நகைச்சுவை போல தெரியும் சில உண்மைகள் :
- எந்த சோதனையும் முழுமையான தோல்வியில் முடிவதில்லை, மோசமான எடுத்துக்காட்டுக்கு அவை பயன்படும்.
- சொல்லப்பட்ட வழிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் மட்டுமே புதிய கண்டுபிடிப்புகள் கைவசமாகும்.
- யாரும் பயன்படுத்தவில்லை என்றால் அதற்கு கண்டிப்பாக ஒரு காரணம் இருக்கும்.
- குழுவாக வேலை செய்வது நல்லது, அப்போது தான் பழியை அடுத்தவர் மேல் போட வாய்ப்பு கிடைக்கும்.
- தியரியில், தியரிக்கும் செயல்முறைக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. ஆனால் செயல்முறையில், செயல்முறைக்கும் தியரிக்கும் மாபெரும் வித்தியாசம் உண்டு. (தியரிக்கு தமிழில் என்ன சொல்?).
- ஒரு பிரச்சனையின் தீர்வை நோக்கி செயல்படும் போது, அதன் விடையை முன்னரே தெரிந்திருப்பது எப்போதும் பலன் கொடுக்கும்.
4 கருத்துகள்:
'சித்தாந்தம்' - இது தான் தியரிக்கு தமிழ் பதம்!
நன்றி வெளிகண்ட நாதரே.
theory== kotpadu
doctrine== siddhantham
e,g;
einstein in sarbunilai kotpadu
marxia siddhantham
நன்றி சிவஞானம் ஐயா(ஜி).
கோட்பாடு = theory
சித்தாந்தம் = doctrine
இப்ப தான் ஐன்ஸ்டீன், நியூட்டன் கோட்பாட பத்தி படிச்சது நினைவுக்கு வருது.ஆனா அது என்ன கோட்பாடுன்னு நினைவுக்கு வரலை. :-))
கருத்துரையிடுக