வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?செவ்வாய், ஜூலை 04, 2006

சேவல் பலியிட்டு சங்கர மட வேலை தொடக்கம்

கொலை, கைது, ஜெயில் என்று இதுவரை சந்தித்திராத அளவு பெரும்சோதனையில் காஞ்சி மட சங்கராச்சாரியார்கள் உள்ளனர். இதனால் மட மக்கள் மடத்தில் வாஸ்து தோசம் ஏதாவது உள்ளதா என்று வாஸ்து அறிஞர்களை கொண்டு ஆராய்ந்தனர்.

ஆராய்ந்ததில் காஞ்சி சங்கர மடத்தின் முன் பகுதி நுழைவாயில் வாஸ்து குறைபாடுடன் உள்ளதாக வாஸ்து அறிஞர்களால் அறியப்பட்டது.

அதனால் வட பகுதியிலுள்ள நுழைவாயிலை இடித்துவிட்டு கிழக்கு திசையில் நுழைவாயிலை அமைக்க முடிவெடுக்கப்பட்டது. ஆகையால் கிழக்குப்பகுதியில் இருந்த கடைகள் காலிசெய்யப்பட்டன.

தற்போது காலிசெய்யப்பட்ட கடைகளை இடித்து புதிய நுழைவாயில் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணியை தொடங்குவதற்கு முன் சேவல் பலி கொடுக்கப்பட்டது.


http://thatstamil.oneindia.in/news/2006/07/03/kanchi.html

காஞ்சி மடத்தில் சேவல் பலி கொடுத்து நுழைவாயில் மாற்றும் பணி தொடங்கப்பட்டது என்ற செய்தியை படித்ததும் என்னடா இது குப்பன் சுப்பன் ஆண்டுக்கு ஒரு முறை அவனோட கோயிலில் கோழி, கெடா வெட்டி சாமி கும்பிட்டப்போ இது ஆகாது தப்பு பிராணி வதை இந்து மத விரோதம்னு சொன்ன மட ஆளுங்க சேவலை பலி கொடுத்து வேலை செய்யறாங்களேன்னு தோன்றியது. எல்லாம் காலத்தின் கோலம் என்ன செய்வது.

ஒரு வேளை இவர்களின் சோதனைக்கு காரணம் அய்யனாருக்கும் கருப்பணாருக்கும் முனீஸ்வரனுக்கும் உரிய படையலை ஆட்சியாளர்களின் (அப்போது) நெருக்கத்தை வைத்து தடுத்ததால் நேர்ந்த தெய்வ குற்றமோ என்னமோ யார் கண்டது.

காதோலை, கருவமணி, சுருட்டு, சாராயம் படைத்து முனீஸ்வரனுக்கு ஒரு கெடா அல்லது கோழி வெட்டுனா எல்லா தோசமும் நீங்கி வாழ்வில் வளம் பெருகும். எனக்கு தெரிந்த பரிகாரம் இது.

8 கருத்துகள்:

குமரன் (Kumaran) சொன்னது…

:-))

பெயரில்லா சொன்னது…

//இது ஆகாது தப்பு பிராணி வதை இந்து மத விரோதம்னு சொன்ன மட ஆளுங்க..//

மடத்து ஆளுங்களா?
மட ஆளுங்களா?

பாலசந்தர் கணேசன். சொன்னது…

சேவல் பலி சங்கரமடம் சார்பிலா கொடுக்க பட்டது? அவ்வாறாக இருந்தால் , அவர்களுக்கும் பலியிடுதல் மேல் நம்பிக்கை வந்து விட்டது

வெற்றி சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
குறும்பன் சொன்னது…

குமரன் சிரிப்புக் குறி போட்டு எதற்காக சிரித்தீர்கள் என்பதை சொல்லாமல் விட்டுட்டீங்களே. :-)

குறும்பன் சொன்னது…

அனானி எல்லாம் ஒன்னு தாங்க பிரிச்சிப்பார்க்காதிங்க. :-)

குறும்பன் சொன்னது…

பாலசந்தர் கணேசன் சேவல் பலி என்பதை சங்கர மட நிர்வாகிகளுக்கு தெரியாமல் நடத்தமுடியுங்களா? அதுவும் இது மடத்து நுழைவாயில் வேலையாச்சே.

வெங்காயம் சொன்னது…

மட சாமியார்கள் எல்லாம் செய்வர்!