசிய பணிகளில் வேலை பார்ப்பவர்கள் பொறுப்பில்லாமல் செயல் ஆற்றக்கூடாது, அதனால் இங்கு ஒரு உயிர் பலி.

பெயரில்லா சொன்னது…

இதற்கு காரணமான டாக்டர்களுக்கு அன்னியன் என்ன
தண்டனை கொடுப்பான்?

Sivabalan சொன்னது…

SK அய்யா அவர்கள் சொல்லியிருக்கும் கருத்து வேதனையளிக்கிறது.

" கடமையை செய் " யாரோ எங்கோயோ சொன்னது.

என்னமோ போங்க.. ஒன்னும் புரியவில்லை.

பெயரில்லா சொன்னது…

all should be punished
1. corrupt Anbumani
2. corrup venu gopal
please don't support either of them
both of them are corrupt and behind motives.
let god give good service mind and humanitarian aspects to these jokers.

Machi சொன்னது…

அனானி கருட புராணத்தை படிச்சா என்ன தண்டனைன்னு தெரியப்போகுது.

Machi சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிவபாலன், என்ன செய்வது ஹும்

அருண்மொழி சொன்னது…

//இதற்கு காரணமான டாக்டர்களுக்கு அன்னியன் என்ன
தண்டனை கொடுப்பான்? //

என்ன தண்டனையா ??

ஒன்னும் தெரியாத மாதிரி அப்பாவிக்கேள்வி. அவாக்கெல்லாம் only hair cutதான். அப்படித்தான் அவாளோட book சொல்லுது. அதைத்தான் "அன்னியன்" படத்திலேயும் ஷங்கர் சொல்லியுள்ளார்.

பெயரில்லா சொன்னது…

"என்ன தண்டனையா ??

ஒன்னும் தெரியாத மாதிரி அப்பாவிக்கேள்வி. அவாக்கெல்லாம் only hair cutதான். அப்படித்தான் அவாளோட book சொல்லுது. அதைத்தான் "அன்னியன்" படத்திலேயும் ஷங்கர் சொல்லியுள்ளார்"

ஆமாமாம்.....மரம் கட் பண்ணி போட்டு ஸ்ட்ரைக் பண்ணவனுக்கெல்லாம் மந்திரி பதவி குடுக்கும் போது இந்த ஸ்ட்ரைக் பண்ணவனுக்கு ஹேர் கட்டே ஜாஸ்திதான்....தான் ஸ்ட்ரைக் பண்ணா தர்மம் ...அடுத்தவன் பண்ணினா கொலைக்குத்தம் அப்படீன்னு பேசுரவனெல்லாம்...ஞாயம்..நடுநிலமை எல்லாம் பேச கூடாது...அவனவன் அவனவன் கட்சியை பிடிச்சுக்கிட்டு அப்படியே போய்கே இருக்க வேண்டியது.....சந்தேகம் ஏதாவது இருந்தால் குழலி...விடாது கருப்பு...தேசிகன்...டோண்டு போன்றோரிடம் கேட்கலாம்